Page 21 of 400 FirstFirst ... 1119202122233171121 ... LastLast
Results 201 to 210 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #201
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    நடிகர்திலகம் சிவாஜி 13-ஆம் ஆண்டு நினைவு நாள் - 21-07-2014

    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  2. Thanks Subramaniam Ramajayam, eehaiupehazij thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #202
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like

    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  5. Thanks Subramaniam Ramajayam, eehaiupehazij thanked for this post
  6. #203
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழக அரசியல் வரலாற்றில் கர்ம வீரர் காமராஜர் போல உண்மையான பொற்கால ஆட்சி செலுத்திய முதலமைச்சர்கள் எவரும் இல்லை !

    மக்களுக்கு தேவையில்லாத திட்டங்கள் எதுவும் அவர் கொண்டுவரவில்லை. கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தும் தொலைநோக்கு பார்வை கொண்ட அருமையான திட்டங்கள்.

    காமராஜர் போல ஒரு தொலை நோக்கு பார்வை கொண்ட முதல்வர் தமிழகத்தில் இதுவரை யாரும் இல்லை இனி வரபோவதும் இல்லை.

    கல்விக்கண் திறந்துவைத்த காமராஜர் குழந்தைகள் பசியுடன் இருந்தால் படிப்பு வராது என்பதன் அவசியம் உணர்ந்து மதிய உணவு திட்டம் கொண்டுவந்தார்.

    அதற்க்கு நடிகர் திலகமும் முதல் ஆளாக ஒரு லட்சம் ருபாய் பண்டித ஜவஹர்லால் நேஹ்ருவிடம் கொடுத்தார், காமராஜர் மற்றும் c சுப்ரமண்யம் ஆகியோர் முன்னிலையில்

    இந்த திட்டத்தின் மூலம் உண்மையிலயே குழந்தைகள் பசியாறி நன்றாக படித்தார்கள்.

    இதே திட்டம் பிறகு என்னவெல்லாமோ விரிவுபடுத்தி...இன்று 3 முட்டை..வாழைபழம்...(இன்னும் தாம்பூலம் மட்டும் தான் இல்லை) இப்படி தேவையில்லாமல் குழப்பி குதப்பி, ஊழலுக்கு ஒரு திட்டமாக பயன்பட்டுவருகிறது.

    இவ்வளவும் வயிறு முட்ட கொடுத்தால் எப்படி ஒரு குழந்தை மதியம் படிக்கும்..? தூக்கம் தான் வரும் !

    கொண்டு வரும் திட்டம் கூட பயன் பெரும் வகையில் செயல்படுத்தவேண்டும்.

    கர்மவீரருக்கு அந்த vision இருந்தது...மற்றவர்கள் இதை ஒரு vote bank நிரப்பும் ஒரு திட்டமாக எந்த ஒரு தரமும் இல்லாமல் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள் !

    அரசியலிலும் சரி சொந்த வாழ்கையிலும் சரி...கர்மவீரர் எவனுக்காகவும் பரிந்துபேசியதில்லை, பயந்ததும் இல்லை. !

    அனால் ஒரு சிலர் , என்னமோ கர்மவீரர் யாரையோ பார்த்து பயந்தது போல ஒரு மாயை அந்தகாலத்திலிருந்து பரப்பிகொண்டுவருவது வேதனையான விஷயம். மற்றவர்களை போல பதவிக்கு ஆசைபட்டவரில்லை கர்ம வீரர் .

    பிரதமராக பிரகாசமாக வாய்பிருந்தும்...பதவியை துச்சமென நினைத்து மக்கள் சேவையை உண்மையாக செய்தே ஒரே முதல் அமைச்சர் காமராஜர் ஒருவரே !

  7. Likes eehaiupehazij, kalnayak liked this post
  8. #204
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எங்கள் ஊரில் தூறல் நின்னு போச்சு பட வெளியீட்டு சமயம். 1982 லே என்று ஊகிக்கிறேன். கோமதி தியேட்டர் என்ற புது திரையரங்கு ஒன்று திறக்கப்பட்டது. முதல்படம் தூறல் நின்னு போச்சு போட்டார்கள். என்னுடைய நண்பர் ரிச்சர்ட் என்பவர் வேறு ஒரு பழைய திரையரங்கில் சினிமா படம் ஓட்டும் ஆப்பரேட்டராக பணியாற்றி வந்தார். அது அவர்களுடைய குடுமபத் தொழில். அவரை திறக்கவிருக்கும் கோமதி திரை அரங்கிற்கு ஆப்பரேட்டராக நியமித்து விட்டார்கள். அந்தத் திரையரங்கை திறக்க ஏற்பாடு செய்யப்பட்ட விஐபி நம்முடைய நடிகர் திலகம்தான். ஜனத்திரள் என்றால் அப்படி ஒரு ஜனத்திரள். சமுத்திரம் போல கூட்டம் சேர்ந்து ஆரவாரம்.திரையரங்கு தாஜ்மஹால் போல ஜொலிக்கிறது. ரசிகர் மன்ற துணி பாணர்கள் எங்கு பார்த்தாலும் தொங்குகின்றன. சரியாக 9 மணிக்கெலாம் சொன்னபடி சிவாஜி டாண் என்று ஆஜராகி விட்டார். சந்தன நிறத்தில் ஜிப்பாவும்,சட்டையும் அணிந்து கையிலே வாட்ச் கூட கட்டாமல் ரொம்ப எளிமையாக தெரிந்தார். நானும் ரிச்சர்டும் காபின் அறையில் இருந்தோம். பாதுகாப்பாக அழைத்துவரப்பட்ட சிவாஜி ஆபரேட்டர் ரூமுக்குள் நுழைந்தார். மடித்து விடப்பட்ட ஜிப்பா. கருகருவென்று தலைமுடியை நிறைய எண்ணெய் தடவி அழுத்தி வாரி இருந்தார்.பார்க்க ரொம்ப ஸ்டைலாக தெரிந்தார். என் நண்பன் ரிச்சர்ட் ஒரு சிவாஜி பைத்தியம். நான் அதைவிட பைத்தியம். எங்களுக்கு கைகால்களில் நடுக்கம் ஏற்பட ஆரம்பித்து விட்டது.

    நேராக உள்ளே நுழைந்த சிவாஜி யார் ஆபரேட்டர் என்று வினவினார். ரிச்சர்ட் அருகில் வந்தவுடன் அவன் தோள் மேல் கூடப் பிறந்த தம்பி போல கையைப் போட்டுக் கொண்டார். தம்பி..இப்போ நான் என்ன செய்யணும் என்றார். மெஷினில் ஒரு சுவிட்சைக் காட்டி இதை நான் சொல்லும் போது அழுத்தினால் போதும் அண்ணே என்றார் ரிச்சர்ட். ஆனால் டைமிங் முக்கியம் அண்ணே நான் சொல்லும் போது நீங்கள் அழுத்தினால் போதும் என்றார்.கீழே கடல் மாறிக் கூட்டம். யாரும் திரையை நோக்கவில்லை. அத்தனை பேரும் ஆபரேட்டர் ரூமையே வெறித்தபடி நோக்கியிருக்க ரிச்சர்ட் முதலில் வேறொரு மிஷினில் ஏதோ செய்ய திரையில் 14,13,12, என்று ரீல்கள் நம்பர் குறைந்து கொண்டே வந்தது. சரியாக 1 வந்ததும் போடுங்கண்ணே என்றார் ரிச்சர்ட். அவர் சொன்னபடி கரெக்டாக புது மிஷினில் சுவிட்சை முடுக்கி தூறல் நின்னு போச்சை தொடக்கி வைத்தார் சிவாஜி. ஒரு சிரமும் படாமல் ரிச்சர்ட் சொன்னதை கவனமாக உற்றுக் கேட்டு சரியான டைமிங்கில் மிஷினை இயக்கினார் பல படங்களில் நடிப்பால் துடிப்பை உண்டாக்கிய சிவாஜி. கீழே பெரும் சப்தம்.பின் தம்பி வரட்டுமா என்று கூறி விடை பெற்றார். அருகில் இருந்த நான் பிரமை பிடித்து நின்று விட்டேன். ரிச்சர்ட் புலம்பித் தள்ளிவிட்டான். தொடர்ந்து அவரால் படம் ஓட்ட முடியவில்லை. சிவாஜி போகும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தான். நிறைய ரசிகர் மன்றத்தினர் நடிகர் திலகத்தை வரவேற்று சிலைடுகள் போடச் சொல்லிக் கொடுத்தனர். அதுவும் சிலைடுகளை நிறுத்திக் காட்டு என்று ரிச்சர்ட் கையில் பணம் வேறு தந்தனர். ஐம்பது சிலைடுகளுக்கு மேல் இருக்கும். சிவாஜி சிலைடைப் பார்த்ததும் விசில் பறந்தது.

    இன்றுகூட ரிச்சர்டைப் பார்த்தால் அவன் தோளைத் தொட்டு அவனே முத்தமிடுவான். சிவாஜி தொட்ட தோளாம். நேற்று ரிச்சர்ட் கூட தொடர்பு கொண்டபோது செல்போனில் இதுபற்றி பேசினோம்.

  9. Likes Subramaniam Ramajayam liked this post
  10. #205
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jun 2007
    Location
    Chennai
    Posts
    287
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe View Post
    சிவாஜி கணேசன்
    - R.P.ராஜநாயஹம்


    திருவிளையாடல் படத்தில் கடற்கரையில் ஒரு நடை,

    மன்னவன் வந்தானடி பாட்டில் முதல் வரி முடிந்தவுடன் ஒரு கம்பீர நடை,
    ’மன்னிக்கவேண்டுகிறேன் உந்தன் ஆசையை தூண்டுகிறேன்’ பாடலின் பிஜிஎம்மில் ஒரு நடை
    ’ செல்வம்’ படத்தில் ’காற்றிலே நீந்தும் கொடியிடை என் கைகளில் தவழட்டுமே’ என்ற வரி முடிந்ததும் ஒரு நடை.
    ’யாருக்கு மாப்பிள்ளை யாரோ!அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ!’பாடலை ரசித்துக்கொண்டே ஊனமுற்ற காலோடு ஒரு அழகு நடை.
    நடப்பதில் கூட இவ்வளவு வெரைட்டி காட்டி விட முடியுமா!!
    பராசக்தி மூலம் புயலாக வீசி,
    மனோகராவில்கொந்தளித்து ’குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே’ என்று சீறிய, சீரிய கலைஞன்.
    உத்தம புத்திரனில் விந்தையான வேந்தனாக காட்டிய ஸ்டைல்!

    ’ராஜா ராணி’ படத்தில் சேரன் செங்குட்டுவனாக
    ஒரு lengthy single shot ல் மடை திறந்த வெள்ளம் போல பேசிய அடுக்கு மொழி வசனங்கள்.
    “காவிரி தந்த தமிழகத்துப் புதுமணலில் களம் அமைத்து
    சேர சோழ பாண்டி மன்னர், கோபுரத்துக் கலசத்தில் யார் கொடி தான் பறப்பதென்று இன்று போல் போர்
    தொடுத்துக்கொண்டிருந்த காலமது!”

    எம்.ஆர்.சந்தானத்தைப்பார்த்து’தானாபதி பிள்ளை அவர்களே! நீவிர் நாகாக்க.’
    என்ற வீரபாண்டிய கட்டபொம்மன்.

    குறவஞ்சி படத்தில் “ மன்னா! பசிக்கிறது என்றால் அடிக்கிறார்கள். வலிக்கிறது என்றால் கொன்றே விடுகிறார்கள் ” என்ற குமுறல்.
    வணங்காமுடி படத்தில் ’பாடுடா’ என்று நம்பியார் அதிகாரமாக தங்கவேலுவிடம் வற்புறுத்துவார்.தங்கவேலு திகைத்து தவிக்கும்போது நம்பியார் ஒரு அடி பலமாக கன்னத்தில் அறைவார். அடுத்த நொடியில் சிவாஜி பாடுவதாக ” பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் பயன் தருமா- ஓங்காரமாய் விளங்கும் நாதம்” இதில் சிவாஜி கணேசனின் தொண்டை நரம்பு புடைக்கும். எந்த பாடலாயிருந்தாலும் தானே பாடுவதான பிரமையை உண்டாக்கிய நடிகர்.
    தமிழர்கள் பாக்கியசாலிகளல்லவா! தமிழ் திரை கண்ட அசுர நடிகன் எங்கள் சிவாஜி கணேசன்.
    கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று ஒரு cliche இன்று உச்சரிக்கப்படுகிறதே.’தெய்வப்பிறவி’ படத்தில் சிதம்பரம் ஜெயராமன் -ஜானகி பாடிய
    “அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம்
    அம்புலியின் மீது நாம் ஆடி வரும் ஓரங்கம்
    உடல் நான் அதில் உரம் நீ
    என உறவு கண்டோம் நேர்மையாய்
    பகல் இரவாய் வானத்திலே கலந்து நின்றோம் பிரேமையால்.............
    ஏகாந்த வேளை வெட்கம் ஏனோ வா என் பக்கம்” ஆஅ ஆஅ ஆ...

    இந்தப்பாடலுக்கு சிவாஜி கணேசன் பத்மினி ஜோடிக்கிடையிலான கெமிஸ்ட்ரி பார்த்து விட்டு சொல்ல வேண்டும்.
    ”அன்பாலே தேடிய ”என்று அடி வயிற்றில் இருந்து குரல் எடுப்பது போல் பாவனை செய்வார்.
    சபாஷ் மீனா ”காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலம் தானோ”
    ”மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
    மங்கள மேடையின் பொன்வண்ணம் கண்டான்”
    இந்தப் பாடல் காட்சியை பார்க்கும்போது,அவர் வாயசைக்கும் நேர்த்தி பற்றி சொல்ல வார்த்தைகளே கிடையாது.

    கைத்துப்பாக்கியை சுடுவதற்குத் தானே யாரும் பயன்படுத்த முடியும். எந்த நடிகனும் எத்தனை ஸ்டைலாக துப்பாக்கியைப்பிடித்தாலும் நோக்கம் சுடுவதாகத்தானே இருக்கும்.ஆனால் ஆவேசமாக துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வந்து,பொங்கி வரும் அழுகையை அடக்கிக்கொண்டு,சுட வந்த கைத்துப்பாக்கி கொண்டு,கண்ணீரை துடைக்க முற்பட்ட ஒரே நடிகன் இந்த உலகத்திலேயே சிவாஜி கணேசன் ஒருவர் மட்டுமே! என்ன ஒரு கவிதாப்பூர்வம்!
    ”காதலிக்கிறேன் என்றாள். பின் கல்யாண தேதி நிர்ணயித்தாள்.அதன் பின் காத்திருக்கிறேன் உங்களுக்காக என்று கை தேர்ந்த நாடகமாடினாள்.முடிவில் வாக்குத்தவறி விட்டாள்.வந்த வழியே செல்லுங்கள் என்றாள்.நடக்காது நம் கல்யாணம் என்று கூறி விட்டாள். கடைசியாகச் சென்று பார்த்தால் கல்நெஞ்சக்காரி கண்ணுறங்குகிறாள்!நம்பிக்கைக்கு துரோகமா? கல்யாணம் என்று மோசமா? கடைசியில் கண்ணுறக்கமா? ”ஆவேசமான கணேசனின் கணீர் என்ற குரல்...
    இடி.. ..மின்னல்! இடி.. மின்னல்!
    ’ ராதா!ராதா!ராதா’என்ற கதறல்!
    தொடர்ந்து டி.எம்.எஸ் பாடல்
    ’உன்னைச்சொல்லி குற்றமில்லை
    என்னைச்சொல்லி குற்றமில்லை!
    காலம் செய்த கோலமடி
    கடவுள் செய்த குற்றமடி
    மயங்கவைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை
    நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை
    ஒரு மனதை உறங்க வைத்தான்
    ஒரு மனதை தவிக்க விட்டான்
    இருவர் மீதும் குற்றமில்லை
    இறைவன் செய்த குற்றமடி’

    இன்றைக்கு அடிடா அவளை!ஒதடா அவளை!...
    why this கொலவெறி..... என்று வந்த காட்சிகளுக்கெல்லாம் மூலம் இந்த ’குலமகள் ராதை’ தானே!

    ஒரே நேரத்தில் உடலின் அத்தனை அங்கங்களையும் இயக்கி நடிக்கவைத்த கலைக்குரிசில் கணேசன்!
    ’ஐயா பாரதி... போய்விட்டாயா’ என்று கலங்கிய கப்பலோட்டிய தமிழன்.
    ’நான் எங்க போவேன்..எனக்கு யாரைத்தெரியும்..மாமா நிசமாவே போவச்சொல்றீங்களா மாமா!’ என்று தேம்பிய வெகுளி ரங்கன்.
    ’கண்ணில் தெரியும் வண்ணப்பறவை கையில் கிடைத்தால் வாழலாம்’ - தவித்த பலே பாண்டியா
    ’சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்’ என்ற வரிகளுக்கு முகத்தின் குளோஸ் அப் மூலம் அர்த்தம் சொன்ன கலை மேதை.
    ’நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா!
    சட்டி சுட்டதடா கை விட்டதடா’

    ’நவராத்திரி’ நவரச நாயகன்.
    ’புதிய பறவை’ ஜென்டில்மேன்.

    ஸ்டைலாக சிகரெட் குடிப்பதில் எவ்வளவு வகைபாடு காட்டலாம்?’சாந்தி’ படத்தில் -”யார் அந்த நிலவு!ஏனிந்த கனவு!”
    சிவாஜி மட்டும் பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் திருவிளையாடல் தருமி பாத்திரத்தில் நாகேஷ் தூள் கிளப்பி கலக்கியிருக்கமுடிந்திருக்குமா??
    ’நெஞ்சிருக்கும் வரை’ படத்தில் அரிதாரம் பூசாமலே ‘முத்துக்களோ கண்கள்!தித்திப்பதோ நெஞ்சம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை’ என்ற நெகிழ்ச்சி!
    ரிலாக்ஸ்டாக கலாய்த்த ’கலாட்டா கல்யாணம்’
    ’மோகனாம்பாளின் சிக்கல் சண்முகசுந்தரம்’
    உயர்ந்த மனிதன் அவருக்கு 125 வது படம். 124 படங்களுக்குப்பிறகு புதிதான ஒரு பாத்திரத்தை எப்படி சித்தரிக்க முடிந்தது என்பதில் இருக்கிறது கணேசனின் சாதனை வீச்சு.
    சுருக்கமாக ’செல்லும்’ இந்த வார்த்தைகளோடு கணேசன் நடித்த படங்களின் அத்தனைக்காட்சிகளும் முழுமையாக விரிகிற அதிசயம் நிகழ்கிறது.
    கிருஷ்ணன் பஞ்சு, எல்.வி.பிரசாத், பி.ஆர்.பந்துலு, பீம்சிங், ஏ.பி.நாகராஜன், ஸ்ரீதர், கே.எஸ்.ஜி, ஏ.சி.திருலோக்சந்தர் போன்ற இயக்குனர்களின் படைப்புகளில் விதவிதமான அவதாரங்கள் எடுத்த மகத்தான கலைஞன்!
    1960களில் மேக்கப் இல்லாமல் வேட்டி சட்டை போட்டு நெற்றியில் விபூதி குங்குமம் இட்டு பொது நிகழ்வுக்கு வரும்போது முகவசீகரம்.
    அந்த ஸ்பெஷல் கண்கள்! அந்த ஸ்பெஷல் மூக்கு!
    அந்த அடர்ந்த இயற்கையான கேசம்! 70 வயதில் கொஞ்ச காலம் குடுமி கூட வைத்துக்கொண்டிருந்தார்!
    ஃபுல் சூட் கனகச்சிதமாக பொருந்திய கணவான் கணேசன்.

    ஒரு கதாநாயகன் அந்தக்காலத்தில் நினைத்தே பார்க்க விரும்பாத ‘அந்த நாள்’தேசத்துரோகி.
    ’பார் மகளே பார்’ வரட்டு கௌரவ,அகங்கார, பணத்திமிர்.
    நண்பனையே கொல்லத்துணியும் ’ஆலயமணி’ பொறாமை.
    இமேஜ் பற்றிய பிரக்ஞை கிஞ்சித்தும் இல்லாதஒரே ஹீரோ நடிகர்.
    ராமன் எத்தனை ராமனடி படத்தில் மாஸ்டர் பிரபாகர் நடிகர் திலகத்தைப் பார்த்து ’டே சாப்பாட்டுராமா’ என்பான்!

    ராஜராஜ சோழன் படத்தை விட்டுத்தள்ளிவிடலாம்.ஆனால் அப்படத்தில் டி.ஆர் மகாலிங்கம் இவர் வீசும் வார்த்தைகளை எடுத்துப்பாடும் காட்சி.
    ’தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள்
    அவள் தென்மதுரை கோவிலிலே சங்கம் வளர்த்தாள்.
    தஞ்சையிலே குடி புகுந்து மங்களம் தந்தாள்
    தரணியெல்லாம் புகழ் மணக்க தாயென வந்தாள்

    மணிமுடியில் தொல்காப்பியம் வீற்றிருக்கும்
    திருவடியில் சிலம்போசை பாட்டிசைக்கும்
    அணிமுத்து மாலை எட்டுத்தொகையாகும்
    அவன் ஆட்சி செய்யும் செங்கோலே குறளாகும் திருக்குறளாகும்

    புலவரெல்லாம் எழுதி வைத்த இலக்கியங்கள்
    பொன்மேனி அலங்கார சீதனங்கள்...........’

    ’ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல’ தங்கபதக்கம் சௌத்ரி.
    அவருடைய 24 வயதில் ஆரம்பித்து கடைசி வரை, முதுமை வியாதிகள் அவரை சித்திரவதை செய்த போதும் சிவாஜி கணேசன் ஷூட்டிங் என்றால் சம்பந்தப்பட்ட யூனிட் ஆட்கள் பதறி அடித்துக்கொண்டு காலை ஆறு மணிக்கே தயாராக வேண்டும்.முழு மேக்கப்புடன் ரெடியாக ஸ்பாட்டில் ‘என்னடா ! உங்களுக்கு இன்னும் விடியலயா?’ என்று குறும்பு பேசும் சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன்.
    நேரில் சந்திக்கிற மனிதர்களை தன் கதாபாத்திரங்களுக்கு பிரதிபலிப்பார்.
    ’ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு பாடலில் கடைசி ஸ்டான்சாவில் கிருபானந்த வாரியார் (இந்தப் பாடலில் அவருடைய நடை மற்றொரு விஷேசம்) ..கடலை சாப்பிடுகிற அழகு.
    திருவருட்செல்வர் ‘அப்பர்’ பாத்திரத்திற்கு காஞ்சி பரமாச்சாரியாள்
    காவல் தெய்வம் பட கௌரவ வேடத்திற்கு மதுரை சென்ட்ரல் தியேட்டர் கண்ணாயிரம்
    தங்கப்பதக்கம் சௌத்ரி பாத்திரத்திற்கு வால்டர் தேவாரம்
    வியட்நாம் வீடு சுந்தரம் சொல்கிறார்:’பிரிஸ்டிஜ் பத்பனாய்யர் பாத்திரத்திற்கு இந்தியா சிமெண்ட் நாராயணசாமி.
    ’கௌரவம்’பாரிஸ்டர் ரஜினிகாந்த் தோற்றத்திற்கு டி.எஸ் கிருஷ்ணா
    ( டி.வி.எஸ்).
    பாரிஸ்டர் பேசும் பாணி பிரபல வக்கீல் கோவிந்த் சுவாமிநாதன்’

    1994ல் ஜெமினியோடு நான் ஒரு சில மணி நேரம் இருந்த போது-
    டி.வி யில் ஒரு சானலில் சிவாஜியும் இவரும் சாவித்திரியுடன் நடித்த ’பாசமலர்’ படத்தில் தொழிலாளி ஜெமினியுடன் பேசிக்கொண்டே முதலாளி சிவாஜி கோபத்தை அடக்க முடியாமல் வெறி மின்னும் கண்களுடன் பென்சில் சீவும் காட்சி-அதை ரசித்துப் பார்த்துக்கொண்டே மாடியேறிய ஜெமினி “ சிவாஜி கணேசன் என்னை விட எட்டு வயசு இளையவன் தான்...ஆனா நடிகன்னா அவன் தான் நடிகன்!”

    சிவாஜி கணேசன் மரணம் நிகழ்ந்த போது செத்த உடலைப் பார்த்த பிரபலங்கள்,பொதுமக்கள் பெரும்பாலும் வாய் விட்டுப் பேசினார்கள்.
    “ அய்யா நீ தானே பிறவிக்கலைஞன்!” ”உனக்குமா சாவு” “உன் சாதனை இனி எவனாலும் முடியாது”
    உடல் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்போது கூட மரத்தில் அமர்ந்திருந்த ஒரு ரசிகன் ஆவேசத்துடன் ”இருந்தது ஒரே நடிகன். அவனையும் கொன்னுட்டீங்களேடா!” என்று ரஜினிகாந்த், வடிவேலுவைப் பார்த்து கத்தினானே!

    Very touchy description..I could not concentrate on anything for one hour after reading this article....





    Dear RKS

    Congratulations on opening 14th thread.

    Very glad that you are taking things forward.

    Good luck.
    Yours truly

  11. #206
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜிகணேசனுக்கு "பால்கே'' விருது கிடைக்க பாடுபட்டவர்களில் பாலசந்தர் முக்கியமானவர். "சிவாஜிக்குத்தான் இந்த விருதைக் கொடுக்க வேண்டும்'' என்று தேர்வுக்குழு கூட்டத்தில் பாலசந்தரும், ஏ.நாகேஸ்வரராவும் வலியுறுத்தினர்.

    இந்தியாவின் முதல் சினிமா படமான "ராஜா அரிச்சந்திரா''வை தயாரித்தவர் தாதாசாகிப் பால்கே. வாழ்நாள் முழுவதும் திரைப்படத்துறையின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறவர்களுக்கு, ஆண்டு தோறும் மத்திய அரசு பால்கே பெயரால் விருது வழங்குகிறது. இந்தியாவில், திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது.

    1952-ல் "பராசக்தி'' மூலம் பட உலகில் நுழைந்த சிவாஜிக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது ("பாரத்'') கடைசி வரை வழங்கப்படவில்லை. கட்டபொம்மனில் சிறப்பாக நடித்ததற்காக ஆசிய -ஆப்பிரிக்கப் பட விழாவில் விருது பெற்ற சிவாஜிக்கு, அகில இந்திய விருது கிடைக்கவில்லை.

    இதன் காரணமாக, பால்கே விருது சிவாஜிக்கு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட உலகத்தினர் தீவிரமாகப் போராடினார்கள். கடைசியில் 1997-ம் ஆண்டுக்கான "பால்கே'' விருது சிவாஜிக்கு வழங்கப்பட்டது.

    "பால்கே'' விருதை யாருக்கு வழங்கலாம் என்று தீர்மானிக்க மத்திய அரசு அமைத்த குழுவில் பாலசந்தர் இடம் பெற்றிருந்தார். இந்தக் குழு அமைக்கப்பட்டது பற்றியும், சிவாஜியின் பெயர் முடிவாவதற்கு முன் அந்தக் குழு கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் பாலசந்தர் வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

    "எண்ணற்ற படங்களில் நடித்து தன் இமாலய நடிப்பின் மூலம் அகிலமெல்லாம் புகழ் பெற்ற சிவாஜிக்கு மத்திய அரசால் சிறந்த நடிகர் விருது வழங்கப்படவில்லையே என்ற ஆதங்கம், வருத்தம், தமிழ்நாட்டில் மட்டுமல்ல; உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் இருந்து வந்தது.

    சிவாஜிக்கு இந்த விருது கிடைக்கவில்லையே என மற்றவர்கள் வருந்த... சிவாஜிக்கோ மனதில் எந்த வருத்தமும் இல்லை. "நம்ம... நல்லா நடிக்கலைன்னு அவங்க நினைக்கிறாங்க போலிருக்கு'' என நகைச்சுவையாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்.

    இந்த நேரத்தில்தான் `தாதா சாகேப் பால்கே' விருது வழங்கிட மத்திய அரசு ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழு சிபாரிசு செய்பவருக்குத்தான் இனிமேல் விருது வழங்குவது என்றும் தீர்மானித்தது.

    குழு நியமிக்கப்பட்ட இரண்டாவது ஆண்டில், தென்னிந்தியாவின் சார்பில் உறுப்பினராக என்னை நியமிக்கலாமா என்று மத்திய அரசு ஆலோசித்து, அதுபற்றி என் சம்மதத்தை கேட்டார்கள். அவர்கள் இப்படிக் கேட்டதும் சிவாஜி பெயரை சிபாரிசு பண்ணிட இது ஒரு நல்ல வாய்ப்பு என எண்ணினேன்.

    சிவாஜிக்கு நான் சிபாரிசு செய்துதான் விருது வாங்கித்தர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர் திறமை உலகறிந்த ஒன்று. இருந்தாலும், ராமருக்கு உதவிய அணில் போல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டேன்.

    சிவாஜிக்கு அந்த விருது வழங்கப்படாமல் கை நழுவிப் போய்க்கொண்டே இருந்தது. இங்கிருந்து பல பேர் சிபாரிசு செய்தாலும், அது நிறைவேறாமலே இருந்தது. இது எல்லாம் எனக்குத் தெரிந்ததுதான்.

    அதற்கு முந்திய ஆண்டே நான் பிலிம் சேம்பர் தலைவராக இருந்தேன். அப்போதே நாங்கள் சிவாஜிக்கு விருது வழங்க வேண்டும் என சிபாரிசும் செய்து இருந்தோம். குழு போட்ட பிறகு அதன் முடிவே இறுதியானது என அறிவித்து விட்டார்கள்.

    குழுவில் ஆறேழு பேர் இருந்தோம். தமிழ்நாட்டில் இருந்து நான் நியமிக்கப்பட்டதைப் போல, ஆந்திராவில் இருந்து நாகேஸ்வரராவ் இருந்தது மிகப்பெரும் பலமாக அமைந்தது. மற்றவர்கள் எல்லாம் வடநாட்டுக்காரர்கள்.

    இது தொடர்பான கூட்டம் மும்பையில் நடைபெற்றது. பெரும்பாலும் இப்படி விழாக்கள், கூட்டங்களுக்காக நான் பயணிப்பதைத் தவிர்த்து விடுவேன். ஆனால் இந்த முறை மும்பை செல்ல தீர்மானித்து, அதன்படி சென்றேன்.

    நானும் நாகேஸ்வரராவும் ஒரே ஓட்டலில் தங்கியிருந்தோம்.

    ஓட்டலில் நாகேஸ்வரராவைச் சந்தித்தேன். அவரிடம் பேசும்போது சிவாஜிக்கு இந்த முறை விருது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் இருப்பது தெரியவந்தது.

    ஏனெனில் நாகேஸ்வரராவுக்கு ஏற்கனவே விருது கிடைத்து விட்டது. "இந்த முறை சிவாஜிக்கு விருது வழங்கியே தீரவேண்டும் என்று வலியுறுத்துவதற்காகவே நானும் வந்தேன்'' என அவரும் சொன்னார். இருவருக்கும் ஒரே எண்ணம்.

    கூட்டம் தொடங்கியது. வழக்கம் போல் ஒரு வங்காளி எழுந்து, அவர் மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு விருது வழங்கப்பட வேண்டும் எனச் சொன்னார்.

    அதே போல் -இந்திக்காரர்களும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் பெயரை வலியுறுத்தினார்கள். யாரும் சிவாஜி பெயரைச் சொல்வதாக இல்லை.

    பின்னர் நான் எழுந்தேன். "இந்த ஆண்டு சிவாஜியைத் தவிர வேறு யாரையும் நாம் பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ளக் கூடாது'' என ஆணித்தரமாகப் பேசினேன். நாகேஸ்வரராவும் என்னுடன் சேர்ந்து கொண்டார்.

    "சிவாஜிக்கு இந்த விருது எப்போதோ வழங்கப்பட்டு இருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் தாமதித்தது பெரும் தவறு. அவர் மிகப்பெரும் நடிகர். விருது, சிவாஜியை பெருமைப்படுத்துவதாக அமையாது. சிவாஜிக்கு வழங்கப்பட்டால் அந்த விருதுக்குத்தான் பெருமை. ஒரு தலைசிறந்த நடிகருக்கு இந்த விருது கிடைத்தது என்பதால் பெருமை'' என்றெல்லாம் நாங்கள் வாதாடினோம்.

    வங்காளத்தில் இருந்து வந்தவர், ஒரு டைரக்டர் பெயரை வலியுறுத்தினார்.

    சிவாஜிக்கு அப்போது சிங்கப்பூர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நேரம். இதனைச் சுட்டிக்காட்டி, "அவர் வாழும் காலத்தில் நீங்கள் இந்த விருதை வழங்காமல் பிறகு எப்போதோ வழங்கி என்ன பயன்?'' என்று பேசினேன்.

    இதேபோல் நாகேஸ்வரராவும், "சிவாஜி முன் நான் மிகச் சாதாரண நடிகன். எனக்கு அந்த விருதை வழங்கி சிறப்பித்த நீங்கள், இதுவரை சிவாஜிக்கு வழங்காமல் இருப்பது தவறு'' என ஆணித்தரமாக பேசினார். "இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநíதி'' என்றார்.

    நாங்கள் இப்படிப் பேசவும், மற்றவர்கள் அடங்கிப் போனார்கள். ஆனாலும் வங்காளத்துக்காரர் விடுவதாக இல்லை.

    மூன்று பெயர்களை குழு சிபாரிசு செய்யவேண்டும் என்பது விதி. முதலில் சிவாஜியின் பெயர், அதன் பிறகு மற்றவர்கள் பெயர் எனத் தீர்மானித்து விட்டோம்.

    குழு தனது சிபாரிசை மத்திய அரசுக்குத் தெரிவித்தது. தமிழ் மக்களின் விருப்பத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. சிவாஜிக்கு `பால்கே' விருது வழங்கப்பட்டது.

    இதை நான் சொல்வதால், சிவாஜிக்கு நான் சொல்லித்தான் விருது வழங்கப்பட்டது என்று யாரும் தவறாக எண்ணிவிடக்கூடாது. அவருக்கு விருது வழங்கும் நேரத்தில் நானும் ஒரு கருவியாக, துரும்பாக இருந்தேன் என்பதற்காகத்தான் அந்த மகிழ்ச்சிக்காகத்தான் சொல்கிறேன்.

    தமிழ் மக்களின் நெஞ்சில் பல்லாண்டு காலமாக தேங்கிக் கிடந்த கனவு, சிவாஜிக்கு பால்கே விருது வழங்கப்பட்டதால் நிறைவேறியது.

    தமிழ்நாடு பெற்ற தன்னிகரில்லாத அந்தத் தலைமகன் சிவாஜிக்கு விருது என மத்திய அரசு முறைப்படி அறிவித்தது.

    மகிழ்ச்சிப் பெருக்கால் தமிழ்நாடு குதூகலித்தது. அந்த நல்ல நாளில் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, இயக்குனர் சங்கம், நடிகர், நடிகையர் வாழ்த்துச் சொல்ல சிவாஜி வீட்டுக்குச் சென்றோம்.

    ஆளுயர மாலை அணிவித்து அவரை வாழ்த்தினோம். தனக்கு வாழ்த்துச் சொல்ல வந்தவர்களை அன்போடு வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்தார் சிவாஜி.

    நான் அவர் அருகே சென்றதும் என்னைக் கட்டிப்பிடித்து `தேங்க்ï பாலு' எனச் சொன்னார். சொன்னதோடு இல்லாமல் என்னை ஆரத் தழுவிக் கொண்டார்.

    அவர் அப்படிச் சொன்னதில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதாக உணர்ந்தேன்.

    நான் அந்த விருது தேர்வுக்குழுவில் இருந்தது அவருக்குத் தெரிந்திருக்கலாம். அல்லது நாங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சிவாஜிக்காகப் பரிந்து பேசியதை நாகேஸ்வரராவ் கூட சிவாஜியிடம் சொல்லி இருக்கலாம்.

    அன்றைய தினம் நாங்கள் மட்டுமல்ல, சிவாஜியும் மிக மகிழ்ச்சியாக இருந்தார்.

    பட்டங்களும், விருதுகளும் சரியான நேரத்தில் சரியானவருக்கு வழங்கப்பட்டு விடவேண்டும் என்பதில் எனக்கு உறுதியான எண்ணம் உண்டு.

    அந்த வகையில் தாமதம் ஆனாலும், சிவாஜிக்கு உரிய மரியாதை கிடைத்து விட்டதில் மகிழ்ச்சி அடைந்தேன்.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

  12. Thanks Subramaniam Ramajayam, eehaiupehazij thanked for this post
    Likes Subramaniam Ramajayam liked this post
  13. #207
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    டியர் kcs சார்

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் . முடிந்தால் 21ஆம் தேதி உங்களை கபாலி கோயிலில் சந்திக்க முயற்ச்சி செய்கிறேன்
    சென்ற ஆண்டு நாம் சந்தித்து உரையாடினோம்
    gkrishna

  14. #208
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    1980 க்கு பிறகு பிறந்த ஒரு வலைபதிவு நண்பர், சிம்மகுரலோன் அவர்களை பற்றிய எழுதி உள்ள ஒரு பதிவு . நண்பர்களின் பார்வைக்கு

    http://vayalaan.blogspot.com/2014/07/blog-post_15.html
    gkrishna

  15. Likes eehaiupehazij liked this post
  16. #209
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    வாழ்த்துகள் சந்திரசேகர் சார்! நற்பணி விழாவும் அன்னதானமும் எப்போதும் போல் வெற்றிகரமாக நடக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    Welcome Back Dhanusu!

    நடிகர் திலகத்தின் நினைவு நாளையொட்டி அவர் நடித்த சில திரைப்படங்கள் வெளியாகியும் மற்றும் சில வரும் வெள்ளியன்று வெளியாகவும் போகின்றன.

    கோபி நகரில் வீராஸ் திரையரங்கில் கடந்த ஞாயிறு (ஜூலை 13) முதல் வசந்த மாளிகை தினசரி 4 காட்சிகள் வீதம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

    வரும் வெள்ளி ஜூலை 18 முதல் சென்னை பிராட்வே திரையரங்கில் தினசரி நண்பகல் காட்சியாக வைர நெஞ்சம் திரையிடப்படுகிறது.

    மதுரை சென்ட்ரலில் வரும் வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகள் வீதம் நடிகர் திலகத்தின் சந்திப்பு வெளியாகிறது. மதுரை சென்ட்ரல் திரையரங்க வளாகமே இப்போதே விழாக் கோலம் பூண்டிருக்கிறது என்ற செய்தியை மதுரையிலிருந்து நண்பர் சந்திரசேகர் பகிர்ந்துக் கொண்டார்.

    அன்புடன்

  17. Thanks Subramaniam Ramajayam thanked for this post
  18. #210
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் மறு வெளியீடுகளின் வெற்றி செய்திகளை பகிர்ந்து கொண்டிருந்த இந்த திரியில் நடுவில் சிறிது இடைவெளி விழுந்து விட்டது. விட்டுப் போன செய்திகளின் சுருக்கம் இதோ.

    சென்னை மகாலட்சுமியில் மே முதல் வாரம் திரையிடப்பட்ட வைர நெஞ்சம் பலரின் எதிர்பார்ப்பையும் தாண்டிய ஒரு வெற்றியை அடைந்தது. படம் வெளிவருவதற்கு முன் படம் வெளியான காலத்தில் சரியாக போகாதை சுட்டிக் காட்டி அது போலவே இப்போதும் நடக்கும் என்று ஆரூடம் கூறியவர்களின் வாக்கை பொய்யாக்கி இந்த 2014-ம் ஆண்டு மகாலட்சுமியில் வெளியான பல படங்களையும் பின்னுக்கு தள்ளி அந்த ஒரு வாரத்தில் ரூபாய் 70,000/- ஐ தாண்டிய வசூலைப் பெற்றது.

    மே இரண்டாம் வாரம் பிராட்வேயில் வெளியான நீதி, அந்த திரையரங்கில் கடந்த 3,4 மாதங்களாக திரையிடப்படும் எந்த படமும் வாடகையை கூட கவர் பண்ணுவதில்லை என்ற நிலையை மாற்றி வாடகையை தாண்டிய வசூலை பெற்று லாபத்தை ஈட்டியது.

    ஜூன் முதல் வாரத்தில் மகாலட்சுமியில் வெளியான தங்கச் சுரங்கம் இரண்டு மாதங்களுக்கு முன்பு பைலட்டில் வசூலித்ததை விட அதிகமாக மகாலட்சுமியில் வசூல் செய்தது. அதே நாட்களில் [ஜூன் 6 முதல் 12 வரை] பைலட்டில் நடிகர் திலகத்தின் மற்றொரு மாஸ் படமான எங்கள் தங்க ராஜா வெளியிடப்பட்ட சூழலிலும் பொதுமக்களின் பேராதரவைப் பெற்று அந்த ஒரு வாரத்தில் ரூபாய் 78,000/- அளவிற்கு வசூலித்தது.

    அதே நாட்களில் சென்னை பைலட்டில் இரண்டு காட்சிகளாக வெளியான எங்கள் தங்க ராஜா [அதற்கு ஒன்றரை மாதம் முன்புதான் மகாலட்சுமியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியிருந்தது] அந்த குறிகிய கால இடைவெளியையும் தங்கச்சுரங்கதின் போட்டியையும் சமாளித்து கணிசமான வசூலையும் பெற்றது.

    மதுரையில் அதே நேரத்தில் சென்ட்ரலில் திரையிடப்பட்ட சங்கிலி திரைப்படம் எப்படி சந்திப்பு சென்னையில் அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி சாதனை புரிந்ததோ அதே போன்றே சாதனையை புரிந்தது. நடிகர் திலகத்தின் பிற்கால படங்கள் குறிப்பாக 1980-களில் வந்த படங்கள் ஓடாது என்று கொண்டிருந்ததையெல்லாம் முறியடித்து ஒரு வார வசூலில் ரூபாய் 80,000/- ஐ தொட்டு கணிசமான லாபத்தை வினியோகஸ்தருக்கு பெற்று தந்தது சங்கிலி.

    இதே போல் நெல்லையில் எடுத்துக் கொண்டால் நெல்லை சென்ட்ரலில் பராசக்தி ஒரு வார காலம் கலக்கியதை தொடர்ந்து ஸ்டைல் சக்கரவர்த்தியின் ராஜா அதே திரையரங்கில் வெளியாகி சக்கை போடு போட்டது. அண்மைக் காலமாக எந்த பழைய படத்திற்கும் கிடைக்காத வரவேற்பை பெற்று ஒரு வார விநியோகஸ்தர் பங்காக சுமார் பதினாலயிரம் [Rs 14,000/-] பெற்று தந்திருக்கிறது.

    அதே நெல்லை சென்ட்ரலில் ஜூனில் வெளியான எங்கள் தங்க ராஜாவும் சரி தன பங்குகிற்கு விநியோகஸ்தர் பங்கு தொகையாக சுமார் 11,000/- ரூபாய் பெற்று தந்திருக்கிறது. இதை பார்த்து உள்ளம் பூரிப்படைந்த அரங்க உரிமையாளர் என்னவெல்லாம் நடிகர் திலகத்தின் படங்கள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் கொண்டு வாருங்கள் திரையிட்டு தருகிறேன் என்று சொல்லியிருக்கிறாராம்.

    அனைத்து ஏரியாக்களிலும் ஸ்கோர் செய்பவர் நடிகர் திலகம் என்பதற்கு மற்றும் சில சான்றுகளும் தருகிறோம்.

    மதுரையில் ஜெய்ஹிந்தபுரம் ஏரியாவில் அமைந்திருக்க கூடிய B கிளாஸ் தியேட்டர் அரவிந்த். பொதுவாக கிளாஸ் ஆடியன்ஸ் எனப்படுபவர்கள் அந்த திரையரங்கிற்கு வருவதை தவிர்ப்பார்கள். அந்த திரையரங்கில் மே மாதம் மாஸ் படமான எங்கள் தங்க ராஜா வெற்றிகரமாக ஓடி வாடகைக்கு எடுத்து போட்டவருக்கு லாபம் கொடுத்தது கூட பெரிய விஷயமில்லை. கிளாஸ் படமான உயர்ந்த மனிதன் இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த திரையரங்கில் வெளியிடப்பட்டு அதுவும் வெளியிட்டவர்க்கு ஷேர் பெற்று கொடுத்திருக்கிறது.

    இது போன்றே கோவை மாநகரில் அமைந்திருக்கும் டிலைட் திரையரங்கம். கிளாஸ் ஆடியன்ஸ் மற்றும் பெண்கள் தவிர்க்கும் திரையரங்கம். காரணம் அதன் அருகே அமைந்திருக்க கூடிய டாஸ்மாக் பார். இதன் காரணமாகவே அங்கே இரவுக் காட்சி கிடையாது. இப்படிப்பட்ட எதிர்மறையான சூழலிலும் அண்மையில் அங்கு வெளியான தங்கபதக்கம் வெளியிட்டவருக்கு லாபத்தை கொடுத்திருக்கிறது.

    ஆக எந்த ஊரிலும் எந்த சூழலிலும் எந்த அதிகார அரசியல் பின்பலமும் இல்லாமல் சாதனை புரிபவர் நடிகர் திலகம் என்பது நாம் சொல்லாமலே அனைவருக்கும் புரியும்.அது வரும் காலங்களிலும் தொடரும். அந்த மகிழ்ச்சியான செய்திகளை நாம் இங்கே பகிர்ந்து கொள்வோம்.

    அன்புடன்

  19. Thanks Subramaniam Ramajayam, eehaiupehazij thanked for this post
    Likes Subramaniam Ramajayam liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •