Page 206 of 400 FirstFirst ... 106156196204205206207208216256306 ... LastLast
Results 2,051 to 2,060 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #2051
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    நவக்கிரகம் - நாகேஷ் பாடல் பற்றிய விரிவான பதிவு . மிகவும் அருமை .நன்றி திரு வாசு சார் .

    தேடி வந்த லக்ஷ்மி - பாடல் அருமை . நன்றி திரு கிருஷ்ணா சார்

    பிரியா விடை படத்தில் இடம் பெற்ற பாடல் - நீண்ட நாட்களுக்கு பிறகு காணும் வாய்ப்பை தந்த
    ராகவேந்திரன் சார் . நன்றி .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2052
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    இன்றைய ஸ்பெஷல் வரிசையில் 'நவக்கிரகம் நீங்க நவக்கிரகம்' பாடல் ஆய்வு படித்தேன். வழக்கம்போல சிரத்தையெடுத்து ஆய்வு செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

    அப்பாடா, எல்லாவற்றிலும் ஒத்துப்போன நம் இருவர் ரசனையில் முதல் தடவையாக வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஆம். எனக்குப்பிடிக்காத பாடல் லிஸ்ட்டில் இப்பாடலுக்கு நிச்சயம் இடம் உண்டு. அதிலும் பத்துக்குள்ளாக.

    பொதுவாக பாடல்களின் இடையே வசனங்கள் வரும் பாடல்கள் என் நெஞ்சை அவ்வளவாக கவருவதில்லை. அந்த நாள் ஞாபகம், தெய்வமே தெய்வமே, சக்கைபோடு போடு ராஜா, தேவனே என்னைப்பாருங்கள் போன்ற பாடல்கள் பிடிக்கக் காரணம் அவற்றில் நடித்தவரின் அபார திறமையால்.

    'நவக்கிரகம், 'நான்கு சுவர்கள்' இரண்டையும் ஒரே நேரத்தில் இயக்கி வந்தார் கே.பாலச்சந்தர். இதைப்பற்றி குமுதம் பத்திரிகையில் 'படமெடுத்துப்பார்' என்ற தலைப்பில் வாராவாரம் கட்டுரை எழுதிவந்தார். அதைப்படித்தபோதே இந்த இரண்டு படங்களுமே தேறாது என்று தோன்றியது. அதுபோலவே இரண்டு படங்களுமே தேறவில்லை. (ஆனால் 'நான்கு சுவர்களில்' பாடல்கள் அருமை). நவக்கிரகத்திலும் 'உன்னைத்தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது' பாடல் நன்றாக இருந்தது. ஆனால் 'நவக்கிரகம் நீங்க நவக்கிரகம்' பாடலைப்பார்க்கும்போது ஏதோ மேடை நாடகத்தைப் படமாக்கியது போலிருக்கும்.

    உங்களுக்கு மனதுக்குப் பிடித்த பாடலாதலால் ரொம்ப அருமையாக பதிவிட்டிருக்கீறீர்கள். வாழ்த்துக்கள்...

  4. #2053
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    //இந்த படத்திற்கு வசனம் எழுதிய s .v .ஜெகதீசன் என்பவரும் திசை மாறிய பறவைகள்,மேகத்துக்கும் தாகம் உண்டு,மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இயக்குனர் s.ஜெகதீசன் என்பவரும் ஒருவரா? //

    டியர் கிருஷ்ணாஜி,

    இருவரும் வேறு வேறு.

    இருந்தாலும் உங்களுக்கு இந்த சந்தேகம் வந்ததில் தவறில்லை. சிலர் இடையில் இனிஷியலை மாற்றிக்கொள்வது / சேர்த்துக்கொள்வது உண்டு. உதாரணமாக பழைய படங்களில் C. குகநாதன் என்று போட்டுக்கொண்டிருந்தவர் பிற்காலத்தில் V.C. குகநாதன் என்று போட்டுக்கொள்ளத் துவங்கினார்...

  5. #2054
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    'பிரியாவிடை' படத்தில் அப்படியே ஒரு பிரபலமான இந்திப்பட பாடலைக் காப்பியடித்து 'மாப்பிள்ளைக்கொரு மயக்கம் வந்தது' என்ற பாடலைப் போட்டிருந்தார் ஜி.கே.வெங்கடேஷ்.

  6. #2055
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    //இந்த படத்திற்கு வசனம் எழுதிய s .v .ஜெகதீசன் என்பவரும் திசை மாறிய பறவைகள்,மேகத்துக்கும் தாகம் உண்டு,மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இயக்குனர் s.ஜெகதீசன் என்பவரும் ஒருவரா? //

    டியர் கிருஷ்ணாஜி,

    இருவரும் வேறு வேறு.

    இருந்தாலும் உங்களுக்கு இந்த சந்தேகம் வந்ததில் தவறில்லை. சிலர் இடையில் இனிஷியலை மாற்றிக்கொள்வது / சேர்த்துக்கொள்வது உண்டு. உதாரணமாக பழைய படங்களில் C. குகநாதன் என்று போட்டுக்கொண்டிருந்தவர் பிற்காலத்தில் V.C. குகநாதன் என்று போட்டுக்கொள்ளத் துவங்கினார்...
    நன்றி கார்த்திக் சார்

    இதே மாதிரி இன்னொரு சந்தேகம் உண்டு சார்
    மாஸ்டர் தசரதன் என்று ஒருவர நம்ம தெய்வமகன்,ராமன் எதனை ராமனடி,திருமலை தென்குமரி போன்ற நிறைய படங்களில் வருவார் .
    பின்னாளில் S R தசரதன் என்று ஒருவர் சரணம் ஐயப்பா என்ற படம் ஒன்று எடுத்தார் .ஜேசுதாஸ் இன் அருமையான பாடல்
    'பொய்யின்றி மெய்யோடு நைய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம்' என்ற பாடல் இடம் பெற்றது .
    மாஸ்டர் தசரதனும் SR தசரதனும் ஒருவரா
    gkrishna

  7. #2056
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்!

    நன்றி!

    தேடி வந்த லஷ்மி. அப்போது பரபரப்பாக பேசப்பட்ட படம். சஸ்பென்ஸ், திகில் கலந்த விறுவிறு படம். அந்தப் படத்தின் பாடல்களைப் பற்றி குறிப்பிட்டு, ஸ்டில்களையும் ஆதாரபூர்வமாக இணைத்ததற்கு நன்றி.

    'நெஞ்சம் நிறைய வரவேற்றான்' பாடல் 'தேடி வந்த லஷ்மி' படத்தில் அல்ல. அது ஜெய்சங்கர் நடித்த 'ஆசீர்வாதம்' திரைப்படத்தில் வரும் பாடல்.

    இன்பமிங்கே வெப் சைட்டில் தவறான தகவல் தந்துள்ளார்கள். இது மாதிரி வெவேறு படங்களின் பாடல்களை அந்த வெப் சைட்டில் சரி பார்க்காமல் கலந்து தந்து விடுவார்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #2057
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நன்றி ராகவேந்திரன் சார்!

    தங்களால் இந்தத் திரி கிடைக்கவே அரிதான பாடல்களையெல்லாம் பெற்று அனைவருக்கும் பரவசம் அளிக்கிறது.

    'பிரியாவிடை' படப் பாடல் அருமை.

    'ராஜா பாருங்க... ராஜாவைப் பாருங்க' என்ற பாடல் அப்போது சூப்பர் ஹிட்.

    'என்னுயிரே! பொன்னொளியே! என் காதல் மன்னா'! ஜானகியின் பாடல். சுகமோ சுகம். (இது 'பிரியா விடை'யில்தானே?)

    நீங்கள் அளித்துள்ள ஸ்டில்லில் இருப்பது நடிகை சாந்தகுமாரிதானே! காந்திமதி சாயல் போலவே தெரிகிறது.

    'ராஜா பாருங்க... ராஜாவைப் பாருங்க'

    Last edited by vasudevan31355; 20th July 2014 at 06:18 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #2058
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்,

    அதே தசரதன்தான். பல படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். மாஸ்டர் தசரதனும் SR தசரதனும் ஒருவரே! தசரதன் நாகேஷுடன் சேர்ந்து ஆடும் 'கல்யாண சாப்பாடு போடவா' (மேஜர் சந்திரகாந்த்) பாடலை மறக்கவே முடியாது. தசரதன் அந்தப் பாட்டில் கலக்கியிருப்பார்.

    இன்னும் ஒரு விஷயம்.

    இதே தசரதன் பாலு மகேந்திராவின் படைப்பான 'ராமன் அப்துல்லா' படத்தின் டைட்டில் சாங்கான

    'உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்?'

    என்ற பாடலுக்கு பரதேசியாய் காவி கட்டி, வெற்றுடம்புடன் தலையில் முஸ்லீம் குல்லா அணிந்து, நெற்றியில் நீறு குங்குமம் இட்டு. கழுத்தில் சிலுவை அணிந்து அருமையாக ஆடி நடித்திருப்பார்.

    இப்பாடலைப் பாடியவர் நாகூர் ஹனிபா அவர்கள். இசை இளையராஜா.

    உங்களால் ஒரு நல்ல மதசார்பற்ற கருத்தை வலியுறுத்தும் பாடலை ஆராய நேரிட்டது.

    நன்றி!

    இப்போது வித்தியாசமான தசரதனை ரசியுங்கள்.

    Last edited by vasudevan31355; 19th July 2014 at 11:47 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Likes Russellmai liked this post
  11. #2059
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு சார் . புது முயற்சியாக ..முதல்முறையாக .....

    தென்றல் வீசும் ரம்மியமான இரவு நேரம் . அழகிய சிறு நீரோடை .சுற்றிலும் பசுமையான செடிகள் . மலர்கள் .
    முழு நிலவு மேகத்தில் ஜொலிக்கிறது .. தென்றல் காற்றும் மலர்களின் நறுமணம் இரண்டும் இணைந்திட
    அந்த பகுதி நந்தவனமாக காட்சியளித்தது . ஒரு அழகு தேவதை .அவள் .பக்கதில் ஒரு மன்மத ராஜகுமாரன் .
    அந்த தேவதை பெயர் ராதா . மன்மதன் வேறு யாருமில்லை கண்ணன் . காதலர்கள் நெஞ்சங்கள் மதுர கானத்தில்
    மிதக்க துவங்கினார்கள் .

    கண்ணில் ஆடும் மாயவன் என்று ராதையும் நீல வண்ண பூங்குழல் என்று கண்ணனும் ஆராதனை செய்யும் அழகே அழகு .காதலர்களின் உவமைகள் - தமிழ் வார்த்தைகள் நம்மை அந்த சொர்க்கத்திற்கே அழைத்து செல்கிறது .
    பாடகர் திலகம் - இசை அரசி இருவரின் குரலில் மெல்லிசை மன்னரின் இனிய இசையில் இந்த பாடல் காட்சியில்
    நம் கண்களும் செவிகளும் அந்த தோட்டத்திற்கே நம்மை அழைத்து செல்கிறது .

    மக்கள் திலகம் - ஜெயா இருவரும் இந்த பாடல் காட்சியில் மிகவும் மென்மையாக இளம் காதலர்களாக தோன்றி பாடலுக்கு உயிர் கொடுத்திருந்தார்கள் .இந்த காதல் கீதத்தை நீங்களும் ரசித்து பாருங்களேன் .


  12. #2060
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    உள்ள(த்)தை அள்ளித்தா





    மெல்லிசை மன்னர் வாணி ஜெயராம் கூட்டுப் படைப்புகள் காலத்தால் அழிக்க முடியாதவை, தனிச் சிறப்பு பெற்றவை. எம்.எஸ்.வியே சொல்லுவார், நீ இன்னும் முன்னாடியே எங்கள் இசைக்குழுவில் வந்திருக்கக் கூடாதா என்று. அப்படிப்பட்ட சிறப்பான குரலினிமையும் வளமும் பெற்ற பாடகி வாணி ஜெயராம். மெல்லிசை மன்னரின் படைப்புகளில் வாணி ஜெயராம் பாடிய பாடல்களில் பல நுணுக்கமான சங்கதிகள் காணப்படும்.

    வைர நெஞ்சம் படத்தில் நீராட நேரம் நல்ல நேரம் பாடல் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததோ அதற்கு சற்றும் குறையாத சிறப்புடன் அமைந்த பாடல் ஸ்ரீராம ஜெயம் திரைப்படத்தில் இடம் பெற்ற பதினாறு வயதினிலே. தேங்காய் சீனிவாசன் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் மிகவும் பிரபலமான பாடல்கள் வெள்ளிச் சலங்கை மற்றும் எந்தன் கற்பனைத் தேரில், பிறகு மனோரமா பாடிய சோசியம் பாக்கலியோ பாடல்.

    ஆனால் இவை அனைத்தையும் தூக்கிச் சாப்பிட்டு எட்டாத உயரத்தில் அமர்ந்திருப்பது இன்று நாம் பகிர்ந்து கொள்ள இருக்கும் இப்பாடல். படம் பார்த்தவர்களுக்கு மட்டுமே இப்பாடல் ஓரளவு ஞாபகம் இருக்கும். வானொலியிலோ தொலைக்காட்சியிலோ இப்பாடல் அதிகம் ஒலி அல்லது ஒளிபரப்பப் பட்ட நினைவில்லை.

    மிருதங்கம், குழு தபேலா என தாள வாத்தியங்கள் பயன் பாடு மிகவும் மெலோடியாக அமைத்திருப்பது இப்பாடலின் சிறப்பு. முதன் முறை கேட்பவர்கள் நிச்சயம் மெய் மறந்து போவார்கள் என்பது திண்ணம். அதே போல் கேட்டவர்கள் மீண்டும் மீண்டும் கேட்பார்கள் என்பது அதை விட உறுதி.

    பாடலுக்கான இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. தரவிறக்கிக் கேளுங்கள்

    ஸ்ரீராம ஜெயம் - பதினாறு வயதினிலே - எம்எஸ்வி - வாணி

    பாடலாசிரியர் கவியரசரா அல்லது நேதாஜியா எனத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.
    Last edited by RAGHAVENDRA; 20th July 2014 at 10:07 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Thanks Russellmai thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •