-
21st July 2014, 04:09 PM
#11
Senior Member
Veteran Hubber
'ஜிகர்தண்டா' ரிலீஸ் ஒத்திவைப்பு: நடிகர் சித்தார்த் கொந்தளிப்பு'- hindu
25ம் தேதி வெளியாவதாக இருந்த 'ஜிகர்தண்டா' திரைப்படம் மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருக்கிறார்கள். இதனால் சித்தார்த் கொந்தளிப்பு சித்தார்த், லட்சுமி மேனன், சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிக்க, கார்த்தி சுப்புராஜ் இயக்கிய படம் 'ஜிகர்தண்டா'. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கதிரேசன் தயாரித்திருந்தார்.
ரம்ஜான் விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு ஜூலை 25ம் தேதி வெளியிடுவதாக தீர்மானம் செய்து, திரையரங்க ஒப்பந்தம் தொடங்கினார்கள். இந்நிலையில் தற்போது 'ஜிகர்தண்டா' வெளியீட்டை தற்போது தள்ளிவைத்திருக்கிறார்கள்.
வெளியீடு தள்ளி வைப்பது குறித்து நடிகர் சித்தார்த், "''ஜிகர்தண்டா ரசிகர்களே..வெளியில் இருந்து வரும் சில ஏற்கத்தகாத அழுத்தங்களால், எங்களது படத்தை வெளியிடுவதில் தடை நீடித்து வருகிறது.
கார்த்திக் மற்றும் எங்களது 'ஜிகிர்தண்டா' படக் குழு முழுவதும் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளது. ஆனால் எங்கள் எவரையும் ஆலோசிக்காமல், படத்தின் ரிலீஸை தள்ளிவைத்துள்ளது நியாயமற்றது.
இது போன்ற மோசமான எண்ணங்களால், எங்கள் படத்தின் ரிலீஸை வேண்டுமானால் தள்ளி வைக்கலாம். ஆனால் படம் வெளிவருவதை தடுக்க முடியாது. ஒரு நல்லப் படத்தை யாராலும் வீழ்த்த முடியாது.
நாங்கள் எந்தவிதமான உதவியும் இன்றி நிற்கிறோம். சினிமா ரசிகரகள் அனைவரும் எங்கள் படத்திற்கும், எங்கள் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிற்கும் ஆதரவு தர வேண்டும். ஜிகர்தண்டா எப்போது ரிலீஸ் ஆனாலும், உங்களது ஆதரவு தேவை.
சினிமாவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். ஓர் அதிசயம் வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். ஜிகர்தண்டா விரைவில் வெளியாக வேண்டும்.
ஜிகர்தண்டாவின் தயாரிப்பாளர், தனது தனிப்பட்ட முறையில், ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு குறித்து மற்ற தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் எங்களுக்கு எந்த விதமான அறிவிப்பும் வரவில்லை. " என்று கூறியுள்ளார்.
-
21st July 2014 04:09 PM
# ADS
Circuit advertisement
Bookmarks