-
18th July 2014, 08:51 PM
#11
Junior Member
Veteran Hubber
தமிழ்த் திரையுலகில் காதல் பாடல்கள் தொகுப்பில் 'மழையில் நனைந்து' பாடும் பாடல்கள் ஏராளம்! காதல் மன்னரின் 'அவளுக்கென்று ஒரு மனம்', ரேவதியின் நடிப்பில்ஒரே மாதிரியான காட்சிகளில் வெளிவந்த 'புன்னகை மன்னன்' மற்றும் 'மௌனராகம்' , நடிகர்திலகத்தின் 'சபாஷ் மீனா' .........குறிப்பிடத்தக்கவை! ஆனால் இப்படங்களுக்கெல்லாம் முன்மாதிரி மிகப்பழைய ஆங்கில பிரம்மாண்டமான Gene Kelly's Singing in the Rain என்பது வியப்பாக இருக்கும்!
சந்திரபாபு, நாகேஷ், ரவிச்சந்திரன், கமலஹாசன் துவங்கி பிரபுதேவா, லாரன்ஸ் வரை நமது நடன கதாநாயகர்கள் கடமைப்பட்டிருப்பது Fred Astaire and Gene Kelly , Elvis Presley and Michael Jackson என்னும் நான்குHollywood நடன ஜாம்பவான்களே!
Last edited by sivajisenthil; 18th July 2014 at 09:02 PM.
-
18th July 2014 08:51 PM
# ADS
Circuit advertisement
Bookmarks