udhayachandrika acted in velli vizha, also as Muthuraman's sister in kasethan kadavulada i guess
'காசேதான் கடவுளடா' படத்தில் முத்துராமனின் தங்கையாக வருபவர் உதய சந்திரிகா அல்ல. வேறொரு துணை நடிகை. (விஜயரேகா? அல்லது ரேணுகா?) ஆனால் உதயசந்திரிகா போன்றே தோற்றம் கொண்டவர். அதனால்தான் இந்தக் குழப்பம்.
'காசேதான் கடவுளடா' படத்தில் முத்துராமனின் தங்கையாக வருபவர் உதய சந்திரிகா அல்ல. வேறொரு துணை நடிகை. (விஜயரேகா? அல்லது ரேணுகா?) ஆனால் உதயசந்திரிகா போன்றே தோற்றம் கொண்டவர். அதனால்தான் இந்தக் குழப்பம்.
ஒரே நாளில் எவ்வளவு பதிவுகள் எத்தனை விஷயங்கள்... கிருஷ்ணா, வாசு, கார்த்திக், என அனைத்து நண்பர்களும் இணைந்து இத்திரியை இம்மய்யத்தின் இசைப் பொக்கிஷமாய் மட்டுமின்றி தகவல் பொக்கிஷமாகவும் உருவாக்கி வருகிறீர்கள். தங்கள் ஒவ்வொருவருக்கும் பாராட்டுக்கள்.
கோபால் சார் செம form ல் இருக்கிறார். யாரை எங்கே எப்படி கலாய்க்கப் போகிறாரோ தெரியவில்லை. நினைத்தாலே அடி வயிறு கலக்குகிறது.. .எனிவே ஜமாயுங்கள்.. தங்கள் இமேஜினேஷன் ரூட்டே தனி....
உங்கள் வழி தனி வழி
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
மெல்லிசை மன்னரின் இசைக்குழு சில படங்களில் தலை காட்டியிருக்கிறது. சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் இதைப் பார்த்திருப்பீர்கள். இதை விட இன்னும் சிறப்பாக கல்லும் கனியாகும் திரைப்படத்தில் படமாக்கியிருப்பார்கள். அதிலிருந்து நமக்காக சில நிழற்படங்கள்
ட்ரம்ஸ் நோயலும் கணேஷூம்
ஏ எல் ராகவன் கிடார் கலைஞராக
கோரஸ் குரல் தரும் கணேஷ் மற்றும் புல்லாங்குழல் நஞ்சுண்டையா
கிடார் பிலிப்ஸ்
குழு
அக்கார்டின் கலைஞர்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
இந்த ஆல்பம் இப்போது சிடியாக வெளிவந்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த சிடியின் நிழற்படம்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். உங்களை அறியாமலேயே உங்கள் இதயம் கனத்துப் போவதை அறியலாம். கனக்க வைப்பவர் 'பாடகர் திலகம்' சௌந்தரராஜன் அவர்கள்.
இந்தப் பாட்டில் ஏதோ ஒன்று ஒளிந்து கொண்டிருக்கிறது சார். இதை கேட்கும் போதெல்லாம் மனதில் ஏதோ இனம்புரியா கலவரம் உண்டாகிறது.
தணிகைவேல் பிச்சர்ஸ் தயாரித்த எதிர்காலம் (1970) படத்திலிருந்துதான் இந்தப் பாடல். ஜெமினி கணேஷ், ஜெயசங்கர், பத்மினி, வாணிஸ்ரீ, பாலையா, நாகேஷ் என்று ஒரே நட்சத்திரப் பட்டாளம். பத்மினிக்கு அடாவடி குப்பத்துப் பெண் வேடம். புடவையை வரிந்து கட்டிக் கொண்டு கேமரா மேதை கர்ணன் படத்தில் வருவது போல சண்டைகள், ஜிம்னாஸ்டிக் வேலைகள் எல்லாம் செய்வார். ஜெமினி இவருக்கு ஜோடி. ஜெமினி நியாயமான ஏழை ரிக்ஷாக்காரர். அவர் தம்பிதான் ஜெய். நேர்வழி வாழ்க்கைக்கு உதவாது என்று வாழ்க்கையில் அடிபட்டு திருடனாகவும், கொள்ளைக்காரனாகவும் ஜெய் மாறி விடுவார். ஜெயக்கு வாணிஸ்ரீ. பாலையா பேட்டை வஸ்தாத்.
