-
11th July 2014, 11:24 PM
#11
Junior Member
Devoted Hubber
சில வாரங்களுக்கு முன்னர், நண்பர் ஒருவர் என்னைச் சந்தித்தபோது, ராஜா சார் உங்களைப் பற்றி விசாரித்தார் என்று சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு மாமேதையின் நினைவில் நாம் இருக்கிறோமே என்ற பெருமிதம் அது.
சென்ற வாரம் மீண்டும் அதே நண்பர், கல்லூரியில் நிறைய விழாக்கள் நடத்துவது குறித்து ராஜா சார் உங்களைப் பாராட்டினார் என்று சொன்னார். இதெல்லாம் அவருக்கு எப்படி தெரிகிறது என்று வியந்து போனேன்.
மீண்டும் நேற்று அவரே என்னை ஒரு திருமண விழாவில் சந்தித்தபோது, இப்போதுதான் ராஜா சாரைப் பார்த்து விட்டு வருகிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று உங்களையும், உங்கள் அண்ணனையும் மிகவும் விசாரித்தார் என்றார்.
இதற்கு மேல் என்னால் தாங்க முடியவில்லை. (இசை) கடவுள் அழைக்கிறார். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று என் மீதே எனக்குக் கோபம் வந்தது. உடனே, ராஜா சாரிடம் ஒரு அப்பாயிண்ட்மெண்ட் கேட்டேன். மறுநாள்(இன்று) காலை பத்து மணிக்கு மேல் ரமணாஸ்ரமத்திற்கு வரச் சொன்னார்.
இன்று காலை, எங்கள் பிரியத்துக்குரிய சந்துரு தோழர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு விட்டு, அங்கிருந்த படியே, ராஜா சாரைப் பார்க்கப் புறப்பட்டேன். என்னுடன் மண விழாவில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடனிடமும், ஜெயமோகனிடமும் விஷயத்தைச் சொல்லி, வருகிறீர்களா? எனக் கேட்டேன். மிகுந்த மகிழ்வுடன் அவர்களும் உடன் வர, சரியாக காலை பத்து மணிக்கு ஆஸ்ரமத்திற்குச் சென்றேன். வழக்கமாக, ராஜா சார் தங்கும் அதே எளிமையான ஒரு மாடி அறை.
என்னை மட்டும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவருக்கு, உடன் நாஞ்சிலையும், ஜெயமோகனையும் பார்த்ததில் அளவில்லாத மகிழ்ச்சி. வாய் நிறையச் சிரிப்புடன், வாங்க கருணா! ரொம்ப நாளாச்சு சந்தித்து எனது கைகளைப் பற்றி உள்ளே அழைத்துச் சென்றார். அப்போது சிலிர்த்துப் போன எனது உடலும், நெகிழ்ந்து போன எனது மனமும், சந்திப்பு முடிந்து வீட்டுக்கு வரும் வரையில் அப்படியே இருந்தது.
தனிமையையும், அமைதியையும் நாடி, பகவான் தரிசனத்திற்காக எங்கள் ஊருக்கு வருபவர் அவர். அவரே அழைக்கும் வரை, அவர் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொள்ளக் கூடாது என எப்போதும் எட்டியே இருப்பேன். எப்போதேனும், எதிரில் தென்படும் அவரது காரைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுக் கொள்வதோடு சரி!
இசை, பாடல்கள், சினிமா, அரசியல் தவிர்த்து பல,பல விஷயங்களைத் தொட்டு அலசினார். உடன் ஜெயமோகன் வேறு. கேட்கவா வேண்டும்? ஒரு மணி நேரம் காதுக்கும், அறிவுக்கும் திகட்டாத தெள்ளமுது.
ஒரு மாமேதை, எனது பிள்ளைப் பிராயத்தையும், வாலிபப் பருவத்தையும் உடனிருந்து வளர்த்தெடுத்த இசை ஞானி, தமிழனின் ஒவ்வொரு வாழ்க்கைச் சூழலுக்கும் இசை வடிவம் வார்த்துத் தந்தவர், உலகின் மாபெரும் இசை மேதைகளில் ஒருவர், என்னுடன் ஒரு நண்பனைப் போல அத்தனை இயல்பாக உரையாடிக் கொண்டிருந்தார். கல்லூரியைச் சிறப்பாக வழிநடத்துவது குறித்து மனதாரப் பாராட்டினார். மேலும், என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனைகளைச் சொன்னார்.
மூச்சுக்கு, மூச்சு 'கருணா' என எனது பெயர் சொல்லி அந்த மேதை அழைத்து உரையாடிய போது எனக்குத் தோன்றியது இதுதான்.
'என்ன தவம் செய்தனை?'
Sorry, Due to some reason, I cannot download the Beautiful picture of our one and only "Raja, Skp Karuna who wrote the post along with Mr. Jayamohan and Mr. Nanjil Naadan.
http://https://fbcdn-sphotos-d-a.aka...98294764_o.jpg
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
11th July 2014 11:24 PM
# ADS
Circuit advertisement
Bookmarks