Page 5 of 400 FirstFirst ... 345671555105 ... LastLast
Results 41 to 50 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #41
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like

  2. Thanks kalnayak, eehaiupehazij thanked for this post
    Likes KCSHEKAR, eehaiupehazij liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #42
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகம் நடிக்கவந்த காலம் தொட்டு அவருடைய உண்மை சாதனைகளை மறைத்தும், அவருடைய பல முரியடிக்கபடாத சாதனை, பெருமைகளை தனதாக்கிகொண்டும், தம்முடைய சிறுமைகளை மற்றவர்கள் தலைமீது சுமத்தி பழக்கப்பட்டும் உள்ளவர்கள், உண்மை செய்திகளை ஆதாரமாக ஆவணங்களுடன் மற்றவர் வெளியிடும்போது எரிச்சல் கொள்வது இயல்பே. இதற்க்கு முக்கிய காரணம் இதுதான்.

    தகவல் தொழில்நுட்பம் சற்றும் இல்லாத காலங்களில் துண்டு சீட்டு மூலம் அடிமட்ட தொண்டன் வரையில் (19 years with the help of DMK caders )பரப்பப்பட்ட பொய் செய்திகளையும், தகவல்களையும் இந்த தொழில் நுட்பம் வளர்ந்த காலத்தில் ஆதாரத்துடன் மற்றவர் வெளியிடும்போது இவர்களுடைய பரப்பப்பட்ட செய்திகள் அனைத்தும் பொய் செய்திகள் "காயமே அது பொய்யட..காற்றடைத்த பையடா " என்ற பழமொழிக்கு சான்றாக உள்ளதை நடுநிலையாளர்களும் பெருவாரியான மக்களும், இந்த கால இளைஞர்களும் உணர்ந்து பதில் கேள்வி ஆதார ஆவணம் சகிதம் கேட்கும்போது வாயடைத்து போகிறார்கள். காரணம் இவர்கள் சட்டியில் இவர்கள் கூறும் பொய்க்கும், பொய் தகவலுக்கு அதை உண்மை என்று நிரூபிக்கும் ஆதாரம் ஆவணம் ஒன்று கூட கிடையாது.

    அவர் கூறினார்...இவர் அங்கிருந்து கொடுத்த தகவல்....அவர் இங்கு அனுப்பிய தகவல் என்பதை போலவே இன்றுவரை பரப்பிக்கொண்டு உள்ளது இங்கு அனைவரும் பொதுமக்கள் உட்பட கண் கூடாக காண்கிறார்கள்.

    எவ்வளவோ தடவை இவர்கள் மற்றவரை பற்றி உரைக்கும் பொய்யான தகவலை ஆதார ஆவணத்துடன் இங்கும் சரி மற்ற இடத்திலும் சரி ...புளுகள் என்று நிரூபித்தாகிவிடது.

    உதாரணம் : 6 வருடத்திற்கு முன்பு வெளிவந்து சாதனை படைத்த வசூல் ஒரு தொகை. ....அதே படத்தின் வசூலை இவர்கள் தங்களுடைய 6 வருடத்திற்கு பிறகு வந்த திரைப்படத்தின் டிக்கெட் விலை ஏற்றப்பட்டு கிடைத்த வசூலோடு ஒப்பிட்டு....இந்த வசூல் முரியடிக்கபடவில்லை என்று மார்தட்டிகொள்வது சிரிப்பை தான் வரவழைக்கிறது.

    இதை விட இன்னொரு கொடுமை...பத்திரிகை ஆவணம் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட நாட்களில் ஒரு திரைப்படம் வசூல் செய்து ..அதுவரை வந்த திரைப்படங்களிலே இந்த படம்தான் எல்லா சாதனைகளையும் முறியடித்துள்ளது என்று புள்ளி விவர கணக்குடன் கொடுத்தும்கூட அது பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல்....நடிகர் வடிவேல் பாணியில்...."என்ன கைய புடிச்சு இழுத்தியா " என்று பதிவு செய்வதை பார்த்து என்ன சொல்ல...!

    இவர்களே ஒரு சட்டத்தை போடுவார்கள் ....அதை நாம் follow செய்ய வேண்டும்...ஆனால் இவர்கள் மட்டும் follow செய்ய மாட்டார்கள் !

    உபதேசம் ஊருக்குதான்....!

    1952 முதல் உயிருடன் உள்ளவரை நேரிடையாக திரையுலகை வாழவைத்தது யார்...இப்பூவுலகு விட்டும் மறைந்தும் இவர்படத்தால் நாம் வாழலாம் என்று ஒரு விநியோகஸ்தர் வெளியிடும்போது அப்படி வெளியிடுபவர்களை இவரும் வாழ வைத்துகொண்டுதான் இருக்கிறார் என்பது திரை உலகில் உள்ள அனைவருக்கும் தெரியும்...



    ஒரு வருடத்தில் சராசரி 8 படங்கள் நடிகர் திலகதினுடயது 1952 to 1986 வெளிவந்தபோது...எங்கெல்லாம் வெளிவருகிறதோ அங்கெல்லாம் உள்ள

    எத்துனை தயாரிப்பாளர்கள்..
    எத்துனை இயக்குனர்கள்..
    எத்துனை இசை கலைஞர்கள்...
    எத்துனை சக நடிகர்கள் ..
    எத்துனை சக நடிகைகள்..
    எத்துனை துணை நடிகர்கள்...
    எத்துனை கேமரா ஆட்கள்...
    எத்துனை ஸ்டுடியோக்கள் அங்குள்ள தேநீர், காபி, சிற்றுண்டி மற்றும் பீடி விற்பவர்கள்
    எத்துனை போஸ்டர் ஓட்டுபவர்கள்
    எத்துனை போஸ்டர் பிரிண்ட் செய்பவர்கள்
    எத்துனை போக்குவரத்து செய்பவர்கள்
    எத்துனை சம்பத்தப்பட்ட இதர கலைஞர்கள்...
    எத்துனை விநியோகஸ்தர்கள்..
    எத்துனை திரை அரங்கு உரிமையாளர்கள்...
    லீஸ் பார்ட்டிகள்,
    சைக்கிள் ஸ்டான்ட் வைத்திருப்பவர்கள்...
    கான்டீன் வைத்தவர்கள்...
    முறுக்கு விற்பவர்கள்...
    கார் ஸ்டான்ட் வைத்தவர்கள்...


    இன்னும் எத்துனை எத்துனை பேர் நேரிடையாகவும் மறைமுகமாகவம் அந்த திரைப்படங்கள் வெளிவரும்போது ஜீவனம்...வாழ்வாதாரம் பெற்றார்கள் என்பது இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம் ! .....!

    இத்துனை கணக்கில் அடங்க பேர்கள் யாரால் வாழ்ந்தார்கள் ?

    யாரால் ஜீவனம் பெற்றார்கள் ? யாரால் காசு சம்பாதித்தார்கள் ?

    என்னமோ .....இவர்கள்தான் உண்மை விளம்பிகள் போல மற்றவர் கூறுவது பொய் போல ...ஏன் இந்த ஜோடனை ? இன்னும் எத்துனை காலங்கள் இது தொடரும்...!

    நடிகர் திலகம் இல்லாத ஒரு திரை உலகு.....இருள் கொண்ட ஒரு பாழடைந்த மண்டபமாக தான் இருந்திருக்கும் !


    சிவாஜியை வெறும் காழ்புணர்ச்சி, வயிதெரிச்சல் கொண்டு அவர் வளர்ச்சியை அவரது சாதனைகளை பார்த்து பொறாமைகொண்டு இப்படி தூஷணம் ஏன் ?

    திரை உலகில் , நடிகர்கள் எப்படி நடிக்கவேண்டும் ..எப்படி தமிழ் ஏற்ற இறக்கத்துடன் பேசவேண்டும், எப்படி சொன்ன நேரத்தில் படத்தை முடித்து கொடுக்கவேண்டும், முக்கியமாக பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்களை எந்த விதத்திலும் சித்ரவதை செய்யாமல் எப்படி punctual ஆக படபிடிப்புக்கு வரவேண்டும் என்பதை அனைவருக்கும் கற்றுகொடுத்த ஆசான் நடிகர் திலகம் ! அது நினைவிருக்கட்டும் முதலில் !

    ஏழேழு ஜென்மம் ....எத்துனை பிறவி எடுத்தாலும் nobody can ever think or even dream of achieving the status of nadigar thilagam in the entire world of cinema !!
    They can perhaps try & maintain their fake tall claims like an air filled balloon only !
    Last edited by RavikiranSurya; 8th July 2014 at 06:52 PM.

  5. Thanks Subramaniam Ramajayam thanked for this post
  6. #43
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    DEAR SIVA SIR YOUR LIST IS PERFECT. mY NAME IS subramaniam RAMAJAYAM not ramanujam as mentioned in the list. it is okay otherwise. from the age of 10 i was an ardent fan of NT.TODAY iam 65. by god's grace iam able to get along with three geneations of NT fans and associates.

  7. #44
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    dear abkhlabhi. Thanks for exhibiting the undisputed talent of NT in horse riding and his majestic walk and talk in his avtaar as Shivaji. This footage should be preserved to show to the future generations how the original Marathi Warrior Shivaji would have behaved, as depicted by NT with perfection.

  8. #45
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    செல்லுலாய்ட் சோழன் – 20
    சுதாங்கன்

    தன் முதல் படமான `பராசக்தி’ யில் பாடிய சி.எஸ். ஜெயராமன் படியதை சிவாஜி இன்னும் மறக்கவில்லை. அவரே தான் தனக்கு தொடர்ந்து பாட வேண்டும் என்று ஒவ்வொரு தயாரிப்பாளர்களிடமும் சிவாஜி சொல்லிக்கொண்டிருந்த சமயம் அது!

    `தூக்குத் தூக்கி’ படத்தில் நாட்டுப்புறப் பாணி பாடல்கள் தான் அதிகம். `தெம்மாங்கு பாடுவதில் செளந்தரராஜனுக்கு ஈடு கிடையாது’ என்றார் இசையமைப்பாளர் ராமநாதன். எல்லாம் சரி இப்போது செளந்தரராஜன் குரலை சிவாஜி ஒத்துக்கொள்ள வேண்டுமே ? சரி! சிவாஜி தொடரில் ஏன் இத்தனை விஷயம் டி.எம்.எஸ்ஸீக்கு இன்று ஒரு கேள்வி எழலாம்! இதற்கு பிறகுதான் சிவாஜியின் இன்னொரு பரிமாணத்தை நாம் பார்க்கப்போகிறோம்! அதற்காகவே இந்த பீடிகையோடு கூடிய டி.எம்.எஸ். அறிமுகம் தேவை!

    இந்தக் கேள்வியும் கூடவே செளந்தரராஜனின் தன்மான உணர்ச்சியும் குத்திக்கொண்டே இருந்தது. ! தயாரிப்பாளரிடம் சொன்னான், ` எட்டுப் பாட்டுல சிறப்பா இருக்கிற மூணு பாட்டை கொடுங்க ! அத மட்டும் முதல்ல பாடறேன். பதிவான பாடலை சிவாஜி கேட்கட்டும்! அவர் ஒத்துக்கிட்டா மத்தப் பாடல்களையும் பாடறேன். இல்லேன்னா நீங்கள் எனக்கு பணமே கொடுக்க வேண்டாம்!

