-
8th July 2014, 08:42 PM
#51
Junior Member
Veteran Hubber
Nadigar Thilagam Sivaji Ganesan : A Never Before Never Again Neglected Phenomenon in Global Cinema!
Dr.S.Senthilvel
Cinema remains till today the powerful medium of entertainment encompassing breathtaking visuals, enchanting music and enterprising story telling alongside effervescent acting histrionics that keeps the viewer spellbound with psychological impulses in their minds. Ever since this medium came in vogue, started the domination of the heroes as their 'larger than life' portrayals penetrated into the hearts and minds of the viewers culminating into the so called 'hero worship' adoring them as demigods inseparable from all walks of life! The cross-current ingredients of cinema worldwide have been varying spatially and temporally but the unique hallucination of hero worship remains unaffected irrespective of the country or culture. In other words, a hero is construed as the backbone of success for a film even as other vital ingredients like the direction, background music, story content, supporting characters, audio-visual qualities, dialogues and dialogue deliveries, action scenes, dances,....what not, also exist alongside the hero's histrionics. The Global Cinema has witnessed an incessant array of actors over decades, who have enthralled the 'fans' to their delight.....Gregory Peck, Ronald Coleman, Marlon Brando, Charlton Heston, Cary Grant, Humphry Boghart, John Gielgud, Lawrence Olivier, Richard Burton, Errol Flynn, Fred Astaire,Gene Kelley ....Sean Connery, Clint Eastwood,Jack Nicholson, Stallone, Schwarzenegger, ..Robin Williams, Di Caprio... Raj Kapoor, .....M.G. Ramachandran, Gemini Ganesan,.....and above all the one and the only one 'never before never again' but 'neglected' global phenomenon ... Sivaji Ganesan... the Celluloid God of acting! ................( I purposely stop at this stage as I wish to convey some message to our fellow hubbers, whether I am bound to receive bouquet or brickbats)
The principal objective of this technical article is to analyse the traits of actor of actors Sivaji Ganesan as to why he should be given the 'better late than never' recognition for a 'life time achievement award' by the Globally acclaimed Oscar Award commitee!
dear RKS, I sincerely feel that as the hard core Sivaji fan I must do justice by way of initiating 'original' articles on NT's calibre and legacy as a stepping stone for aspirants to follow (with a hidden agenda of bringing into limelight the latent talents of our fellow hubbers to write more on glorifying NT with a simultaneous wish of converting these resource material into a thesis quality for getting M.Phil or Ph.D from appropriate Universities through our Hub)
I invite suggestions from our friends for further actions in taking our threads to meaningful activities and dignified higher levels rather than wasting our time and energy with 'school-children' type filthy quarrels on movie collection statistics (which may be beneficially utilized for such value added articles). I will be elated if authors can also join together for their contributions (both in Tamil and English) to be documented properly as 'degree' award winning articles or valuable resource materials for reference by research scholars on Sivaji Ganesan and his films! I think this will be truly a service to the society by a chartered union that sings the name and fame of NT in unison, rather than building castles in air!
Last edited by sivajisenthil; 8th July 2014 at 11:15 PM.
-
8th July 2014 08:42 PM
# ADS
Circuit advertisement
-
8th July 2014, 08:42 PM
#52
Junior Member
Veteran Hubber
dear RKS and Gopal Sir. I hope you can take a lead prompting other seasoned and wisdom filled writers on NT taking mypersonal views and suggestions in an optimistic angle! Let us not give way for a stalemate situation by responding to ignorable comments and neglectable criticisms from other threads which may have different objectives for their existence and survival.We have grown up to this dignified level 14....which warrants something different from us rather than exchanging paper arrows and verbal dynamites!
Last edited by sivajisenthil; 8th July 2014 at 09:24 PM.
-
8th July 2014, 09:13 PM
#53
Senior Member
Devoted Hubber

Originally Posted by
RavikiranSurya
ஒருவருக்கொருவர் ஆறுதல் இப்படிதான் கூறிகொள்ளவேண்டும்.
நம் சாதனையால் அடுத்தவருக்கு வலி, வேதனை, ஏமாற்றம்...இதை தான் இனி வரும் காலங்களில் சொல்லி சமாளித்தாகவேண்டும்...என்ன செய்வது...ஆதாரத்துடன் ஒரு செய்தி வெளிவந்து அதற்க்கு முன் பரப்பப்பட்ட பொய் செய்தி, தகவல்கள் வெளிச்சத்திற்கு வரும்போது..இப்படி பொதுபடையான வாக்கியங்கள் உபயோகிப்பது நல்ல ஒரு STRATEGY
இதை தான் நாம் முன்பே உரைத்தது போல....காலம் காலமாக தம்முடைய சிறுமையை அடுத்தவர் தலையில் கட்டி ...அடுத்தவர் பெருமைகளை தனதாகி அதை தமுடயது என்று பறை சாற்றும் கலை என்பது !
அடேயப்பா...! என்ன திறமை...என்ன திறமை..!
நடிகர் திலகம் செய்த புண்ணியம்...பெரிய மனது வைத்து ஏதோ 4 வருட இடைவெளியில் வந்த இரண்டு படங்களை ஒப்பிட்டார்கள் ...கொஞ்சம் விட்டால் இவர்கள் வசூல் ஒப்பீடு 1952இல் வெளிவந்த பராசக்தி ரிலீஸ் வசூலுடன் 1977இல் வந்த மற்றொரு படத்தின் வசூலை ஒப்பிட்டு...பராசக்தி வசூலை முறியடித்தது மேலும் இந்த படத்தின் வசூலை எந்த படமும் முறியடிக்கவில்லை என்று வழக்கம் போல எந்த ஆவணம்...ஆதாரம் இல்லாமல், கூறவில்லையே அதுவே ஒரு பெரும் ஆறுதல்...
பாவம் அரசியல் வெற்றி வேறு ...திரைப்பட சாதனை ..சாதித்தல் என்பது வேறு என்பதை இவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை....அரசியல் முழு வெற்றி...திரைபடத்துறயிலும் அப்படி இருக்கவே வாய்ப்பு என்று (ASSUMPTION) கருதிய, கருதும் மக்கள் அந்த கருத்து மாறி ..VICE VERSA வாக தான் இருந்திருக்கிறது அந்த காலத்தில் என்று ஆவணங்களையும் ஆதாரங்களையும் ஒப்பிட்டு பார்க்கும்போது என்பதை தகவல் தொழில்நுட்பம் வளர தொடங்கிய காலத்தில் இருந்தே ஆவணங்களையும் ஆதாரங்களையும் பார்த்து படித்து எது உண்மை எது புருடா என்று உணர தொடங்கிவிட்டார்கள் என்பதை காலம் கனியும்போது உணர்ந்துகொள்வார்கள் !
வேறு வழி...? இப்படி ஒரு சமாளிப்பு செய்யாமல் போனால் ..மற்றவர்கள் கண்டுபிடித்து விடுவார்களே என்ன செய்வது....ஆகையால் என்ன ஆதார ஆவணம் யார் பதிவிட்டு அதற்க்கு முன் வந்த செய்தி பொய்...தவறு என்று நிரூபித்தாலும் ...
இவர்களுக்கு மட்டும்...."என்ன கைய புடிச்சு இழுத்தியா?" மற்றும்..." "ஒன்னு இந்தா இருக்கு...இன்னொன்னு எங்கே.....என்று கேட்கும்போது...."அதுதாண்ணே இது " என்ற கதைதான் !
நல்ல வேளை இணையதளத்தில் பொதுமக்களும் பெருவாரியாக பார்கிறார்களா பிழைத்ததா...இல்லையென்றால் அவ்வளவுதான் !
" திரை உலகில் சிவாஜி என்றொரு நடிகர் இல்லவே இல்லை ! " என்று கூறினாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை !
Rks...
திரு RKS
விட்டுவிடுவோம் பாவம் சுய இன்பம் அடைபவர்கள்
தங்களது அபிமான நடிகரின் படங்கள்தான் சாதனை
செய்யும் செய்தது வேறு எந்த நடிகர்களது படங்களும்
சாதனை செய்யாது செய்யவில்லை செய்யக்கூடாது
என்ற மனநோய் பிடித்தவர்கள்
என்னதான் ஆதாரம் காட்டினாலும் அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது
ஏனெனில் மனநோய் ஏற்றுக்கொள்ளவிடாது
அங்கே ஒருவராவது உண்மைகளை தெரிந்துகொள்ள விருப்பமுள்ளவர்
இருக்கக்கூடும் அவருக்காகவும் நம்மவர்கள் தெரிந்துகொள்ளவும்
என்னைபொறுத்தவரை இலங்கைவிபரங்களில் மட்டும்
என்னிடம் உள்ள சரியான விபரங்களையே தருகிறேன்
இலங்கையில் எம் ஜீ ஆர் படங்கள் 100 நாட்கள் 200 நாட்கள்
ஓடவில்லை என்று எங்காவது சொல்லியிருக்கிறேனா?
பிழையான தகவல்களை சுட்டிக்காட்டியுள்ளேனே தவிர ஓடவில்லை
என்று எங்குமே சொல்லவில்லை
ஆனால் நான் எழுதுவதை
சரிபிழை பார்க்கக்கூட அவர்களது மனநோய் விடுவதாக இல்லை
உதாரணத்துக்கு சில விபரங்களை தருகிறேன்
(ஒரு உதாரணம் இங்கே ரிக்ஷாகாரன் படம்18 ..02..1972ஆம் ஆண்டு
திரையிடப்பட்டது
ரிக்ஷாகாரன் திரையிட்ட அதே அரங்குகளில் 12..04..1972..ஆண்டு
தங்கைக்காக திரையிடப்பட்டது அந்த காலப்பகுதியில்
திரை உலகம் பதத்pரிகையில் ஒருவர் ரிக்ஷாகாரன் 10வது வாரத்தையும் கடந்து
ஓடிக்கொண்டிருப்பதாக எழுதியிருந்தார் தங்கைக்காக திரையிடும்பொழுது ரிக்ஷாகாரன்
முழுமையான 8 வாரங்கள் ஆகவில்லை
அப்படியிருக்க எப்படி 10 வாரத்தை தாண்டி ஓடமுடியும்
அதற்கான பதிலடியை மின்மினி
பத்திரிகைக்கு எழுதி அனுப்பியிருந்தேன் அதில் எனது கடிதம் பிரசுரிக்கப்பட்டது
அது பழைய கதை அதை விடுவோம்
புது கதையை பாருங்கள்
ரிக்ஷாகாரன்..கெப்பிட்டல் 84 நாட்களாம..;வெலிங்டன்..79.. நாட்களாம்
ஒலிக்கிறது உரிமைகுரல் மே மாதம் 2013ல் பிரசுரித்துள்ளார்கள.;இப்படித்தான் வெற்றி
அல்லது சாதனை காட்டுகிறார்கள)
மேலே குறிப்பிட்டுள்ளது இலங்கை நண்பர்
டேவிட் பெயரில பிரசுரிக்கப்பட்டுள்ளது தந்த வசூலைதான் பிரசுரித்துள்ளார்கள்
ரிக்ஷாகாரன் ஓடிய நாளில் 20 நாட்களை அதிகரித்து காட்டியவர்
உ சு வாலிபன் வசூலில் எத்தனை லட்சங்களை அதிகரித்து
கள்ளக்கணக்கு காட்டியிருப்பார்
மனச்சாட்சி உள்ள எம் ஜீ ஆர் ரசிகர்கள் சிந்திப்பார்கள்
கொழும்பு வசூல்விபரங்கள் தியேட்டர் உரிமையாளர்கள்
வெளியிட்டால் தவிர பெரும்பாலும் வெளிவருவதில்லை
யாழ்நகர் வசூல்விபரங்கள் மட்டுமே அங்கே பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது
கிடைக்கமுடியாத கொழும்பு வசூலை பிரசுரித்தவர்கள்
கிடைக்கககூடிய கிடைத்த யாழ்நகர் வசூலை ஏன் மரைறத்து வைத்திருக்கிறார்கள்?
ஒளிவிளக்கு ஓடிய நாள் விபரத்தில்
மட்டுநகர் சாந்தி என்பதற்குபதிலாக
தவறுதலாக யாழ்நகர் சாந்தி என பதிந்துள்ளார்கள்
1969ல் யாழ்நகரில் சாந்தி தியேட்டர் கிடையாது
இவற்றையெல்லம் சொன்னால் நாங்கள் எம் ஜீ ஆர் பட சாதனைகளை ஜீரணிக்கமுடியாமல்
கூக்குரல் இடுகிறோமாம்
இதற்கெல்லாம் பதில் சொல்லதேவையில்லலையாம்
நாங்கள் உள்ளதை சொல்கிறோம்
அவர்களிடத்தில் பதில் இல்லை
என்னே சமாளிப்பு வார்த்தைகள்
எங்கள் முலம் உண்மைகள் வெளிவருவதனால்
அவர்களுக்கு எங்கள்மேல் ஆத்திரம் விரோதம் ஏற்படுகிறது
அதனை சாமர்த்தியமாக எங்கள்மேல் பழிபோடுகிறார்கள்
ஏனெனில் தங்கள் தோல்விகளை எதிரிகளின் தோல்விகளாக
சுமத்தி பழக்கப்பட்டவர்களாயிற்றே
-
8th July 2014, 09:39 PM
#54
Senior Member
Diamond Hubber
சிவாஜி கணேசன்
- R.P.ராஜநாயஹம்
திருவிளையாடல் படத்தில் கடற்கரையில் ஒரு நடை,
மன்னவன் வந்தானடி பாட்டில் முதல் வரி முடிந்தவுடன் ஒரு கம்பீர நடை,
’மன்னிக்கவேண்டுகிறேன் உந்தன் ஆசையை தூண்டுகிறேன்’ பாடலின் பிஜிஎம்மில் ஒரு நடை
’ செல்வம்’ படத்தில் ’காற்றிலே நீந்தும் கொடியிடை என் கைகளில் தவழட்டுமே’ என்ற வரி முடிந்ததும் ஒரு நடை.
’யாருக்கு மாப்பிள்ளை யாரோ!அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ!’பாடலை ரசித்துக்கொண்டே ஊனமுற்ற காலோடு ஒரு அழகு நடை.
நடப்பதில் கூட இவ்வளவு வெரைட்டி காட்டி விட முடியுமா!!
பராசக்தி மூலம் புயலாக வீசி,
மனோகராவில்கொந்தளித்து ’குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே’ என்று சீறிய, சீரிய கலைஞன்.
உத்தம புத்திரனில் விந்தையான வேந்தனாக காட்டிய ஸ்டைல்!
’ராஜா ராணி’ படத்தில் சேரன் செங்குட்டுவனாக
ஒரு lengthy single shot ல் மடை திறந்த வெள்ளம் போல பேசிய அடுக்கு மொழி வசனங்கள்.
“காவிரி தந்த தமிழகத்துப் புதுமணலில் களம் அமைத்து
சேர சோழ பாண்டி மன்னர், கோபுரத்துக் கலசத்தில் யார் கொடி தான் பறப்பதென்று இன்று போல் போர்
தொடுத்துக்கொண்டிருந்த காலமது!”
எம்.ஆர்.சந்தானத்தைப்பார்த்து’தானாபதி பிள்ளை அவர்களே! நீவிர் நாகாக்க.’
என்ற வீரபாண்டிய கட்டபொம்மன்.
குறவஞ்சி படத்தில் “ மன்னா! பசிக்கிறது என்றால் அடிக்கிறார்கள். வலிக்கிறது என்றால் கொன்றே விடுகிறார்கள் ” என்ற குமுறல்.
வணங்காமுடி படத்தில் ’பாடுடா’ என்று நம்பியார் அதிகாரமாக தங்கவேலுவிடம் வற்புறுத்துவார்.தங்கவேலு திகைத்து தவிக்கும்போது நம்பியார் ஒரு அடி பலமாக கன்னத்தில் அறைவார். அடுத்த நொடியில் சிவாஜி பாடுவதாக ” பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் பயன் தருமா- ஓங்காரமாய் விளங்கும் நாதம்” இதில் சிவாஜி கணேசனின் தொண்டை நரம்பு புடைக்கும். எந்த பாடலாயிருந்தாலும் தானே பாடுவதான பிரமையை உண்டாக்கிய நடிகர்.
தமிழர்கள் பாக்கியசாலிகளல்லவா! தமிழ் திரை கண்ட அசுர நடிகன் எங்கள் சிவாஜி கணேசன்.
கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று ஒரு cliche இன்று உச்சரிக்கப்படுகிறதே.’தெய்வப்பிறவி’ படத்தில் சிதம்பரம் ஜெயராமன் -ஜானகி பாடிய
“அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம்
அம்புலியின் மீது நாம் ஆடி வரும் ஓரங்கம்
உடல் நான் அதில் உரம் நீ
என உறவு கண்டோம் நேர்மையாய்
பகல் இரவாய் வானத்திலே கலந்து நின்றோம் பிரேமையால்.............
ஏகாந்த வேளை வெட்கம் ஏனோ வா என் பக்கம்” ஆஅ ஆஅ ஆ...
இந்தப்பாடலுக்கு சிவாஜி கணேசன் பத்மினி ஜோடிக்கிடையிலான கெமிஸ்ட்ரி பார்த்து விட்டு சொல்ல வேண்டும்.
”அன்பாலே தேடிய ”என்று அடி வயிற்றில் இருந்து குரல் எடுப்பது போல் பாவனை செய்வார்.
சபாஷ் மீனா ”காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலம் தானோ”
”மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கள மேடையின் பொன்வண்ணம் கண்டான்”
இந்தப் பாடல் காட்சியை பார்க்கும்போது,அவர் வாயசைக்கும் நேர்த்தி பற்றி சொல்ல வார்த்தைகளே கிடையாது.
கைத்துப்பாக்கியை சுடுவதற்குத் தானே யாரும் பயன்படுத்த முடியும். எந்த நடிகனும் எத்தனை ஸ்டைலாக துப்பாக்கியைப்பிடித்தாலும் நோக்கம் சுடுவதாகத்தானே இருக்கும்.ஆனால் ஆவேசமாக துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வந்து,பொங்கி வரும் அழுகையை அடக்கிக்கொண்டு,சுட வந்த கைத்துப்பாக்கி கொண்டு,கண்ணீரை துடைக்க முற்பட்ட ஒரே நடிகன் இந்த உலகத்திலேயே சிவாஜி கணேசன் ஒருவர் மட்டுமே! என்ன ஒரு கவிதாப்பூர்வம்!
”காதலிக்கிறேன் என்றாள். பின் கல்யாண தேதி நிர்ணயித்தாள்.அதன் பின் காத்திருக்கிறேன் உங்களுக்காக என்று கை தேர்ந்த நாடகமாடினாள்.முடிவில் வாக்குத்தவறி விட்டாள்.வந்த வழியே செல்லுங்கள் என்றாள்.நடக்காது நம் கல்யாணம் என்று கூறி விட்டாள். கடைசியாகச் சென்று பார்த்தால் கல்நெஞ்சக்காரி கண்ணுறங்குகிறாள்!நம்பிக்கைக்கு துரோகமா? கல்யாணம் என்று மோசமா? கடைசியில் கண்ணுறக்கமா? ”ஆவேசமான கணேசனின் கணீர் என்ற குரல்...
இடி.. ..மின்னல்! இடி.. மின்னல்!
’ ராதா!ராதா!ராதா’என்ற கதறல்!
தொடர்ந்து டி.எம்.எஸ் பாடல்
’உன்னைச்சொல்லி குற்றமில்லை
என்னைச்சொல்லி குற்றமில்லை!
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
மயங்கவைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை
நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை
ஒரு மனதை உறங்க வைத்தான்
ஒரு மனதை தவிக்க விட்டான்
இருவர் மீதும் குற்றமில்லை
இறைவன் செய்த குற்றமடி’
இன்றைக்கு அடிடா அவளை!ஒதடா அவளை!...
why this கொலவெறி..... என்று வந்த காட்சிகளுக்கெல்லாம் மூலம் இந்த ’குலமகள் ராதை’ தானே!
ஒரே நேரத்தில் உடலின் அத்தனை அங்கங்களையும் இயக்கி நடிக்கவைத்த கலைக்குரிசில் கணேசன்!
’ஐயா பாரதி... போய்விட்டாயா’ என்று கலங்கிய கப்பலோட்டிய தமிழன்.
’நான் எங்க போவேன்..எனக்கு யாரைத்தெரியும்..மாமா நிசமாவே போவச்சொல்றீங்களா மாமா!’ என்று தேம்பிய வெகுளி ரங்கன்.
’கண்ணில் தெரியும் வண்ணப்பறவை கையில் கிடைத்தால் வாழலாம்’ - தவித்த பலே பாண்டியா
’சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்’ என்ற வரிகளுக்கு முகத்தின் குளோஸ் அப் மூலம் அர்த்தம் சொன்ன கலை மேதை.
’நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா!
சட்டி சுட்டதடா கை விட்டதடா’
’நவராத்திரி’ நவரச நாயகன்.
’புதிய பறவை’ ஜென்டில்மேன்.
ஸ்டைலாக சிகரெட் குடிப்பதில் எவ்வளவு வகைபாடு காட்டலாம்?’சாந்தி’ படத்தில் -”யார் அந்த நிலவு!ஏனிந்த கனவு!”
சிவாஜி மட்டும் பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் திருவிளையாடல் தருமி பாத்திரத்தில் நாகேஷ் தூள் கிளப்பி கலக்கியிருக்கமுடிந்திருக்குமா??
’நெஞ்சிருக்கும் வரை’ படத்தில் அரிதாரம் பூசாமலே ‘முத்துக்களோ கண்கள்!தித்திப்பதோ நெஞ்சம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை’ என்ற நெகிழ்ச்சி!
ரிலாக்ஸ்டாக கலாய்த்த ’கலாட்டா கல்யாணம்’
’மோகனாம்பாளின் சிக்கல் சண்முகசுந்தரம்’
உயர்ந்த மனிதன் அவருக்கு 125 வது படம். 124 படங்களுக்குப்பிறகு புதிதான ஒரு பாத்திரத்தை எப்படி சித்தரிக்க முடிந்தது என்பதில் இருக்கிறது கணேசனின் சாதனை வீச்சு.
சுருக்கமாக ’செல்லும்’ இந்த வார்த்தைகளோடு கணேசன் நடித்த படங்களின் அத்தனைக்காட்சிகளும் முழுமையாக விரிகிற அதிசயம் நிகழ்கிறது.
கிருஷ்ணன் பஞ்சு, எல்.வி.பிரசாத், பி.ஆர்.பந்துலு, பீம்சிங், ஏ.பி.நாகராஜன், ஸ்ரீதர், கே.எஸ்.ஜி, ஏ.சி.திருலோக்சந்தர் போன்ற இயக்குனர்களின் படைப்புகளில் விதவிதமான அவதாரங்கள் எடுத்த மகத்தான கலைஞன்!
1960களில் மேக்கப் இல்லாமல் வேட்டி சட்டை போட்டு நெற்றியில் விபூதி குங்குமம் இட்டு பொது நிகழ்வுக்கு வரும்போது முகவசீகரம்.
அந்த ஸ்பெஷல் கண்கள்! அந்த ஸ்பெஷல் மூக்கு!
அந்த அடர்ந்த இயற்கையான கேசம்! 70 வயதில் கொஞ்ச காலம் குடுமி கூட வைத்துக்கொண்டிருந்தார்!
ஃபுல் சூட் கனகச்சிதமாக பொருந்திய கணவான் கணேசன்.
ஒரு கதாநாயகன் அந்தக்காலத்தில் நினைத்தே பார்க்க விரும்பாத ‘அந்த நாள்’தேசத்துரோகி.
’பார் மகளே பார்’ வரட்டு கௌரவ,அகங்கார, பணத்திமிர்.
நண்பனையே கொல்லத்துணியும் ’ஆலயமணி’ பொறாமை.
இமேஜ் பற்றிய பிரக்ஞை கிஞ்சித்தும் இல்லாதஒரே ஹீரோ நடிகர்.
ராமன் எத்தனை ராமனடி படத்தில் மாஸ்டர் பிரபாகர் நடிகர் திலகத்தைப் பார்த்து ’டே சாப்பாட்டுராமா’ என்பான்!
ராஜராஜ சோழன் படத்தை விட்டுத்தள்ளிவிடலாம்.ஆனால் அப்படத்தில் டி.ஆர் மகாலிங்கம் இவர் வீசும் வார்த்தைகளை எடுத்துப்பாடும் காட்சி.
’தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள்
அவள் தென்மதுரை கோவிலிலே சங்கம் வளர்த்தாள்.
தஞ்சையிலே குடி புகுந்து மங்களம் தந்தாள்
தரணியெல்லாம் புகழ் மணக்க தாயென வந்தாள்
மணிமுடியில் தொல்காப்பியம் வீற்றிருக்கும்
திருவடியில் சிலம்போசை பாட்டிசைக்கும்
அணிமுத்து மாலை எட்டுத்தொகையாகும்
அவன் ஆட்சி செய்யும் செங்கோலே குறளாகும் திருக்குறளாகும்
புலவரெல்லாம் எழுதி வைத்த இலக்கியங்கள்
பொன்மேனி அலங்கார சீதனங்கள்...........’
’ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல’ தங்கபதக்கம் சௌத்ரி.
அவருடைய 24 வயதில் ஆரம்பித்து கடைசி வரை, முதுமை வியாதிகள் அவரை சித்திரவதை செய்த போதும் சிவாஜி கணேசன் ஷூட்டிங் என்றால் சம்பந்தப்பட்ட யூனிட் ஆட்கள் பதறி அடித்துக்கொண்டு காலை ஆறு மணிக்கே தயாராக வேண்டும்.முழு மேக்கப்புடன் ரெடியாக ஸ்பாட்டில் ‘என்னடா ! உங்களுக்கு இன்னும் விடியலயா?’ என்று குறும்பு பேசும் சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன்.
நேரில் சந்திக்கிற மனிதர்களை தன் கதாபாத்திரங்களுக்கு பிரதிபலிப்பார்.
’ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு பாடலில் கடைசி ஸ்டான்சாவில் கிருபானந்த வாரியார் (இந்தப் பாடலில் அவருடைய நடை மற்றொரு விஷேசம்) ..கடலை சாப்பிடுகிற அழகு.
திருவருட்செல்வர் ‘அப்பர்’ பாத்திரத்திற்கு காஞ்சி பரமாச்சாரியாள்
காவல் தெய்வம் பட கௌரவ வேடத்திற்கு மதுரை சென்ட்ரல் தியேட்டர் கண்ணாயிரம்
தங்கப்பதக்கம் சௌத்ரி பாத்திரத்திற்கு வால்டர் தேவாரம்
வியட்நாம் வீடு சுந்தரம் சொல்கிறார்:’பிரிஸ்டிஜ் பத்பனாய்யர் பாத்திரத்திற்கு இந்தியா சிமெண்ட் நாராயணசாமி.
’கௌரவம்’பாரிஸ்டர் ரஜினிகாந்த் தோற்றத்திற்கு டி.எஸ் கிருஷ்ணா
( டி.வி.எஸ்).
பாரிஸ்டர் பேசும் பாணி பிரபல வக்கீல் கோவிந்த் சுவாமிநாதன்’
1994ல் ஜெமினியோடு நான் ஒரு சில மணி நேரம் இருந்த போது-
டி.வி யில் ஒரு சானலில் சிவாஜியும் இவரும் சாவித்திரியுடன் நடித்த ’பாசமலர்’ படத்தில் தொழிலாளி ஜெமினியுடன் பேசிக்கொண்டே முதலாளி சிவாஜி கோபத்தை அடக்க முடியாமல் வெறி மின்னும் கண்களுடன் பென்சில் சீவும் காட்சி-அதை ரசித்துப் பார்த்துக்கொண்டே மாடியேறிய ஜெமினி “ சிவாஜி கணேசன் என்னை விட எட்டு வயசு இளையவன் தான்...ஆனா நடிகன்னா அவன் தான் நடிகன்!”
சிவாஜி கணேசன் மரணம் நிகழ்ந்த போது செத்த உடலைப் பார்த்த பிரபலங்கள்,பொதுமக்கள் பெரும்பாலும் வாய் விட்டுப் பேசினார்கள்.
“ அய்யா நீ தானே பிறவிக்கலைஞன்!” ”உனக்குமா சாவு” “உன் சாதனை இனி எவனாலும் முடியாது”
உடல் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்போது கூட மரத்தில் அமர்ந்திருந்த ஒரு ரசிகன் ஆவேசத்துடன் ”இருந்தது ஒரே நடிகன். அவனையும் கொன்னுட்டீங்களேடா!” என்று ரஜினிகாந்த், வடிவேலுவைப் பார்த்து கத்தினானே!
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
8th July 2014, 10:17 PM
#55
Junior Member
Veteran Hubber
சிவாஜி கணேசன்
- R.P.ராஜநாயஹம்
தங்கப்பதக்கம் சௌத்ரி பாத்திரத்திற்கு வால்டர் தேவாரம்
வியட்நாம் வீடு சுந்தரம் சொல்கிறார்:’பிரிஸ்டிஜ் பத்பனாய்யர் பாத்திரத்திற்கு இந்தியா சிமெண்ட் நாராயணசாமி.
’கௌரவம்’பாரிஸ்டர் ரஜினிகாந்த் தோற்றத்திற்கு டி.எஸ் கிருஷ்ணா
( டி.வி.எஸ்).
பாரிஸ்டர் பேசும் பாணி பிரபல வக்கீல் கோவிந்த் சுவாமிநாதன்’
1994ல் ஜெமினியோடு நான் ஒரு சில மணி நேரம் இருந்த போது-
டி.வி யில் ஒரு சானலில் சிவாஜியும் இவரும் சாவித்திரியுடன் நடித்த ’பாசமலர்’ படத்தில் தொழிலாளி ஜெமினியுடன் பேசிக்கொண்டே முதலாளி சிவாஜி கோபத்தை அடக்க முடியாமல் வெறி மின்னும் கண்களுடன் பென்சில் சீவும் காட்சி-அதை ரசித்துப் பார்த்துக்கொண்டே மாடியேறிய ஜெமினி “ சிவாஜி கணேசன் என்னை விட எட்டு வயசு இளையவன் தான்...ஆனா நடிகன்னா அவன் தான் நடிகன்!”
Joe Sir. Thanks a lot for posting such a 'true to the type' write-up on NT's glory with a silky neurotic charm!
Last edited by sivajisenthil; 8th July 2014 at 10:28 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
joe liked this post
-
9th July 2014, 10:30 AM
#56
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
joe
சிவாஜி கணேசன்
- R.P.ராஜநாயஹம்
உடல் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்போது கூட மரத்தில் அமர்ந்திருந்த ஒரு ரசிகன் ஆவேசத்துடன் ”இருந்தது ஒரே நடிகன். அவனையும் கொன்னுட்டீங்களேடா!” என்று ரஜினிகாந்த், வடிவேலுவைப் பார்த்து கத்தினானே!
திரு.ஜோ,
உணர்ச்சி மற்றும் உணர்வுப் பூர்வமான கவிதை. எழுதிய திரு.ராஜநாயகம் அவர்களுக்கும், பதிவிட்ட தங்களுக்கும் நன்றிகள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
joe liked this post
-
9th July 2014, 11:33 AM
#57
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
parthasarathy
Dear KCS Sir:
Excellent article. However, there are certain facts not represented fully/correctly. You can use your good offices to correct Mr. Sudhangan's article AS WE NEED TO EMPHATICALLY PROJECT OUR NT. No doubt, Mr. Sudhangan has been doing great service by this series. However, without hurting his ego, we have to fine tune.
Regards, R. Parthasarathy
Dear Sarathy Sir,
I will forward your corrections/points to Mr.Sudhangan. However, you can also send your comments to Mr.Sudhangan to sudhangan@gmail.com.
-
9th July 2014, 12:08 PM
#58
Junior Member
Senior Hubber
Dear Mr.Ravi kiran Surya
My Heartiest wishes for Staring New Thread 14 of Great Supreme actor Sivaji Ganesan and thanks for your valuable postings
C. Ramachandran.
-
9th July 2014, 12:17 PM
#59
Junior Member
Senior Hubber
Good News and Confirmed News to All Sivaji Fans
Thalaivar's RAJA PART RANGA DURAI ALL OVER RIGHTS PURCHASED BY TIRUNELVELI PERSON FROM AVM LIMITED AND COMPLETE DIGITALIZATION WILL BE TAKEN CARE BY HIM AND HE WAS PLANNED TO RELEASE THE DIGITAL VERSION OF THE SAME IN OCTOBER-2014
This is Confirmed News we had from Trichy AVM office
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th July 2014, 12:52 PM
#60
Senior Member
Senior Hubber

Originally Posted by
KCSHEKAR
Dear Sarathy Sir,
I will forward your corrections/points to Mr.Sudhangan. However, you can also send your comments to Mr.Sudhangan to
sudhangan@gmail.com.
Thank you very much Sir. However, I feel such info should be forwarded by you only, as you may know him well. Besides, such authentic data based info should be taken up by none other than our Murali himself.
Regards,
R. Parthasarathy
Bookmarks