Page 225 of 400 FirstFirst ... 125175215223224225226227235275325 ... LastLast
Results 2,241 to 2,250 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #2241
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    CK சார்,

    இதுவரை நீங்கள் கேட்டது தெய்வத்தின் தெய்வம் படத்தின் சுருங்கிய கதைச்சுருக்க்க்கம்..விஜயகுமாரி, எஸ்.எஸ்.ஆர் மட்டும் நினைவில்..அல்பாயுசு அண்ணனோ..அல்லது படத்தின் ஆரம்பத்தில் கண்ணன் மன நிலையைத் தங்கமே தங்கம் (அழகான பாடல்) பாடும் அண்ணியோ நினைவில் இல்லை..
    சி.கா
    இதில் அண்ணி கீதாஞ்சலி அண்ணன் முஸ்தபா இல்லையென்றால் இன்னொருவர்.

    நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை ... என்ன அருமையான பாடல் ....

    இந்த படத்தில் அதிகம் கேட்டிராத ஒரு அற்புத பாடல் உண்டு
    இசையரசியில் குரலில்

    வாழ்கையை துவங்கும் முன்னே வாழ்வு முடிந்துவிடும் கீதாஞ்சலிக்கு ,

    பாட்டு பாட வாயெடுத்தேன் ஏலேலோ அது பாதியிலே நின்னுபோச்சே ஏலேலோ.... இசையரசி என்னமாய் பாடுகிறார்.
    கீதாஞ்சலிக்கு தமிழில் முதல் படம் .. அவரும் நிறைவாக நடித்திருக்கிறார்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #2242
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராஜேஷ் சார்,

    பொதுவாகவே நகைச்சுவைப் பாடலகள் என்றால் பார்க்கும் போது எனக்கு அவ்வளவாக சிரிப்பு வராது. நகைச்சுவை நடிகர்களின் கொனஷ்டை கூத்துக்கள், கிச்சு கிச்சுக்கள், தாவுவது, குதிப்பது, விழுவது என்று ஆக்ஷனில் செய்யும் காமெடி எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. சிரிப்பே வராது. நகைச்சுவை நையாண்டி வசனங்களில் கொஞ்சம் பிரியம் அதிகம்.

    எத்தனையோ நகைச்சுவைப் பாடல்கள். நாகேஷ், சந்திரபாபு, கருணாநிதி, மனோரமா, முத்துலஷ்மி நடித்தவை என்று. ஓஹோ காமெடி மூவீஸ் என்று புகழடைந்த தேன் கிண்ணம், தேன் மழை, நினைவில் நின்றவள் என்று பல படங்களில் நகைச்சுவை பாடல்கள் வந்தாலும் ரசிப்பேனே ஒழிய வாய்விட்டு சிரித்ததில்லை.

    நேற்று மதியப் பணி முடித்து விட்டு இரவு வீட்டிற்கு வந்ததும் நீங்கள் பதித்திருந்த

    'பழக்கமில்லாத கழுதைகிட்ட கொஞ்சம் பார்த்து கறக்கனும் பால'

    'ஆரவல்லி' படப் பாடலைப் பார்த்தேன். நான் டிவியில் சில சமயங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் அவ்வளவு டீப்பாக பார்த்ததில்லை.

    'சரி ராஜேஷ் தினம் அருமையான பாடல்களைத் தருவாரே! என்ன இன்றைக்கு இந்தப் பாடலைப் போய்த் தந்திருக்கிறாரே' என்று ஒரு கணம் நினைத்தேன்.

    சரியென்று காபி சாப்பிட்டுக் கொண்டே பாடலைப் பார்க்க ஆரம்பித்தேன்.

    சார்! ஏற்கனவே பார்த்திருந்தாலும் நிஜமாகவே சொல்கிறேன் இந்தப் பாடல் என் வயிற்றைப் பதம் பார்த்து விட்டது சார். குடித்த காபியெல்லாம் புரையேறி வெளியே வந்து விட்டது. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது சார்.

    என்ன ஒரு காமெடி! ஆனந்தன், பக்கிரிசாமி, சட்டாம்பிள்ளை, சிவசூரியன், கே.கே.சௌந்தர் என்று!

    பக்கிரிசாமியிடமெல்லாம் அசாத்திய திறமைகள். உள்ளுக்குள் உதைபடுவோம் என்ற உதறலோடு அக்கம் பக்கம் பார்த்து பார்த்து பாடுவார். ஆனால் இவரெல்லாம் ஏன் ஜொலிக்காமல் போனார்? நடிகர் திலகம் இவருக்கு நிறைய சான்ஸ் கொடுப்பார்.

    ஆரவல்லி ஆட்சியின் ஆண்களின் மீதான பெண்களின் அடக்குமுறையை எவ்வளவு கேலியாக ஜாடை, மாடை இரட்டை அர்த்த வரிகளில் இப்பாடல் சித்தரிக்கிறது! கழுதையை திட்டுவது போல பெண் வீரிகளை (!) இடித்துரைக்கும் பாடல் படு ஜாலியாக.

    அதுவும் நடித்த நடிகர்கள், எவரும் பிரமாதமான கொடி நாட்டிய நடிகர்கள் எல்லாம் இல்லை. சாதாரண நகைச்சுவை நடிகர்கள்தாம். ஆனால் முக பாவனைகள் அனைவரிடத்திலும் 'பட்பட்' சட்சட்டென்று மாறி மாறி விழுந்து நகைச்சுவைக் கொப்பளிக்கிறது. அங்கும் இங்கும் வலதும் இடதுமாகப் பார்த்து பயந்தபடியே கழுதையை விமர்சிப்பது போல 'ஆரவல்லி' அரக்கிகளை விமர்சிக்கும் புத்திசாலித்தனமான நிஜ நகைச்சுவை கேலிப்பாட்டு

    கண்களில் தண்ணீரே வந்து விட்டது சார்.

    'பாக்க இந்தக் கழுத பகட்டா தெரியுது பாலு மட்டும் இருக்காது'

    என்று கழுதையிடம் பால் கறக்கும் போது கிராஸ் செய்யும் பெண்ணை நைசாக நக்கலடிக்கும் ஆனந்தன், பக்கிரிசாமி.

    பக்கிரிசாமி பால் கறக்கும் போது ஒரு பெரிய குண்டம்மா சாட்டையால் அவரை அடிக்க

    'ஏழெட்டு குட்டிகள போட்ட பிறகும் ஒரு எல்லையில நிக்காது இந்தக் கழுத'

    இன்னா ஒரு நக்கல் நையாண்டி!அந்த குண்டம்மா ஏழெட்டுக் குழந்தைகள் பெற்றது போல இருப்பதை கழுதையை சொல்வது போல பக்கிரி கேலியாக கலாய்க்கும் போது என்னால் சிரிப்பை அடக்க முடியலை ராஜேஷ் சார்.

    அப்புறம் அந்தப் பெண்மணி போனதுக்கப்புறம்

    'இது எந்தப் பக்கம் இருந்தோ வந்த கழுத'

    என்று போடும் போடை என்ன சொல்லி சிரிப்பது?

    அதுவும் பாடிய பாடகர்கள் வேறு தனியாகக் கொடி நாட்டுகிறார்கள்.

    பிறகுதான் புரிந்தது ராஜேஷ் ஏன் இந்தப் பாடலைப் போட்டிருக்கிறார் என்று.

    ரசித்து ரசித்து சிரித்து சிரித்து அனுபவித்தேன் சார்.

    உங்களுக்கும், உங்கள் ரசனைக்கும் மிக்க நன்றி ராஜேஷ் சார்.

    இது போல உங்களிடம் தினம் தினம் எதிர்பார்க்கிறேன்.

    என்னையே சிரிக்க வைத்து விட்டீ(டா) ர்களே!
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #2243
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    தெய்வத்தின் தெய்வம் என்றவுடன் “ நம்ம வீட்டு தெய்வமும்” நினைவுக்கு வ ந்தது.

    கிருஷ்ணா சார் .. நம்ம விஜி நடித்த இந்த அற்புத நடனம் உங்களுக்காக (இசையரசியின் குரலில் குன்னக்குடியின் இசையில்)

  5. #2244
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ராஜேஷ் சார்,

    பொதுவாகவே நகைச்சுவைப் பாடலகள் என்றால் பார்க்கும் போது எனக்கு அவ்வளவாக சிரிப்பு வராது. நகைச்சுவை நடிகர்களின் கொனஷ்டை கூத்துக்கள், கிச்சு கிச்சுக்கள், தாவுவது, குதிப்பது, விழுவது என்று ஆக்ஷனில் செய்யும் காமெடி எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. சிரிப்பே வராது. நகைச்சுவை நையாண்டி வசனங்களில் கொஞ்சம் பிரியம் அதிகம்.

    எத்தனையோ நகைச்சுவைப் பாடல்கள். நாகேஷ், சந்திரபாபு, கருணாநிதி, மனோரமா, முத்துலஷ்மி நடித்தவை என்று. ஓஹோ காமெடி மூவீஸ் என்று புகழடைந்த தேன் கிண்ணம், தேன் மழை, நினைவில் நின்றவள் என்று பல படங்களில் நகைச்சுவை பாடல்கள் வந்தாலும் ரசிப்பேனே ஒழிய வாய்விட்டு சிரித்ததில்லை.

    நேற்று மதியப் பணி முடித்து விட்டு இரவு வீட்டிற்கு வந்ததும் நீங்கள் பதித்திருந்த

    'பழக்கமில்லாத கழுதைகிட்ட கொஞ்சம் பார்த்து கறக்கனும் பால'

    'ஆரவல்லி' படப் பாடலைப் பார்த்தேன். நான் டிவியில் சில சமயங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் அவ்வளவு டீப்பாக பார்த்ததில்லை.

    'சரி ராஜேஷ் தினம் அருமையான பாடல்களைத் தருவாரே! என்ன இன்றைக்கு இந்தப் பாடலைப் போய்த் தந்திருக்கிறாரே' என்று ஒரு கணம் நினைத்தேன்.

    சரியென்று காபி சாப்பிட்டுக் கொண்டே பாடலைப் பார்க்க ஆரம்பித்தேன்.

    சார்! ஏற்கனவே பார்த்திருந்தாலும் நிஜமாகவே சொல்கிறேன் இந்தப் பாடல் என் வயிற்றைப் பதம் பார்த்து விட்டது சார். குடித்த காபியெல்லாம் புரையேறி வெளியே வந்து விட்டது. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது சார்.

    என்ன ஒரு காமெடி! ஆனந்தன், பக்கிரிசாமி, சட்டாம்பிள்ளை, சிவசூரியன், கே.கே.சௌந்தர் என்று!

    பக்கிரிசாமியிடமெல்லாம் அசாத்திய திறமைகள். உள்ளுக்குள் உதைபடுவோம் என்ற உதறலோடு அக்கம் பக்கம் பார்த்து பார்த்து பாடுவார். ஆனால் இவரெல்லாம் ஏன் ஜொலிக்காமல் போனார்? நடிகர் திலகம் இவருக்கு நிறைய சான்ஸ் கொடுப்பார்.

    ஆரவல்லி ஆட்சியின் ஆண்களின் மீதான பெண்களின் அடக்குமுறையை எவ்வளவு கேலியாக ஜாடை, மாடை இரட்டை அர்த்த வரிகளில் இப்பாடல் சித்தரிக்கிறது! கழுதையை திட்டுவது போல பெண் வீரிகளை (!) இடித்துரைக்கும் பாடல் படு ஜாலியாக.

    அதுவும் நடித்த நடிகர்கள், எவரும் பிரமாதமான கொடி நாட்டிய நடிகர்கள் எல்லாம் இல்லை. சாதாரண நகைச்சுவை நடிகர்கள்தாம். ஆனால் முக பாவனைகள் அனைவரிடத்திலும் 'பட்பட்' சட்சட்டென்று மாறி மாறி விழுந்து நகைச்சுவைக் கொப்பளிக்கிறது. அங்கும் இங்கும் வலதும் இடதுமாகப் பார்த்து பயந்தபடியே கழுதையை விமர்சிப்பது போல 'ஆரவல்லி' அரக்கிகளை விமர்சிக்கும் புத்திசாலித்தனமான நிஜ நகைச்சுவை கேலிப்பாட்டு

    கண்களில் தண்ணீரே வந்து விட்டது சார்.

    'பாக்க இந்தக் கழுத பகட்டா தெரியுது பாலு மட்டும் இருக்காது'

    என்று கழுதையிடம் பால் கறக்கும் போது கிராஸ் செய்யும் பெண்ணை நைசாக நக்கலடிக்கும் ஆனந்தன், பக்கிரிசாமி.

    பக்கிரிசாமி பால் கறக்கும் போது ஒரு பெரிய குண்டம்மா சாட்டையால் அவரை அடிக்க

    'ஏழெட்டு குட்டிகள போட்ட பிறகும் ஒரு எல்லையில நிக்காது இந்தக் கழுத'

    இன்னா ஒரு நக்கல் நையாண்டி!அந்த குண்டம்மா ஏழெட்டுக் குழந்தைகள் பெற்றது போல இருப்பதை கழுதையை சொல்வது போல பக்கிரி கேலியாக கலாய்க்கும் போது என்னால் சிரிப்பை அடக்க முடியலை ராஜேஷ் சார்.

    அப்புறம் அந்தப் பெண்மணி போனதுக்கப்புறம்

    'இது எந்தப் பக்கம் இருந்தோ வந்த கழுத'

    என்று போடும் போடை என்ன சொல்லி சிரிப்பது?

    அதுவும் பாடிய பாடகர்கள் வேறு தனியாகக் கொடி நாட்டுகிறார்கள்.

    பிறகுதான் புரிந்தது ராஜேஷ் ஏன் இந்தப் பாடலைப் போட்டிருக்கிறார் என்று.

    ரசித்து ரசித்து சிரித்து சிரித்து அனுபவித்தேன் சார்.

    உங்களுக்கும், உங்கள் ரசனைக்கும் மிக்க நன்றி ராஜேஷ் சார்.

    இது போல உங்களிடம் தினம் தினம் எதிர்பார்க்கிறேன்.

    என்னையே சிரிக்க வைத்து விட்டீ(டா) ர்களே!
    வாசு சார், பாராட்டுக்கு நன்றி. ஆம் நக்கல் நையாண்டி என தூள் கிளப்பும் பாடல் இது.
    ஜி.ராமனாதன் என்ற மாமேதை கர்னாடக பாணியில் மட்டுமே இசையமைப்பார் என்பதை உடைத்தெரிந்த பாடல்
    நகைச்சுவை பாடல்களில் கருத்துக்களும் இருக்கும் என்றும் அதே சமயம் அழகாக நகைச்சுவை செய்யமுடியும் என்றும் நிரூபித்த பாடல்
    “பல்லு போகுதோ “ என்று சொல்லும் போதே சிரிப்பு வந்துவிடும்... அங்கே அல்லி தர்பார் செய்யும் பெண்களையும் ஊடே ஊடே நக்கல் செய்யும் விதம் .. அபாரம்.. பாடலை கேட்டு நீங்களும் சிரித்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி .... ஏதோ என்னால் உங்களை சிரிக்க வைக்க ஒரு பாடல் போட முடிந்ததே

  6. #2245
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராஜேஷ் சார்,

    இதே ந.வீ.தெய்வத்தில் 'கண்ணியப் பாடகி' சுசீலாம்மா பாடும் 'ஆசை மனதில் கோட்டை கட்டி' ரொம்ப பிடித்த பாடல் சார். அருமையாய் அமைதியாய் போகும்.

    'நான் வாழ வேண்டும் என்று நாளெல்லாம் தவமிருந்தாள்
    தான் இருக்கும் இடத்தினிலே நான் இருக்க நினைத்து விட்டாள்'

    என்று சகோதரியை (ஜெயபாரதி?) மனதில் வைத்து புன்னகை அரசி பாடியதாய் நினைவு. சரிதானா ராஜேஷ் சார்?

    Last edited by vasudevan31355; 23rd July 2014 at 08:52 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #2246
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post

    கிருஷ்ணா சார் .. நம்ம விஜி நடித்த
    ராஜேஷ் சார்,

    நீங்களுமா?
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #2247
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    /பாட்டு பாட வாயெடுத்தேன் ஏலேலோ அது பாதியிலே நின்னுபோச்சே ஏலேலோ/

    one of the best.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #2248
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கீதாஞ்சலி போன்ற மறக்கப்பட்ட நடிகைகளை மீஎண்டும் நினைவுக்குக் கொண்டு வருவது நமது திரி எனும் போது பெருமை.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #2249
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    எனக்கென்னமோ ந.வீ தெய்வம் நாலே சூரிய சந்திர ஜோதியும் நான்..பாட்டு தான் நினைவு;... விஜயலட்சுமி உனக்கும் எனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ.. வாவ் நல்ல பாட்டு..ஆசைமனதில் கோட்டைகட்டியும் நல்ல பாட்டு நன்றி ராஜேஷ், வாசு சார்..

    ராஜ் ராஜ் சார்..மாமன் மச்சான்..அதுக்கு ஒரு மூட் வரவேணும்..) எனக்கு எல்லா இழையிலும் என்னைப் பொறுத்துக்கொள்ளும் நண்பர்கள் இருப்பது நான் செய்த புண்ணியம்

    மதுண்ணா.. அத்தான்ல இவ்ளோ மிஸ்பண்ணிட்டேனா.. ஊருக்குப் போய் வந்துட்டு கொஞ்சம் சோகமா இருக்கலாம்னு பார்த்தா இங்க இன்று முதல் பத்து நாள் ஈத் ஹாலிடேஸ்..

    ராஜேஷ்..கீதாஞ்ச்சலி..கொஞ்சம் வித்யாச அழகு.. இன்னும் டீடெய்ல் வேணுமே.. எப்படி மறந்தேன்..

  11. #2250
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராஜேஷ் சார்

    நேற்று சிரிக்க வைத்துவிட்டு இன்று இசையரசியின் குரலால் அழச் செய்து விட்டீர்களே! balance?
    .
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •