-
21st July 2014, 05:55 PM
#2111

Originally Posted by
Gopal,S.
அன்னையும் பிதாவும் படத்தில் அசத்தல் பாடல் பழைய ஜானகியின் "மோதிரம் போட்டது போன்றொரு" இல்லையா?
"மலரும் மங்கையும்" நல்ல உருக்கமான இனிய பாடல்.
கோபால் சார்
அன்னையும் பிதாவும் மற்ற பாடல்களின் ஒளி காட்சி
எனக்கு கிடைக்கவில்லை .
ஆனால் எல்லா பாடல்களுமே நல்ல இருக்கும்
நீங்கள் சொன்ன 'மோதிரம் போட்டது ' ஜானகி எக்ஸ்செல்லன்ட்.
அதே போன்று 'இறைவா உனக்கொரு கேள்வி எங்கே நீ ' சிசீலவின் குரல்
'சத்தியமா நான் சொல்வது தத்துவம் ' பாடகர் திலகம் குரல்
'பொன்னாலே வாழ்வு ' ஈஸ்வரியின் குரல் பங்கோ பின்னி இருக்கும்
http://www.inbaminge.com/t/a/Annaiyum%20Pithavum/
-
21st July 2014 05:55 PM
# ADS
Circuit advertisement
-
21st July 2014, 06:05 PM
#2112
Senior Member
Senior Hubber
இந்த நிலவை நான் பார்த்தால் - அழகிய பாடல்.. நன்றி கோபால் சார்..
ஒரு காலுமில்லை... பாடலைத் தொடர்ந்து சிந்தையுள் நுழைபவை...
கண்ணழகு பார்த்தால் பொன்னெதற்கு
கையழகு பார்த்தால் பூவெதற்கு
காலழகு பார்த்தால் .. காலழகு பார்த்தால் தெய்வத்திற்கு
கருணை என்றொரு பேரெதற்கு...
ந.தி. ரோ.ர என நினைக்கிறேன்..உணர்ச்சிப் பிரவாகம்..
அடுத்து
மலரும் கொடியும் பெண் என்பார்
மதியும் நதியும் பெண் என்பார்
மலரும் கொடியும் நடப்பதில்லை
அவை மணம்தர என்றும் மறுப்பதில்லை..
அகெய்ன் ந.தி..சாவித்திரி..படம் நினைவிலில்லை..
-
21st July 2014, 06:14 PM
#2113
உண்மை கோபால் சார்
பவானி படம் பாடல்கள் மட்டுமே
படம் உட்கார முடியாது

அதே மாதிரி 5 லட்சம்னு ஒரு படம் 1969
'அன்று கண்ட முகம்' ராமகிருஷ்ணன் இயக்கம் னு நினைவு
sms இசை
'படைத்தான் பூமியை இறைவன் அதில் பொங்கி வழிந்தது அழகு '
'ஆணும் பெண்ணும் ஒன்றாய் சேர்ந்து ஆனது தானே உலகம்
அதனால் தானே உலகம் எங்கும் மூன்றெழுத்து கழகம் (or ) கலகம்
பாடகர் திலகம் குரலில்
'ஆசைப்பட்டது நான் அல்ல ' பாடல்
-
21st July 2014, 06:22 PM
#2114
1968,1969 கால கட்டத்தில்
பவானி,மாலதி,சிநேகிதி இந்த மாதிரி சில படங்கள் உண்டு
மாலதி 1970
'சிடு சிடு எங்கும் போவோம் ஜிகு ஜிகு எங்கும் போவோம் '
பாலா சுசீலா குரல் ஜெமினி சரோஜாதேவி ஸ்கூட்டர் சாங் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டு ஒரே சிரிப்பா சிரிச்ச பாடல்
'கற்பனையோ கை வந்ததோ சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம் '
பாலா சுசீலா
ரவி தண்ணி வண்டி ஜெமினி காதல் தியாகி
-
21st July 2014, 06:43 PM
#2115
Senior Member
Senior Hubber
படைத்தான் பூமியை இறைவன்
கற்பனையோ கைவந்ததோ..ஓ.. அழகான பாடல்கள்.. நன்றி க்ருஷ்ணா சார்..
-
21st July 2014, 07:51 PM
#2116
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்,
படைத்தானை இங்கு படைத்ததற்கு நன்றி! சும்மா நச் பாட்டு. மாலதி, ஐந்து லட்சம், அன்னையும் பிதாவும் எல்லா செலக்ஷனும் ஏ.ஓன்.
அருமையான ரசனை.
இந்த படங்களெல்லாம் பிளட் வரவழைக்கும் செம பிளேடுகள். ஆனால் பாடல்கள் அற்புதமோ அற்புதம்.
படைத்தான் பூமியை இறைவன் பாடகர் திலகம் முடித்ததும் கண்ணியப் பாடகியின் வரிகள்.
'அதில் பொங்கி வழிந்தது அழகு'
சும்மா உற்சாகம் புரளும் சார் அந்த மந்திரக் குரலில்.
சின்னக் கண்ணன் சார் எனக்கு சிரமம் வைக்கவில்லை. அந்த 'ஒருக்காலும் இல்லை ஒரு காலும் இல்லை' யைத்தான் சொல்கிறேன். அப்படியே என்னுள் இருப்பதை அவர் உரைத்து விட்டார்.
இந்தப் பாடலில் கள்ளமில்லாத (படத்தில் மட்டும்) லஷ்மியின் முகம் அப்படியே பிரஷ் போட்டு துடித்தது போல அவ்வளவு பளிச். ஒளிப்பதிவு அற்புதமாக இருக்கும்.
'அன்னையும் பிதாவும்' படத்தில் கிளைமாக்ஸில் ஒரு மோட்டார் பைக் ரேஸ் ஒன்றும் அருமையாகப் படமாக்கப் பட்டிருக்கும் கர்ணன் பட ரேஞ்சில்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st July 2014, 08:06 PM
#2117
Senior Member
Diamond Hubber
கோ,
தேங்க்ஸ். நம்முடைய ஒற்றுமைப் பாடலான 'மோதிரம் போட்டது போலொரு நாடகம்' பாட்டிற்கு மோதிரம் போடாமல் சப்பென்று வெறும் வீடியோ போட்டு முடிக்கலாமா? தப்பில்லே?
பிரிச்சி மேயலாம். 'இன்றைய ஸ்பெஷலி'ல் போட வைத்திருக்கிறேன். அதற்குள் என்னய்யா அவசரம்?
ஆனா இந்த அசோகன் விஷயத்திலும் நமக்குள் பிரிவில்லாத ஒற்றுமைதான். என்ன மாதிரி பாடல்களிலெல்லாம் தலை காட்டி எப்படி கெடுக்க முடியுமோ அப்படிக் கெடுத்து.
மயக்கும் மோகினியின் 'மல்லிகை ஹோய்' ஈஸ்வரியின் டாப் டென்னில் ஒன்று. இந்த ஆளுக்கு வாணிஸ்ரீ ஜோடி. எங்கே போய் முட்டிக் கொள்ள? என்ன ஜோடி சேர்க்கும் ரசனையோ!
இந்தப் பாடலும் ஸ்பெஷலில்தான் வரும்.
'ஆளத் தொட்டு தோளைத் தொட்டு' எல்.காஞ்சனா தூள். டிரெஸ் கலக்கல்.'வா. வா. வா. வா'. ரேர் சாங். தேங்க்ஸ் கோ.
'ஆயிரம் பேர் பாத்திருக்கேன்
ஈஸ்வரி போல் இல்லே'
ன்னுதான் சொல்லணும்.
-
21st July 2014, 08:13 PM
#2118
Senior Member
Diamond Hubber
சின்னக் கண்ணன் சார்.
அடைக்கெல்லாம் படப் படாது.
அழகு அண்ணியாருக்கு கல்யாண்குமார் ஜோடி. மனுஷர் தேவிகா ஜோடி என்ற சந்தோஷத்தில் ஓவர் உற்சாகமாய் இருப்பது அவருடைய குத்திலேயே தெரியும். நமக்கு குத்தலாம் போல இருக்கும். ஆனால் ரகளை பாட்டு.
-
21st July 2014, 08:59 PM
#2119
Senior Member
Diamond Hubber
ராஜேஷ் சார்,
ஸாரி. முக்கியமான ஒன்றை மறந்து விட்டேன். சொர்க்கத்தை ஒரே பாட்டில் பேக் பண்ணி என்னை பேஜார் படுத்தி விட்டீர்கள். இன்பமான இன்பத்தை அள்ளித் தந்த பாடலை, இன்னும் அள்ளித் தரும் பாடலை
எதிர்பாராமல் தந்து திக்கு முக்காடச் செய்து விடீர்கள். ('இன்ப சந்திரிகா' வைத்தான் சொல்கிறேன்).
சில சமயம் டூ வீலரில் நெடுந்தூரப் பயணம் செய்யும் போது சில பாடல்களை நாம் நினைவுக்குக் கொண்டு வராமலேயே நம் வாய் அந்தப் பாடலை பயணம் நெடுக முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட பாடல்தான் எனக்கு
'இன்ப லோக ஜோதி ரூபம் போல'
எப்போதுமே என் வாயின் நுனியில் இருக்கும் பாடல். ஒருநாள் கூட இப்பாடலை நான் மறந்ததில்லை. அப்பேற்பட்ட பாடலை அளித்து கலக்கி விட்டீர்கள்.
ஆயிரமாயிரம் நன்றிகள் இப்பாடலை நீங்கள் தந்ததற்கு.
இன்னொரு சந்தேகம் சார். 'தூய உள்ளம்' தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது தானே! அல்லது நேரிடையாக ஒரே சமயத்தில் இரு மொழிகளிலும் தயாரானதா? ஏனென்றால் 'இன்ப லோக ஜோதி' பாடலில் வாயசைப்பு பொருந்தவில்லை.
('மனோகரா'வில் அழகுப் பதுமையாய் ஜொலித்த கிரிஜா இப்பாடலில் எவ்ளோ குண்டடித்து தெரிகிறார். லாங் ஷாட்களில் சந்திரகாந்தா போலவும் இருக்கிறார்)
-
21st July 2014, 09:08 PM
#2120
Senior Member
Diamond Hubber
வினோத் சார்,
நடிகர் திலகத்தின் நினைவு நாளுக்கு அருமையான புகைப்பட ஆவணங்கள் தந்து நினைவு கூர்ந்தமைக்கு நன்றி!
Bookmarks