பாடல்கள் கவியரசர்.
இசை மெல்லிசை மன்னர். (எல்லாப் பாடல்களும் அற்புதம். எல்லாப் பாடல்களுமே இன்றைய ஸ்பெஷல் தொடரில் வர இருக்கின்றன)
'மௌனம்தான் பேசியதோ'- ராட்சஸி
'வாழ்ந்து பார்ப்போம் ரா நைனா வாழ்க்கை இது சுலபம் சுலபம்'- சௌந்தரராஜன்,ராட்சஸி
தயாரிப்பு எம்.எஸ்.ராஜேந்திரன். இயக்கம் எம்.எஸ்.சோலைமலை.
குப்பத்துக் காட்சிகளும், நகரத்துக் காட்சிகளும் சம பங்கில் ஆக்கிரமிப்பு செய்யும் படம் இது.
திருடனாகி,கொள்ளைக்காரனாகி திரியும் தம்பியை நீண்ட நாள் சென்று சந்திக்கிறான் ரிக்ஷாக்கார ஏழை அண்ணன். நேர்மையாய் வாழச் சொல்லி பலதடவைகள் அறிவுரை கூறுகிறான். தர்மமே, நியாயமே ஜெயிக்கும் என்றும் கூறுகிறான். தம்பி அதை ஏற்க மறுக்கிறான். வசதியான வாழ்வு வாழ்கிறான். அண்ணனையும் பாசத்தோடு தன்னோடு இருக்க அழைக்கிறான். ஆனால் இதை அண்ணன் மறுக்கிறான்.
உன் பாதை பெரிதா அல்லது என் பாதை பெரிதா என்று இருவரும் சவால் விட்டுக் கொள்கிறார்கள். நீ என் பாதைக்கு வருவே என்று இருவரும் மோதிக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்ட சிச்சுவேஷனில் வரும் பாடல்தான் இது.
திருந்தாத தம்பியை நினைத்து அண்ணன் வேதனயுடன் பாடுகிறான். என்ன சொன்னாலும் தம்பி திருந்த வில்லையே என்ற ஆதங்கம் அவனுக்கு.
'எக்கேடாவது கெட்டுப் போ... பட்டு அனுபவித்துத் தெளிந்து வா... திருந்தி வா'...என்ற அர்த்தத்தில் மனம் நொந்து பாடுகிறான். 'நாடக மேடை ராஜாதான் தற்போது நீ. வேஷம் கழித்து வெளியே வரும் நாள் வெகு தொலைவில் இல்லை' என்கிறான்.
காட்சிக்குத் தகுந்த வரிகளை எளிமையாக அனைவருக்கும் புரியும்படி வடிப்பதில் கவிஞருக்கு இணை ஏது?
மெல்லிசை மன்னர். அப்படியே நம் உயிரை இப்பாடலின் டியூன் மூலம் உருக்குகிறார். ஜெமினியும் அம்சம். ஜெமினியின் உள்ளத்தின் வேதனையை நம்முள் பிரதிபலிக்கச் செய்தது பாடகர், கவிஞர், இயக்குனர் இவர்களின் வெற்றி.
ஜெமினியின் மனவேதனையையும், அதை புரிந்து கொள்ளாத ஜெயசங்கரின் உற்சாகக் கேளிக்கைகளையும் மாறி மாறி காட்டுகிறது இப்பாடல் காட்சி
இதயம் கனக்கத் தயாராகுங்கள்.
கல்லுக்கு நீதி சொல்ல முடியாது
வெண்கானலில் மீன் பிடிக்க முடியாது
பாறையில் நெல் விதைக்க முடியாது
உன் பாவத்தில் வந்த இன்பம் நிலைக்காது.
வாழ்வெல்லாம் வாழ்வல்ல
தாழ்வெல்லாம் தாழ்வல்ல
கல்லுக்கு நீதி சொல்ல முடியாது
வெண்கானலில் மீன் பிடிக்க முடியாது
பாறையில் நெல் விதைக்க முடியாது
உன் பாவத்தில் வந்த இன்பம் நிலைக்காது.
வாழ்வெல்லாம் வாழ்வல்ல
தாழ்வெல்லாம் தாழ்வல்ல
ஆசையை முன்னே வைத்து
தர்மத்தை பின்னே வைத்தால்
என்னென்ன விளைவாகும்
நாடக மேடை ராஜாவானால்
அங்கென்ன அதிகாரம்
நாணயமாக வாழ்வதில்தானே
யாருக்கும் எதிர்காலம்
நாடக மேடை ராஜாவானால்
அங்கென்ன அதிகாரம்
நாணயமாக வாழ்வதில்தானே
யாருக்கும் எதிர்காலம்
உன் வாழ்வெல்லாம் வாழ்வல்ல
என் தாழ்வெல்லாம் தாழ்வல்ல
ஓடத்தைப் பார்த்த பின்னும்
வெள்ளத்தில் நீந்திச் சென்றால்
சொந்தத்தில் அறிவேது
பட்டுத்தான் தேறுமென்றால்
கெட்டுத்தான் மாறுமென்றால்
புத்திக்கு விலையேது
உள்ளத்தில் கோழை
ஊருக்கு வீரன்
இது உந்தன் நிகழ்காலம்
உண்மையைத் தேடி
ஒருநாள் வந்தால்
ஒளி விடும் எதிர்காலம்
வாழ்வெல்லாம் வாழ்வல்ல
தாழ்வெல்லாம் தாழ்வல்ல
கல்லுக்கு நீதி சொல்ல முடியாது
வெண்கானலில் மீன் பிடிக்க முடியாது
பாறையில் நெல் விதைக்க முடியாது
உன் பாவத்தில் வந்த இன்பம் நிலைக்காது.
வாழ்வெல்லாம் வாழ்வல்ல
தாழ்வெல்லாம் தாழ்வல்ல
போனஸ்
இப்பாடலில் மனம் சோகமயமாக, அதற்கு மாற்றாக ஒரு ஜாலி மருந்து இதே படத்திலிருந்து.
நேற்று எவ்வளுவு விஷயங்கள்
பாரத விலாஸ் ராஜவேலு சம்பந்தி
-do - ராஜபாண்டியன் போடோக்ராபர்
ராஜா - சாந்தி குமார்
கல்பனா -கட்டில தொட்டில
உதயசந்திரிகா - பல படங்கள்
வாசு சார் சுட சுட தோசை போட்டார்
பின்னாடியே ராஜேஷ் சார் அவர் பங்குக்கு ஏகப்பட்ட தகவல்கள்
கல்பனா, உதய சந்திரிகா பற்றி சுண்டல் மசால் வடை
எல்லோரையும் தூக்கி மோர்னிங் மினி டிபன் ராகவேந்தர் சார்
மெல்லிசை மன்னரின் குழுவையே கொண்டு வந்துட்டார் ,தொட்டுக்க சட்னி சாம்பார் ராசலீலா
விடுவாரா நெய்வேலி வாசுதேவன் கபே
straight லஞ்ச் - எதிர் காலம்
10 நாள் முன்னாடி முரசு வில் பார்த்து கொண்டு இருந்தேன்
'கல்லுக்கு நீதி சொல்ல முடியாது '
நம்ம திரியில் ஆரம்பத்தில் ராட்சசியின் "மௌனம் தான் பேசியதோ "
பற்றி ராகவேந்தர் ஒரு பதிவு போட்டு விட்டார்
இப்ப நைட் டின்னெர் என்ன தெரியலை
ஓய்வு க்கு ஓய்வு கொடுத்து விட்டு நேற்று கோபால் சார் ஒரு பதிவு
சாரதி சார் பதிவு
வாழ்த்துகள் வாசு சார் .
இன்று வெள்ளி
"வெள்ளிகிழமை விடியும் வேளை வாசலில் கோலம் இட்டேன்
வள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன் '
Bookmarks