-
12th July 2014, 09:35 AM
#1671
Junior Member
Newbie Hubber
ராஜேஷ்,
உங்களுக்கு என் நன்றி பாராட்டுக்கள் உரித்தாகுக.
ஒரு இசை மேதை(ராமமூர்த்தி),இன்னொரு கவி மேதையுடன் (மாயவநாதன்) காலத்தின் கோலத்தால் ,இந்த மேதைகள் வதை பட்டதால்,சிதை பட்டது தமிழ் பாடல்களின் அழகும்,இசை வளமுமே .பெருமூச்சு விட்டு ஒரு சொட்டு கண்ணீர்தான் விட முடியும். கடவுள் எனக்கு செல்வ வளத்தை தந்து ஒரு 30 ஆண்டுகள் முன்னே படைத்திருந்தால் ,இந்த மேதைகளை கண்ணில் வைத்து போற்றி,தகாத கலை அரசியல் வாட்டாமல் காத்திருப்பேனே?
இன்று எங்கு தேடினும் ,சராசரிகளின் மோசமான தகுதியற்ற உறவுகளே,இயக்குனர்களாக,நடிகர்களாக,பாடலாசிரியர்களாக, இசையமைப்பாளர்களாக,பாடகர்களாக வலம் வரும் தொழிலில் ,கலையாவது ,மேதைமையாவது? கலையும்,மேதைமையும் கொண்டவர்கள்தான் பொறியியல்,மருத்துவம்,நிதி நிர்வாகம்,வியாபாரம் என்ற நச்சு சூழலில் சிக்கி சிதைகிறோம்.வயிற்றளவில் பெருங்கவளம் உண்டாலும்,மனதளவில்,உணர்வளவில் மாயவநாதன்,ராமமூர்த்திகளின் வறுமையையே,துயரத்தையே சுமந்து அல்லல் படுகிறோம்.
Last edited by Gopal.s; 12th July 2014 at 09:56 AM.
-
12th July 2014 09:35 AM
# ADS
Circuit advertisement
-
12th July 2014, 09:39 AM
#1672
Senior Member
Seasoned Hubber
ராஜேஷ்
பாடலாசிரியரைப் பற்றி இங்கே பதிவிடுவது சாலப் பொருத்தமாயிருக்கும். இன்னும் சொல்லப் போனால் தமிழ்த் திரையுலக ஆரம்ப காலப் பாடலாசிரியர்களைப் பற்றிய ஒரு தொடரை நான் இத்திரியில் துவக்கியிருக்கிறேன். தாங்கள் அறிவீர்கள் என எண்ணுகிறேன். என்றாலும் இதற்கான இணைப்பை இங்கே தருகிறேன்
http://www.mayyam.com/talk/showthrea...=1#post1139237
மாயவநாதனைப் பற்றிய அருமையான தகவல் களஞ்சியமாக தங்கள் பதிவு விளங்குகிறது. பாராட்டுக்கள். முன்னரே வேறோர் இடத்தில் குறிப்பிட்டது போல், தண்ணிலவு தேனிறைக்க பாலும் பந்த பாசம் திரைப்படத்திற்காக பதிவு செய்யப் பட்டது என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இதைப் பற்றி விவரமான தகவல் ஏதும் இல்லை.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th July 2014, 09:41 AM
#1673
Senior Member
Seasoned Hubber
கோபால்
மாயவநாதன் பற்றிய தங்களுடைய பதிவு நூற்றுக்கு நூறு சதவீதம் ஏற்றுக் கொள்ளக் கூடியது. அபூர்வமான பாடல்களைப் பகிர்ந்து கொள்ளும் போது அபூர்வமான பாடலாசிரியர்களையும் இங்கே நினைவு கூர்வோம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th July 2014, 09:51 AM
#1674
Senior Member
Seasoned Hubber
மிக நீண்ட நாட்களுக்குப் பின் காணொளியாக இப்பாடலைப் பார்க்கும் போது மனம் துள்ளுகிறது. திருச்சி லோகநாதனுடன் ராட்சஸி ஈஸ்வரியின் ரம்மியமான குரலில் தமிழன்பர்களின் நெஞ்சில் கருத்தாழமிக்க பாடலாக நிலைத்து விட்ட நாலு வேலி நிலம் பாடல்.
ஊரார் உறங்கையிலே
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th July 2014, 09:52 AM
#1675
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
RAGHAVENDRA
ராஜேஷ்
பாடலாசிரியரைப் பற்றி இங்கே பதிவிடுவது சாலப் பொருத்தமாயிருக்கும். இன்னும் சொல்லப் போனால் தமிழ்த் திரையுலக ஆரம்ப காலப் பாடலாசிரியர்களைப் பற்றிய ஒரு தொடரை நான் இத்திரியில் துவக்கியிருக்கிறேன். தாங்கள் அறிவீர்கள் என எண்ணுகிறேன். என்றாலும் இதற்கான இணைப்பை இங்கே தருகிறேன்
http://www.mayyam.com/talk/showthrea...=1#post1139237
மாயவநாதனைப் பற்றிய அருமையான தகவல் களஞ்சியமாக தங்கள் பதிவு விளங்குகிறது. பாராட்டுக்கள். முன்னரே வேறோர் இடத்தில் குறிப்பிட்டது போல், தண்ணிலவு தேனிறைக்க பாலும் பந்த பாசம் திரைப்படத்திற்காக பதிவு செய்யப் பட்டது என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இதைப் பற்றி விவரமான தகவல் ஏதும் இல்லை.
ராகவேந்திரா சார். அருமை . அந்த திரியில் என்னால் ஆன பங்களிப்பை அளிக்கிறேன்.
-
12th July 2014, 10:00 AM
#1676
Senior Member
Seasoned Hubber
அமர தீபத்தில் எத்தனையோ பாடல்கள் இருக்க மிகவும் பிரபலமான பாடல்
“தேன் உண்ணும் வண்டு மாமலரைக்கண்டு திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு”
டி.சலபதிராவ் இசையில் ஏ.எம்.ராஜாவும் இசையரசியும் இசைத்த காதல் கீதம்.. இதை எழுதியது யார் தெரியுமா
பராசக்தி திரையில் பூசாரியாக வந்து ஸ்ரீரஞ்சனியை வஞ்சிக்க நினைப்பாரே அவரே தான் .. அவர் எழுதிய பாடல் தான் இது.
இதோ கவி காமாட்சியை பற்றி நான் எழுதிய கட்டுரை
திரு கே.பி.காமாட்சி சுந்தரம் அவர்கள்
திரையுலகம் இவரை கவி காமாட்சி என்றழைப்பது வழக்கம்.
இவரது வரலாறு தெரியாவிட்டாலும் இப்படி ஒரு பாடலாசிரியர் இருந்தார் என்று மக்களுக்கு சொல்வதே நமது நோக்கம்.
மேலும் ஒரு விஷேஷ செய்தி என்னவென்றால் இவர் நடிகரும் கூட.. ஆம் பராசக்தி படம் எல்லோருக்கும் நினைவிருக்கும்
அதில் கொடூரமான அந்த பூசாரி வேடமேற்றவரை மறந்திருக்க முடியாது ஆம் அவரே தான் கே.பி.காமாட்சி.
இவர் நடிப்பைத் தவிர பாடல்களும் எழுதியுள்ளார். அனைத்தும் முத்தான பாடல்கள்.
திரு கலைவாணாரின் நல்லதம்பி படத்தில் அழகான சாருகேசி ராகத்தில் ஒலித்த கானலோலன் மதனகோபாலன் பாடலை இயற்றியது கவி காமாட்சியே.
அதே போல் 1941'ல் வெளிவந்த அலிபாபாவும் 40 திருடர்களும் ஆம் இது தான் முதல் வடிவம் , திரு கலைவாணரும் திருமதி மதுரம் அவர்களும் நடிந்த இந்த
படத்தில் அனைத்து பாடல்கள்ளையும் எழுதியது கவி காமாட்சியே .
இந்த படம் தோல்வியடைந்தாலும் எழுத்தாளர் ரன்டொர் குய் இதை புதுமையான முயற்சி என்று பாராட்டியுள்ளார். இந்த படத்தில் நடித்த தூத்துக்குடி ராமசாமி ஐயர்
புளிமூட்டை என்ற பாத்திரத்தில் நடித்ததால் புளிமூட்டை ராமசாமி ஆனார்.
இதில் கலைவாணர் பாடிய அடிச்சுப்புட்டானே நோகுதடா என்ற பாடல் பிரபலமடைந்தது. எழுதியது கவி காமாட்சி.
பின்னர் பைத்தியக்காரன்,மருத நாட்டு இளவரசி,1950’ல் வெளிவந்த லைலா மஜ்னு(ராஜம்மா, மகாலிங்கம் ஜோடி),
மணமகள்,பெற்ற மன்ம் என இவரது நடிப்பும் பாடலும் தொடர்ந்தது.
அதே போல் பராசக்தியில் இவர் நடித்ததோடு மட்டுமல்லாமல் "ஓ ரசிக்கும் சீமானே' "புதுப் பெண்ணின் மனதைத்தொட்டு' பாடல்களை எழுதியதும் இவர் தான்.
இன்பவல்லி என்ற படத்தில் ஒலித்த டங்குடா டிங்காலே என்ற கலைவாணர் பாடல் இவர் எழுதியதே.
இந்த பாடல்களையெல்லாம் நாம் மறந்திருந்தாலும் கூட இப்போது நான் சொல்லப்போகும் பாடலை மறந்திருக்க நியாயமில்லை
ஆம் “உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேல் கோபம் உண்டாவதேன்” ஆம் வாழ்க்கை திரையில் ஒலித்த பாடல்
வைஜெயந்திமாலா, டி.ஆர்.ராமசந்திரன் ஜோடி சேர்ந்த படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியது க்வி காமாட்சியே.
இதே படத்தில் மிகவும் பிரபலமான “கோபாலனோடு நான் ஆடுவேன் “ என்ற எம்.எல்.வியின் பாடலையும் வைஜெயந்திமாலாவின் நாட்டியமும்
கண்கொள்ளா காட்சி..இந்த பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரர் கவி காமாட்சி அவர்கள்.
இதற்கெல்லாம் மைல்கல்லாக அமைந்த பாடல் இன்றும் நாம் ஏ.எம்.ராஜா சுசீலா டூயட் பாடல் என்றால் உடனே நாம் சொல்வது
“தேன் உண்ணும் வண்டு மாமலரை கண்டு “ என்ற அமரதீபம் திரைப்பாடலை.
இவரது தமிழுக்கு இந்த பாடல் சான்று ஆம் மாமலர் என்று அவ்வளவாக நாம் பயன் படுத்துவதில்லை.
அதை உபயோகித்திருக்கிறார் அதுவும் அழகாக மெட்டிர்க்குள் அடங்குகிறது. காதுகளுக்கு இனிமையாகவும் இருக்கிறது.
வீணை இன்ப நாதம் எழுந்திடும் வினோதம் விரலாடும் விதம் போலவே... இதில் வினோதம் என்ற சொல்லை கையாண்டிருக்கிறார்..
அருமை இனிமை ...
இன்னும் பல அருமையான பாடல்களை தந்தவர் காமாட்சி அவர்கள். கண்ணதாசனின் வரவிற்கு பின் மருதகாசி மட்டும் தான் கண்ணதாசனுடன் ஈடுகொடுத்து எழுதிக்கொண்டிருந்தார்
நாராயணகவி, கு.மா.பா, கே.பி.காமாட்சி என எல்லோரும் மெல்ல மெல்லை மறையத்தொடங்கினர். இதில் இழப்பு தமிழுக்கே திரைப்படப்பாடலுக்கே..
வாழ்க காமாட்சி வளர்க தமிழ்..
-
12th July 2014, 10:28 AM
#1677
திரு கே.பி.காமாட்சி சுந்தரம் அவர்கள்
திரையுலகம் இவரை கவி காமாட்சி என்றழைப்பது வழக்கம்.
இவரது வரலாறு தெரியாவிட்டாலும் இப்படி ஒரு பாடலாசிரியர் இருந்தார் என்று மக்களுக்கு சொல்வதே நமது நோக்கம்.
அனைவருக்கும் காலை வணக்கம் 12/7/14
ராஜேஷ் சார் அதனை தொடர்ந்து யோகேஷ் சார்,ராகவேந்தர் சார்,கோபால் சார் பல மனதை நெருடும் நினைவுகளை மீட்டி விட்டீர்கள்
கவிஞர்கள் மாயவநாதன்,காமாட்சி பற்றிய பதிவு மிக அருமை
மறந்து போன அல்லது மறக்கடிக்கப்பட்ட கவிஞர்கள் பற்றி நினவு கூறுவது என்பது உயிர் கலப்பு போன்றது .
சமீபத்தில் படித்த ஒரு பதிவு 'குங்கும பொட்டின் மங்கலம்' வாலி எழுதியது என்று போட்டு இருந்தது.
அதுவாவது தவறாக சொல்லி விட்டார் என்று கூறலாம் .
ஒரு பதிவில்
'கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு ' பாடலை பற்றி மிக உயர்வாக கூறி இருந்தார்கள் .
என்னத்தை சொல்ல
என் எண்ணத்தை சொல்ல
எங்க வீட்டு வைக்க
உன்னை எங்க கொண்டு வைக்க
வாய்ப்பிற்கு நன்றி
-
12th July 2014, 10:46 AM
#1678

Originally Posted by
rajeshkrv
பாடலாசிரியரை அறிவோம் 10- கவிஞர் மாயவநாதன்
சத்தியமாக இன்றைய தலைமுறைக்கு தெரியாத பாடலாசிரியர் இவர்.
எனக்கு கோபம் இவர் மேல் அல்ல. தமிழ் திரையுலகின் மீது,கொஞ்சம் மெல்லிசை மன்னர்களின் மீதும் தான், கண்ணதாசனுடன்
தாங்களும் வளார்ந்த இவர்கள் இந்த மாதிரி திறமையான கவிஞர்களை மேலும வளர்த்திருக்கலாம், நிச்சயமாக முடியும் அவர்களலால்.
இப்படி நடு வீதியில் ஒரு தமிழ் களஞ்சியம் விழுந்து மடிந்திருக்காது. தன்னிலவு தேனிரைக்க பாடல் ஒலிக்கும் போதெல்லாம்
மாயவநாதனின் நினைவு வராமல் இருக்குமா என்ன .. கடவுள் எப்பொழுதும் இதுபோன்ற திறமைசாலிகளை பிடித்துப்போகிறது, சீக்கிரமே தன்னிடம் அழைத்துக்கொள்கிறார்
பாவம் நாங்கள் இவர்களது தமிழை இன்னும் கொஞம் கேட்க முடியாமல் போனது நமது துரதிர்ஷடம்
கவி மாயவநாதன் பற்றிய உங்கள் கட்டுரை மிக அருமை ராஜேஷ் சார்
திரு ராஜநாயகம் அவர்கள் இரண்டு தினம் முன்பு நடிகர் என்னத்தை கன்னையா பற்றி எழுதி இருந்தார். (இது ஏற்கனவே அவருடைய வலைபதிவில் பதிந்த ஒன்று தான் என்றாலும்) அதில் அவர் எழுதிய ஒன்று
'78 கால கட்டங்களில் பாரதி ராஜ,மகேந்திரன்,கமல் போன்றோர் திரு
கன்னையா அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும்.
ஏனோ அவர்கள் மறுத்து விட்டார்களா அல்லது மறந்து விட்டார்களா தெரியவில்லை'
அது போல் தான் மெல்லிசை மன்னர்கள் அல்லது திரை இசை திலகம் போன்றவர்கள் மாயவநாதன் போன்றவர்களை அரவணைத்து இருக்க வேண்டும்
-
12th July 2014, 11:02 AM
#1679
Junior Member
Newbie Hubber
சீர்காழி கோவிந்த ராஜன்.
இந்த மாதிரி ஒரு பாடகர் அபூர்வமாகவே தோன்றுவர். தமிழ்,இசை ,ஓங்கு குரல்,பாவங்கள் என்று அமைந்த பாடகர். 50 களில் நடிகர்திலகத்தின் பாடு குரலாக டி.எம்.சௌந்திரராஜன் வலம் வந்த போது மாற்று முகாமின் பாடும் குரலாக வலம் வந்தவர் சீர்காழி கோவிந்தராஜனே.(1955 முதல் 1961 நல்லவன் வாழ்வான் வரை)
பிறகுதான் சீர்காழியின் குரலில் மெல்லிசை பாடும் கதாநாயக ஈர்ப்பு இல்லாததை உணர்ந்து அனைத்து முக்கிய நடிகர்களின் ஒரே குரலாக சௌந்திரராஜன் தனிக்காட்டு ராஜாவானார்.
ஆனாலும் கிடைத்த வாய்ப்புகளை நழுவ விடாமல் தன்னை பொருத்தி கொண்ட திறமையாளர்,இன்றும் பேச படும் பல பாடல்களில் தன் திறமையை காட்டினார்.
காதலியிடம் தன் உள்ளத்தை கொட்டி உருக்கி உலுக்கும் "கல்லிலே கலை வண்ணம்", "உன்மேலே கொண்ட ஆசை" ,
சூழ்நிலையின் கனத்தை உணர்ந்து நாடி,நரம்புகளை உருக்கும் "நித்தம் நித்தம் மாறுகின்ற","ஆடி அடங்கும் வாழ்க்கையடா".
தனிமையின் வெறுமை சொன்ன வங்காள பாணி நாடோடி பாடலாய் "ஓடம் நதியினிலே".
மோக தாகத்தை தாபத்தை உணர்த்தும் "தட்டு தடுமாறி நெஞ்சம்"
குத்து பாட்டில் வடக்கு சாயலில் உருவான "மாம்பழ தோட்டம்".வினோத,வித்தியாச குத்து பாட்டு :கூத்தாடும் கொண்டையிலே"
சுத்த கர்நாடக பாடலாய் "அமுதும் தேனும் எதற்கு"
ஒரு திறமையாளனை,நல்ல மனம் கொண்டவனை சேராத இடம் சேர்த்து ,வஞ்சத்தில் வீழ வைத்த வாழ்கை சோகம் பாடிய "உள்ளத்தில் நல்ல உள்ளம்"
போதனை தந்த கீதை சாரம் "மரணத்தை எண்ணி கலங்கிடும்"
காதலன் குறும்பு சொன்ன "என்னை விட்டு ஓடி போக","குத்தால அருவியிலே"
வண்டியுடன் ,நம் மனதையும் குதியாட்டம் ஆட வைக்கும் :சாட்டை கையில் கொண்டு"
கமியுனிச தத்துவம் பேசிய "உழைப்பதிலா ,உழைப்பை பெருவதிலா",
பக்தியில் நம்மை குளிப்பாட்டி நெக்குருக்கும் "விநாயகனே ,வினை தீர்ப்பவனே"
சூழ்நிலையின் சோதனையின் அசரீரியாய் "பாட்டோடு ராகம் இங்கே", இது நீரோடு செல்கின்ற ஓடம்",தேவன் கோவில் மணியோசை .
இதில் மாதிரி மணிகள் .
Last edited by Gopal.s; 12th July 2014 at 11:13 AM.
-
12th July 2014, 11:40 AM
#1680

நீச்சல் குளம் 1979
மாரியம்மன் கிரியேஷேன் தயாரிப்பு
ஜனரஞ்சக இயக்குனர் ராமண்ணா இயக்கம்
தாராபுரம் சுந்தர்ராஜன் இசை
சுமன் (அறிமுகம்),கதாநாயகி அபிலாஷா (முதல் பாவம் அபிலாஷா அல்ல ),மாஸ்டர் சேகர் ,லாவண்யா நடித்து வெளிவந்தது
சுமன் வெடவெடன்னு நினைத்தாலே இனிக்கும் படத்தில் ஒரு வசனம்
"சோள கொல்லை பொம்மைக்கு pant ஷர்ட் போட்ட மாதிரி ". அவர்தான் இன்ஸ்பெக்டர் . .மாஸ்டர் சேகர் வில்லன்
செல்வம் படத்தில் "உனக்காகவா நான் எனக்காகவா ' பாடலை பாடியவர் தாராபுரம் சுந்தர்ராஜன் என்று நினைவு
4 பாடல்கள் நினைவில் உண்டு
1.பாலா சுசீலா குரல்களில் ஒரு அருமையான மெலடி டூயட்
"கட்டழகை தொட்டால் என்ன கன்னத்திலே இட்டால் என்ன
கட்டிலறை காவியமே வா பக்கமா '
2.ஜானகியின் ஒரு நாட்டுபுற பாடல்
"ஆடி 18 ஆடுது பூஞ்சிட்டு எல்லோரும் கொண்டாடுங்க கூடியே '
பொதிகையில் இந்த பாடல் ஆடி 18 அன்று ஒலிபரப்புவார்கள்
3.honey honey லவ் லவ் தித்திப்பது honey honey
சுசீலா ஆண் குரல் மலேசிய என்று நினைவு
(இந்த பாடல் போனி எம் அல்லது saturday நைட் fever ஆங்கில பாடலின்
தழுவல் )
4.ஆத்துக்குள்ளே ஊத்து ஆடுதம்மா நாத்து
மலேசிய வாணி ஜோடி குரல்களில்
http://www.inbaminge.com/t/n/Neechal%20Kulam/
Bookmarks