Page 201 of 400 FirstFirst ... 101151191199200201202203211251301 ... LastLast
Results 2,001 to 2,010 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #2001
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    ஸாரி, கோபால் சார்,

    தங்களின் பஞ்சாமிர்தம் கதையைப் படித்தபின்தான் தோன்றுகிறது, ஜெய்குமாரியின் சோகக்கதையை பதித்து, பலரது கனவைக் கலைத்திருக்க வேண்டாமோ என்று.

    இப்போது முடிவெடுத்து விட்டேன். இனி யாருடைய தற்கால நிலையையும் சொல்லி யாருடைய கனவையும் கலைக்கக்கூடாது என்று.
    கார்த்திக் சார்

    வீழ்ந்தவர்கள் வாழ்ந்தால் சந்தோசம்
    வாழ்ந்தவர்கள் வீழ்ந்தால் துக்கம்

    சாவித்திரி அம்மா,சந்திரபாபு,அசோகன் போன்றோர் இறுதி காலத்தில் பட்ட கஷ்டம் மறக்கமுடியுமா .அசோகன் மரணத்திற்கு பின் அசோகனின் பூத உடலை அடக்கம் செய்வதற்கு ஜெய் அவர்கள் தான் எல்லா உதவியும் செய்தார்கள் என்று கேள்விபட்டேன்
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2002
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு கார்த்திக் சாரை அப்படியே வழிமொழிகிறேன்.

    அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

    கார்த்திக் சார், கிருஷ்ணா சார், ராகவேந்திரன் சார், கோபால் சார் , முரளி சார், வினோத் சார், ராஜேஷ் சார், மது சார், வெங்கிராம் சார், பார்த்தசாரதி சார், சின்னக்கண்ணன் சார், பாலா சார், ராஜ்ராஜ் சார், யுகேஷ் பாபு சார், கோபு சார் (இன்னும் பெயர் விட்டுப் போன நண்பர்கள் மன்னிக்க.) மற்றும் வெளிப் பார்வையாளர்கள் அனைவருக்கும் நம் திரியின் சார்பாக உளம் கனிந்த நன்றியாகலித் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அது மட்டுமல்ல. வெறும் பாடல்களின் தளமாக மட்டும் விளங்காமல் பல அரிய தகவல்களைப் பகிரும் அற்புத பொக்கிஷத் தளமாகவும் இத்திரி நடை போடுவது அத்துணை பேருடைய சிரத்தையான உழைப்பினால்தான்.

    நன்றி! நன்றி! நன்றி!
    Last edited by vasudevan31355; 18th July 2014 at 07:35 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. Likes madhu liked this post
  5. #2003
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    அண்ணியாரின் அருமையான பாடலான 'அன்புக்கரங்கள்' படத்தின் 'அழகென்ன அறிவென்ன' பாடலைப்பதித்து இன்றைய நாளை மகிழ்ச்சியுடன் துவங்க வைத்துவிட்டீர்கள். தலைவர் விறைப்பாக நடந்துபோக அவர் கவனத்தை தன்பக்கம் திருப்ப அண்ணி செய்யும் அலம்பல்கள் அப்பப்பா. (பேராசிரியரின் கவனத்தை திருப்ப 'அலையே வா' பாடுவது வேறொரு ரகம். அது மென்மைக்காதல், இதுவோ முரட்டுக்காதல்).

    (நேற்றிரவு ஒரு கூத்து. முரசு தொலைக்காட்சியில் 'அலையே வா' பாடலை ஒளிபரப்பி, கீழே 'படம்: அந்தமான் காதலி, இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்' என்று போட்டார்கள். அங்கு பணிபுரிபவர்கள் அரைவேக்காடுகள் அல்ல. அரைக்கால் வேக்காடுகள்)

    'உங்கள் அழகென்ன' பாடலில் வி-கட் தாவணியுடன் அண்ணி ரொம்பவே அழகு ('தாமரைப்பூ கொளத்திலே' பாடலில் வருவது போல).

    ஒரே ஒரு திருஷ்டி சுதர்சனத்தின் இடையிசை (இண்ட்டர்லூட்). அதிலும் மூன்றாவது சரணத்துக்கு முன் வரும் இடையிசை ரொம்ப கொடுமை.

    திடீர் திடீரென அதிசயங்களை கொட்டும் தங்களுக்குப் பாராட்டுக்கள்...

  6. #2004
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    வாசு சார்


    நீங்கள் மென்மேலும் சாதனை புரிய எல்லாம் வல்ல அந்த 'சிவா'
    பெருமானை வேண்டுகிறேன்

    வாழ்க வளர்க
    நன்றி கிருஷ்ணா சார். இதில் பெரும்பங்கு உங்களுக்கு உண்டு என்பதனை அனைவரும் அறிவார்கள். உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    நீங்கள் 'ஜி' யைப் போடாமல் விட்டாலும் அந்த 'ஜி' தான் 'நான் வணங்கும் தெய்வம்'.என் உடல், பொருள் , ஆவி, ஆன்மா இன்னும் என்னென்ன உண்டோ அத்தனையும் அந்த அற்புத பிறவிக்கே!
    Last edited by vasudevan31355; 18th July 2014 at 02:10 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #2005
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    டியர் வாசு சார்,

    திடீர் திடீரென அதிசயங்களை கொட்டும் தங்களுக்குப் பாராட்டுக்கள்...
    கார்த்திக் சார்!

    நன்றி! இன்னொரு சிறிய பரிசு உங்களுக்காகவே. ஆவண வடிவில். அண்ணியார் மட்டும்.

    பேசும்படம். (1966 பிப்ரவரி)

    நடிகர் திலகமே தெய்வம்

  8. #2006
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் கோபால் சார்,

    ஜமுனாராணியை பற்றிய தங்கள் பதிவு அருமை. ஈஸ்வரியின் குரலில் இருப்பது 'துள்ளல்' என்றால் ஜமுனாவின் குரலில் இருப்பது 'கிக்'.

    அவரது பாடல் வரிசையில் 'காலம் சிறிது கனவுகள் பெரிது கவலைப்படுவதேன் மனது' (தைபிறந்தால் வழிபிறக்கும்) பாடலையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    சரியான நேரத்தில் வித்தியாசமான குரல்களை நினைவூட்டி வருகிறீர்கள். நன்றி...

  9. #2007
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    தங்கள் அன்பான பரிசுக்கு நன்றி.

    தங்கள் பரிசு அண்ணியின் தனி போல்டரில் இடம்பெற்றுவிட்டது...

  10. #2008
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் ராஜேஷ் சார்,

    எனக்கு பிடித்த பாடலான 'கட்டித்தங்க ராஜாவுக்கு காலை நேரம் கல்யாணம்' (மணி ஓசை) பாடலை பதித்ததற்கு நன்றி.

    நான் எப்போது இந்தப்பாடலைப் பார்த்தாலும் ஜமுனாராணியின் 'அச்சம்.... நாணம்... படம் பயிர்ப்பு, அச்சம் நாணம் மேடம் பயிர்ப்பு அழகாய் வேணும் பெண்ணுக்கு' என்ற வரிகளில் அவரது கொஞ்சலுக்காகவும், புஷ்பலதா இருமுறை வாயை சுழித்து அழகு காட்டும் காட்சிக்காகவும் காத்திருப்பேன்.

    தமிழில் சரியான முறையில் கொண்டாடப்படாத நடிகை புஷ்பலதா. வயதான பின்னும் அழகாயிருந்த வெகு சில நடிகையரில் ஒருவர்...

  11. #2009
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    பிள்ளை செல்வம் 1973
    புரட்சிதாசன் தயாரிப்பு

    S.V. ரங்கராவ் தேவிகா (கார்த்திக் சார் அண்ணி ) ஜெய்ஷங்கர் குமரி பத்மினி நாகேஷ் சோ சந்திரபாபு தங்கவேலு மனோகர் அசோகன் சுகுமாரி சுந்தரிபாய் பெருங்கூட்டம்

    தேவிகா ரங்கராவ் தம்பதியர்க்கு நீண்ட நாள் கழித்து பிறக்கும் குழந்தை கோபி சிறு வயதிலேயே TB நோயால் பாதிக்கப்பட்டு சுவிட்சர்லாந்த்க்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லபடுகிரான். செல்லும் வழியில் மனோகர் சதியால் பைலட் நாகேஷ் மரணமடைகிறார் .விமானமும் பாதிப்புக்கு
    உள்ளாகி யாரும் இல்லாத காட்டுக்குள் அந்த சிறுவன் கோபி படும் துன்பம் இறுதியில் குடும்பத்துடன் வந்து சேர்ந்தானா

    விடை dvd பார்த்தல் தெரியும்

    சக்திவேல் னு ஒரு புது மியூசிக் டைரக்டர்
    டைட்டில் அறிமுகம் என்று காண்பிக்கபடுகிறது
    ஒரு வித்யாசமான முயற்ச்சி

    பாடகர் திலகம் சுசீலா குரல்களில்

    'பாபு மணி பாபு என் தெய்வம் தந்த பிள்ளை செல்வமே '
    கார்த்திக் சார் க்கு பிடித்த தேவிகா அண்ணியார் பாடும் பாடல்



    gkrishna

  12. #2010
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    கார்த்திக் சார்!

    நன்றி! இன்னொரு சிறிய பரிசு உங்களுக்காகவே. ஆவண வடிவில். அண்ணியார் மட்டும்.
    பேசும்படம். (1966 பிப்ரவரி)
    வாவ பியுட்டி
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •