-
22nd July 2014, 12:46 PM
#461

Originally Posted by
RavikiranSurya
பாப் பாடல்கள் என்றில்லை ...
சாஸ்த்ரீய சங்கீதம் கொண்ட பாடல்களுக்கும் நடிகர் திலகம் வாயசதிருக்கிறார். கவரிமான் படத்தில் நமோ ப்ரவமோ என்கின்ற திரு யேசுதாஸ் அவர்கள் குரலில் இளையராஜா இசையில் அமைந்த பாடல் ...! இதில் நடிகர் திலகம் அவர்களின் TIMING வாயசைப்பு அனைவரையும் மிகவும் அதிசயிக்கபடவைத்த ஒன்றாகும்...!
!
இந்த கவரி மான் பாடல் பற்றி திரு இளையராஜா அவர்கள் வியந்து கூறிய ஒரு பதிவு ஒன்று உண்டு . அது நினைவிற்கு வருகிறது
-
22nd July 2014 12:46 PM
# ADS
Circuit advertisement
-
22nd July 2014, 03:16 PM
#462
Senior Member
Seasoned Hubber
The Hindu - Tamil - 22-07-2014
http://tamil.thehindu.com/opinion/co...cle6236099.ece
சிவாஜி கணேசன்: கம்பீரத்தின் கடைசி அவதாரம்
21.07.2014 - சிவாஜி கணேசனின் 13-வது நினைவு நாள்
ஸ்ரீதர் இயக்கிய ‘சிவந்த மண்' திரைப்படத்தின் இந்திப் பதிப்பான ‘தர்த்தி' 1970-ல் வெளியானது. ராஜேந்திர குமார், வஹீதா ரஹ்மான் நடித்த அந்தப் படத்தில் புரட்சி வீரனாக, கவுரவ வேடத்தில் சிவாஜி தோன்றினார். இந்தப் படம்குறித்து சுவாரசியமான தகவல் ஒன்று உண்டு. படம் வெளியான அன்று பம்பாயில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாம். அதைக் குறிப்பிட்டு சிவாஜியிடம் ராஜேந்திர குமார் சொன்னாராம், “உங்கள் நடிப்பைப் பார்த்து பம்பாயே நடுங்கிவிட்டது!”
சிறிய வேடம் என்றாலும் சிவாஜியின் ‘திரை வீச்சு' (ஸ்கிரீன் பிரெசன்ஸ்) அத்தனை கம்பீரமானது. அதனால்தான், இன்றும் கம்பீரமான பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் சிவாஜியுடன் ஒப்பிடப்பட்டே மதிப்பிடப்படுகிறார்கள்.
சிவாஜியின் நடிப்பு நிச்சயம் விமர்சனத்துக்கு அப்பாற் பட்டதல்ல. மற்றவர்கள் இயல்பாக வசனம் பேசும் காட்சிகளில், அதீத உணர்வுடனும் அழுத்தமான உச்சரிப்புடனும் திரையில் தனிக் கவனம் பெறும் அவர் மீது காத்திரமான விமர்சனங்கள் பல உண்டு. அவற்றையெல்லாம் மீறி, அற்புதமான தன் நடிப்புத் திறனால், பல படங்களின் வெற்றியை உறுதி செய்தார் சிவாஜி. தன்னை விட அதிக வயதுள்ள நாயகர்கள் இளைஞர்கள் வேடத்தில் நடித்துக்கொண்டிருந்த கால கட்டத்தில், ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் 13 குழந்தைகளுக்குத் தந்தையாக நடிக்கும் துணிச்சலை வேறு எவரிடமும் எதிர்பார்க்க முடியாது. ‘திருவருட்செல்வர்' தொடங்கி எத்தனையோ வயோதிகப் பாத்திரங்களில் நடிக்கத் தயங்கியதில்லை.
வேறென்ன செய்ய முடியும்?
உண்மையில், நடுத்தர மற்றும் சற்றே வயதான வேடங் களில் நடித்தபோது சிவாஜியிடம் கம்பீரமும் மிடுக்கும் கூடியிருந்ததைப் பார்க்க முடியும். ‘தெய்வமகன்' படத்தின் புகழ்பெற்ற அந்த கோரமுக மகன் பாத்திரத்தைவிடத் தந்தை பாத்திரத்தில் வரும் சிவாஜிதான் சிறப்பாக நடித்திருப்
பார். மகனைப் புறக்கணிக்க நேர்ந்ததால் எழும் குற்றவுணர்ச்சி யும், சமூகத்தின் முன் அவனைத் தன் மகனாக அறிவிக்கத் தயங்கும் போலி கவுரமும் தன்னை அலைக்கழிப்பதை நுட்பமாக வெளிப்படுத்தியிருப்பார். ஒரு காட்சியில், கேமராவுக்கு முதுகைக் காட்டியபடி சிவாஜி விசும்பிக் கொண்டிருப்பார். அப்போது எதிரில் மேஜர் சுந்தர்ராஜன் அசைவற்று அவரையே பார்த்துக்கொண்டு நிற்பார். அதை ஒரு விமர்சனத்தில் இப்படி எழுதியிருந்தார்களாம்: ‘சிவாஜியின் முதுகுகூட நடித்துக்கொண்டிருந்தது. மேஜர் சுந்தர்ராஜன் தேமேயென்று நின்றுகொண்டிருந்தார்’ என்று. பின்னாட்களில் அதைக் குறிப்பிட்டு மேஜர் சுந்தர்ராஜன் சொன்னார், “சிவாஜி நடித்துக்கொண்டிருக்கும்போது அதைப் பார்த்துக்கொண்டு நிற்காமல் வேறென்ன செய்ய முடியும்!”
சிவாஜி வந்து நிற்கும் தோரணையைக் கண்டு, அதற்கு முன் ஆர்ப்பாட்டமாகப் பேசிக்கொண்டிருப்பவர்கள், பேச மறந்து உறைந்து நிற்கும் காட்சிகளைப் பல படங்களில் பார்க்கலாம். ‘முதல் மரியாதை' படத்தில் மரணப் படுக்கையில் படுத்திருக்கும் சிவாஜியை, சில சிறுவர்கள் வேடிக்கை பார்க்க வந்து நிற்பார்கள். அந்த நிலையிலும் தன் கோபத்தைக் காட்ட ஒரு உறுமு உறுமுவார். அடுத்த கணத்தில் சிறுவர் குழாம் சிதறி ஓடும். படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் இந்தக் காட்சியே, சிவாஜியின் கதாபாத்திரம் எத்தனை மரியாதைக்குரியது என்பதை உணர்த்திவிடும். ‘பாசமலர்’ படத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஜெமினி கணேசன் எழுப்பும் கேள்விகளைக் கேட்டுக் கொதிப்படைந்து சிவாஜி பேசும் வசனங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. “யாருடைய துணையுமின்றித் தனியாகவே நான் உழைப்பேன்” என்று கர்ஜித்துவிட்டு, முத்தாய்ப்பாக ‘‘கெட் அவுட்'' என்று மெல்லிய குரலில் சொல்ல சிவாஜியால்தான் முடியும்.
எப்போதும் மரியாதை
மிகை நடிப்பு என்று அவரை விமர்சிப்பவர்கள்கூட பின்னாட்களில் ‘முதல் மரியாதை', ‘தேவர் மகன்' ஆகிய படங்களில் அவர் ஏற்று நடித்த பாத்திரங்களை வியக்கின்றனர். குறிப்பாக, தேவர் மகன் படத்தில், முகத்தில் படர்ந்த வீர மீசையும், தோளைச் சுற்றிய சால்வையுமாக அவர் வந்து நிற்கும் கம்பீரம் அலாதியானது. சிவாஜியைப் புகைப்படம் எடுக்கும் கவுதமி, அவர் சற்று திரும்பி முறைத்ததும் தடுமாறும் காட்சியே சொல்லும் சிவாஜியின் கம்பீரத்தை.
திரைக்கு வெளியிலும் தன் கம்பீரத்தைக் கடைப்பிடித்தார் சிவாஜி. ஒருமுறை அவரது மகன் ராம்குமார் குறிப்பிட்டார்: “வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அப்பா மிக நேர்த்தியாக உடையணிந்துகொள்வார். விமான நிலையங்களில் எங்களையெல்லாம் சோதனை செய்வார்கள். அப்பா நடந்துவரும் தோரணையைப் பார்க்கும் விமான நிலையக் காவலர்கள் அவரை ஒருபோதும் சோதித்துப் பார்க்கத் துணிந்ததில்லை.” அதுதான் சிவாஜியின் ஆளுமை!
-வெ. சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
22nd July 2014, 03:47 PM
#463

Originally Posted by
kcshekar
the hindu - tamil - 22-07-2014
சிவாஜி கணேசன்: கம்பீரத்தின் கடைசி அவதாரம்
21.07.2014 - சிவாஜி கணேசனின் 13-வது நினைவு நாள்
ஒரு நல்ல பதிவு சேகர் சார்
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
உங்களுக்கு ஒரு பிரைவேட் மெசேஜ் reply செய்து இருந்தேன்
வந்ததா?
-
22nd July 2014, 04:42 PM
#464
சந்திப்பு - நான்காம் நாள் - மதுரை
நான்காம் நாளான நேற்று மீண்டும் மக்கள் ஆதரவோடு சென்ட்ரலில் மறு வெளியீடு கண்ட பழைய படங்களின் வசூலில் முன்னணி பெற்றிருக்கிறது. நான்கே நாட்களில் சுமார் ஐம்பத்தி ஆறாயிரம் ரூபாய்க்கும் அதிகமாகப் வசூலித்து நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் பவரை மீண்டும் பறை சாற்றியிருக்கிறது சந்திப்பு.
பிற ஊர் செய்திகள்
கோவையில் டிலைட் திரையரங்கில் தங்கப்பதக்கம் பெற்ற வெற்றியை தொடர்ந்து சென்ற வெள்ளிக்கிழமை முதல் புதிய பறவை திரையிடப்பட்டு பெரும் வரவேற்ப்பை பெற்றிருக்கிறது, ஞாயிறு மாலை படத்திற்கு வந்த கூட்டத்தையும் வசூலையும் பார்த்த அரங்க நிர்வாகத்தினர் அடுத்தடுத்து நடிகர் திலகத்தின் படங்களை வெளியிட முடிவு செய்திருக்கின்றனர். அதன்படி விரைவில் டிலைட் திரையரங்கில் எங்க மாமா ஹரிசந்திரா போன்ற படங்கள் திரையிடப்பட்ட உள்ளன.
நெல்லை சென்ட்ரலில் பராசக்தி ராஜா மற்றும் எங்கள் தங்க ராஜாவை தொடர்ந்து சென்ற வெள்ளி முதல் தியாகம் திரையிடப்பட்டு வெற்றி கொடி நாட்டி வருகிறது. முந்தைய படங்களைப் போலவே இதுவும் வெளியிட்டவருக்கு கணிசமான தொகையை பெற்று தரும் என நெல்லை தகவல்கள் சுட்டிக் காட்டுகின்றன.
அன்புடன்
-
22nd July 2014, 07:52 PM
#465
Junior Member
Veteran Hubber
thanks KCS sir. follow up to your post 462
http://tamil.thehindu.com/opinion/co...cle6236099.ece
the Hindu tamil / rasigargalin comments
சிவாஜி ரசிகன்
நடிப்பு என்பதே மிகைதான்..அதில் மிகை நடிப்பு என்றெல்லாம் ஒன்னும் இல்லை.சுத்தி இருக்கறவங்க (மற்ற கதாபாத்திரங்கள்) அந்த சிங்கத்துக்கு இணையா நடிக்க முடியாததுனால ,அவரோடது வேணும்னா கொஞ்சம் மிகையா தெரியலாம்..சிவாஜி,கட்டபொம்மன்,தங்க பதக்கம்,கௌரவம் அந்த கம்பீர நடை,நெருப்பு தெறிக்கும் வசனங்கள் இன்னைக்கு வரைக்கும் யாரும் அத செய்ய முடியல.இனிமே செய்வாங்கன்னும் தோணல..அதிசய நடிகன் சிம்ம குரலோன் சிவாஜி கணேசன்..
about an hour ago · (1) · (0) · reply (0)
G.Kasinathan Govindharaj
வியட்நாம் வீடு கௌரவம் போன்ற படங்களில் அவரது நடிப்பை பார்த்து மலைத்து என்னை மறந்தது போனது உண்டு
Points
250
about 3 hours ago · (0) · (0) · reply (0)
நடிகர்திலகம் சிவாஜி
சிறப்பான, நடுநிலையான கட்டுரை. மறைந்து 13 ஆண்டுகளாகிறது. 13 ஆண்டுகள் அல்ல 13 நூறாண்டுகள் ஆனாலும், சினிமா என்ற சொல் அகராதியில் இருக்கும்வரை நடிகர்திலகத்தின் புகழ் இப்புவியில் உலாவந்துகொண்டுதான் இருக்கும்.
about 3 hours ago · (2) · (0) · reply (0)
Sri G.
நடிப்பின் இலக்கணம்..பாத்திரமாகவே மாறும் இயல்பு. மிகை நடிப்பு என்று சொல்வார்கள் ஆனால் அது மிக அழுத்தம் என்று வேண்டுமானால் சொல்லலாம். நடிப்புலகின் பிதாமகன். அஸ்தமனம் இல்லா ஆதவன். சிலையாகிப்போன சிற்பி. கனவு தொழிற்சாலை இருக்கும் மட்டும் இருக்கும் கனவு. ஒளியில்லாது அவர் உதடுகளை வைத்தே உச்சரிப்பை சொல்லிவிடலாம். எத்தனையோ பேர் வந்தாலும் அத்துணை பேரும் அவர் கீழ்தான்..
Points
515
about 5 hours ago · (4) · (0) · reply (0)
Conjivaram
கலாநிகேதன் பாலு அவர்கள் எங்கள் குடும்ப நண்பர் இன்றும் அவர் சிவாஜியின் நடிப்பை பற்றியும் தொழில் பக்தியை பற்றியும் சிலாகிப்பார் .. 6 வயது முதல் சிவாஜி நாடகமன்றம் அரங்கேற்றும் நாடகங்கள் முதல் அவர் நடித்த பெரும்பான்மையான படங்கள் பார்த்து உருகி இருக்கிறேன் .. அவர் வெள்ளை உள்ளம் கொண்டவர் .. உணர்ச்சி வசப்படுபவர் .. அதுவே அவர் நடிப்பு ஒரு மடை திறந்த வெள்ளமாய் பெருக்கெடுத்து முடிசூடா மன்னனாய் வலம் வந்தார் .. இந்த உலகம் உள்ளளவும் அவர் புகழ் பேசப்படும்
Points
880
about 6 hours ago · (0) · (0) · reply (0)
Conjivaram
ஒரு முறை கோவை விமான நிலையத்தில் அவரை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது தேவர் மகன் படப்பிடிப்பில் இருந்து சென்னை திரும்பும் வழியில் .. அப்பப்பா என்ன கம்பீரம் என்ன மிடுக்கு கண்களில் மின்னும் அசாதாரமான ஒளி .. இனிஒரு சிவாஜி சார் நமக்கு கிடைக்க மாட்டார் அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தது நமது பெரும் பேறு.. பராசக்தி நடிப்பு உலகிற்கு ஒரு அரிச்சுவடி அல்லவா? கடும் உழைப்பு தொழில்மீது பக்தி நேரம் தவறாமை இவற்றுக்கு அவர் இலக்கணம் .. தமிழ் அவர் உச்சரிப்பில் பெருமை பெற்றது என்றுதான் சொல்லவேண்டும் .. யாரும் எட்டமுடியாத சிகரங்களை அவர் எட்டிவிட்டார் .. அவர் நினைவில் நம் மீதமுள்ள காலத்தை ஓட்டுவோம் .. இந்த பிரபஞ்சத்தில் பஞ்ச பூதங்கள் உள்ளளவும் அவர் புகழ் நீடித்து இருக்கும் .. 50 ஆண்டுகளுக்கு மேல் எம் மக்களை உம ஒப்பற்ற நடிப்பால் மகிழ்வித்த நடிகர் திலகமே உம்மை கரம்கூப்பி சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
Points
880
about 6 hours ago · (1) · (0) · reply (0)
முஹம்மது
சிவாஜி :திரையுலகின் சகாப்தம்.
Points
410
about 6 hours ago · (1) · (0) · reply (0)
ISO NAGARAJ
சிவாஜியின் நேரத்தை கடைபிடித்த பழக்கம் அதாவது குறித்த நேரத்தில் போவது அல்ல குறித்த நேரத்திற்கு முன்பே சென்று தயாராக இருப்பது வேலையில் காட்டிய முழுஈடுபாடு இந்த இரு பழக்கங்களை கடை பிடித்தால் இளைய சமுதாயம் உயர்வது நிச்சயம்
about 7 hours ago · (1) · (0) · reply (0)
R.M.Manoharan Manoharan
இத்தகு பெரும்புகழ் சிவாஜிக்கு சென்னையில் பீச் ரோடில் சிலைவடித்தார் கலைஞர்அவரது ஆட்சியில். உலகமே வியந்த மாபெரும் நடிகர் சிவாஜி. அவரது ஒவ்வொரு அங்கமும்அழகாக நடிக்கும்சிறப்பான நடிகர் சிவாஜி.அத்தகைய நடிகரின் சிலையை அவருடன் ஜோடியாக நடித்த அன்றைய நடிகை, இன்றைய முதல்வர் அடம் பிடித்து அகற்ற குப்பையில்வீசியது ஏனோ? ஆர் எம் மனோகரன்
Points
3115
about 7 hours ago · (2) · (1) · reply (0)
sasibalan
சிவாஜி கணேசன் அவர்கள் திரையுலக நடிப்பில் புதிய இலக்கணத்தை வகுத்தவர்.வசன உச்சரிப்பில் அவருக்கு இணையான ஒரு நடிகர் இன்றளவும் உருவாகவேயில்லை என்பதே அவருக்கு பெருமைதான்.கட்டபொம்மனாக,பாரதியாக,வ.உ.சி.யாக நடித்தார் என்பதை விட அந்த பெருமக்களை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினர் என்றே கூறலாம்.சிவாஜி தமிழனாக பிறந்தது தமிழ்மக்கள் அனைவருக்கும் பெருமையே.அவரது நினைவு நாளில் 'சிவாஜி கணேசன் கம்பீரத்தின் கடைசி அவதாரம்' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு சிறப்பித்த இந்து நாளிதழுக்கு நன்றியும் பாராட்டும் உரித்தாகுக.
Points
915
about 7 hours ago · (3) · (1) · reply (0)
sasibalan
சிவாஜி கணேசன் அவர்கள் திரையுலக நடிப்பில் புதிய இலக்கணத்தை வகுத்தவர்.வசன உச்சரிப்பில் அவருக்கு இணையான ஒரு நடிகர் இன்றளவும் உருவாகவேயில்லை என்பதே அவருக்கு பெருமைதான்.கட்டபொம்மனாக,பாரதியாக,வ.உ.சி.யாக நடித்தார் என்பதை விட அந்த பெருமக்களை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினர் என்றே கூறலாம்.சிவாஜி தமிழனாக பிறந்தது தமிழ்மக்கள் அனைவருக்கும் பெருமையே.அவரது நினைவு நாளில் 'சிவாஜி கணேசன் கம்பீரத்தின் கடைசி அவதாரம்' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு சிறப்பித்த இந்து நாளிதழுக்கு நன்றியும் பாராட்டும் உரித்தாகுக.
Points
915
about 7 hours ago · (4) · (0) · reply (0)
ISO NAGARAJ Up Voted
GUNA
சிவாஜி கணேசனைப் பற்றி நல்ல நடுநலையான விமர்சனம் கொடுத்துள்ளீர்கள்.பாராட்டுக்கள்.
Points
1310
about 9 hours ago · (1) · (0) · reply (0)
balu
we miss u lot. shivaji sir.
Points
230
about 9 hours ago · (0) · (0) · reply (0)
DEVKUMAR ARUMUGAM
சிவ பெருமானே திரு விளையாடல் - சிவாஜி கணேசனுக்கு ரசிகராயிருப்பார் என் எண்ணத்தோன்றுகிறது.
Points
185
about 9 hours ago · (7) · (0) · reply (0)
Most Commented Stories
dear RKS sir. If these fans come to our thread, ...it gets enriched.
Last edited by sivajisenthil; 22nd July 2014 at 08:06 PM.
-
22nd July 2014, 09:31 PM
#466
Junior Member
Veteran Hubber
dear RKS Sir. In Coimbatore editions of Hindu/Dinamalar etc., no ad on the memories of NT.
Last edited by sivajisenthil; 22nd July 2014 at 09:57 PM.
-
22nd July 2014, 09:51 PM
#467
Junior Member
Veteran Hubber
நடிகர் திலகத்தின் நினைவலைகள் 10 : (நினைவஞ்சலியின் நிறைவாக )
வயது முதிர்ந்தால்........வாழ்வில் பயம் ? தன்னம்பிக்கை கூடிய தைரியம்? : இமேஜ் பாராமை!
எந்தவொரு உலகக்காவியத்தை அலசினாலும் நடிகர்திலகம் அளவு வயது முதிர்ந்த பாத்திரங்களில் முத்திரை பதித்தவர் எவருமில்லை! பணிமூப்ப்டைந்த வயதில் தன்னம்பிக்கை இழந்தவராக பிரஸ்டிஜ் பத்மநாபன், நேர்மாறாக சவால்களை தவிடுபொடியாகும் மனத்தைரியம் கொண்ட எங்க ஊரு ராஜா மமதை கொண்ட பாரிஸ்டர் ரஜனிகாந்த், முதிர்வயதில் கம்பீரம் வெளிப்படுத்தும் எஸ்பி சௌத்ரி, ..........பாடல்கள் பலவிதம்! நடிகப்பேரரசரின் நடிப்புப்பாவங்களும் பலரகம்!!
வயது முதிர்ந்த பெரியவர் தன இயலாமையை ஆற்றாமையை கம்பீரமான தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் பாடல்களுக்கு முன்னோடி நடிகர்த்திலகமே அவரைத்தவிர வேறு ஒருவரை நம்மால் நினைத்துப்பார்க்க இயலாது. ஒரே exception ஜெமினியின் உனக்கென்ன குறைச்சல்!
Last edited by sivajisenthil; 23rd July 2014 at 06:57 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
22nd July 2014, 11:58 PM
#468
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
கடந்த பதிவின் இறுதி பகுதி.
இத்தகைய பின்புலத்தில்தான் பட்டிக்காடா பட்டணமா வெளியானது. தொடர்ந்து 115 காட்சிகள் அரங்கு நிறைந்து ஓடிக் கொண்டிருக்கிறது. நீண்ட பிளாஷ் பாஃக்கை முடித்து மீண்டும் 1972 ஜூன் 10-ந் தேதிக்கு வருவோம்
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
அதற்கு முதல் நாள் வெளியான நான் ஏன் பிறந்தேன் படத்திற்கு divided ரிப்போர்ட். ஆனால் நிறைய ரசிகர்களுக்கு ஏமாற்றம் என்று செய்தி வந்தது. அதற்கு ஒரு முக்கிய காரணம், படத்தின் முதல் காட்சி ஓடிக் கொண்டிருக்கும் ட்ரெயின் அதன் மேல் போடப்படும் டைட்டில்ஸ். அடுத்த காட்சி ரயிலில் இருந்து இறங்கும் எம்ஜிஆர் பாடும் நான் ஏன் பிறந்தேன் என்ற பாடல். அது முடிந்து வீட்டிற்கு வந்து வாசல் கேட் திறக்கும் எம்ஜிஆரைப் பார்த்து அப்பா என்று ஓடி வந்து நிற்கும் பையன். இது ரசிகர்களை upset செய்தது. இதற்கு முன்பும் எம்ஜிஆர் குழந்தைக்கு தந்தையாக நடித்திருக்கிறார். ஆனால் அவற்றில் (வேட்டைக்காரன், பணம் படைத்தவன், நல்ல நேரம் போன்ற சில) இடைவேளைக்கு பிறகோ அல்லது கடைசி ஒரு மணி நேரமோ என்ற வகையில்தான் இருந்ததே தவிர படம் ஆரம்பம் முதலே ஒரு பையனுக்கு தந்தையாக நடித்தது எனக்கு தெரிந்த வரை இது ஒன்றுதான். சண்டைக் காட்சிகள் எல்லாம் இருந்த போதும் படம் குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கலைப் பற்றி பேசியதால் படம் ரசிகர்களின் விருப்ப படமாக வரவில்லை. இந்த ரிப்போர்ட் முதல் நாள் மாலையே எங்களுக்கு வந்து விட்டது.
மறுநாள் ஜூன் 10 சனிக்கிழமை காலை. எனக்கு ஒரு சிறப்பு வகுப்பு இருந்தது. அதற்காக காலையில் திண்டுக்கல் ரோடு வழியாக சென்று கொண்டிருக்கும் போது (என் கஸினும் என்னுடன் வந்துக் கொண்டிருந்தான்) வழியில் வைத்து மதுரை மாநகர் எம்ஜிஆர் மற்ற பொறுப்பாளர் C.தங்கம் அவர்களை பார்த்தோம். அவர் எங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர். இவரைப் பற்றி சொல்ல வேண்டும். ஆனால் அதற்கு மீண்டும் ஒரு பிளாஷ் பாஃக் போக வேண்டும் என்பதால் அதை பின்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம். எம்ஜிஆர் ரசிகர் என்றால் சிவாஜி ரசிகர்களை எதிரிகளாகவும் ஜென்ம விரோதிகளாகவும் பார்க்க வேண்டும் என்று சொல்லி தரும் ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த நட்புணர்வுடன் பழக கூடியவர். நாங்கள் வயதில் சிறியவர்களாக இருந்த போதும் மரியாதை கொடுத்து பழகுவார்.
dig
<இன்றைய காலத்தில் எம்ஜிஆர் விசுவாசிகளுக்கு ஆளும் கட்சியில் மதிப்பில்லை, பதவியில்லை என்று நண்பர் வினோத் போன்றவர்கள் அடிக்கடி குறைப்பட்டுக் கொள்வார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்திலேயே அவருக்கு விசுவாசமாக இருந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள், sideline செய்யப்பட்டார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை. அதற்கு ஒரு உதாரணம் C.தங்கம். ஆனானப்பட்ட KAK, SDS போன்றவர்களே எம்ஜிஆரால் ஒதுக்கப்பட்டனர் எனும்போது இந்த தங்கம் எல்லாம் எம்மாத்திரம்?>
end dig
தங்கம் அவர்களிடம் படத்தைப் பற்றி விசாரித்தோம். அவர் எப்போதும் diplomatic-ஆக பதில் சொல்லுவார். நன்றாக இருக்கிறது என்றார். ரசிகர்களின் மனக்குறையைப் பற்றி கேட்டதற்கு அப்படி ஒரு கருத்து இருப்பது உண்மைதான். ஆனாலும் ஓகே என்றார். அவரிடமிருந்து விடை பெற்று நான் பயிற்சி வகுப்புக்கு போய் விட என் கசின் அவன் வேலையை பார்க்க போய் விட்டான். வகுப்பு பத்து மணிக்கு முடிந்ததும் மீண்டும் திண்டுக்கல் ரோடு வழியாக வராமல் மேல மாசி வீதி சென்று டவுன் ஹால் ரோடு உள்ளே நுழைந்து சென்ட்ரல் தியேட்டர் வாசலை அடைந்தேன். மணி 10.30யை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
அங்கே காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. சரியான கூட்டம். நான் செல்லும் போதே 45 p, 75 p, 85 p, Re 1.20 p வரை அனைத்தும் புல். வாசலுக்கு போய் சேர்ந்தவுடன் Re 1.80 p இடம் இல்லை என்ற போர்டு மாட்டப்படுகிறது. அதன் பின் ஒரு ஐந்து நிமிடந்தான். Rs 2.70 p இன்னும் எத்தனை டிக்கெட் பாக்கி இருக்கிறது என்று ரசிகர்கள் பேசிக் கொண்டிருந்தனர் வெளியே கூடி நின்ற ரசிகர்களிடமிருந்து சட்டென்று ஒரு பெருத்த ஆரவாரம் மற்றும் கைதட்டல்கள் காதை அடைக்க ஹவுஸ் புல் இடம் இல்லை என்ற போர்டு தியேட்டர் கேட்டில் மாட்டப்பட அந்த கணத்தில் அங்கே ஒரு புதிய சாதனை சரித்திரம் எழுதப்பட்டது. தொடர்ந்து 116-வது காட்சி அரங்கு நிறைந்து முந்தைய ரிகார்ட் முறியடிக்கப்பட்டது. 1000 வாலா 5000 வாலா சரங்கள் சரமாரியாக வெடித்துச் சிதற தியேட்டர் வாசலில் இருந்த விளக்கு கம்பத்தில் கட்டப்பட்டிருந்த தட்டியில் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் எத்தனை என்பதை தெரிவிக்கும் வண்ணம் ஒட்டபட்டிருந்த பேப்பர் ஷீட்டில் 116 என்ற எண்கள் பதிக்கப்பட்டன.
அன்று நடைபெற்ற அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்தது. மறு நாளும் அதற்கு அடுத்த நாளும் அரங்கு நிறைந்து தொடர் ஹவுஸ் புல் காட்சிகள் 125-ஐ கடந்தன. ஜூன் 13 செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்ற 129 காட்சிகளும் புல் ஆனது. 40-வது நாள் மாட்னி காட்சியில் தொடர் ஹவுஸ் புல் விட்டுப் போனது.
மதுரை மாநகரின் 83 வருட திரைப்பட வரலாற்றில் தான் நடித்த கருப்பு வெள்ளை படங்கள், ஒன்றல்ல இரண்டல்ல மூன்று கருப்பு வெள்ளைப் படங்கள் தொடர்ந்து 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைவது என்ற சாதனையை செய்துக் காட்டிய ஒரே நாயக நடிகன் நமது நடிகர் திலகம் மட்டுமே.
சாதனை என்றால் எந்தக் காலத்திலும் நிலைத்து நிற்பதுதான் சாதனை. மதுரை மாநகரை பொறுத்தவரை அன்றும் இன்றும் என்றும் யாராலும் முறியடிக்க முடியாத ஒரு டஜன் சாதனைகளுக்கு சொந்தக்காரர் நடிகர் திலகம். அவற்றைப் பற்றி ஏற்கனவே இந்த திரியில் பேசியிருக்கிறோம். அவற்றுள் ஒன்றுதான் இந்த கருப்பு வெள்ளைப் படங்களின் தொடர் ஹவுஸ் புல் சாதனைகள்.
பட்டிக்காடா பட்டணமா இப்படி வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருக்க அடுத்து வரப் போகும் படங்களின் ரிலீஸ் தேதி பற்றிய சர்ச்சைகளும் ஆரம்பித்தன.
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
23rd July 2014, 05:53 AM
#469
Junior Member
Newbie Hubber
முரளி,
வார்த்தைகள் போதாது.உனக்கு இன்னும் நேரம் கிடைக்க கூடாதா?
ரவி கிரண்,
அசுர உழைப்பு. நன்றிகள் பல. ராகவேந்தர் சொன்ன படி வாசுவும்,பம்மலாரும் உன் ரூபத்தில் எங்களிடம் தினமும் வருகிறார்களே?
-
23rd July 2014, 07:30 AM
#470
Junior Member
Veteran Hubber
The Hindu - Tamil - 22-07-2014
http://tamil.thehindu.com/opinion/co...cle6236099.ece
சிவாஜி கணேசன்: கம்பீரத்தின் கடைசி அவதாரம்
21.07.2014 - சிவாஜி கணேசனின் 13-வது நினைவு நாள்
Fan comments (continued)......
Share:
yathavan nambi
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும்! இந்த பாடலின் வரிகள் நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கும் பொருந்தும். என்றென்றும் செவாலியே சிவாஜியின் புகழ் ஓங்குக! ஜெய் ஹிந்த்!(சிவாஜியின் சிம்மக் குரலில் ஒங்கி ஒலிக்கட்டும்!
about 9 hours ago · (0) · (0) · reply (0)
தங்க பதக்கம் படம் வெளி வந்த பிறகே போலீஸ் காரர்களுக்கு மிடுக்கு தனம் வந்திருக்க கூடும் .அவ்வளவு நேர்த்தியாக போலீஸ் அதிகாரியின் கம்பீரம் பளிச்சிடும் . கட்டபொம்முவின் வீரம் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் வெளிவந்த பிறகே இந்த மண்ணிற்கு தெரிய வந்தது கப்பலோட்டிய தமிழன் வஉசி அவர்களின் ஒப்பற்ற தியாகம்அவரை பார்த்தறியாத நமது கண்களில் நீரை வரவழைத்தது என்றால் அது நடிகர் திலகத்தின் ஈடுபாட்டுடன் கொண்டு வந்த திரைகாவியம் ஆகும் . அவர் மிகையாக நடித்தார் என்றால் அதற்கு அவரை இயக்கிய இயக்குனர்களில் மிகையான எதிர்பார்ப்புதான் காரணமே தவிர நடிகர் திலகம் அல்ல . சராசரி குடும்பஸ்தனுக்கு நாலு பேரை அடித்து வீழ்த்தும் பராக்கிரமும் இருக்குமா ? சிவாஜி நம் குடும்பங்களில் உள்ள உறவுகளின் பிரதியாக திரையில் தோன்றியவர் அவருக்கு சண்டை காட்சிகளில் பரிமளிக்க முடியாமல் போனது ஒன்றும் குறையில்லை தேவர்மகன் படத்தில் அவருக்கும் கமலுக்கு நடிப்பில் பெரும் போட்டியே நிகழும் . இரு கதாபாத்திரங்களும் சார்ந்து நின்றதால் யார் வெற்றி பெற்றார்கள் என்று தெரியாது அந்த கம்பீரம் கவுதமியிடம் காட்டும் எள்ளல் எல்லாம் மிகையா ?எதார்த்தத்தின் உச்சம
Points
375
about 11 hours ago · (1) · (0) · reply (0)
Suresh Kumar
சிவாஜியின் நடிப்புக்கு நவராத்திரி படம் ஒன்று போதும். டாக்டர் கதா பாத்திரம். என்ன ஒரு சாந்தம் முகத்தில்... சிவாஜியின் நடிப்பு எப்பொழுது பார்த்தாலும் வியக்கவைக்கின்றன..
about 12 hours ago · (0) · (0) · reply (0)
senthilvel
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தன ரசிகர்களுக்கு விட்டுச்சென்ற சொத்து காலம் தவறாமை, தொழில் பக்தி, தமிழ் உச்சரிப்பின் சரியான விதம் ..... எல்லாவற்றையும் விட ஒப்பாரும் மிக்காருமில்லாத தன் உன்னத நடிப்பில் உருவான காலத்தையும் வென்று நின்று இன்றும் திரையரங்குகளை நோக்கி மக்களை ஈர்க்கும் மந்திரகாந்தன் !
about 12 hours ago · (0) · (0) · reply (0)
சிவாஜி ரசிகன்
நடிப்பு என்பதே மிகைதான்..அதில் மிகை நடிப்பு என்றெல்லாம் ஒன்னும் இல்லை.சுத்தி இருக்கறவங்க (மற்ற கதாபாத்திரங்கள்) அந்த சிங்கத்துக்கு இணையா நடிக்க முடியாததுனால ,அவரோடது வேணும்னா கொஞ்சம் மிகையா தெரியலாம்..சிவாஜி,கட்டபொம்மன்,தங்க பதக்கம்,கௌரவம் அந்த கம்பீர நடை,நெருப்பு தெறிக்கும் வசனங்கள் இன்னைக்கு வரைக்கும் யாரும் அத செய்ய முடியல.இனிமே செய்வாங்கன்னும் தோணல..அதிசய நடிகன் சிம்ம குரலோன் சிவாஜி கணேசன்..
about 12 hours ago · (3) · (0) · reply (0)
G.Kasinathan Govindharaj
வியட்நாம் வீடு கௌரவம் போன்ற படங்களில் அவரது நடிப்பை பார்த்து மலைத்து என்னை மறந்தது போனது உண்டு
Points
250
about 14 hours ago · (0) · (0) · reply (0)
நடிகர்திலகம் சிவாஜி
சிறப்பான, நடுநிலையான கட்டுரை. மறைந்து 13 ஆண்டுகளாகிறது. 13 ஆண்டுகள் அல்ல 13 நூறாண்டுகள் ஆனாலும், சினிமா என்ற சொல் அகராதியில் இருக்கும்வரை நடிகர்திலகத்தின் புகழ் இப்புவியில் உலாவந்துகொண்டுதான் இருக்கும்.
about 15 hours ago · (2) · (0) · reply (0)
Sri G.
நடிப்பின் இலக்கணம்..பாத்திரமாகவே மாறும் இயல்பு. மிகை நடிப்பு என்று சொல்வார்கள் ஆனால் அது மிக அழுத்தம் என்று வேண்டுமானால் சொல்லலாம். நடிப்புலகின் பிதாமகன். அஸ்தமனம் இல்லா ஆதவன். சிலையாகிப்போன சிற்பி. கனவு தொழிற்சாலை இருக்கும் மட்டும் இருக்கும் கனவு. ஒளியில்லாது அவர் உதடுகளை வைத்தே உச்சரிப்பை சொல்லிவிடலாம். எத்தனையோ பேர் வந்தாலும் அத்துணை பேரும் அவர் கீழ்தான்..
Last edited by sivajisenthil; 23rd July 2014 at 07:34 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
Bookmarks