-
25th July 2014, 10:45 AM
#2381
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
25th July 2014 10:45 AM
# ADS
Circuit advertisement
-
25th July 2014, 10:47 AM
#2382
Senior Member
Diamond Hubber

Originally Posted by
esvee
வாசு சார்
1984ல் ரேகா நடித்த படம் ''உத்சவ் ''. மிகவும் பிரபலமான படம் .
ரேகாவின் எழிலான தோற்றம் - நகை அலங்காரம் கண்ணுக்கு விருந்து ,
வினோத் சார்
'உத்சவ்' போல்டர் அப்படியே இருக்கிறது
-
25th July 2014, 10:52 AM
#2383

Originally Posted by
rajeshkrv
அய்யோ அதை ஏன் கேட்கிறீர்கள் ... இப்பொழுது பல புதிய பாடகர்களை வைத்து பல பாடல்களை கொலை செய்வதையே தொழிலாக கொண்டுள்ளனர்
என்ன செய்வது. நான் அதையெல்லாம் கேட்பதே இல்லை .. பழையதிலேயே இன்பம் கொள்வதோடு சரி..
ராஜேஷ் வாசு அவர்களே
நினைத்தாலே இனிக்கும் ''எங்கேயும் எபோதும் ' பாடலை ரீமிக்ஸ் செய்யும் போது பாடகர் பாலாவின் அங்கலாயிப்பு நினைவிற்கு வருகிறது
அந்த பாடலின் இடையே திரு யோகி என்பவர் என்ன பாடுகிறார் என்பதே புரியாது . இதை பாடகர் பாலா கூட விரும்பவில்லை. இருந்தாலும் காலத்தின் கட்டாயம் என்று பேசாமல் இருந்து விட்டார் என்று ஒரு பேட்டி படித்த நினைவு
-
25th July 2014, 10:55 AM
#2384
Senior Member
Diamond Hubber
இன்று 'கலைநிலவு' ரவிச்சந்திரன் அவர்களின் நினைவு தினம்.
பெரியவர், சிறியவர், ஆண்கள், பெண்கள் என்றில்லாமல் அனைவரையும் கவர்ந்த அந்தக் கால ரஜினி.
வண்ணத்திலேயே குழைந்த வடிவழகன்
இளைஞர்களை இன்றுவரை ஈர்ப்பவன்
வெள்ளி முளைக்கும் போதே வெள்ளி விழாக்கள் தந்தவன்
விஸ்வநாதனிடம் வேலை கேட்டு போராடி 'இதயக் கமல'ங்களில் அமர்ந்த 'வாலிப விருந்த'ன்.
ரவி என்ற இரண்டெழுத்து அழகு என்ற 'மூன்றெழுத்'தானது
'சாட்டை கையில் கொண்டு' 'நான் போட்டால் தெரியும் போடு' என்று டிஷ்யூம்களை தங்கத் தமிழால் தந்த 'நாலும் தெரிந்தவன்'.
'மீண்டும் வாழ்வேன்' என்று 'சபதமி'ட்டவன் மீண்டு வராமல் மாண்டு போன நினைவு நாள் இன்று.
அதனால் என்ன?
அன்று உன்னைப் பார்த்த 'அதே கண்களா'ல் என்றும் உன் அழகைப் பருகுவோம்.
இன்று நமது திரியில் இதுவரை இணையத்தில் வெளிவராத ரவிச்சந்திரனின் அழகிய புகைப்படம்
'பேசும் படம்' இதழிலிருந்து.
நீங்கள் அதிகம் கேள்விப் பட்டிராத, வெளிவராத 'மெட்ராஸ் மைனர்' திரைப்படத்திலிருந்து.
Last edited by vasudevan31355; 25th July 2014 at 11:04 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
25th July 2014, 11:03 AM
#2385
1980 கால கட்டத்தில் ரவி அனுராதா நாகேஷ் நடித்து ஷீலா தயாரிப்பில் 'காதலிக்க 90 நாள் ' வெளி வந்ததா வாசு அவர்களே
-
25th July 2014, 11:14 AM
#2386
Senior Member
Diamond Hubber
காலையில் 'நீலகிரி எக்ஸ்பிரெஸ்' விட்ட கிருஷ்ணா சார். பதிவும் அதே வேகம். சுகம். 'வாலிபத்து'க்கு நான் அடிமை
ஐ மீன் வாலிபம் ஒரு வெள்ளித்தட்டு பாட்டிற்கு. படம் அறுவைதான்.
-
25th July 2014, 11:45 AM
#2387