    படத்தின் இன்னொரு தயாரிப்பாளரான ராதாகிருஷ்ணனின் ஒலிப்பதிவுக்கூடத்தில் முதல் பாடல் பதிவானது.
    `சுந்தரி செளந்தரி நிரந்தரியே’ அடுத்த பாடல் ` பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே ‘ அப்புறம் ` ஏறாத மலை தனிலே ‘ முதல் பாடலை பி.லீலாவும், ஏ,பி. கோமளாவும், டி.எம்.எஸ்ஸுடன் பாடினார்கள்.பாடலை மருதகாசி எழுதியிருந்தார். பெண்களை நம்பாதே பாடலை உடுமலை நாராயண கவி எழுதியிருந்தார்.
    மூன்றாவது முற்றிலுமான தெம்மாங்கு! திஸ்ர நடை, மூன்று கட்டை சுருதி! ஏறாத மலை தன்னிலே ஜோரான கவுதாரி ரெண்டு’ தஞ்சை ராமய்யதாஸ் பாடல்! `பாகவதர் மாதிரி சாரீரம். கள்ளத் தொண்ட கலக்காமல், வார்த்தைகள் திரண்டு நிக்குது. உணர்ச்சி வேகத்தில் எப்படி பாடுகிறார் ‘ வியந்து பாராட்டினார் தஞ்சை ராமய்யதாஸ்!
    பாடல் பதிவானவும் சிவாஜி வீட்டுக்கு போன் பறந்தது. ! இரவு பகலாக படப்பிடிப்பில் இருந்த சிவாஜி தனக்காக பதிவான பாடலைக் கேட்க பறக்கிறார்! காரை விட்டு இறங்கிய சிவாஜியை அப்போதுதான் முதன்முறையாக நேரில் பார்க்கிறார் செளந்தரராஜன். தான் பாடிய பாடலுக்கு இவர் எப்படியெல்லாம் நடிப்பார் ! செளந்தரராஜன் மனதில் கற்பனை ! மரியாதையுடன் ராமநாத அய்யரின் பக்கத்தில் நிற்கிறார் செளந்தரராஜன். `சுந்தரி செளந்தர் நிரந்தரியே ‘ நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்கிறர் சிவாஜி! `கண்டால் சொல்லும் விஷமாம்’ என்று அடுத்த பாடல் ஒலிக்கிறது அடுத்து `ஏறாத மலை மீது பாடல் ஒலிக்கிறது. சாய்ந்து உட்கார்ந்திர்ந்த சிவாஜி நிமிர்ந்து உட்காருகிறார்.
    பாட்டுக்கள் முடிந்தது. நிமிர்ந்து உட்கார்ந்திருந்த சிவாஜி ஒரு புன்னகையுடன் எழந்து நிற்கவும் சரியாக இருந்தது.

    சிவாஜி : ` இந்தப் பாட்டுக்களை யார் பாடியது ?’
    ராமநாதன்: `இதோ இந்த மதுரைப் பையன். செளந்தரராஜன்னு பேரு ..’’ அறிமுகப்படுத்துகிறார்!
    `வாங்கய்யா ‘ என்று செளந்தரராஜனை அருகில் அழைத்தார் சிவாஜி
    `நல்லா பாடியிருக்கீங்க.. எல்லாப் பாட்டுக்களையும் நீங்களே பாடுங்க’ அன்பாக செளந்தரராஜனை முதுகில் தட்டிகொடுக்கிறார் சிவாஜி.

    ஒரு நடிப்புக் கலைஞன் ஒரு பாட்டுக் கலைஞனுக்கு கொடுத்த முதல் பாராட்டு!
    `தூக்குக் தூக்கி படத்தின் அத்தனை பாடல்களுமே சூப்பர் ஹிட்! பட்டித் தொட்டியெங்கும் அதே பாடல்கள் தான் ` படம் வசூலை வாரிக் கொட்டியது.

    1954ம் வருடம் வந்த படம் தூக்குத் தூக்கி. மற்ற எல்லாத் தயாரிப்பாளர்களையும் திகைப்பில் ஆழ்த்திய படம் தூக்குத் தூக்கி. ஒரு நாடோடிக் கதைக்கு மக்களிடம் இத்தனை வரவேற்பா என்கிற கேள்வி ஒரு புறம். இல்லை படத்தின் அத்தனை பாடல்களும் பிரமாதம்! அதுவே மக்களை கொட்டகைக்கு வரவழைத்துவிட்டது என்று சொல்பவர்கள் இன்னோரு புறம்.

    இந்த வருடம் அதாவது 1954ம் வருடம் மட்டும் சிவாஜிக்கு மொத்தம் எட்டு படங்கள் வெளியானது.
    தூக்குத்தூக்கி, இல்லறஜோதி, `அந்த நாள்’ `கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி’ `துளிவிஷம்’ `கூண்டுக்கிளி’ எதிர்பாராதது.

    இதில் ஜனரஞ்சகமாக ஒடி வெற்றியை கண்ட படம் தூக்குத் தூக்கிதான். இந்த படத்தின் பாதிப்பினால் தனக்கு இப்படி ஒரு படம் வேண்டுமென்று எம்.ஜி.ஆர் இயக்குனர் ராமண்ணாவிடம் கேட்டு, இதே பாணியில் அவர் எடுத்த படம்தான் குலேபகாவலி அந்த அளவுக்கு இந்த படத்தின் பாதிப்பு இருந்தது. நவரசங்களையும் கலந்து ஜனரஞ்சகமான படத்தை தன்னால் தரமுடியும் என்பதை இந்த படத்தில் சிவாஜி நீருபித்தார். அரசகுமாரனான சிவாஜி இந்த படத்தில் பல மாறு வேடங்களைப் போட்டு பிரமாதமாக நடித்தார். குறிப்பாக ` குரங்கிலிருந்து பிற்ந்தவன் மனிதன் படத்திற்கு அவர் லலிதா, பத்மினியுடன் சிவாஜி நடனமாடும்போது, கொட்டகையே அதிருமாம், விசில் பறக்கும் !
    இந்த படத்தில் ` அபாய அறிவிப்பு அய்யா அபாய அறிவிப்பு’ என்று ஒரு பாட்டை சிவாஜி , யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையிடம் பாடுவார். இந்த யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை யார் ? இவருடைய நாடக சபாவில் தான் சிவாஜி முதன் முதலாக சேர்ந்து நடிப்பு பயிற்சி பெற்றார்.

    இந்தப் படத்திற்குப் பிறகு தான் சிவாஜிக்கு பின்னனி இனி டி.எம்.எஸ்தான் என்பது உறுதியானது!
    இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் `தூக்குத் தூக்கி’ வெளியான அதே தினத்தில்தான் 26.81954 அன்று எம்.ஜி. ஆர் சிவாஜி முதல் முறையாகவும், கடைசியாகவும் இணைந்து நடித்த கூண்டுக்கிளி படமும் வெளியானது.
    இருபெரும் நடிகர் நடித்த ஒரே படம் என்கிற ஒரே ஒரு சிறப்புத்தான் இந்த படத்திற்கு உண்டு. சிவாஜி இந்த படத்தில் வில்லம் கதாபாத்திரம். படம் இரண்டு பெரிய நடிகர்களின் ரசிகர்களுக்கு திருபதியில்லை. படம் படு தோல்வி. இந்த படத்தை டி.ஆர். ராமண்ணா இயக்கியிருந்தார்.

    அடுத்து வந்த படம் `துளிவிஷம்’ `நரசு காபி’ நிறுவனத்தின் அதிபரான வி.எ. நரசு தயாரித்த படம்தான் இந்த துளி விஷம். திரைக்கதை வசனம் எழதி படத்தை இயக்கியவர் ஏ.எஸ்.ஏ. சாமி. இந்தப் படத்தில் ஒரு திருப்பம். இதில் கதாநாயகன் கே.ஆர். ராமசாமி. சிவாஜி மீண்டும் இந்த படத்திலும் வில்லன்.

    இந்த இடத்தில் சிவாஜியை பற்றி ஒன்றை குறிப்பிட்டே ஆகவேண்டும். தனக்கு நடிக்க வாய்ப்பிருக்கிறதா என்று பார்த்துத்தான் படத்தை ஒப்புக்கொள்வர். அது வில்லனா ? கதாநாயகனா அவருக்கு கவலை கிடையாது !
    (தொடரும்)
    விமர்சனங்களுக்கு: sudhangan@gmail.com
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  9. Thanks eehaiupehazij thanked for this post
    Likes kalnayak, Harrietlgy, eehaiupehazij liked this post
  10. #46
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by KCSHEKAR View Post
    செல்லுலாய்ட் சோழன் – 20
    சுதாங்கன்

    ஒரு நடிப்புக் கலைஞன் ஒரு பாட்டுக் கலைஞனுக்கு கொடுத்த முதல் பாராட்டு!
    `தூக்குக் தூக்கி படத்தின் அத்தனை பாடல்களுமே சூப்பர் ஹிட்! பட்டித் தொட்டியெங்கும் அதே பாடல்கள் தான் ` படம் வசூலை வாரிக் கொட்டியது.

    1954ம் வருடம் வந்த படம் தூக்குத் தூக்கி. மற்ற எல்லாத் தயாரிப்பாளர்களையும் திகைப்பில் ஆழ்த்திய படம் தூக்குத் தூக்கி. ஒரு நாடோடிக் கதைக்கு மக்களிடம் இத்தனை வரவேற்பா என்கிற கேள்வி ஒரு புறம். இல்லை படத்தின் அத்தனை பாடல்களும் பிரமாதம்! அதுவே மக்களை கொட்டகைக்கு வரவழைத்துவிட்டது என்று சொல்பவர்கள் இன்னோரு புறம்.

    இந்த வருடம் அதாவது 1954ம் வருடம் மட்டும் சிவாஜிக்கு மொத்தம் எட்டு படங்கள் வெளியானது.
    தூக்குத்தூக்கி, இல்லறஜோதி, `அந்த நாள்’ `கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி’ `துளிவிஷம்’ `கூண்டுக்கிளி’ எதிர்பாராதது.

    இதில் ஜனரஞ்சகமாக ஒடி வெற்றியை கண்ட படம் தூக்குத் தூக்கிதான்.
    (தொடரும்)
    விமர்சனங்களுக்கு: sudhangan@gmail.com
    Dear KCS Sir:

    Excellent article. However, there are certain facts not represented fully/correctly. First, the biggest movie of NT after "Parasakthi", i.e., "Manohara" is not in the list of movies released in 1954. Though Manohara was the most reputed movie of 1954 till date, Thookku Thookki has the distinction of better movie in terms of box office and NT got the best actor (Pesum Padam - cinema rasigargal award, if am right) for Thookku Thookki.

    1954 - I've earlier also indicated somewhere in the earlier threads about this year. Typically, this is the second year of NT's career - 1952's debut movie 'Parasakthi' got released at the fag end of 1952. See within a year, he was able to churn out 8 different movies out of which 4 are 100 day movies. Kalyanam Panniyum Bramhachari (KPB), Manohara, Edhirparadhadhu & Thookku Thookki (Murali Sir to confirm) of which Thookku Thookki and Manohara are blockbusters (2 tangentially different characters). Edhirparadhadhu, KBP along with "Andha Naal" (anti-hero that too national traitor) and others are also different characters.

    The underlying fact is only one thing. The confidence combined with the guts and talent of NT was evident right from his first film and getting better even at his young age.

    You can use your good offices to correct Mr. Sudhangan's article AS WE NEED TO EMPHATICALLY PROJECT OUR NT. No doubt, Mr. Sudhangan has been doing great service by this series. However, without hurting his ego, we have to fine tune.

    Regards,

    R. Parthasarathy

  11. Thanks kalnayak thanked for this post
  12. #47
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஒருவருக்கொருவர் ஆறுதல் இப்படிதான் கூறிகொள்ளவேண்டும்.

    நம் சாதனையால் அடுத்தவருக்கு வலி, வேதனை, ஏமாற்றம்...இதை தான் இனி வரும் காலங்களில் சொல்லி சமாளித்தாகவேண்டும்...என்ன செய்வது...ஆதாரத்துடன் ஒரு செய்தி வெளிவந்து அதற்க்கு முன் பரப்பப்பட்ட பொய் செய்தி, தகவல்கள் வெளிச்சத்திற்கு வரும்போது..இப்படி பொதுபடையான வாக்கியங்கள் உபயோகிப்பது நல்ல ஒரு STRATEGY

    இதை தான் நாம் முன்பே உரைத்தது போல....காலம் காலமாக தம்முடைய சிறுமையை அடுத்தவர் தலையில் கட்டி ...அடுத்தவர் பெருமைகளை தனதாகி அதை தமுடயது என்று பறை சாற்றும் கலை என்பது !
    அடேயப்பா...! என்ன திறமை...என்ன திறமை..!

    நடிகர் திலகம் செய்த புண்ணியம்...பெரிய மனது வைத்து ஏதோ 4 வருட இடைவெளியில் வந்த இரண்டு படங்களை ஒப்பிட்டார்கள் ...கொஞ்சம் விட்டால் இவர்கள் வசூல் ஒப்பீடு 1952இல் வெளிவந்த பராசக்தி ரிலீஸ் வசூலுடன் 1977இல் வந்த மற்றொரு படத்தின் வசூலை ஒப்பிட்டு...பராசக்தி வசூலை முறியடித்தது மேலும் இந்த படத்தின் வசூலை எந்த படமும் முறியடிக்கவில்லை என்று வழக்கம் போல எந்த ஆவணம்...ஆதாரம் இல்லாமல், கூறவில்லையே அதுவே ஒரு பெரும் ஆறுதல்...

    பாவம் அரசியல் வெற்றி வேறு ...திரைப்பட சாதனை ..சாதித்தல் என்பது வேறு என்பதை இவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை....அரசியல் முழு வெற்றி...திரைபடத்துறயிலும் அப்படி இருக்கவே வாய்ப்பு என்று (ASSUMPTION) கருதிய, கருதும் மக்கள் அந்த கருத்து மாறி ..VICE VERSA வாக தான் இருந்திருக்கிறது அந்த காலத்தில் என்று ஆவணங்களையும் ஆதாரங்களையும் ஒப்பிட்டு பார்க்கும்போது என்பதை தகவல் தொழில்நுட்பம் வளர தொடங்கிய காலத்தில் இருந்தே ஆவணங்களையும் ஆதாரங்களையும் பார்த்து படித்து எது உண்மை எது புருடா என்று உணர தொடங்கிவிட்டார்கள் என்பதை காலம் கனியும்போது உணர்ந்துகொள்வார்கள் !


    வேறு வழி...? இப்படி ஒரு சமாளிப்பு செய்யாமல் போனால் ..மற்றவர்கள் கண்டுபிடித்து விடுவார்களே என்ன செய்வது....ஆகையால் என்ன ஆதார ஆவணம் யார் பதிவிட்டு அதற்க்கு முன் வந்த செய்தி பொய்...தவறு என்று நிரூபித்தாலும் ...

    இவர்களுக்கு மட்டும்...."என்ன கைய புடிச்சு இழுத்தியா?" மற்றும்..." "ஒன்னு இந்தா இருக்கு...இன்னொன்னு எங்கே.....என்று கேட்கும்போது...."அதுதாண்ணே இது " என்ற கதைதான் !

    நல்ல வேளை இணையதளத்தில் பொதுமக்களும் பெருவாரியாக பார்கிறார்களா பிழைத்ததா...இல்லையென்றால் அவ்வளவுதான் !

    " திரை உலகில் சிவாஜி என்றொரு நடிகர் இல்லவே இல்லை ! " என்று கூறினாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை !


    Rks...
    Last edited by RavikiranSurya; 8th July 2014 at 06:32 PM.

  13. #48
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by abkhlabhi View Post
    அருமையான இந்த காவியம் !

    இதில் நாம் சற்று கவனிதோமேயானால், நடிகர் திலகத்தின் திறமை, தரம் எந்த அளவிற்கு உச்சத்தில் இருந்தது என்பதை உணரலாம்.

    பேசி கொண்டிருக்கும்போதே முகபாவ மாற்றம் முகத்தில் உள்ள நெற்றி புருவம் முதல் உதடு தாடை வரை கோர்த்த அபிநயம்.

    மராத்த மன்னர் சிவாஜி போல உள்ள இறைவன் அருளால் வந்த அதே உருவ அங்க அமைப்பு...குதிரை ஓட்டும் லாவகம்..!

    கேமரா எந்த கோணத்தில் வந்தால் எப்படி நிற்கவேண்டும்..ஓடிகொண்டிருக்கும் கமெராவுடன் எந்த கோணத்தில் நடக்கவேண்டும் என்ற துல்லியமான அந்த technical knowledge ...இன்னும் எவ்வளவோ இந்த ஒரு சில நிமிட video மூலம் நாம் உணர முடிகிறது ...! இத்தனைக்கும் இது வேறு மொழி திரைப்படம் !

    வீம்பளப்பவர்கள் பலரும் இந்த ஒரு சில நிமிட video விற்கு பதில் சொல்ல முடியுமா ?

    அதுதான் பிறவி கலைஞன் !

  14. #49
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திருவிளையாடல்- 1965.

    சிவாஜியின் புராண படங்களின் வரிசையில் நான்காவது படமான திருவிளையாடல் அவர் அறிமுகமாகி 13 ஆண்டுகள் கழிந்தது. இதற்கு முன் சம்பூர்ண ராமாயணம்(1958) படத்தில் சிறிய பங்கு பரதனாக. ஆனால் ராமனை மீறி பரதன் புகழடைந்தது நடிகர்திலகத்தின் பிரத்யேக சரித்திரம்.அதுதான் சிவாஜி.இன்னொரு அரசியல் ஜி ராஜாஜியின் பாராட்டே சான்று. 200 நாள் கண்ட வெற்றி சித்திரம்.பரதனும்,பாடல்களும் சாதித்தது. அடுத்த ஸ்ரீ வள்ளி(1961) ,ராமண்ணா இயக்கிய ,நடிகர்திலகத்தின் இரண்டாவது வண்ண படம்.இரண்டாவது புராண படம். ஏனோ சோபிக்கவில்லை. நடிகர்திலகமே கிண்டலடித்தார் தன்னுடைய சிவாஜி ரசிகன் பட தொகுப்பு ஆல்பத்தில். 1964 இல் வெளியான கர்ணனின் புராண சரித்திர இதிகாசம் நான் சொல்லி ரசிகர்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.உலகுக்கே தெரிந்த உன்னதம்.

    1965 -திருப்பு முனை வருடம். 1964 அவருடைய வெற்றி சரித்திரத்தின் பாக்ஸ் ஆபீஸ் உச்சம். 1965இல் புதியவர்களின் வருகை, மற்றும் re- emergence of entertainment movies அவருடைய பழனி,அன்பு கரங்கள் படங்களுக்கு போதிய வரவேற்பில்லாமல் செய்தது.போர், திராவிட அரசியல்,கடவுள் எதிர்ப்பு எல்லாம் உச்சத்தில் இருந்த வேளையில் திருவிளையாடல் வருகை. திருவிளையாடல் அளவுக்கு,எதிர்ப்பிலும் ,சாதகமற்ற சூழ்நிலையிலும் சாதித்து காட்டிய படங்கள் உலகளவில் பார்த்தாலும் வெகு சொற்பமே. இதன் இமாலய வெற்றி உலகறிந்தது.

    திருவிளையாடலின் பிரத்யேக சிறப்புகளை பார்ப்போம்.அதுவரை வந்த புராண படங்கள் யாவும் ,இதிகாச கதையமைப்பை அடிப்படையாக கொண்டவை. அதில் ஒரு நாயகனை வரித்து ,சார்பு கொண்டாலும் ,பெரும்பாலும் கதையமைப்பு சார்ந்தவை.பக்தி படங்களிலும் உருக்கம்.miracle அடிப்படை . இந்த நிலையில் சிவனின் திருவிளையாடல் புராணத்தை அடித்தளமாக்கி episode பாணியில் கதை கோர்ப்பு முயற்சிகளுக்கு முன்னோடி திருவிளையாடல்.வெகு வெகு சுவாரஸ்யமான கோர்ப்பு. முதலில் ஒரு புராண படம் நாயகனை முன்னிறுத்தி உருக்கம்,பக்தி,miracle,glorification இவற்றை செய்யாமல் ,சராசரி மனிதர்களின் பிரச்சினைகளே விஸ்வரூப தரிசனமாய் 5 எபிசோடில் விரிந்தது.(connectivity with common mans' problems and his heart)

    முதல் பிரச்சினை- sibling ego conflict . குடும்ப பிளவில் முடியும் முருகனின் தனி வீடு பிரச்சினை. ஒவ்வொரு வீட்டிலும் நடப்பது போல மக்களால் connect பண்ணி உணர முடிந்த ஒன்று.ஆனால் அசாதரணமான ஞான பழத்தை முன்னிறுத்தி. ஏற்கெனெவே பிரபலமான ஒவ்வையார் பாத்திரம்,கே.பீ.சுந்தரம்பாள் இவற்றின் வெகு புத்திசாலிதனமான நுழைப்பு. படத்திற்கு புது களையை அளித்து விடும்.(பழம் நீயப்பா).

    இரண்டாவது பிரச்சினை- நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன அறிஞர்களின் தார்மீக நெறி சார்ந்த ethic based ego conflict .இதில் இலக்கியம் ,மொழிவளம்,நகைச்சுவை,உன்னத நடிப்பின் உச்சம்,சுவாரஸ்யமான விவாத போக்கு இவற்றினால் ஒரே பாடல் கொண்டு 50 நிமிட படம் போகும் வேகம். (ஏ.பீ.என் ஏற்கெனெவே இதற்காக practice match ஆடியிருந்தார் நான் பெற்ற செல்வம் படத்தில்)

    இங்கு உள்ள படித்த ,வேலை பார்க்கும் அனைவருக்கும் Transaction Analysis பரிச்சயம் ஆகியிருக்கலாம். இதில் ego stage என்பதை parent -Exterro Psyche(dos and donts )-adult-Neo Psyche(reality and practical ) -child-Archaeo Psyche (wishes&needs , Tandrum,illogical )என்ற நிலைகளிலேயே நம் அத்தனை நடைமுறை செயல்பாடுகள்,உரையாடல்கள் மற்றோருடன் நடை பெறுகின்றன.

    உதாரணம்- கணவன் அலுவலகம் கிளம்புகிறான். மனைவி வழியனுப்புகிறாள். தொடருங்கள்.

    "இதோ பாரு ,நான் வீட்டை விட்டு கிளம்பறேன். நல்லா பூட்டிக்கோ.பத்திரம்".(parent ).
    ஆமா பெரிசா வாங்கி போட்டிருக்கீங்க யாராவது திருடிட்டு போக. திருடன் வந்தாலும் அவன்தான் எதையாவது விட்டுட்டு போகணும்.(child ).
    இப்போ நான் என்ன சொல்லிட்டேன்.நீ பத்திரமா இருக்கணும்னுதானே சொன்னேன் செல்லம்.(adult ).
    ஆமா.பத்திரமா இருக்கேன். என் கிட்டே என்னை தவிர வேறென்ன இருக்கு.பாதுகாக்க. ஒரு நகையா நட்டா(child ).
    சரி.office கிளம்பும் போது மூட் அவுட் பண்ணாதே. வாயை மூடறியா (Parent )
    சரி.சரி.என்னை அதட்டுங்கள். உங்க promotion பிரச்சினை என்னாச்சு?(adult ).
    அது இன்னும் முடியாத கதை.வேணு எனக்கு supervisor ஆக இருக்கும் வரை எனக்கு கிடைச்ச மாரிதான்.(child ).
    ஆமா .உங்க வீரம் வீட்டிலேதான்.(child ).
    ஆமா உன் கிட்ட காட்டாம யாரிட்ட காட்டுரதான்.இது போன தீபாவளிக்கு வாங்கினதுதானே.(adult ).
    ஆமா.நல்லி போயிருந்தமே?அப்படியே சீதா வளைகாப்புக்கும் போனோமே?(adult ).
    ஞாபகம் இருக்கு. இந்த கலர் உனக்கு பொருத்தம்.(Adult ).
    சரி.தலை கொஞ்சம் சரியா வாரலை போலருக்கே. சீப்பு கொண்டு வரேன்.(adult ).

    இதில் சில அனுசரணையானது(Adult -Adult ). சில முரணானது.(crossed Transaction.adult -child ,adult -parent )சில ஒப்பு கொள்ள கூடியது.(parent -child )

    நம் வாழ்வில் தற்காலிக-நிரந்தர வெற்றிகள் ,இதனை நாம் பயன் படுத்தும் விதமே.ஆனால் இவைதான் வாழ்வையும் ,கலையையும் சுவாரஸ்யமாக்குகின்றன.இனி திருவிளையாடலுக்கு மீண்டு வருவோம்.

    கொஞ்சம் புரிய தொடங்கியிருக்கும் என நினைக்கிறேன்.

    இந்த episode சிவன்தான் parent ரோல். தன் ஸ்தானத்தில் இருந்து கண்டிப்பு, பராமரிப்பு (தருமிக்கு), சோதிப்பு (நக்கீரன் புலமை மற்றும் பணி நேர்மை) கொண்டது. நக்கீரன் adult ரோல். உள்ளதை உள்ளபடிக்கு தன் தொழில் தர்மத்தில்,நிலையில் உறுதியாக.தருமி child ரோல்.தனக்கு தகுதியில்லைஎன்றாலும் ஆசை படும் நிலை.எடுப்பார் கைபிள்ளையாய்.இப்போது நான் சொன்னதை வைத்து ஒவ்வொரு வசனமாய் எடுத்து ஆராய்ந்தால், இந்த முழு பகுதியில் வரும் நகைச்சுவை, விவாத சுவை,லாஜிக் மீறாத crossed transactions .இதில் சில சமயம் சிவன் parent ,adult ,child நிலைகளில் மாறும் அழகு. நான் யார் தெரிகிறதா ,என் பாட்டிலா குற்றம் (child ). சங்கறுக்கும் நக்கீரனோ என் பாட்டில் குற்றம் சொல்ல தக்கவன் (child ),நக்கீரன் பதிலுக்கு சங்கரனார்க்கு ஏது குலம் (child ). தருமி எல்லா நிலையிலும் child state interraction .இதில் வசன வாரியாக விளக்க அவசியமில்லாமல் ,அனைவருக்கும் தெரிந்த episode .இதில் முழுக்க முழுக்கவே Transaction Analysis வகுப்புக்கு பாடமாக்கலாம்.

    இதிலும் எல்லா தரப்பு மக்களும் தங்களை பிணைத்து கொள்ளும் தகுதி மீறிய ஆசை,கைகெட்டும் தூர அதிர்ஷ்டம்,அது அடையும் நிலையால் denial சார்ந்த சிரமங்கள், அற்புதமான situational dialogue காமெடி, ஒரு பட்டி மன்ற சுவையுடன் இலக்கியம் சார்ந்த தமிழ் விளையாட்டு என்று ethic value based conflict ஒன்று பொது மக்களுக்கு முழு சாப்பாடு திருப்தியாய் பரிமாற பட்டு விடும்.

    முதல் காட்சியில் தருமி யின் புலம்பலுக்கு காட்சி தரும் போது parent நிலையில் ஒரு கண்டிப்பான provider ஆகவே தருமியை child ஆகவே கருதுவார். தருமி தனக்கும் சற்றே புலமையுண்டு என ஸ்தாபிக்க எண்ணும் போது ,adult -adult transaction ஆக மாறும்.ஓலை கொண்டு போக தயங்கும் தருமிக்கு கொடுக்கும் உற்சாகம் parent -adult ஆக மாறும்.


    அடுத்த episode எல்லா வீட்டிலும் கிடந்தது லோல் படும் பிறந்து வீடா,புகுந்த வீடா பிரச்சினை.male ego -female ego clash ஆகும் பிரச்சினை. அழிவின் விளிம்பு வரை செல்லும்.

    அடுத்த episode love teasing பிரச்சினை.

    அடுத்த episode .... எனக்கு அலுவலகத்தில் நேர்ந்தது. ஷா(ஹேமநாதர்) என்ற ஒரு பெரும் அகந்தை கொண்ட vice president (production ).அவருக்கு சம நிலையில் இல்லாத பன்ஸல்(பாண்டிய மன்னன்) என்ற vice president(விற்பனை) .இவர்களுக்குள் மீட்டிங் தோறும் சவால்கள் இருக்கும். ஒருவருக்கொருவர் ஆகாது.அப்போது ஒரு விவகாரமான டாஸ்க் force ரிப்போர்ட். அது சரியான பாணம் ஷாவை மட்டம் தட்ட. அந்த பணியை ஜூனியர்(பாணபட்டர்) ஆன என்னிடம் கொடுத்து ஷாவிடம் அனுப்பினார் பன்ஸல் . எனக்கோ உள்ளுக்குள் உதைப்பு.(இருவரையும் பகைக்க முடியாது) பாணபட்டர் போல முறையிட கடவுள் நம்பிக்கையும் கிடையாது.நான் என்ன பண்ணினேன்,ஒரு தைரியமாக (பன்ஸல் இடம் அனுமதி வாங்கி)என் staff(விறகு வெட்டி) ஒருவரை நன்றாக சொல்லி கொடுத்து ,இந்த மூன்று கேள்வி கேளுங்கள், டூரில் இருந்து வந்தவுடன் கோபால் உங்களிடம் வருவார் என்று செய்தியுடன்.அந்த கேள்விகளின் ஆழம் தாங்காத ஷா ,சிஷ்யனே இப்படி என்றால் என பயந்து task force report பாதகமாக இருந்தும் ,அப்படியே ஒப்பு கொண்டார்.பன்ஸல் வெற்றி களிப்புடன் எனக்கு ஒரு promotion கொடுத்து கொண்டாடினார்.

    இது கிட்டத்தட்ட சிவபெருமான் இல்லாத திருவிளையாடல். கடைசி ஒன்று challenge to the establishment ,அது சார்ந்த personality conflict ,superiority complex மற்றும் அது சார்ந்த வாழ்கை சறுக்கல்கள்.ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் ஒரு நிலையிலாவது உணர கூடியது.

    இப்போது புரிகிறதா இந்த புராண படத்தின் அசுர வெற்றியின் ரகசியம்? ஒவ்வொரு எபிசோடும் நம் வாழ்க்கைக்கு அருகே வந்து ஒவ்வொரு தனிமனிதனையும் தொட்டு பார்க்க கூடியது. எந்த அமானுஷ்யமும் கிடையாது.(சிவாஜி என்ற நடிப்பதிசய அமானுஷ்யம் ஒன்றை தவிர )

    முதல் அரை மணி நான்கு பாடல்கள் கடக்கும்(சம்போ மகாதேவா,அவ்வையின் இரண்டு,பொதிகை மலை). அடுத்த ஒன்றரை மணி ஒரு பாடலும் இருக்காது. (ஒன்றே ஒன்று நீல சேலை)ஒரு ஆடல் சிவதாண்டவம். அடுத்து ஒரு மணி நேரம் ஐந்து பாடல்கள்.(ஒரு நாள் போதுமா,இல்லாததொன்றில்லை,இசை தமிழ் நீ செய்த,பார்த்தா பசுமரம்,பாட்டும் நானே),கடைசி முடிவில் ஒன்று ,இரண்டு,வா சிவாசி என்று .கிட்டத்தட்ட முக்கிய இரண்டு பகுதிகள் இயல் தமிழுக்கு,இசை தமிழுக்கு என பிரிக்க பட்டு சிவனின் நாடகம் அரங்கேறும்.

    என்ன அழகான சுவாரஸ்ய பகுப்பு? ஒரு வித்யாசமான அமைப்பு மற்றும் அணுகுமுறை சுவாரஸ்யம் கூட்டும்.
    Last edited by Gopal.s; 9th July 2014 at 08:11 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  15. Likes KCSHEKAR, joe liked this post
  16. #50
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜியின் மேதைமை ,இந்த படத்துக்கான நடிப்பு முறையையே புரட்டி போட்டு பல விற்பன்னர்களையே தலை சுற்ற வைத்தது. அப்படி ஒரு சிந்தித்து செயல் பட்ட ஒரு plasticity கொண்ட அதிசய நடிப்பு முறை. திருவிளையாடற் புராணம் மதுரை மண்ணில் சிவ பெருமான் சாதாரண மக்களுடன் மக்களாய் நின்று தோள் கொடுத்து செய்த மகத்துவங்களை குறிக்கும்.

    சிவாஜி கையாண்ட நடிப்பு முறை இன்னதுதான் என்று வரையறுக்க கூடாது. ஒரு அரசன் என்றால் அவன் பொறுப்பு,நிலை சார்ந்து எப்போதுமே ஒரு தலைமை கம்பீரத்தை காட்டியாக வேண்டும். ஆனால் இந்த பட கடவுளோ, சராசரி மனிதன் போல தாயாய்,தந்தையாய் ,காப்பனாய்,பாமரனாய் ,சோதிக்கும் தந்தையாய் ,முரட்டு புலவனாய்,அகந்தை கணவனாய் ,பாமர காதலனாய் ,விறகு வெட்டியாய் ,சில நேரம் கடவுளாக என பல வகை நிலைகள்.ஒரே படத்தில். கடவுளின் அமானுஷ்யத்தையும் இழக்காமல்,கொண்ட பாத்திரத்தையும் துறக்காமல் நடிக்கும் இவரது நயம்.(எனக்கு கடவுள் என்றால் சிவ பெருமான்தான்,ஆனால் இதில் வரும் சிவாஜி போலவே என்று மனதில் ரோல் மாடல் உண்டு)

    குறிப்பிட்டு சொன்னால் சிவ தாண்டவம். ஒரு purist dancer ஆக முழுமை இருப்பதாக சொல்ல முடியாவிட்டாலும் ஒரு ஆண்மை நிறை ரௌத்ரம் பீறிடும். ஒரு விகசிப்பு நிலையை தரும்.(ராணி லலிதாங்கி,நிறைகுடம்,பொன்னூஞ்சல் எல்லா படத்திலும் அவர் சிவதாண்டவம் அருமைதான்).

    மீனவ பாத்திரத்தில் இவர் சுவாரஸ்யம் கூட்டும் அந்த வினோத நடை.(அழகான இரவல்).இந்த பகுதி சற்றே சுவாரஸ்யம் குறைந்ததை சிவாஜியின் காதல் குறும்பு,நடை ஈடு செய்து விடும்.

    அடுத்து பாட்டும் நானே பாட்டில் அத களம். ஒரு குறும்பு பார்வை.பாடும் உன்னை நான் என்று ,நான் அசைந்தால் அசையும் இடத்தில் ஒரு குலுங்கல் ஏளன சிரிப்பு,வாத்திய கருவிகள் கையாளும் timing ,preparatory gesture ,perfection நம்மை பிரமிப்பின் உச்சிக்கே பறக்க வைக்கும். அப்பப்பா இந்த பாத்திரத்தில் அவரை பார்த்து கன்னத்தில் போட்டு கொள்ளாதவர் யார்?என்ன கம்பீரம் ,தெய்வ தன்மை ...வா சிவாசிதான்....குத்துபாட்டு அலம்பல் வேறு. பார்த்தா பசுமரம்.

    கே.வீ.மகாதேவன் இசையில் அத்தனை பாடல்களும் classy என்றாலும் குறிப்பாக ஒருநாள் போதுமா (மாண்டுவில் துவங்கி ராகமாலிகை),பாட்டும் நானே (கௌரி மனோகரி),இசை தமிழ், பழம் நீயப்பா,பொதிகை மலை உச்சியிலே,பார்த்தா பசுமரம்.இது ஒரு இசை திருவிழா.

    நாகேஷ் -இதை சொல்லாத பத்திரிகை இல்லை. நான் என்ன சொல்ல ?இவர் performance ,சிவாஜியின் பெருந்தன்மை எத்தனை முறை எத்தனை பேர்களால் அலச பட்ட சமாசாரம்.?

    ஆனால் நடிகைக்கு கற்பவதிகள்தான் அகப்படுவார்களா கடவுளின் நாயகிகள் பாத்திரத்திற்கு?ஏ.பீ.என் இரு முறை தவறினார்.இந்த பட பார்வதி சாவித்திரி,திருமால் பெருமை ஆண்டாள் கே.ஆர்.விஜயா.


    இறுதியாக உறுதியாக இந்த பட கதை,வசனம் ,இயக்கம் ,தயாரிப்பு அனைத்தையும் இழுத்து செய்த அருட்செல்வர் நாகராஜர். அப்பப்பா ..என்ன ஒரு செம்மை,இலக்கிய நயம்,விறுவிறுப்பு ஜனரஞ்சக ஈர்ப்பு.. தலை வணங்குகிறோம் அருட்செல்வரே.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  17. Likes KCSHEKAR, joe liked this post
Page 5 of 400 FirstFirst ... 345671555105 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •