-
15th July 2014, 03:54 PM
#11
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Yukesh Babu
கணையாழி என்கிற பத்திரிக்கையில் கேள்வியும் மக்கள் திலகத்தின் பதில்களும் என்று பிரசுரமானது , அதில் , ஜனவரி 1973 இல் இந்த கேள்வி பதில் இடம் பெறுகிறது .
கேள்வி : காமராஜ் உங்கள் இயக்கத்தை ( அ தி மு க ) கண்டித்திருக்கிறாரே ? எதனால் அப்படி ?
மக்கள் திலகத்தின் பதில் :
எனக்குக் காரணம் புரியவில்லை . கொள்கை , தார்மீக அடிப்படையில் ராஜாஜி என்னை ஆதரிக்கிறார் . காமராஜ் வேறு காரணங்களுக்காக எதிர்கிறார் . ஆனாலும் அவருடைய தியாகத்தையும் மக்களிடையே அவருக்குள்ள பெருமையையும் நான் மதிக்கிறேன் . என்னைத் தூற்றினாலும் நான் அவரை வாழ்த்துவேன் .
எப்படிப் பட்ட தலைவர்களை நாம் கொண்டிருந்தோம் பாருங்கள்
நன்றி. யுகேஷ்பாபு சார். இத்தகைய தலைவரைப் பெற்ற நாம் பாக்கியசாலிகள். அதனால்தான் அவர் இதுவரை தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர்களை எல்லாம் மிஞ்சி தமிழக மக்கள் உள்ளங்களில் இதய தெய்வமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th July 2014 03:54 PM
# ADS
Circuit advertisement
Bookmarks