Originally Posted by
vasudevan31355
காலையில் 'நீலகிரி எக்ஸ்பிரெஸ்' விட்ட கிருஷ்ணா சார். பதிவும் அதே வேகம். சுகம். 'வாலிபத்து'க்கு நான் அடிமை

ஐ மீன் வாலிபம் ஒரு வெள்ளித்தட்டு பாட்டிற்கு. படம் அறுவைதான்.
ஒன்னு கவனிச்சு பாருங்க
நேற்று முன் தினம் ஹோட்டல் சொர்க்கம் ஜெய் விஜயலலிதா
நேற்று நீலகிரி எக்ஸ்பிரஸ் ஜெய் விஜயலலிதா
அந்த கண் என்ன பாடு படுத்துது சார் (விஜயலலிதா வின் கண் )
ஊமை விழிகள் படத்தில் இன்றைய நினைவு நட்சத்திர நாயகன்
ரவி சொல்வாரே "கண்கள் கண்கள் ஒ ஆஷா' பின்னாடியே பொந்தெலி சங்கீதா ரெட் கலர் னு நினைவு ஸ்விம்மிங் சூட் ஓடி வருகை
ஊமை விழிகள் படத்தில் ரவி மீள் வருகை வில்லனாக னு நினைவு
செம்பட்டை விக் தாடி கையில் ஸ்டிக் குதிரை வண்டி ஏறும் போது த்ரில்
வில்லன் பாடி language மிக அருமை
-
25th July 2014, 11:57 AM
#2388
இன்று ravichandran நினைவு நாள் .அவர் பற்றிய ஒரு சிறு Ī



ரவிச்சந்திரன் அற்புதமான ஒரு திரைப்படக் கலைஞன்
ரவிச்சந்திரன் திருச்சியில் பிறந்த ஒரு தமிழர்; ஆனால் அவரது இளமைக் காலம் மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூரில்தான் கழிந்தது. அவர் 1951ஆம் ஆண்டு தனது சகோதரியின் திருமணத்திற்காக இந்தியா திரும்பினார். அதன்பின் திருச்சியில் பட்டப்படிப்பை செயின்ட் ஜோசப் கல்லூரியில் மேற்கொண்டார்.
1963ல் பிரபல இயக்குநர் ஸ்ரீதரைப் பார்த்தபொழுது அவரது வாழ்க்கையில் மாபெரும் திருப்பம் ஏற்பட்டது. 1964ல் தமிழில் மிகச்சிறந்த படங்களில் ஒன்றான காதலிக்க நேரமில்லை வெளிவந்தபொழுது, அதன் நேர்த்தியான கதை அமைப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் மற்றும் நடிகர்கள் நாகேஷ், பாலையா போன்றோரின் நகைச்சுவை, புதிய பொலிவுடன், துடுக்கான இளைஞனாக கதாநாயகனாக அறிமுகமாகிய ரவிச்சந்திரனை மிகவும் எதிர்பார்ப்புடன் மக்கள் கவனிக்கத் தொடங்கினர்.
தமிழ் திரைப்பட வரலாற்றில் தியாகராஜ பாகவதரா, பி.யூ. சின்னப்பாவா? எம்.ஜி. ராமச்சந்திரனா அல்லது சிவாஜி கணேசனா என்ற ரசிகர்களின் போட்டியின் தொடர்ச்சியாக ரவிச்சந்திரனா, ஜெய்சங்கரா என்ற போட்டியும் விவாதமும் ஆரோக்கியமான வளர்ச்சியாக அமைந்தது.
ரவிச்சந்திரன் தனது ஆளுமையால் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து விட்டார். அதுமட்டுமல்லாமல் திரைப்படங்களின் பல நுணுக்கங்களையும், பெற்றிருந்தார். நடிப்புடன் நில்லாது தயாரிப்பு, இயக்கம், கதை, திரைக்கதை, பாடல்கள், படத்தொகுப்பு என பல்துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகிறார். பல குணசித்திர வேடங்களிலும் நடித்தவர் நடிகர் ரவிச்சந்திரன்.
ஒருகாலகட்டத்தில் தமிழ்ப்பட வளர்ச்சியில், திரைப்படக் கல்லூரி மாணவர்கள் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினர். அந்த வகையில் திரைப்படக் கல்லூரியில் பயின்ற அரவிந்தராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஊமை விழிகள் படம் இளந்தலைமுறையை ஒரு உசுப்பு உசுப்பியது. அதில் வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றி தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் உள்ளத்தில் மாறாத இடத்தை பிடித்தவர் நடிகர் ரவிச்சந்திரன்.
பிரபல மலையாள நடிகை ஷீலாவைத் திருமணம் செய்த இவர், பின்னர் அவரை விட்டு பிரிந்து, மீண்டும் முதல் மனைவியிடம் தஞ்சம் அடைந்தார்
அண்மையில் இவரது மகனான அம்சவிர்தனை வைத்து மந்திரன் என்னும் திரைப்படத்தை இயக்கினார்.
நடிகர் ரஜினிகாந் நடித்த அருணாச்சலம், கமல்ஹாசனின் பம்மல் கே சம்பந்தம் ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றிய இவர் அண்மையில் வெளிவந்த ஆடு புலி திரைப்படத்திலும் குறிப்பிடத்தக்க வேடத்தில் நடித்திருக்கிறார்.
தமிழ்த் திரைப்படத்தில் ஸ்டைல் நடிப்பை புகுத்திய பெருமைக்கு சொந்தக்காரராக இவர் விளங்குகிறார்.
(நன்றி - ஆம்பல)
அக்கறை பச்சை திரைபடத்தில் பாலா ஈஸ்வரி குரல்களில்
மெல்லிசை மன்னர் இசை
'ஊர்கோலம் போகின்ற கிளி கூட்டங்கள் எல்லாம் ஊரார்க்கு சொல்லுங்கள் இன்று ரவி யின் நினைவு நாள் என்று "
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
25th July 2014, 12:28 PM
#2389
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்,
ரவியின் மிரட்டும் தோற்றம் 'ஊமை விழிகளி'ல் இருந்து
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
25th July 2014, 01:15 PM
#2390
Senior Member
Diamond Hubber
இன்றைய ஸ்பெஷல் (38)

ரவிச்சந்திரன் நினைவு தினத்தையொட்டி
ரவிச்சந்திரனின் அட்டகாசமான துள்ளல் பாடல். 'குமரிப் பெண்' திரைப்படத்திலிருந்து.
'தங்கச்சுரங்கம்' தந்த அதே 'ஈ.வி.ஆர்.பிக்சர்ஸ்' தயாரித்தது. ராமண்ணா இயக்கம். ஜெயலலிதா, நாகேஷ், மனோகர், மேஜர் என்று வழக்கம் போல நட்சத்திரப் பட்டாளம்.
பொதுவாக ஹீரோ வில்லனிடம் பாடிக் கேட்டிருப்போம். இந்தப் பாடல் கொஞ்சம் வித்தியாசமான கற்பனை கலந்தது.
ஹீரோ ரவியை அந்த வீட்டில் நுழைய விடாமல் கூர்க்கா தடுக்க, ரவி செம கலாட்டா செய்து அந்த கூர்க்காவிடம் பாடுவார். அதனால் பாடலின் தொடக்கமே இந்தியில் 'ஜாவ்ரே ஜா' என்று. ஜம்மென்று.
கூர்க்காவின் வேலையை ஆரம்ப வரிகளில் கிண்டல் செய்து இந்தப் பாட்டு இருக்கும்.
'நீ இந்த வீட்டின் கேட்டுக்கு ராஜாவாக இருக்கலாம்... ஆனால் நான் இந்த வீட்டுக்கே ராஜா' என்ற பொருள்படப் பாடுவார் ரவி.
கூர்க்கா காவலாளியிடம் செம கலாய்ப்பு.
'டெய்லி ராத்திரியில் காவல் காக்காம தூங்கு திருட்டுப் பசங்க திருடிக்கிட்டுப் போறதுகூட தெரியாம.... அப்புறம் எவன் அகப்படுகிறானோ அவனைப் பிடிச்சி திருடன்னு சொல்லு...இதில ஆர்ப்பாட்டம் வேறயா?' என்ற அர்த்தத்தில் கூர்க்காவிடம் பாடுவது வித்தியாசம்தானே!
அப்புறம் வீட்டுக்குள் சி.கே.சரஸ்வதி, 'என்னத்தே' கன்னையா போன்றோரிடம் படுசுறுசுறுப்பாக ஆட்டமும், பாட்டுமாய் இளங்கன்று போல் துள்ளுமிடங்களில் ரவி அமர்க்களப்படுத்துகிறார். இளமை பொங்கி வழிகிறது. மனிதர் அங்கே ஓடி இங்கே ஓடி, இப்படித் தாவி அப்படித் தாவி ஒரு இடத்தில் நிற்காமல் படுசுட்டித்தனம்.
மென்மையான பாடல்களுக்கு சொந்தக்காரரான பி.பி.ஸ்ரீனிவாஸ் இப்பாடலில் முழுதும் வித்தியாசம் காட்டி இருப்பார். இசை மெல்லிசை மன்னர். பாடல்கள் கவிஞர் கண்ணதாசன். ('நாலு காலுக்கொரு வால் சொந்தமோ' எழுத இவரை விட்டால் வேறு யார்)

'வருஷத்தைப் பாரு' (ராட்சஸி ஒரு முறை... பாடகர் திலகம் மறுமுறை)
'நடந்தது என்னவென்று நீயே சொல்லு' (ரவி, ஜெயா சைக்கிள் குதூகலம்)
'யாரோ ஆடத் தெரிந்தவர் யாரோ'...(எல்.ஆர்.ஈஸ்வரியின் மாஸ்டர் பீஸ்).
'தேனிருக்கும் மலரினிலே நீ இருக்க சம்மதமா' (ஜெயலலிதா கஜல்)
என்று சூப்பர் பாடல்கள்.

சரி! இன்றைய ஸ்பெஷலுக்கு வந்து விடுவோம்.
ஜாவ்ரே ஜா...இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜாஅந்த வீட்டுக்கு நான் ராஜா
ஜாவ்ரே ஜா...இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா...அந்த வீட்டுக்கு நான் ராஜா
தினம் தினம் இரவினில் தூங்கி விட்டு
திருடரைத் திருடிக் கொண்டோட விட்டு
தினம் தினம் இரவினில் தூங்கி விட்டு
திருடரைத் திருடிக் கொண்டோட விட்டு
அகப்பட்ட மனுஷனைப் பிடிக்கிற வேலை
ஆர்ப்பாட்டம் என்ன ராஜா
ஜாவ்ரே ஜா...இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா...அந்த வீட்டுக்கு நான் ராஜா
ஹாஹஹஹா ஓஹோஹோஹோ லாலாலல
பம்பம்பம்பம்...
காக்கைக்கும் குருவிக்கும் கடல் சொந்தமோ
கழுதைக்கு சுமக்கிற பொதி சொந்தமோ
காக்கைக்கும் குருவிக்கும் கடல் சொந்தமோ
கழுதைக்கு சுமக்கிற பொதி சொந்தமோ
நாட்டுக்கு ஆயிரம் மொழி சொந்தமோ
நாலு காலுக்கொரு வால் சொந்தமோ
ஜாவ்ரே ஜா...இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா...அந்த வீட்டுக்கு நான் ராஜா
வருகிற உறவுக்கு மனை சொந்தமோ
மயக்கிற முகத்துக்கு எழில் சொந்தமோ
ஹாஹஹஹா ஹாஹஹா
வருகிற உறவுக்கு மனை சொந்தமோ
மயக்கிற முகத்துக்கு எழில் சொந்தமோ
குவிக்கிற பணத்துக்கு எடம் சொந்தமோ
கூடும் கூட்டத்துக்கு மடம் சொந்தமோ
ஜாவ்ரே ஜா...இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா...அந்த வீட்டுக்கு நான் ராஜா
தினம் தினம் இரவினில் தூங்கி விட்டு
திருடரைத் திருடிக் கொண்டோட விட்டு
தினம் தினம் இரவினில் தூங்கி விட்டு
திருடரைத் திருடிக் கொண்டோட விட்டு
அகப்பட்ட மனுஷனைப் பிடிக்கிற வேலை
ஆர்ப்பாட்டம் என்ன ராஜா
ஜாவ்ரே ஜா...இந்த கேட்டுக்கு நீ ராஜா
ஜாவ்ரே ஜா...அந்த வீட்டுக்கு நான் ராஜா
Last edited by vasudevan31355; 25th July 2014 at 01:17 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks