-
25th July 2014, 10:32 AM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
joe
"“கள்ளர்”என்ற மலைவர்க்க சமுதாயத்தில் பிறந்த சிவாஜிகணேசனை அந்தக் கால சினிமாத் துறையிலிருந்த பிராமண மேதாவித்துவம் கணக்கில்லாமல் துன்பப்படுத்தியிருக்கிறது. இருந்தாலும் பராசக்தியின் வெற்றி அவரைத் திரைப்பட உலகத்தில் பிரதிஷ்டை செய்தது."
நடிகர்திலகம் அவர்கள் தன சுயசரிதையிலும் சரி, வேறு எந்த இடத்திலும் சரி ( நடிக்க வந்தபோதும், நாடகத்தில் இருந்தபோதும்) தான் பிராமண மேதாவித்துவத்தால் பாதிக்கப்பட்டதாகச் சொல்லியதேயில்லை. இன்னும் சொல்லப்போனால், நடிகர்திலகத்தை மிகவும் நேசித்தவர்கள் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அவருக்கும் தெரியும். அவரும் அதனைக் குறிப்பிட்டிருக்கிறார். நடிகர்திலகம் விஷயத்தில், எழுதுபவர்கள், அது ஆரூர் தாசாக இருந்தாலும் சரி, மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடாக இருந்தாலும், தங்களுடைய மனதில் உள்ள எண்ணங்களை, கற்பனைகளை, வக்கிர உணர்வுகளை, நடிகர்திலகத்தின் வாழ்க்கையோடு இணைத்து எழுதுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள்.
Last edited by KCSHEKAR; 25th July 2014 at 11:15 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
25th July 2014 10:32 AM
# ADS
Circuit advertisement
Bookmarks