Page 218 of 400 FirstFirst ... 118168208216217218219220228268318 ... LastLast
Results 2,171 to 2,180 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #2171
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'தேங்காய்' சீனிவாசன், சுஜாதா, அபர்ணா, ஸ்ரீகாந்த் நடித்த 'ஸ்ரீ ராம ஜெயம்' படத்தில் இருந்து ஒரு பாடல். டி.எம்.எஸ், சுசீலா டூயட். மெல்லிசை மன்னரின் இசையமைப்பில்.

    நல்ல பாடல்.

    வெள்ளி சலங்கை துள்ளிக் குலுங்க
    கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க
    சொல்லுங்கள் சுவை காவியம்
    சூட்டுங்கள் தமிழ் ஓவியம்

    வெள்ளி சலங்கை துள்ளிக் குலுங்க
    கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க
    சொல்லுங்கள் சுவை காவியம்
    சூட்டுங்கள் தமிழ் ஓவியம்

    மஞ்சள் முகத்தை நெஞ்சில் நினைத்தால்
    கொஞ்சத் துடிக்கும் எந்தன் நினைவு
    மஞ்சள் முகத்தை நெஞ்சில் நினைத்தால்
    கொஞ்சத் துடிக்கும் எந்தன் நினைவு

    இலை பூவாகி காயாகி கனியானது
    இதழ் பாலாகி தேனாகி பதமானது
    இலை பூவாகி காயாகி கனியானது
    இதழ் பாலாகி தேனாகி பதமானது

    பூச்சூடி சூடி கொடி போல ஆடி
    பொன்னாக வந்த வெண்ணிலா
    காற்றாட ஆட கண்ஜாடை பேசும்
    கண்ணான கண்ணன் திருவிழா
    கண்ணான கண்ணன் திருவிழா
    திருவிழா !

    வெள்ளி சலங்கை துள்ளிக் குலுங்க
    கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க
    சொல்லுங்கள் சுவை காவியம்
    சூட்டுங்கள் தமிழ் ஓவியம்

    கம்பன் எழுத்தில் பொங்கும் கருத்தை
    கொஞ்சம் நினைத்து என்னை அணைத்து
    கம்பன் எழுத்தில் பொங்கும் கருத்தை
    கொஞ்சம் நினைத்து என்னை அணைத்து

    இனி நாள்தோறும் விளையாட துணை வந்தது
    அதில் நானூறு விதமான கலை வந்தது
    இனி நாள்தோறும் விளையாட துணை வந்தது
    அதில் நானூறு விதமான கலை வந்தது

    நாள் பார்த்து பார்த்து நீ வந்ததென்ன
    என் ராசி நல்ல ராசிதான்
    கண்ணான ஜோடி பொன்னான வாழ்வு
    கல்யாணம் தந்த ராசிதான் கல்யாணம் தந்த ராசிதான்
    ராசிதான்!

    வெள்ளி சலங்கை துள்ளிக் குலுங்க
    கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க
    சொல்லுங்கள் சுவை காவியம்
    சூட்டுங்கள் தமிழ் ஓவியம் !

    http://www.inbaminge.com/t/s/Sri%20Rama%20Jayam/
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2172
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ஆகாயத்தில் தொட்டில் கட்டிய
    (அப)ர்ணாவின் ஸ்வரம் பாடிய வசுதேவரே

    நீவிர் வாழ்க

    இந்த ஸ்ரீராமஜெயம் படத்தில்
    ஸ்ரீகாந்த்க்கும் வடைமாலை சரோஜா னு ஒரு நடிகை அவங்களுக்கும்
    ஒரு டூயட் உண்டே சார்
    "எந்தன் கற்பனை தேரில் உள்ள கற்பனை பூவே ' சூப்பர் சாங்
    t l மகாராஜன் சசிரேகா ஜோடி குரல்
    gkrishna

  4. #2173
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வடைமாலை சரோஜா பற்றிய ஒரு சிறு குறிப்பு

    `Marupadiyum Oru Kaadhal' will have Jyotsna and Anirudh in lead roles.
    Anirudh has done half dozen films in Malayalam, while heroine Jyotsna is from London.
    Jyotsna's Tamil cinema connection dates back to films such as `Vadamaalai,'`Sri Rama Jayam' and `Bhagavathipuram Railway Gate' - her mother Saroja was the heroine of these yesteryear films. Saroja is now one of the producers of `Marupadiyum .'

    jyothsana photo

    Last edited by gkrishna; 22nd July 2014 at 12:13 PM.
    gkrishna

  5. #2174
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வடைமாலை 1982
    வாலி கதை வசனம்
    மாருதி ராவ் இயக்கம் னு நினைவு
    ஸ்ரீகாந்த் ஹீரோ
    ஜெயமாருதி production
    அண்ணா மெல்லிசை மன்னர் இசை
    எல்லாம் ஒரே மாருதி மயம்



    http://www.inbaminge.com/t/v/Vadai%20Malai/
    Last edited by gkrishna; 22nd July 2014 at 12:07 PM.
    gkrishna

  6. #2175
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கோ..கோ..கோரஸ் பாட்டுக்கள் கிண்டல் கலந்தவை -கொஞ்சம் யோசித்ததில்...

    குருவிகளா குருவிகளா காலேஜ் குருவிகளா..

    அப்றம்..

    கல்லூரி ராணிகாள் உல்லாசத் தேனிகாள்..(பாக்ய லஷ்மி)
    பறக்குது பறக்குது பின்னாலே
    பச்சைப் புடவை தன்னாலே
    இழுக்குது எங்களை ஓரத்திலே
    ஏறி வரட்டுமா ஓடத்திலே ( காதலெனும் ஆற்றினிலே - கைராசி)

    மீட்மி டுநைட் இன் தெ மூன்லைட் (வி.வீ)

    என்ன வேணும் நில்லு பாமா ( கு.தெ)

    ஒன் ஹாட் சம்மரு மார்னிங்க்
    எ கேர்ள் வெண்டு வாக்கிங்க்..(இன்னா படம்)

    காளையிருக்கு செவலையிருக்கு
    கன்னுக்குடடி எங்கய்யா
    அந்தக் கன்னுக்குட்டிய விட்டுப் பாரு
    கட்டி ப்பிடிப்பேன் நானய்யா (பழனி)

    பைத்தியமே கொஞ்சம் நில்லு
    வைத்தியரிடம் போய்ச் சொல்லு (வ வ)

    ம்ம் இவை எல்லாம் பிடித்தவை தான் என்றாலும்..கபக்கென்று கலர் கலர் உடைகளில்
    தபக் தபக் எனக் குதித்து நடனமிடும் மாதுவும் பாட்டும்.. என்னவாக்கும் அது..

    தாளம் தீம்த தீம்த நேரம் தீம்த தீம்
    ராகம் தாளம் மோகனம்... (ப்கலில் ஒரு இரவு.. )

  7. #2176
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    ஒளிமயமான எதிர்காலம் 1977
    சித்ரமஹால் கிருஷ்ணமுர்த்தி இயக்கம்
    விஜயபாஸ்கர் இசை
    விஜயகுமார் ஸ்ரீப்ரிய நடித்து வெளிவந்த கருப்பு வெள்ளை

    படம் பெரிசா எதுவும் கிடையாது.ஆனால் விஜயகுமார் இடுப்பில் துண்டு கட்டி கொண்டு உட்கார்ந்து இருப்பதும் ஸ்ரீப்ரிய அவருக்கு முதுகு தேய்த்து விடுவது போல் ஒரு போஸ்டர் நல்ல நினைவு -குலவிளக்கு-

    ஆனால் விஜயபாஸ்கர் இசையில் பாடல்கள் மிகவும் அருமை

    1.பாலா வாணி குரல்களில் ஒரு சூப்பர் மெலடி சார்

    'மாமதுரை நாட்டினில் வைகை கரை காற்றினில்
    காதல் பட்டொன்று கேட்டேன்
    கண்கள் கூடுவதை பார்த்தேன் , ஆஹ்
    கண்கள் கூடுவதை பார்த்தேன்

    வாணி:தோற்றம் -பொன்னூஞ்சலாட்டம்
    தோகை கொண்டாடும் தோட்டம்
    ஆடை - மேல் நாட்டு ஜாடை
    ஆசை -தீராத போதை
    பாலா : மாந்தளிர் மஞ்சள் பல்லாக்கு
    மயங்கிது நெஞ்சில் என்னோடு
    மை விழி தான் சொல்லும் தூது - ஆஹ் ஆஹ்
    மை விழி தான் சொல்லும் தூது

    (இந்த 'மைவிழி' தான் பாலா வாயில் என்னமா கரையுது)

    பாலா : கோவில் சிற்ப்பங்கள் எல்லாம்
    நேரில் நின்றாட கண்டேன்
    ஆடும் பண்பாடு கண்டேன்
    நானும் பண் பாடுகின்றேன்

    (இந்த 'பண்' ல ஒரு அழுத்தம் )

    வாணி : பொன்னியின் வெள்ளம் கண்டாயோ
    பூவையின் உள்ளம் கண்டாயோ
    யாருக்கு யார் சொல்ல வேண்டும்
    யாருக்கு யார் சொல்ல வேண்டும்

    (இதில் வாணி வேண்டும் என்ற வார்த்தையை இரண்டாவது தடைவை
    சொல்லும்போது ஒரு 'ஹும்' என்ற அனாயாச உச்சரிப்பு)


    பாலா : ஏதோ நான் சொல்ல வந்தேன்
    எண்ணம் முள்ளாக நின்றேன்
    வாணி : நானும் ஓடோடி வந்தேன்
    நாணம் தள்ளாட நின்றேன்
    பாலா : அச்சத்தில் வார்த்தை வராது
    வாணி : ஆயினும் ஆசை விடாது
    இருவரும் இணைந்து : நாம் இனி நமக்காக வாழ்வோம்
    வாணி : நாம் இனி நமக்காக வாழ்வோம்

    பாலா வாணி இருவரும் இளமையின் உற்சாகத்தை கொண்டு தரும் இனிய பாடல் .அதிலும் இரண்டாவது சரணம் கர்நாடக இசை போன்று புல்லாங்குழல் மிருதங்கம் ஜால்ரை கலந்து பரத நாட்டிய effect கொடுக்கும்

    2.வாணியின் சோலோ பாடல்

    குடும்பத்தின் தலைவி குலவிளக்கு
    கொண்டவன் மனதில் சரவிளக்கு
    ஒளிமயமானது இல்லறமே

    காலையில் எழுந்ததும் மஞ்சளில் குளித்து
    கணவனின் நலன்களை பணிவுடன் முடித்து
    நல்ல பெண்மணியாக
    குடும்பம் நடத்திட வேண்டும்
    உயர்ந்த பண்புகளை என்றும் மதித்து வரும் சிறந்த பெண்களிடம் தெய்வம் வாழாதோ

    குழந்தைகள் பெறுவதும் மாண்புடன் வளர்ப்பதும்
    கோதையின் குலத்துக்கு கடவுளின் பரிசு
    தாய்மை கருணையின் வடிவம்
    உலகம் முழுவதும் வணங்கும்
    கள்ளங்கபடமின்றி பிள்ளை செல்வங்களை கொஞ்சி வளர்த்துவிடு , தெய்வம் பாராட்டும் !

    3.வைஷ்ணவோ ஜனதோ -காந்தி பெருமான் முழு பாடல்
    விஜய பாஸ்கர் அடக்கி வாசித்து பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம்
    கொடுத்து

    http://www.inbaminge.com/t/o/Oli%20M...%20Ethirkalam/
    Last edited by gkrishna; 22nd July 2014 at 03:28 PM.
    gkrishna

  8. #2177
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //ஒரு போஸ்டர் நல்ல நினைவு -குலவிளக்கு-// ம்ம்

    வைஷ்ணவ ஜனதோ மட்டும் கேட்டதாக நினைவு..மற்ற பாடல்கள் கேட்ட்தில்லை..எங்கே இருந்து பிடிக்கிறீர்கள் க்ருஷ்ணா ஜி..

  9. #2178
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சின்ன வயசில் மணல் வீடு கட்டாத சிறுவர்கள் உண்டா என்ன.. இந்தக் காலச் சிறுவர்களுக்கு வேண்டுமானால் தெரியாதிருக்கலாம்..அப்போ..அந்தக் காலத்தில்.. ம்ம் அந்த வெள்ளை மனச் சூழ் நிலையில் விளையாடிய விளையாட்டுக்கள்..ம்ம் எண்ண எண்ண இனிக்கத் தான் செய்யும்..அதுவே வளர்ந்த பின் காதலாய் மாறினால்..ம்ம் அழகாய்த் தானிருக்கும்..

    அதே போல இந்தப் பாடலும்..சோதனைக்கென்றுஎன்னிடம் சோகப் பாடல் தான் இருக்கின்றது..

    படம்..வாழ்க்கை வாழ்வதற்கே
    பிபிஎஸ் பிஎஸ்..

    ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...
    தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்...


    வெய்யிலிலே குளிர்ந்திருக்கும் வேணியிலே கொதியிருக்கும்...
    கையகலம் கதவிருக்கும் காற்றுவர வழியிருக்கும்...

    வழி மேலே விழியிருக்கும் வந்தவர்க்கெல்லாம் இடமிருக்கும்...
    ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...
    தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்...
    மணிக் கதவை திறந்து வைப்போம் மாமனுக்கு விருந்து வைப்போம்...
    அணி மணியாய் எடுத்து வைப்போம் கை நிறையா தேன் கொடுப்போம்...
    நிலவு வரும் நேரத்திலே நிம்மதியாக தூங்க வைப்போம்...

    ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...
    தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்...
    பத்து விரல் மோதிரமாம் பவள மணி மாலைகளாம்...
    முத்து வடம் பூச்சரம்மாம் மூக்குத்தியாம் தோடுகளாம்...

    அத்தை அவள் சீதனமாம் அத்தனையும் வீடு வரும்...
    கல்யாணம் ஊர்வலமாம் கச்சேரி விருந்துகளாம்...

    மாப்பிள்ளையின் அம்மாவும் மனம் குளிர வருவாராம்..
    அம்மாவின் கால்களிலே அன்புடனே வணங்கிடுவோம்...

    ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி...
    தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்...

    படத்தைப் பற்றி எனக்குத் தெரியாதே..

  10. #2179
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    //ஒரு போஸ்டர் நல்ல நினைவு -குலவிளக்கு-// ம்ம்

    வைஷ்ணவ ஜனதோ மட்டும் கேட்டதாக நினைவு..மற்ற பாடல்கள் கேட்ட்தில்லை..
    சின்ன கண்ணன் சார்

    இந்த 'மாமதுரை நாட்டினில்' பாடல் சிலோன் ரேடியோ ஹிட் சார்
    இதற்கு ஒளி வடிவம் கிடைக்கவில்லை .

    இந்த பாட்டு எனக்கு கொஞ்சம் பிடித்த பாடல்களில் ஒன்று
    காரணம்
    பாலா வாணி combination .
    romance கொஞ்சம் ஜாஸ்தி
    இதே மாதிரி இன்னும் ஒன்னு 'அன்பு மேகமே '
    பொதுவாகவே விஜய பாஸ்கர் இசை பார்த்தீர்கள் என்றால் இடை இசை (interlude ) நன்றாக இருக்கும். இதில் western ஆரம்பித்து பரத நாடிய classical கொண்டு சென்று இருப்பார் .
    இரண்டாவது வாணியின் ஒரு வித சோகம் கலந்த இளமை குரல்
    பிறகு 80க்கு முந்திய ஸ்ரீப்ரிய கொஞ்சம் வெகுளி கலந்த ரோஷகாரி அலமேலு
    gkrishna

  11. #2180
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    21-10-1968

    CHENNAI - THEATRES- AND MOVIES

    JUST RECOLLECT OLDEN DAYS.


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •