Page 213 of 400 FirstFirst ... 113163203211212213214215223263313 ... LastLast
Results 2,121 to 2,130 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #2121
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'மாலதி' (1970) ஒரு சிறப்பு பிளாஷ்பேக்



    நடிகர்கள்: ஜெமினி கணேசன், 'கலை நிலவு' ரவிச்சந்திரன், சரோஜாதேவி, வரலக்ஷ்மி, நாகேஷ், சுந்தரராஜன், 'தேங்காய்' சீனிவாசன்

    படம் வெளி வந்த ஆண்டு: 29-10-1970

    தயாரிப்பு:-சித்ரா புரொடக்ஷ்ன்ஸ்

    பாடல்கள்:-"கவியரசு"கண்ணதாசன்

    மூலக்கதை:-கோமதி சுப்ரமணியம்

    இசை: "மெல்லிசைமன்னர்" எம்.எஸ்.விஸ்வநாதன்.

    திரைக்கதை,வசனம், இயக்கம்: கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

    'இயக்குநர் திலகம்' கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் இயக்கத்தில் வெளி வந்த படம். காதல் மன்னனும், கலைநிலாவும் இணைந்து நடித்த குடும்பச் சித்திரம்.


    'கதை:

    ஜெமினியும் சரோஜாதேவியும் காதலர்கள். சந்தர்ப்பவசத்தால் சரோஜாதேவி ரவியைத் திருமணம் செய்ய நேரிடுகிறது. ரவி குடிகாரனாகவும்,பெண் பித்தனாகவும் அலைய சரோஜாதேவி பொறுமை காத்து பழைய காதலனையும் ஆறுதல்படுத்தி, தன் குடிகாரக் கணவரைத் திருத்த சபதமெடுத்து, அவனால் பற்பல இன்னல்களை அனுபவித்து இறுதியில் அவனைத் திருத்தி வெற்றிவாகை சூடுவதே கதை.

    இயக்குனர் திலகத்தின் குடும்ப செண்டிமெண்ட் வசனங்கள் ஆழாமாயும், கருத்துள்ளதாகவும் இருந்தது.

    ரவியும் குடிகாரனாகவும் பெண் பித்தனாகவும் நன்றாகச் செய்திருப்பார். தான் செய்பவை தவறுகள் என மனைவி உணர்த்தியபின் உணர்ந்து மீண்டும் பழக்க வழக்கங்களில் இருந்து விடுபடமுடியாமல் தவிப்பதும், தன் தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியாமல் மனைவியிடம் புலம்புவதும் ரவிக்கு நடிக்க சந்தர்ப்பம் வாய்த்த இடங்கள். அதை அவரும் நன்றாகப் புரிந்து பயன்படுத்திக் கொண்டிருப்பார். ஜெமினி ஆரம்ப கால சரோஜாதேவியின் காதலனாக வந்து காதல் லீலைகளில் ஈடுபடுவது வழக்கம் போல. 'சிவந்தமண்' மேஜிக் ராதிகாவும் உண்டு. இவரும் K.S.G.யின் நிறையப் படங்களில் நடித்துள்ளார். (சின்னஞ்சிறு உலகம்' படத்தில் கே. ஆர் விஜயாவுக்கு அடுத்தபடியான ஹீரோயினாக வருவார். புதுமைப் பெண்களடி... பூமிக்குக் கண்களடி...என்ற பாடல் கூட அவருக்கு கோஷ்டியுடன் உண்டு).

    ஹீரோயின் சப்ஜெக்ட் என்பதால் அபிநயசரஸ்வதிக்கு படம் நெடுக சுமைதாங்கியாய் வேலை. சற்று வயது முதிர்ந்த இரண்டாவது ரவுண்ட் வந்த சரோஜாதேவியை இதில் காணலாம். எனவே டூயட் சீன்கள் கொஞ்சம் நெருடல். இருந்தாலும் இந்தக் கால ஹீரோயின்களை விட நன்றாகவே சோபிப்பார். (இந்தக் கால இளசுகளின் சுடிதாரை அப்போதே அணிந்து அசத்தியிருப்பார்) தேங்காய் ரவியின் நண்பனாக வந்து சகல பழக்கங்களையும் ரவிக்கு கற்றுத் தருகிறார். அவருக்கு அது ச்சும்மா..என்பது போல.

    K.S.G.யின் ஆஸ்தான நடிகை வரலக்ஷ்மி இல்லாமலா?... நாகேஷ் கிச்சு கிச்சு மூட்டுகிறார். மேஜரும் தன் பங்குக்கு குறை வைக்கவில்லை.

    பாடல்கள்:

    "கற்பனையோ கைவந்ததோ" என்ற பி.சுசீலாவுடன் இணைந்து இளம் S.P.B. யின் குழையும் காந்தக் குரலில் ஒலிக்கும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாத பாடல்

    "சிடு சிடு சிடு சிடுவென...என்ற S.P.B., பி.சுசீலாவின் குரல்களில் ஒலிக்கும் உற்சாகப் பாடல்.

    "எங்கே என் கிண்ணங்கள்" என்ற T.M.S இன் ஜாலி பாடல் (ராதிகா...தேவிகா...ஓடிவா... என்று வரிசையாக பெண்களின் பெயரை உச்சரிப்பது அழகு. இந்த டைப் பாடல்கள் ரவிக்கு எவ்வளவு பொருத்தமாய் இருக்கின்றன!)





















    அன்புடன்,
    வாசுதேவன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2122
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    அன்னையும் பிதாவும் திரையில் ஒலித்த

    இறைவா உனக்கொரு கேள்வி இதோ




    நடிகர் திலகம் நினைவாஞ்சலி அருமை. பாராட்டுக்கள் கிருஷ்ணா மற்றும் வாசு சார்

  4. #2123
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'மாலதி' நிழற்படங்கள் தொடர்கின்றன.




















    அன்புடன்,
    வாசுதேவன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #2124
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post

    மலரும் கொடியும் பெண் என்பார்
    மதியும் நதியும் பெண் என்பார்

    மலரும் கொடியும் நடப்பதில்லை
    அவை மணம்தர என்றும் மறுப்பதில்லை..

    அகெய்ன் ந.தி..சாவித்திரி..படம் நினைவிலில்லை..
    சார்,

    அது பாச மலருக்கு அடுத்த 'எல்லாம் உனக்காக' வின் இன்ப நாதம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #2125
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்,

    'ஐந்து லட்சம்' படத்தில் சரோஜாதேவி சச்சுவிடமும், ஜெமினி 'தேங்காய்' சீனிவாசனிடமும் கூத்தடிக்கும் பாடல்

    'எப்படி இருக்கும்'?

    நீங்களே பார்த்துக்கோங்க. உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட்.

    இந்தப் பாடலின் ஆண்குரல் யாரென்று தெரிகிறதா?

    Last edited by vasudevan31355; 21st July 2014 at 09:31 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #2126
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ராஜேஷ் சார்,

    ஸாரி. முக்கியமான ஒன்றை மறந்து விட்டேன். சொர்க்கத்தை ஒரே பாட்டில் பேக் பண்ணி என்னை பேஜார் படுத்தி விட்டீர்கள். இன்பமான இன்பத்தை அள்ளித் தந்த பாடலை, இன்னும் அள்ளித் தரும் பாடலை
    எதிர்பாராமல் தந்து திக்கு முக்காடச் செய்து விடீர்கள். ('இன்ப சந்திரிகா' வைத்தான் சொல்கிறேன்).

    சில சமயம் டூ வீலரில் நெடுந்தூரப் பயணம் செய்யும் போது சில பாடல்களை நாம் நினைவுக்குக் கொண்டு வராமலேயே நம் வாய் அந்தப் பாடலை பயணம் நெடுக முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட பாடல்தான் எனக்கு

    'இன்ப லோக ஜோதி ரூபம் போல'

    எப்போதுமே என் வாயின் நுனியில் இருக்கும் பாடல். ஒருநாள் கூட இப்பாடலை நான் மறந்ததில்லை. அப்பேற்பட்ட பாடலை அளித்து கலக்கி விட்டீர்கள்.

    ஆயிரமாயிரம் நன்றிகள் இப்பாடலை நீங்கள் தந்ததற்கு.

    இன்னொரு சந்தேகம் சார். 'தூய உள்ளம்' தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது தானே! அல்லது நேரிடையாக ஒரே சமயத்தில் இரு மொழிகளிலும் தயாரானதா? ஏனென்றால் 'இன்ப லோக ஜோதி' பாடலில் வாயசைப்பு பொருந்தவில்லை.

    ('மனோகரா'வில் அழகுப் பதுமையாய் ஜொலித்த கிரிஜா இப்பாடலில் எவ்ளோ குண்டடித்து தெரிகிறார். லாங் ஷாட்களில் சந்திரகாந்தா போலவும் இருக்கிறார்)

    பின்றீங்க பாஸ் !

    எப்புடி உங்களால மட்டும் இது முடியுது ?

    முடிஞ்சா போன் பண்ணி சொல்லுங்களேன் ப்ளீஸ் !

    Rks

  8. #2127
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அதேபோல என்னை கவர்ந்த பாடல் ...ஆங்கில மற்றும் தமிழ் பாடல் கலந்த POP ரகம்.

    திரு அஜீத் மற்றும் L R ஈஸ்வரி இனைந்து பாடிய "LOVE IS FINE DARLING WHEN YOU ARE MINE ! "

    நடிகர் திலகம் அவர்களுடைய இன்னொரு திறமை இந்த பாடலில் பளிச்சிடும் ! ஆங்கில பாடலுக்கு வாயசைப்பது மட்டுமல்ல ..இந்த பாடல் இடையே வரும் " HEY FOLKS ...TIMES ARE CHANGING ....என்ற ஒரு சில வரிகள் ! அதில் கிண்டல் கலந்த வரி வரும்போது நாக்கை கடித்து , கையை அசைத்து நகைக்கும் நகைப்பு இருக்கிறதே....! இனி ஒரு கலைஞன் பிறந்து தான் வரவேண்டும் ..!

    அனைவரின் பார்வைக்கும் !


  9. #2128
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அதே போல பாட்டும் பாரதமும் திரைப்படத்தில் வரும் " my song is for you " என்ற pop ரகம் பாடல்.

    இந்த முறை SPB SOLO ...இதில் ஒரு கட்டத்தில் ஸ்ரீப்ரியா கிளப் உள்ளே வர...நடிகர் திலகம் அவரை "MIND A DANCE WITH ME BABY " என்று நடனமாட அழைக்க ...ஸ்ரீப்ரியா தயங்க...நடிகர் திலகம் உடனே "OH COME ON ...! " என்றழைக்கும் அந்த ஸ்டைல், அந்த COMMAND OVER THE LANGUAGE !!.. அழைத்து அவருக்கு சொல்லிகொடுத்தபடியே போடும் ஸ்டெப் ....!

    ஒரு தேர்ந்த POP பாடகன் எப்படி செய்வாரோ அதைப்போலவே ஒரு PERFECTION !!

    கண்டு மகிழுங்கள் ! கருத்தை பகிருங்கள் !


    Last edited by RavikiranSurya; 21st July 2014 at 09:46 PM.

  10. #2129
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ராஜேஷ் சார்,

    ஸாரி. முக்கியமான ஒன்றை மறந்து விட்டேன். சொர்க்கத்தை ஒரே பாட்டில் பேக் பண்ணி என்னை பேஜார் படுத்தி விட்டீர்கள். இன்பமான இன்பத்தை அள்ளித் தந்த பாடலை, இன்னும் அள்ளித் தரும் பாடலை
    எதிர்பாராமல் தந்து திக்கு முக்காடச் செய்து விடீர்கள். ('இன்ப சந்திரிகா' வைத்தான் சொல்கிறேன்).

    சில சமயம் டூ வீலரில் நெடுந்தூரப் பயணம் செய்யும் போது சில பாடல்களை நாம் நினைவுக்குக் கொண்டு வராமலேயே நம் வாய் அந்தப் பாடலை பயணம் நெடுக முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட பாடல்தான் எனக்கு

    'இன்ப லோக ஜோதி ரூபம் போல'

    எப்போதுமே என் வாயின் நுனியில் இருக்கும் பாடல். ஒருநாள் கூட இப்பாடலை நான் மறந்ததில்லை. அப்பேற்பட்ட பாடலை அளித்து கலக்கி விட்டீர்கள்.

    ஆயிரமாயிரம் நன்றிகள் இப்பாடலை நீங்கள் தந்ததற்கு.

    இன்னொரு சந்தேகம் சார். 'தூய உள்ளம்' தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது தானே! அல்லது நேரிடையாக ஒரே சமயத்தில் இரு மொழிகளிலும் தயாரானதா? ஏனென்றால் 'இன்ப லோக ஜோதி' பாடலில் வாயசைப்பு பொருந்தவில்லை.

    ('மனோகரா'வில் அழகுப் பதுமையாய் ஜொலித்த கிரிஜா இப்பாடலில் எவ்ளோ குண்டடித்து தெரிகிறார். லாங் ஷாட்களில் சந்திரகாந்தா போலவும் இருக்கிறார்)
    தூய உள்ளம் டப்பிங் படம் அதனால் தான் வாயசைப்பு பொருந்த வில்லை.

    இன்ப லோக ஜோதி பாடலை ரசித்ததற்கு நன்றி (உங்களைப்போலவே எனக்கும் எப்பொழுதுமே நினைவில் உள்ள பாடல் )

  11. #2130
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வருக வருக நடிகர் திலகம் புகழ் பாடும் என் உயிர் நண்பர் ரவிகிரண் சார்.

    Love is fine darling when u mine
    no sun no shine like summer rain
    with out dear life is pain
    when u mine darling always fine
    its always dream as the dream
    see the scream Oh my queen
    raa rarara rarara rarara rarara raa raa ra raraa

    சரிதானா? (ராஜேஷ் சார். ஹெல்ப் ப்ளீஸ் )

    இந்தப் பாடலின் வரிகள் உங்களுக்கும் பொருந்துமே

    'ஊருக்கு ஊர் செல்லும் உல்லாசி

    யாருக்கு நான் சொந்தம் நீ யோசி'

    இரண்டு பாடல்களும் முத்திரை பதித்தவை. உங்களின் நாக்குக் கடிப்பு வர்ணனை ஜோர். இரவு நேரத்தில் இனிமையான பாடல்களை அதுவும் நடிகர் திலகத்தின் நினைவு நாள் அன்று தந்ததற்கு நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •