-
21st July 2014, 05:08 AM
#2081
Senior Member
Diamond Hubber

பாடல்களில் பாசத்தை ஊட்டி
நடிப்பில் நவரசங்களைக் காட்டி
சிந்தை கவர்ந்த எங்கள் செல்வமே!
அன்பின் ஊற்றாய் அவதரித்து
பண்பின் உறைவிடமாய் பரிமளித்து
பார் போற்ற வாழ்ந்த பாரத மகனே!
முத்திரைச் சிரிப்போடு என்றும்
என் மலர் மாலையை
முதல் மாலையாய்
ஏற்றுக் கொண்ட முத்தமிழ்
வித்தக நடிகனே!
அருகில் நாற்காலியில் உனக்குச் சமமாய்
எனக்கு சரியாசனம் தந்து
யாருக்கும் கிடைக்காத பாக்கியமாய்
உன்னருகில் என்னை அமரச் செய்து
அழகு பார்த்த அன்புத் தெய்வமே!
சினிமா கதை அவரிடம் பேசாதே
என்று என்னிடம் உன் பாதுகாவலர்கள்
எச்சரித்து உன்னிடம் அனுப்பி வைத்தாலும்
அரைமணி நேரம் என்னுடன் அதே கதை பேசி
வம்பளந்து என் வயிறை நோக வைத்த விஷமக்காரனே!
என் ஊர்க் கோவிலின் திருநீரை
என்றும் மறக்காமல் நான் கொடுக்க
பயபக்தியுடன் நெற்றியில் இட்டு என்னை
அருள் பார்வை பார்த்த ஆண்டவனே!
விடை பெற்றுப் புறப்படும் போதெல்லாம்
மறக்காமல் 'பேருந்து வழி செலவுக்கு இந்தா பணம்'
என்று சட்டை பாக்கெட்டில் கைவைத்து அள்ளி எடுத்து
தந்த அருள் வள்ளலே!
என்னை பெற்ற தாயிடம்
'இவனுக்கு சோறு போட மாட்டீர்களா அம்மா ?
என்று பொய்க் கேலி பேசி அப்போதைய
என் ஒல்லி உடம்புக்கு பரிதாபப்ப்பட்ட
பத்தரை மாற்றுத் தங்கமே!
நீ இறந்து விட்டாயாமே! உன் நினைவு நாளாமே! ஊர் பிதற்றுகிறது.
நீ எங்கே இறந்தாய்!
என் உயிரில் வாழ்கிறாயே!
உயிரணுக்களில் ஊர்கிறாயே!
எப்படி நான் நம்புவேன்?
ஆனால் அதையும் மீறி

நான் அழுகிறேனே இன்று.
ஏன் என்று காரணம் சொல்
Last edited by vasudevan31355; 21st July 2014 at 05:22 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
21st July 2014 05:08 AM
# ADS
Circuit advertisement
-
21st July 2014, 07:33 AM
#2082
Senior Member
Seasoned Hubber
தினமும் மனதை மயக்கும் கானங்களை அளிக்கும் வாசு சார்..
இன்று
மனதை உருக்கும் கானமாக தந்து விட்டார்...
உயர்ந்த மனிதனும் நீயே
தெய்வப் பிறவியும் நீயே
தவப்புதல்வனும் நீயே
உத்தம புத்திரனும் நீயே..
நீயே உனக்கு என்றும் நிகரானவன்...
நீ மறையவுமில்லை..
நாங்கள் மறக்வுமில்லை
எங்கள் இதயம் எப்பொதுமே பிரகாசமாயிருக்கும்
அங்கே
உன் ஞான ஒளி வீசிக் கொண்டிருக்குமே...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st July 2014, 08:31 AM
#2083
Junior Member
Platinum Hubber
Last edited by esvee; 21st July 2014 at 08:37 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st July 2014, 09:42 AM
#2084

Originally Posted by
vasudevan31355
கிருஷ்ணா சார்!
நன்றி!
தேடி வந்த லஷ்மி. அப்போது பரபரப்பாக பேசப்பட்ட படம். சஸ்பென்ஸ், திகில் கலந்த விறுவிறு படம். அந்தப் படத்தின் பாடல்களைப் பற்றி குறிப்பிட்டு, ஸ்டில்களையும் ஆதாரபூர்வமாக இணைத்ததற்கு நன்றி.
'நெஞ்சம் நிறைய வரவேற்றான்' பாடல் 'தேடி வந்த லஷ்மி' படத்தில் அல்ல. அது ஜெய்சங்கர் நடித்த 'ஆசீர்வாதம்' திரைப்படத்தில் வரும் பாடல்.
இன்பமிங்கே வெப் சைட்டில் தவறான தகவல் தந்துள்ளார்கள். இது மாதிரி வெவேறு படங்களின் பாடல்களை அந்த வெப் சைட்டில் சரி பார்க்காமல் கலந்து தந்து விடுவார்கள்.
நன்றி வாசு சார்
காலை வணக்கம்
உங்கள் தகவல்களால் நிறைய தவறுகள் திருத்தபடுகின்றன
புஷ்பலதா படங்கள் அருமை.
அன்று கண்ட முகம் வெளியில் வராத நல்ல பாடலை அறிமுகம் செய்து உள்ளீர்கள்
தசரதன் பற்றிய விளக்கமும் அருமை
நேற்று மாலை தூக்கு தூக்கி திரைப்படம் நமது நட்பா (NTFA ) அமைப்பு மூலமாக திரை இடப்பட்டது .
நடிகர்திலகம் அவர்களின் 17 அல்லது 18வது படம் (கூண்டுக்கிளி ,தூக்கு தூக்கி இரண்டும் ஒரே நாள் வெளியீடு 26/8/54 ) முரளி சார் தந்த தகவல்
தூக்கு தூக்கி மூலமாக தான் NT ,TMS இருவரும் இணைந்தார்கள்
கூண்டுக்கிளிக்கு பிறகு NTyum MTyum வேறு எந்த படத்திலும் இணையவில்லை
பாடல்கள் அனைத்தும் மிக அருமை .அதை விட அருமை அருமையான திரை கதை ஸ்கிரிப்ட் . எல்லாவற்றிகும் சிகரம் NT இன் சூப்பர் performance மற்றும் கலக்கல் டான்ஸ்
-
21st July 2014, 09:53 AM
#2085


Antha Inthe (1955) telugu dubbing from thookku thokki
1. இன்ப நிலை காண மருதகாசி எம்.எஸ்.ராஜேஸ்வரி
2. கண் வழி புகுந்து மருதகாசி டி.எம்.சௌந்தர்ராஜன், எம்.எஸ்.ராஜேஸ்வரி
3. ப்யாரி நம்மள்கு நிம்மள் மேலே மஜா உடுமலை நாராயண கவி -செல்லமுத்து, எம்.எஸ்.ராஜேஸ்வரி
4. ஆணும் பெண்ணும் அழகு சொல்வது ஆடை உடுமலை நாராயண கவி சௌந்தர்ராஜன்
5. பெண்களை நம்பாதே உடுமலை நாராயண கவி டி.எம்.சௌந்தர்ராஜன்
6. சுந்தரி சௌந்தரி மருதகாசி டி.எம்.சௌந்தர்ராஜன், பி.லீலா, ஏ.பி.கோமளா
7. குரங்கிலிருந்து பிறந்தவன் உடுமலை நாராயண கவி டி.எம்.சௌந்தர்ராஜன், வி.என்.சுந்தரம், பி.லீலா, ஏ.பி.கோமளா
8. வாரணமாயிரம் திருப்பாவை எம்.எல்.வசந்தகுமாரி, பி.லீலா
9. அபாய அறிவிப்பு தஞ்சை ராமய்யதாஸ் டி.எம்.சௌந்தர்ராஜன்
10. ஏறாத மலைதனிலே தஞ்சை ராமய்யதாஸ் டி.எம்.சௌந்தர்ராஜன்
11. சட்டாம்பிள்ளையை ஜாடை காட்டி தஞ்சை ராமய்ய தாஸ் டி.எம்.சௌந்தர்ராஜன்
Last edited by gkrishna; 21st July 2014 at 09:58 AM.
gkrishna
-
21st July 2014, 10:04 AM
#2086
Senior Member
Veteran Hubber
ஆருயிர் அண்ணனே...!!!!!
இன்று உன் நினைவு நாளாம், எல்லோரும் சொல்கிறார்கள்.
இன்று மட்டும் உன்னை நினைப்பவர்களுக்கு இன்று உன் நினைவு நாள். என்றென்றைக்கும் உன்னை மனதில் தாங்கியிருக்கும் எங்களுக்கு எந்நாளும் நினைவு நாளே.
'அங்கே' இருந்தால் மட்டும்தான் உன்னைப்பற்றிய எண்ணம் என்றில்லை. எங்கேயிருந்தாலும் உன் நினைவுதான் கனவிலும் நனவிலும், பேச்சிலும், மூச்சிலும்...
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
21st July 2014, 10:32 AM
#2087

Originally Posted by
rajeshkrv
ஒரு நாள் பார்க்கவில்லை எவ்வளவு பதிவுகள் . அருமை
நவக்கிரகம் எனக்கு பிடித்த படம். கொஞம் பாலச்சந்தர் எதிர் நீச்சல் பாமா விஜயம் போல திரைக்கதை எழுதியிருந்தால் இன்னும் அருமையாக வந்திருக்க வேண்டிய படம் இருந்தாலும் பரவாயில்லை
ஸ்ரீகாந்த் நாகேஷிடம் ... அவ்ளோ பெரிய வேட்டியில் ஓரத்துல கோடு போட்ட மாதிரி ஜரிகை
நாகேஷ் .. ஓரத்துல இருந்தாதான் அது வேஷ்டி இல்லெனா புடவை ....
திரு ராஜேஷ் சார்
நாகேஷ் காமெடி பற்றி
உத்தமன் திரை படத்தில் காதலியிடம் தான் பார்க்கும் வேலை பற்றி விளக்கும் போது (நாகேஷ் scatting மாஸ்டர் சிவாஜியின் உதவியாளர் )
'கால்தான் சக்ரம் கையிலே சக்ரம் இருந்தால் அது நான் இல்ல மஹா விஷ்ணு பின்னாடி மண்டை மஞ்சளா இருக்கும்'
-
21st July 2014, 11:52 AM
#2088
Senior Member
Senior Hubber
ஹாய்.. வரவேற்ற கிருஷ்ணா சார், வாசு தேவன் சார், கோபால் சார் கார்த்திக் சார்அனைவருக்கும் நன்றி + ஆளுக்கு ஒரு க்ளாஸ் பொவொண்டோ..
புஷ் புஷ் புஷ்பலதா படங்கள் + தகவல்கள் வழங்கிய வாசு சார் க்ருஷ்ணா சார் அவர்களுக்கு மறுபடியும் நன்றி..ஆனால் அவரை விட அவர் மகள் ஒரு குட்லுக்கிங்க் லேடி எனப் புகையாக நினைவு..(ஸ்ரீ எனப் பெயர்.. அது சரி அவருடைய ஒரு பாட் போடமாட்டாங்களா என்ன..
-
21st July 2014, 11:55 AM
#2089
Senior Member
Senior Hubber
வாசு சார்.. ந.திக்கு..மனதை உருக்கும் கவிதாஞ்சலி.. நன்றி.. ராகவேந்திரர் சார், கார்த்திக் சார் -- நன்றி..
தூக்குத் தூக்கியில் ராக்ஸ் அண்ட் பப்பிஸ் டான்ஸ் ந.தியுடன்..குரங்கிலிருந்த் பிறந்தவன் மனிதன்+ சுந்தரி செளந்தரி அண்ட் அபாய அறிவிப்பு பிக்சரைசேஷன் அண்ட் ந.தியின் பாவங்கள்... என்றும் நெஞ்சில் பதிந்திருப்பவை..க்ருஷ்ணா சார்..
-
21st July 2014, 11:59 AM
#2090
Senior Member
Senior Hubber
புஷ்.. நடித்த பாடற்காட்சிகளில் பிடித்தது... வாடைக்காற்றம்மா வாடைக்காற்றம்மா வாலிப மனதை நாளுக்கு நாளாய் வாட்டுவதேனம்மா...ஆஹா..வெகு நன்றாக வாலிப வயதில் பார்த்ததால் பதிந்த பாடலாக்கும்..
Bookmarks