Page 9 of 400 FirstFirst ... 78910111959109 ... LastLast
Results 81 to 90 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #81
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பதிவு எண் -5.

    அப்போது பாகவதருக்கும்,சின்னப்பாவிற்கும் போட்டி உச்சத்தில் இருந்த நேரம்.மகாலிங்கம்,ராமசந்திரன் போன்றோர் வளர்ந்து கொண்டிருந்தனர்.ஹொன்னப்ப பாகவதர்,கிட்டப்பா போன்றோர் கிட்டத்தட்ட ஓய்வு பெற்று விட்ட நிலையில்,போட்டி என்றால் முதலில் கூறிய இருவருக்குள்தான் ,நிறைய ரசிகர்களை கொண்டிருந்ததால் ,ரசிகர்களுக்கும் போட்டிதான்.(அதிலும் மதுரை மண் தனிதான்).பெரிய நகரங்களில் எல்லாம் இந்த ஜுரம் பரவியது. எங்கள் மதுரையில் கேட்கவே வேண்டாம்.

    அப்போது நாங்கள் அல்லோல கல்லோல புரத்தில் குடியிருந்தோம். ஆண்டியடியில் என்னை விட எட்டு வயது மூத்த என் கசின்.

    மேல கூசி தெருவில் இருந்து,நடு ஊசி தெரு பிரியும் சந்தில் இருந்த வெள்ளி திரையரங்கில் சின்னப்பா நடித்த தர்ம வீரன் படம் 23.2.41 இல் ரிலீஸ்.பாகவதரின் திருநீலகண்டர் 14.1.41இல் (13.8.40 இல் பூஜை போட்டது)ரிலீஸ் ஆவதாக இருந்து,வெற்றிலை பாக்கு கடை வைத்திருந்த முருகேஷ் என்ற சின்னப்பா ரசிகர் ,இந்த படம் வெளியாக இருந்த அலங்கோல் தியேட்டர் அத்தனை சேர்களையும் கொளுத்தி நாசம் செய்து விட்டதால்,அந்த படமும் ரிலீஸ் தள்ளி போய் ,23.2.41 அன்று கார்னெர் தியேட்டரில் ரிலீஸ்.

    ஒரு சின்ன பிளாஷ்பாக் ஆக பார்த்துவிடலாம்.

    அப்போதைய அரசியல் நிலவரத்தை கூர்ந்து கவனித்தவர்களுக்கு ,தெரிந்த விஷயம்,சுதந்திர போராட்டம் உச்ச நிலையில் இருந்த நேரம்.அப்போது ஆங்கிலேயரை ஆதரித்த ஜஸ்டிஸ் கட்சி சார்பாக k .முதலியாரும்,காங்கிரஸ் சார்பாக எஸ்.செட்டியாரும் தேர்தலில் போட்டியிட்டனர்.அப்போது சென்னை கன்னிமரா ஹோட்டல் அறையில் அவர்கள் தங்கியிருந்த போது , தற்செயலாய் அங்கு வந்த சின்னப்பா முதலியாருக்கு வணக்கம் சொல்ல,இன்னொரு தற்செயலாய் இன்னொரு இடத்தில் பாகவதர் செட்டியாரை தற்செயலாய் வணங்க ,வெவ்வேறு திசையிலிருந்து கீழே வந்து கொண்டிருந்த செட்டியாரும்,முதலியாரும் ஒருவரையொருவர் பார்க்காமல் தற்செயலாக மோதி விட ,இந்த மோதல் சின்னப்பா-பாகவதர் ரசிகர்களை கொதிப்படைய செய்து ,இருவர் ரசிகர்களும் மோதி கொண்டதில் 2500 பேர் சம்பவ இடத்திலேயே மரிக்க (சின்னப்பா ரசிகர்கள் 602 பேர்,பாகவதர் ரசிகர்கள்-1898 பேர்),35008 பேருக்கு காயம். (சின்னப்பா ரசிகர்கள் முன்னணி)


    இதை இத்தனை விளக்கமாக சொல்வதற்கு காரணம்,இந்த நேரத்தில் ,இந்த இரு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் பதட்டத்தை உண்டு பண்ணியிருந்தது.நாங்கள் உஷாராக எதற்கும் தயாராகவே இருந்தோம்.அப்போது ஒரு நாளைக்கு இரண்டு காட்சிகள்,சனி ஞாயிறு 3 காட்சிகள்.(வாரம் 16 ஷோ,மாதம் 64 ஷோ).பின்னாளில் 27/4/1963 முதல் தினசரி 3 காட்சிகள் ,சனி ஞாயிறு 4 காட்சிகள் பழக்கத்திற்கு வந்தது.நிறைய இட்லி கடைகள் மூட பட்டு மதுரையில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகி விட்டதால்,1980 இல் தினசரி 4 காட்சிகள்,சனி ஞாயிறு 5 காட்சிகளாயிற்று.வெள்ளி தியேட்டரில் 861.5 இருக்கைகள்.(865 இல் 3 உடைந்தும்,ஒன்று பாதி உடைந்தும்).கார்னெர் தியேட்டரிலோ 675 இருக்கைகள். (அத்தனை சேரும் உடைந்திருக்கும்)அதனால் எல்லா வகுப்புகளும் நின்று கொண்டே பார்ப்போம்.

    இந்த நிலையில்தான் ,அந்த செய்தி நம் ரசிகர்களை இடி போல தாக்கியது.

    (தொடரும்)
    Last edited by Gopal.s; 11th July 2014 at 02:30 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #82
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பதிவு எண் -6

    சின்னப்பா ஒரு சிறந்த internaliser என்பது என் அபிப்ராயம்.பாத்திரத்துக்குள் தன்னை நுழைத்து அதுவாகவே மாற பார்க்கும் சிறந்த கலைஞர் என்பது என் தாழ்மையான கருத்தாகும்.எதையும் கூர்ந்து கவனித்து ,ஆராய்ந்து அணுகும் திறன் ,அவர்க்கு கலைமகள் அளித்த வரமாகும்.

    சில நாட்கள் முன்பு ,நமது நண்பர் கிருஷ்ணப்பா ஒரு காட்சியை தரவேற்றி இருந்தார்.அதில் சின்னப்பாவின் அந்த காட்சியை பார்த்தவர்கள்,அவர் நெற்றியில் குங்கும பொட்டை கவனித்தார்களா என்று தெரியாது.(இந்த படம் கன்னடத்தில் ஹூவு ஹோன்ன ஹேவு ,தெலுங்கில் மீறு செப்பின காவு படங்களின் re -make )அந்த காட்சியின் ஆரம்பத்தில் அவர் பொட்டு சிறிய அளவிலும்,காட்சி நடுவில் பெரிதாகவும் இருக்கும்.பெரிய பொட்டு 46 இல் வந்த பிரித்திவிராஜன் படத்தில் வைத்தது.இதன் படி பார்த்தால் 44 இல் வெளிவந்த இந்த படத்தின் காட்சியின் ஒரு பாதியை 41 இலும் ,மீதியை 46 இலும் ஷூட் பண்ணி இருக்க வேண்டும்.சிறிய பொட்டுடன் "ஆமாம் அம்மா" என்று பேசி,பெரிய பொட்டுடன் "இல்லை அம்மா"என்பார்.5 வருட இடைவெளியில் எடுக்க பட்ட இந்த காட்சியில் எப்படி ஒரு பரிபூரணதுவத்தை அந்த மேதை காட்ட முடிந்தது.

    கேதுசெந்தன் அவர்களே,அந்த காட்சியை பதித்து ,எங்கள் நெஞ்சை நிறைய செய்யுங்கள்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. #83
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like

  5. #84
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    ஓய் கோபால் ! இப்போது தான் தொடங்கப்பட்ட திரியில் இது தேவையா ? அடுத்த சண்டைக்கு தயாராகி விட்டீரோ !
    ஆனாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை ..செம .

  6. #85
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பதிவு எண் -7

    சின்னப்பா படங்கள் வருடத்திற்கு மூன்று. (நமக்குதான் அந்த ராசி.எதிர்முகாமை பாருங்கள் 2 வருடத்திற்கு ஒரு படம் )ரசிகர்களை திக்குமுக்காட வைத்தன. திரும்பதிரும்ப பார்ப்பதென்றாலும் எந்தப்படத்தைப் பார்ப்பதென்பதில் திணறல். சென்னையில் அப்போது இருந்ததோ 8 திரையரங்குகளே.அப்போது அண்ணா நகர்,கே.கே.நகர்,வேளச்சேரி,பெசன்ட் நகர் எல்லாம் கிடையாது.அபிராமி,உதயம் காம்ப்ளெக்ஸ் ,தேவி,சாந்தி இவையெல்லாம் கூட கிடையாது.சித்ரா,பிராட்வே ,அசோக் (இப்போது இடிக்க பட்டு விட்டது)இவை போல ஒரு சில திரையரங்குகளே.இப்போது போல கம்ப்யூட்டரில் ரிசர்வ் பண்ணும் வசதியெல்லாம் இல்லை.கியூவில் கால் கடுக்க நின்று டிக்கெட் வாங்க வேண்டும்.

    பிரித்திவி ராஜன் பட ரிலீஸ் அன்று நண்பர்கள் ஒன்று சேர்ந்து ,வழியில் எதிர்பட்ட பிச்சை காரர்களிடம் எல்லாம் சில்லறை வாங்கி,நோட்டாக திருப்பி கொடுப்போம்.சில்லறை நிறைய சேர்ந்ததும் சித்ரா திரையரங்கை அடைந்தோம்.அப்போது சின்னப்பா முதல் காட்சியில் தோன்றும் போது சின்னப்பா வாழ்க வாழ்க என்று கத்தி சத்தமிட்டு எழுந்து நின்று சில்லறை வாரி இறைப்போம்.

    இதனால் சின்னப்பா ரசிகர்களை போலிஸ் கைது செய்வது வழக்கமான நிகழ்வாகி போனது. இரண்டு முறை சின்னப்பா போலிஸ் ஸ்டேஷன் வந்து எங்களை பார்த்து ,வீணாக இறைக்கும் சில்லறையை தன்னிடம் நேரில் கொடுத்திருக்கலாமே என்று சொன்னது எங்களுக்கு பசுமையாக நினைவிருக்கிறது.


    இந்த நேரத்தில்தான் ஒரு பிரச்சினை தோன்றியது.மாட்டினி ஷோ புல் .நாங்கள் பொடி நடையாக பிராட்வே சென்று ,அங்கும் டிக்கெட் கிடைக்காமல் ,அசோக் சென்றோம்.தியேட்டர் மேனேஜர் தெரிந்தவராகையால்,படம் ரிசல்ட் எப்படி என்று விசாரிக்க,சூப்பர் பா என்று கட்டை விரல் உயர்த்திய பாணியிலேயே,படம் சூப்பர் ஹிட் என்று முடிவானது.பிறகு மீண்டும் சித்ரா தியேட்டருக்கே வந்து மாலை காட்சிக்கு காத்திருந்தோம்.மாட்னி முடிந்து வெளியில் வந்த ரசிகர்கள் அனைவருமே படம் ரொம்ப ஜோர் என்று சொல்ல,ஒரு ரசிகர் எங்களிடம் வந்து முழு கதையையும் ஒவ்வொரு சீனாக விவரிக்க தொடங்கி விட்டார்.

    மாலைக்காட்சிக்கு முன் துடைப்பத்துடன் பணியாளர்கள் சென்று குப்பை வாரிய பிறகு,நாதஸ்வரம் போட பட்டது.மாலை காட்சி ஆரம்பிப்பதற்கான அறிகுறி தெரிந்தது.

    ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முதல் காட்சி .வரிசையாக சின்னப்பாவின் மூன்று பாடல்கள்.மேலே ஒன்றுமே போடாமல் வேட்டி மட்டுமே கட்டி ஜொலிப்பார்.சின்னப்பாவை நோக்கி சில்லறைகளை வீசினோம்.

    சித்ராவில்தான் அந்த படம் அதிக நாட்கள் ஓடியது.

    ஆஹா ..நினைக்கும் போதே இனிக்கும் தெவிட்டாத நாட்கள்...
    யாரவது எங்களை அந்த நாட்களுக்கு திருப்பி அனுப்ப மாட்டார்களா?

    இந்த படத்திற்கு சகோதரி .......... அவர்களின் ஆய்வு ஒன்றின் மீள் பதிவினை இத்துடன் பதிவு செய்கிறேன்.
    Last edited by Gopal.s; 14th July 2014 at 02:49 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #86
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பதிவு எண் -8

    காலையில் தூக்கம் முழித்ததும் , பல் விளக்கி விட்டு டீ சாப்பிட ,எதிரே இருந்த கடைக்கு சென்றேன் .கடை ஒனர் தெரிந்தவர் என்பதால் ,டீ கிளாசை கழுவி ,டீயை போட்டு பாலை விட்டு , என்னிடம் கொடுத்தார். சார் ,எனக்கு ஒரு காவலுக்கு வாட்ச்மேன் வேண்டுமே என்றார். எந்த மாதிரி வாட்ச்மேன் என்று கேட்டதும், பெரிய மீசை வைத்திருக்க வேண்டும்.வீரமாய் நடக்க தெரிய வேண்டும்.அரச உடைகள் அணிந்திருக்க வேண்டும்.வாள் ஒன்று உரையில் தொங்க வேண்டும்.வானம் பொழிகிறது ,பூமி விளைகிறது என்று யாரவது திருடன் வந்தால் பேச வேண்டும் என்றார்.

    அவர் கேட்பது வீர பாண்டிய கட்டபொம்மனையே என்று தெரிந்து கொண்டு ,அந்த வீரனை நினைவு கூர்ந்தேன்.

    மீதி பகுதிகளாக பிரித்து பழசிலிருந்து cut paste .
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. #87
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    dear RKS.

    நடிகர் திலகத்தின் நினைவு நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. உலகப் பெருநடிகர்கள் என்று ஊடகங்களால் கொண்டாடப்படும் எந்தவொரு நடிகரையும்விட அளப்பரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரரான 'பாரத நாட்டின் ஒப்பாரும் மிக்காருமற்ற நடிப்பின் இமயம்' உலக திரைச் சாதனைக்கு அடையாளமாகப் போற்றப் படும் 'ஆஸ்கார் வாழ்நாள் சாதனையாளர்' விருதுக்கும் சொந்தக்காரராக இத்தருணத்தில் நம் மேன்மைத் திரி 14 வரை உருவாக்கப்பட்டுள்ள ஆவணங்களை முறைப்படுத்துவதன் வாயிலாகவும், உரிய ஊடகங்கள் வழியாக அவற்றை ஆஸ்கார் குழுவின் கொண்டு செல்லவும் முயற்சிகளை மேற்கொள்வது நன்மை பயக்கும். திரு KCS தமது பேரவை வாயிலாக திரையுலக ஜாம்பவான்களை ஒருங்கிணைத்து அவர்தம் கருத்துக்களையும் ஊடகங்கள் வாயிலாக உலக அளவில் கொண்டுசென்றிட உதவிட வேண்டும். நடிகர்திலகத்தின் புகழார்வலர்களாகிய நாமும் நமது பங்களிப்பை நல்கிட கருத்துக்களைப் பதிவிட்டு திரியின் மாண்பும் வேகமும் குன்றாமல் காத்திடவேண்டும் என்று கோருகிறேன்.

    I am optimistic that with RKS, his dynamism and event management skills will help achieve this long pending 'dream comes true', as a fitting "once for all 'reply'" to comments and criticisms from other threads with vested interest on degrading NT's unshaken name and fame.
    Last edited by sivajisenthil; 11th July 2014 at 08:17 AM.

  9. #88
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    டாக்டர் செந்தில்,



    முதலில் எல்லா பதிவுகளையும் ஒரே மாதிரி போட்டு விட்டு மார் தட்டுவதை நிறுத்தி, கொஞ்சமாவது உருப்படியாக பதிவு போடுங்கள்.அல்லது போட்ட பதிவுகளுக்கு என்ன எதிர்வினை கொடுத்தீர்கள்?(திருவிளையாடல் பதிவு வந்த உடனே ,அதை ஒரு insipid பதிவு கொண்டு மூடினீர்கள்). உங்கள் டாக்டர் ஆராய்ச்சியின் பலனை நாங்கள் அனுபவிக்கும் படி,ஒரு முழு ஆங்கில பதிவாவது போட்டு விட்டு,தலைமஎற்பது,ஒருங்கிணைப்பது,பட்டங்கள் வழங்குவது இவற்றை தொடருங்களேன்.

    ஒரு முறை முழுக்க senior களின் பதிவையாவது படித்து ,புரிந்து கொள்ள முயலுங்கள்.

    இது என் பணிவான விண்ணப்பம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #89
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Senthil Sir

    முதலில் கோபால் சார் அவர்களுடைய ஹாஸ்ய பதிவுகள் நிறைவடையட்டும் சார் ..

    பிறகு நாம் நடிகர் திலகத்தின் பதிவுகளை பதியலாம்...நமக்கு இதுவா முக்கியம் ? ஹாஸ்யம் தானே முக்கியம் ...இல்லையா ?

    நடிகர் திலகத்தின் புகழ் எங்கே போய்விடபோகிறது ...எப்போது வேண்டுமானாலும் நாம் அதைப்பற்றி ஏதாவது கிறுக்கலாம்...


    RKS
    Last edited by RavikiranSurya; 11th July 2014 at 08:25 AM.

  11. #90
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    RKS/Senthil,

    It is agreed that only two of you are upholding the fame of Great Nadigarthilagam. I appreciate it fully and proceed with your great antics. Dr.Senthil will present your work to Oscar committee.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Page 9 of 400 FirstFirst ... 78910111959109 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •