-
23rd July 2014, 02:16 PM
#11
Senior Member
Senior Hubber
அன்பான அண்ணன்..அழ்கான அண்ணி.. அந்த யுவதிக்கு வாழ்க்கை நன்றாகத் தான் இருந்தது..பட் வாழ்க்கை நன்றாக ஓடிக் கொண்டிருந்தால் யாருக்குப் பிடிக்குமோ என்னவோ விதிக்குப் பிடிக்காது..
விதியின் காதில் யாரோ ஒரு மிகச் சிறந்த ஜோக்கைச் சொல்லிவிட்டார்களோ என்னவோ..ஹஹ்ஹா எனச் சிரிக்க..அன்பான அண்ணன் ஒரு விபத்தில் மரணிக்க..அண்ணியின் விதவைக்கோலம் அந்த யுவதியின் மனதை ஏதோ ஏதோ செய்து மனதைப் பிசைய..காலத்தின் சூழ் நிலையில் அவளுக்கும் மணமாக..மணவாழ்க்கையோ அவளுக்கு ருசிக்கவில்லை..பாவம் அவளை மணந்தவன்.. அவனது சாதாரண முழியே பேந்தப் பேந்த விழிப்பது போலிருக்கும்..இப்போது இந்த அழகியின் மனதில் என்ன நினைவுகளோ..என க் குழம்பித் தவிக்கிறான்..
இந்தச் சூழலில் அந்தப் பெண்ணும் பாடுகிறாள்.. ஒரு பாட்டு.. அவனது சந்தேகத்தைக் கிளறிவிடுவது போல இருக்கிறது..அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான் போல எனச் சந்தேகத்தைத் தூண்டுகிறது அதன் வரிகள்
கட்டக் கடைசியில் அண்ணிக்கு இன்னொரு கல்யாணம் செய்வித்து..பின் கணவனிடம் கூறுகிறாள்..அவள் பாடிய பாட்டு அவள் அண்ணனைப் பற்றி என்று..பின் என்ன சுபம் தான்..
*
இதுவரை நீங்கள் கேட்டது தெய்வத்தின் தெய்வம் படத்தின் சுருங்கிய கதைச்சுருக்க்க்கம்..விஜயகுமாரி, எஸ்.எஸ்.ஆர் மட்டும் நினைவில்..அல்பாயுசு அண்ணனோ..அல்லது படத்தின் ஆரம்பத்தில் கண்ணன் மன நிலையைத் தங்கமே தங்கம் (அழகான பாடல்) பாடும் அண்ணியோ நினைவில் இல்லை..
அண்ணன் தங்கைப் பாடல் என வந்ததால் இந்தப் பாட்டு நினைவுக்கு வந்தது..இதோ அந்தப் பாட்டு..
*
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன்
நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை உன்னைக்
கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை பெண்ணுறங்கவில்லை
உன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்தது
உன் மார்பில் சாய்வதற்கே உடல் வளர்ந்தது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது - இந்தக்
காவல் தாண்டி ஆவல் உன்னைத் தேடி ஓடுது தேடி ஓடுது
பொன் விலங்கை வேண்டுமென்றே பூட்டிக் கொண்டேனே - உன்னைப்
புரிந்த போது சிறையில் வந்து மாட்டிக் கொண்டேனே
இன்று நாளை என்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே - நான்
என்றும் உந்தன் எல்லையிலே வந்திடுவேனே வந்திடுவேனே
*
காதல் பாட்டு போலத் தான் தெரியும் பாடுகையில்..because of
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது - இந்தக்
காவல் தாண்டி ஆவல் உன்னைத் தேடி ஓடுது தேடி ஓடுது - இந்த வரிகள்..
ம்ம் என்னவோ படத்தில் அண்ணனை நினைத்துத் தான் பாடினேன் என்று விஜயகுமாரி சொல்வதாக நினைவு..
நல்ல பாட்டு தான் இல்லை?
-
23rd July 2014 02:16 PM
# ADS
Circuit advertisement
Bookmarks