Page 12 of 400 FirstFirst ... 210111213142262112 ... LastLast
Results 111 to 120 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #111
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    5) இந்திய மட்டும் அல்ல..ஆசியா ஆப்ரிக்க ஐரோப்பா அமெரிக்க ஆகிய நான்கு கண்டங்களை கொண்ட உலகத்தில் அனைத்திலும் விருதுகளும் பட்டங்களும் பாராட்டுக்களும் எந்த நடிகரும் பெறாத அளவுக்கு இவர் பெறுவார் என்று எவருமே கனவில் கூட நினைத்து பார்க்காத தருணம் !

    6) உலக வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காவின் இரண்டு மாகாணங்களின் ஒரு நாள் கௌரவ மேயர் பதவி கெளரவம் கொடுக்கப்பட்ட ஒரே இந்திய நடிகர் என்ற பெருமையை பெறுவார் என்றோ...எள்ளளவும் எவரும் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை !

    7) தமிழகத்திலும் இவ்வளவு ஏன்..இந்தியாவிலும் இத்துனை நடிகர்கள் இருக்க, அவர்கள் அனைவரையும் விட்டுவிட்டு ....அமெரிக்க அதிபராம் JOHN F KENNEDY அவர்களே நேரிடையாக திரு சிவாஜி கணேசன் அவர்களை இந்திய அமெரிக்க கலாசார தூதுவராக பாரத பிரதமர் ஆசியாவின் ஜோதி என்று அழைக்கப்பட்ட பண்டித ஜவஹர்லால் நேருவிற்கு இணையாக அழைக்கப்படுவார் என்று எவருமே நினைத்து பார்க்காத தருணம் !

    8) அதுமட்டுமா ? இவர் நடிக்க வந்த
    a) 3 வருடங்களில் 25 படங்கள்,
    b) 6 வருடங்களில் 50 படங்கள்,
    c) 9 வருடங்களில் 75 படங்கள்,
    d) 12 வருடங்களில் 100 படங்கள்,
    e) 15 வருடங்களில் 125 படங்கள்,
    f) 18 வருடங்களில் 150 படங்கள்,
    g) 22 வருடங்களில் 175 படங்கள்,
    h) 25 வருடத்தில் 200க்கு மேற்பட்ட படங்கள் (அதாவது 1952 முதல் 1979 முடிய )

    இப்படி ...இவர் நடிக்க வருவதற்கு பல வருடங்களுக்கு முன்பாகவே திரை உலகில் வலம் வர தொடங்கிய நடிகர்கள் கூட சிவாஜி அவர்கள் தொட்ட எல்லையில் பாதிகூட திரைத்துறையில் தொடமுடியாமல் திணறுவார்கள் என்று யாரும் அப்போது நினைத்து பார்க்க கூட முடியாத தருணம் !

    ஒரே போல கதையம்சம் உள்ள படங்கள் அல்லாமல் பலவிதமான கதையம்சங்கள், கதாபாத்திரங்கள், சமூக, இதிகாச, வரலாறு, விஞ்ஞான, மெய்ஞான திரைக்காவியங்கள் இந்த ஒரு நடிகரே அத்துணை பாத்திரங்கள் ஏற்று தமிழ் திரை உலகில் "புரட்சி " என்ற வார்த்தையை முதன் முதலில் புரளவிட்டு, திரை உலக வரலாற்றில் புழக்கத்தில் நடைமுறைபடுத்துவார் கணேசன் என்ற இந்த இளம் நடிகர் என்று எவரும் எதிர்பார்க்காத தருணம்...!

    இந்த தருணத்தில்தான் இவருடைய பராசக்தி படத்தில் இவருடைய நடை, உடை, பாவனை, நடிப்பு, வசனம் பேசும் யுக்தி, மற்றும் பல திறைமைகள் ஒரே சேர பளிச்சிட ...அதுவரை இவை அனைத்தையும் மருந்துக்கு கூட காணாத அதே சமயம் காழ்புணர்ச்சி மட்டுமே கொண்ட, எதிலும் குற்றம் மட்டுமே கண்டு மற்றவர்களை உருப்பட விடாமல் தடுக்கும் ஒரு சில ஸ்டுடியோ ஆசாமிகள், தமிழ்நாட்டில் தமிழன் ஒருவன் முனேருகிறான் என்றவுடன் முதலில் அதை தடுப்பவன் ஒரு தமிழனாகவே இருப்பான் என்ற நடைமுறை பழமொழிபோல ,...லைட் மேன் வடிவில், துணை இயக்குனர்கள் வடிவில், ஸ்டுடியோ வேலையாட்கள் வடிவில் முதலாளியிடம் மிகுந்த விஸ்வாசம் கொண்டவர்களை போல பொய் தகவல்களை படம் எடுத்துகொண்டிருக்கும்போதே திரு A V மெய்யப்பனிடம் கூறலானார்கள்...

    அவை.....!
    Last edited by RavikiranSurya; 11th July 2014 at 06:47 PM.

  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #112
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    கடுமையான வேலை நிமித்தம் திரியில் கலக்க இயலவில்லை.

    வந்து பார்த்தால்தான் தெரிகிறது திரி அதலபாதாளம் நோக்கி போய்விட்டது என்று.

    கோபால் பல பேரை வம்புக்கு இழுத்தாலும் சில உண்மைகளை அவர் உரைப்பதை மறுக்க முடியாது.

    சிவாஜி செந்தில் பதிவுகள் நிச்சயமாக போரடிக்கவே செய்கின்றன. என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான மௌன வாசகர்களை செந்தில் காலி பண்ணி விடுவார் போலிருக்கிறது.


    திரு ராமதாஸ். நீண்ட மௌனத்திற்கு பிறகு வருகை தரும் உங்களுக்கு நன்றி. ஆனால் வரும்பொழுதே என் மீது கோபத்தையும் மதிப்புக்குரிய கோபால் மீது திடீர் பாசத்தையும்காட்டுவது சிறிது நெருடலாக உள்ளதே ஐயா! தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்கள் மற்றவர்கள் கருத்தாகவும் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லையே ஐயா! இந்தவேகத்தை நமது திரி தொய்வடையும்போதும், மாற்றுத்திரியின் நண்பர்கள் நம்மை விமர்சிக்கும்போதும் காட்டியிருந்தால் தங்கள் மதிப்பு உயர்ந்திருக்கும். தங்களது திடீர் வருகையின் நோக்கம்.....நிச்சயமாக நடிகர்திலகத்தின் புகழ் பரப்புவது கிடையாது......ஐயா உங்களை நீங்களே வெளிப்படுத்திக்கொள்கிறீகளே! உங்களை நான் தாழ்த்தி உயர விரும்பவில்லை. உணமைகளை உணரும்போது வருத்தப்படுவீர்கள். திரியில் பங்கேற்ப்பதும் பதிவிடுவதும் தனி மனித உரிமை. முன்பின் தெரியாத உங்களது விமர்சனம் என்னைப் பாதிக்கவில்லை ஐயா!! உங்கள் போரடிக்காத விறுவிறுப்பான பதிவுகளை படித்துப் பரவசமடையும் சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு நன்றிகள்.இத்திரியின் மேன்மைமிகுந்த சகபதிவாளர்கள் மெளனமாக உங்களது எழுத்துக்களையும் பார்க்கவே செய்கிறார்கள் நண்பரே! குறைகுடங்கள் கூத்தாடுவது இயல்பே!
    Last edited by sivajisenthil; 11th July 2014 at 06:55 PM.

  5. #113
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by rama doss View Post

    திரியை விரும்பிப் படிக்கும் என் நண்பர்கள் என்னிடம் மிகவும் குறைபட்டனர். திரியில் விறுவிறுப்பாக ஒன்றுமே இல்லையே என்று. உண்மைதான். திரி சீக்கு வந்த கோழி போல் சுருண்டு கிடக்கிறது.
    இன்ட்ரெஸ்ட்ட்டாக ஒரு பதிவும் இல்லை. நன்றாகப் பதிவு போட்ட கார்த்திக் சாரும் இப்போது காணோம்.

    ரவி

    திரியை விறுவிறுப்பாக கொண்டு செல்வது ஆரம்பித்த உங்கள் பொறுப்பு.
    அருமை தம்பி ராமதாஸ் அவர்களுக்கு

    முதற்க்கண் உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது நன்றிகள்.

    இந்த திரியை விரும்பி படிக்கும் தங்களுடைய அருமை நண்பர்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகட்டும்.

    அந்த நண்பர்கள் இவ்வளவு வருத்தபடுவார்கள் தங்களிடம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

    ஆகையால் அவர்கள் பெயரும் தொலைபேசி இருந்தால் அல்லது மினஞ்சல் இருந்தால் இங்கு பகிர்ந்துகொள்ளவும்.

    அவர்களுக்கு திரியின் இந்த பாகத்தை ஆரம்பித்தவன் என்ற முறையில் நானே நேரிடையாக விளக்குகிறேன்.

    சீக்கு என்பது கோழிகளுக்கு மட்டுமல்ல இந்த திரியில் பதிவிடுபவர்களுக்கும் எப்போதாவது வரதானே செய்யும் !

    என்ன செய்வது தம்பி.....
    நம் நடைமுறை வாழ்கை உதாரணமாக எடுத்துகொண்டால் கூட எப்போதும் எந்தநேரமும்
    சுறுசுறுப்பும்..
    துறுதுறுப்பும்...
    பரபரப்பும் இருந்துகொண்டே இருக்குமா ..?

    எப்போதாவது பிசுபிசுப்பும் இருக்கும்...இருக்கதானே செய்யும் ?

    நாம் தான் அதை ஒரு சில வேளைகளில் கசகசப்பாக பார்க்காமல்
    வெதுவெதுப்பாக எடுத்துக்கொள்ளவேண்டும் தம்பி ராமதாஸ் அவர்களே !

    திரு கார்த்திக் மட்டுமா நன்றாக பதிவுபோட்டார்கள் ?...அவரோடு திரு ஆதிராம், திரு. Vankv , சாரதா அம்மையார் போன்றோரும் பிரமாத பதிவு பல போட்டார்கள் என்று பழைய திரியை பார்த்தாலே தெரியுமே தம்பி ! ...

    இவர்களில் திரு கார்த்திக் பெயரை மட்டும் குறிப்பிட்ட தாங்கள் ஏன் ஜாம்பவான்களான திரு நெய்வேலி வாசுதேவன், திரு பம்மலார், திரு ராகவேந்திரன் சார், திரு s வாசுதேவன் சார் , ராகுல்ராம் சார் , ஹைதராபாத் ரவி அவர்கள் இவர்கள் பெயர்களை பதிவிட மறந்துவிட்டீர்கள் தம்பி ?

    இருந்தாலும் உங்கள் நண்பர்களுக்கு பதில் சொல்ல நான் கடமைபட்டுள்ளேன்..எனவே தான் அவர்கள் தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் பகிர்ந்துகொள்ள கேட்டுகொள்கிறேன்.!

    முடிந்தவரையில்...உங்கள் வேண்டுகோளை நிறைவேற்ற ஆவன செய்கிறேன் தம்பி ராமதாஸ் அவர்களே.
    முடியாத பட்சத்தில் நீங்களும் வந்து சிறிது பரபரப்பு பதிவுகள் பதிவு செய்து திரியின் பரபரப்பை தக்க வைக்க வேண்டுகிறேன் !

    ஊக்கத்திற்கு நன்றி !

    Rks
    Last edited by RavikiranSurya; 11th July 2014 at 07:50 PM.

  6. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  7. #114
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    dear RKS. Your reply to Mr. Ramdoss thambi shows your level of diplomacy and maturity. Now I think you have a good company to enjoy and to keep you like a busy bee. I really thank you for the fitting reply and now this Ramdoss thambi, having exhibited his 'knowledge' and his inherent 'wisdom' qualities, fellow hubbers will certainly exercise caution!

    Divide and rule ...... enjoy this fiasco Ramdoss thambi!I will not just run away from this thread ramdoss thambi,as my mission is with a well defined vision of disseminating the name and fame of my icon NT, alongside the leadership of RKS!!
    Last edited by sivajisenthil; 11th July 2014 at 08:07 PM.

  8. #115
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    dear RKS. Your reply to Mr. Ramdoss thambi shows your level of diplomacy and maturity. Now I think you have a good company to enjoy and to keep you like a busy bee. I really thank you for the fitting reply and now this Ramdoss thambi, having exhibited his ignorance and his inherent qualities, fellow hubbers will certainly exercise caution! Divide and rule ...... enjoy this fiasco Ramdoss thambi!
    Dear Sir,

    it is not a fitting reply sort of a reply...

    I tried to genuinely address his agony.

    He spending his valuable time here and so is his friends even though they are not publishing anything.

    it is our duty to explain to them as to why this happens..that's why i asked for their contact number or email and their name so that i can call or write them directly.

    I called him "Thambi" because I assumed he is younger to me by age going by his aggression in writing. Mostly young guys are aggressive

    Regards
    RKS

  9. #116
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    dear RKS and my dear fellow hubbers for the cause of NT. Take this opportunity to thank you one and all. Realizing the place where I should be, I bow out of this thread for the sustained happiness of our friends. I will do my service from outside this thread for the glory of NT as a free lancer. Wish this thread grow well and flourish. Bye!(thanks Gopal Sir for our short period association)

  10. #117
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    அன்பு உறவுகளே

    இத்திரியை எப்படி பரபரப்பாக
    விறுவிறுப்பாக கொண்டுசெல்லலாம்
    என்பதில் மட்டும் குறியாக இருங்கள்
    மற்ரைய எல்லாவற்ரையும் மறந்துவிடுங்கள்

    நன்றி
    அன்புடன்

    சிவா




  11. #118
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    In the history of Cinema, our NT the only actor went by flight for a makeup test.

    This feat no one can beat.

    Regards

  12. #119
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    முரளி சார்,
    நெறியாளர் என்ற வகையில் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் .. சாத்தியப்பட்டால் செய்யலாம் .

    நடிகர் திலகம் பற்றிய இந்த தலையாய திரியில் நடிகர் திலகம் பற்றிய விவாதங்களை விட நீ ஏன் எனக்கு நன்றி சொல்லல்ல .. என்னை விட அவனுக்கு நீ ஏன் சப்போர்ட் பண்ணுற ? அவரை விட இவர் எழுதுவதில் என்ன குறைச்சல் ? நன்றி சொன்னா ஏன் நீ பதில் நன்றி சொல்லல .. பதில் நன்றிக்கு ஒரு பதில் நன்றி சொல்லும் நாகரீகம் ஏன் இல்லாமல் போச்சு -ன்னு பேஸ்புக்ல லைக்குக்கு அடிச்சுக்கிற சின்ன பசங்க போல நடக்குற அக்கப்போருல படிக்க வர்றவன் தலை தெறிக்க ஓடிட்டிருக்குக்கான் .

    இங்கு யாருடைய பதிவுக்காவது நன்றியோ பாராட்டோ பதிவு செய்ய நினைத்தால் ஒவ்வொரு பதிவிலும் அதற்காக ஏற்பாடு ஏற்கனவே இருக்கிறது .. தேவைப்படுகிறவர்கள் இந்த திரியில் அதை மட்டும் உபயோகிக்கலாமே .. அதற்குப்பின்னரும் நீ எனக்கு லைக் போடல்ல ..அவனுக்கு லைக் போட்டியே எனக்கு ஏன் போடல்ல போன்ற அக்க போர்களுக்கென்றே தனியாக ஒரு திரி தொடங்கினால் புண்ணியமாக போகும் .. எல்லோரும் தங்கள் கோஷ்டி சண்டைகளையும் சுயசொறிதல்களையும் அங்கு வைத்துக்கொள்ளலாம் ..முடியல.

  13. #120
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Joe ,

    தாங்கள் சொல்வதில் உடன்பாடும் உண்டு.எதிர்கருத்துக்களும் உண்டு.

    1)face book போல ஒற்றை வரிகளில் நன்றி/பிடித்தம் என்று போட்டால் ,சில பதிவுகள் சரியாக சென்று சேர்ந்ததா என்றே இனம் காண முடியாது.

    2)நிறைய உழைப்பை கோரும் பதிவுகளுக்கு சிறிதே வாசிப்பிற்கு இடம் விட்டு, எதிர்வினை தர வேண்டியது அவசியம் என்றே கருதுகிறேன்.

    3)நிறைய பிரபல எழுத்தாளர்களும்,ஒரு வார்த்தையில் ,உங்க எழுத்து பிடிக்கும் என்று சொல்வதை விட ,சில கதைகளை,எழுத்தின் பகுதிகளை சிலாகிப்பதையோ ,எதிர்ப்பதையோ விரும்புவதை கண்டிருக்கிறேன் ,கேட்டிருக்கிறேன்.

    4)ஆனால் மொக்கையாக சூப்பர்,பின்னி விட்டீர்கள் ,நன்றி போன்ற பதிவுகளை பிடித்தம்/நன்றி கிளிக் பண்ணி காண்பித்து விடலாம்.

    5)பிறந்த நாள்,landmark achievement appreciation எல்லாம் உழைப்பவர்களுக்கு ஒரு மரியாதை,நட்பின் பரிமாறல் என விட்டு விட்டு கடக்கலாமே?

    6)criticism அவசியம். சூப்பர் பதிவை ரசிக்கும் போது ,திட்டையும் தாங்க வேண்டியது எழுதுபவரின் பொறுப்பு.

    7)நிச்சயம் இது ஒரு interactive திரி .தாங்கள் சொல்வது போல நடிகர்திலகத்தை பற்றி செய்தி போட்டு விட்டு போய் கொண்டே இருக்க முடியாது.

    8)இந்த விதத்தில் கார்த்திக் பாணி எனக்கு உவப்புடையது.எதிர்வினை/உடன்வினை/ புரிந்து கூடுதல் தகவல்களை பகிர்வார்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •