-
25th July 2014, 04:09 PM
#2391
Senior Member
Veteran Hubber
டியர் வாசு,
கலைநிலா, ஆணழகன் ரவிச்சந்திரனின் நினைவு நாளையொட்டி தங்கள் பதிவுகள் அருமை, எனினும் அனுபவிக்க முடியாத சோகம் தலைநீட்டுகிறது. அவர் நடித்த படங்களின் பெயர்களை வைத்தே நினைவஞ்சலி செலுத்தியிருப்பது சிறப்பாக அமைந்துள்ளது.
'இன்றைய ஸ்பெஷல்' பகுதியில் நீங்கள் வழங்கியுள்ள குமரிப்பெண் படத்தின் 'ஜாவ்ரே ஜாவ்' பாடல் நன்றாக இருந்தபோதிலும் அதைக் கேட்கும்போதெல்லாம் 'இது டி.எம்.எஸ்.பாடியிருக்க வேண்டிய பாடல்' என்ற எண்ணம் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும். அதற்குக்காரணம் டீசிங் பாடல்களுக்கு ஏற்றவர் பாடகர் திலகம்தான். மேலும், பேசும்போது ஆண்மை நிறைந்த குரலில் பேசும் ரவிக்கு மென்மையான பி.பி.எஸ். குரல் ஸூட் ஆகவில்லைஎன்பது உண்மையே. மென்குரலுடைய ஜெமினி, முத்துராமன், ராஜன் ஆகியோருக்கு ஒக்கே.
ரவியின் மற்ற டீஸிங் (கலாய்ப்பு) பாடல்களைப்பாருங்கள்.
'ராஜா கண்ணு போகாதடி நீ போனா நெஞ்சுக்கு ஆகாதடி'
'இரவில் வந்த குருவிகளா அடி குட்டிகளா'
'ஆடு பார்க்கலாம் ஆடு'
'பொம்பளை ஒருத்தி இருந்தாளாம்'
இதே படத்தில் வந்த 'வருஷத்தைப்பாரு 66'
'ஜாவ்ரே ஜாவ்' பாடலில் குரல் வித்தியாசம் காட்டினாலும், அதைத்தாண்டி கண்ணதாசனின் வரிகளும், ரவியின் உற்சாக நடிப்பும் அதை ஈடு செய்யும்.
பாடலைப்பற்றிய நல்ல ஆய்வு..., பாராட்டுக்கள்.
-
25th July 2014 04:09 PM
# ADS
Circuit advertisement
-
25th July 2014, 04:17 PM
#2392
Senior Member
Veteran Hubber
டியர் ராஜேஷ்,
ஒவ்வொரு தமிழ்ப்படத்தையும் பற்றி அலசும்போதும், அது மற்ற மொழிகளில் எந்த வடிவில், யார் யார் நடிப்பில், என்ன பெயரில் மறு அவதாரம் எடுத்துள்ளது என்ற தங்கள் ஆய்வு சூப்பர். இதன்மூலம் மற்ற மொழிப்படங்களின் பாடல்களின் வடிவத்தையும் பார்க்க முடிகிறது.
இதன்மூலம் நமது திரி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் ஹிந்திப்பாடல்களையும் ஆய்வு செய்வதாக அமைந்துள்ளது.
பாராட்டுக்கள்...
-
25th July 2014, 04:41 PM
#2393
Senior Member
Veteran Hubber
டியர் கிருஷ்ணா,
நீலகிரி எக்ஸ்பிரஸ் பட மற்றும் பாடல்கள் ஆய்வு நன்றாக உள்ளது. ஜெய்சங்கரின் அப்போதைய சீரியஸ் படங்களுக்கு நடுவே இதுபோன்ற கிச்சுகிச்சு மூட்டும் படங்களிலும் நடித்து வந்தார். இதுபோன்ற இன்னொரு படம் 'புத்திசாலிகள்'.
'நான் கலைஞன் அல்ல உன்னை சிலையாக்க' பாடலில் ஞானஒளி விஜயநிர்மலாவின் நடன அசைவுகள் கொஞ்சம் அமெச்சூர்த்தனமாக இருந்தாலும் ரசிக்க முடிந்தது. (என்ன செய்வது, ஒருவரைப் பிடித்துவிட்டால் அவரது அசட்டுத்தனம் கூட அழகாக் தோன்றுகிறது).
சேனல்களின் தயவால் இப்பாடல்கள் தற்போது நம்வீட்டு வரவேற்பறைக்கு வருகின்றன. எவ்வளவு காலம் இருட்டில் கிடந்துள்ளன...
-
25th July 2014, 04:43 PM
#2394
L.R.ESWARI - maalaimalar write up

கூட்டத்தோடு கூட்டமாக 'கோரஸ்' பாடத்தொடங்கிய எல்.ஆர்.ஈஸ்வரி வெகு விரைவிலேயே சிறந்த பின்னணி பாடகியாக உயர்ந்தார்.
எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் ஒருவித வசிய சக்தி இருக்கும், பாடும் முறையில் 'கிக்' இருக்கும். எனவே, லட்சக்கணக்கான ரசிகர்களை அவர் பெற்றார்.
'இது எனக்கு இறைவன் கொடுத்த வரம்' என்று கூறிய ஈஸ்வரி, தொடர்ந்து சொன்னார்:
'ஏழ்மையில் பிறந்த நான், இந்த அளவு உயர்ந்திருக்கிறேன் என்றால், அதற்காக நான் பட்ட கஷ்டங்கள் ஏராளம். எனக்குப் பெற்றோர்கள் வைத்த பெயர் டி.எல்.ராஜேஸ்வரி. பரமக்குடிதான் எங்களுடைய பூர்வீகம். ஆனால், நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை புதுப்பேட்டைதான்.
எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில்தான் நான் பிறந்தேன். எனது தந்தை பெயர் அந்தோணி தேவராஜ். தாயார் ரெஜினா மேரி நிர்மலா. எனக்கு அமல்ராஜ் என்ற தம்பியும், எல்.ஆர்.அஞ்சலி என்ற தங்கையும் உண்டு.
எனது தந்தை இளம் வயதிலேயே (36 வயது) இறந்து விட்டார். அப்போது எனக்கு வயது 6. வறுமையின் பிடியில் சிக்கி தவித்த எங்களது குடும்பத்தை எனது தாயார் சினிமாவில் கோரஸ் பாடி, அதில் கிடைத்த மிக சொற்ப வருமானத்தைக் கொண்டு காப்பாற்றி வந்தார்.
எப்படியோ கஷ்டப்பட்டு என் தாயார் என்னைப் பள்ளி இறுதி வகுப்பு வரை படிக்க வைத்தார். அதற்கு மேல் கல்லூரிக்கு என்னை அனுப்பி படிக்க வைக்க முடியாத சூழ்நிலை எனது தாயாருக்கு. ஆகவே, எனது தாயாருக்கு உதவி செய்ய நான் உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டேன்.
அப்போது எனக்கு வயது 16. என் தாயார் சினிமாவில் கோரஸ் பாடச் செல்லும்போது, அவருடன் செல்வேன். அவர்கள் பாடுவதை கேட்டு அதே மாதிரி நானும் பாடுவேன்.
ஒரு நாள் ஏ.பி.நாகராஜன் தயாரித்த 'வடிவுக்கு வளைகாப்பு' என்ற படத்திற்கு கோரஸ் பாட எனது தாயார் சென்றபோது, நானும் அவருடன் சென்றேன். பாடலின் இடையே 'ஹம்மிங்' கொடுக்க வேண்டிய பெண் அன்று வராததால், தற்செயலாக நான் அந்தப் பாட்டுக்கு 'ஹம்மிங்' கொடுத்தேன். இதுதான் நான் முதன் முதலில் சினிமாவிற்கு கொடுத்த குரல்.
இதைக்கேட்ட அங்கிருந்த ஏ.பி.நாகராஜனும், இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனும் 'உனக்கு நல்ல குரல் வளம் இருக்கிறது. நீ எதிர்காலத்தில் பெரிய பாடகியாக வருவாய், பார்!' என்று மிகவும் பாராட்டினார்கள்.
இதைக்கேட்டவுடன் அந்த நிமிடமே எங்களது குடும்ப கஷ்டமெல்லாம் பறந்து விட்டதுபோல் உணர்ந்தேன். இது எனக்கு வாழ்க்கையில் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.
'வடிவுக்கு வளைகாப்பு' படத்தை அடுத்து ஏ.பி.நாகராஜனும், வி.கே.ராமசாமியும் சேர்ந்து 'லட்சுமி பிக்சர்ஸ்' என்ற படக்கம்பெனியைத் தொடங்கி, 'நல்ல இடத்து சம்பந்தம்' என்ற படத்தைத் தயாரித்தனர். அதில் கே.வி.மகாதேவன் இசை அமைப்பில் எனக்கு பாட வாய்ப்பு கிடைத்தது.
'புதுப்பெண்ணே புதுப்பெண்ணே நிமிர்ந்து பாரு; உன் பிறந்த இடத்தை மறந்து விடாதே நினைத்துப்பாரு.'
'பொண்ணு மாப்பிள்ளை ஒன்னா போகுது ஜிகு ஜிகு வண்டியிலே.'
'இவரேதான் அவரு அவரேதான் இவரு'
'துக்கத்திலும் சிரிக்கணும்; துணிவுடனே இருக்கணும்' என்ற 4 பாடல்கள் பாடும வாய்ப்பை எனக்கு ஏ.பி.நாகராஜன் வழங்கினார்.
எனது பெயர் டி.எல்.ராஜேஸ்வரி என்று இருந்ததை சுருக்கமாக 'எல்.ஆர்.ஈஸ்வரி' என்று மாற்றி வைத்தவரும் ஏ.பி.நாகராஜன்தான்.
அப்போதெல்லாம் ஒரு பாடல் பாடினால் 100 ரூபாய் சம்பளம் கிடைக்கும். அக்காலத்தில் அது பெரிய தொகை. வறுமையில் வாடிக்கொண்டிருந்த என் குடும்பத்தை, வசதியாக வாழ வைக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது' என்றார் எல்.ஆர்.ஈஸ்வரி.
-
25th July 2014, 04:48 PM
#2395

Originally Posted by
mr_karthik
டியர் கிருஷ்ணா,
நீலகிரி எக்ஸ்பிரஸ் பட மற்றும் பாடல்கள் ஆய்வு நன்றாக உள்ளது. ஜெய்சங்கரின் அப்போதைய சீரியஸ் படங்களுக்கு நடுவே இதுபோன்ற கிச்சுகிச்சு மூட்டும் படங்களிலும் நடித்து வந்தார். இதுபோன்ற இன்னொரு படம் 'புத்திசாலிகள்'.
'நான் கலைஞன் அல்ல உன்னை சிலையாக்க' பாடலில் ஞானஒளி விஜயநிர்மலாவின் நடன அசைவுகள் கொஞ்சம் அமெச்சூர்த்தனமாக இருந்தாலும் ரசிக்க முடிந்தது. (என்ன செய்வது, ஒருவரைப் பிடித்துவிட்டால் அவரது அசட்டுத்தனம் கூட அழகாக் தோன்றுகிறது).
சேனல்களின் தயவால் இப்பாடல்கள் தற்போது நம்வீட்டு வரவேற்பறைக்கு வருகின்றன. எவ்வளவு காலம் இருட்டில் கிடந்துள்ளன...
நன்றி கார்த்திக்
ஆனால் சில சமயங்களில் திருப்பி திருப்பி ஒளிபரப்பிய திரைப்படங்களையே ஒளிபரப்புகிறார்கள்
-
25th July 2014, 06:19 PM
#2396
Senior Member
Diamond Hubber
'டெல்லி மாப்பிள்ளை' என்று ஒரு படம். ரவி ஹீரோ. ராஜஸ்ரீ ஹீரோயின்.
இந்தப் படத்தில் பட்டான் என்ற ஈட்டிக்காரன் வேடத்தில் ரவிச்சந்திரன் அவர்கள் சௌந்தரராஜன் குரலில் சக்கை போடு போடும் பாடல் மிக வித்தியாசமான ஒன்று. 'சர்தானா' என்று பாடகர் திலகம் பாடுவது பலே பலே.
ஹரே நம்மிள்கி சொல்றத நிம்பிள்கி கேட்டுக்கோ
தம்பிடிக்கு தம்பிடி வட்டியும் போட்டுக்கோ
சரிதானா அது இல்லாம ஈட்டிக்காரன் தருவானா
யஹூம்..யஹூம்
ஹரே சைத்தான் கி பச்சா... கியாரே
பாடகர் திலகமும், ரவியும் செம கலக்கு.
அதிகம் வெளியே தெரியாத ஒரு பாடல்.
இந்தப் பாடலை யூ டியூப் தளத்தில் அப்லோட்செய்த புண்ணியவானுக்கு ஒரு வேண்டுகோள். பாடல் காட்சி முழவதையும் எழுத்தாலேயே மறைத்து விட்டால் எப்படி அந்தப் பாடலைப் பார்ப்பது?
டி.எம்.எஸ்.மேலே உங்களுக்கு உள்ள பக்தி புரிகிறது. அதற்காக இப்படியா? இதற்கு நீங்க பாடலைப் போடாமலேயே இருக்கலாம்.
Last edited by vasudevan31355; 25th July 2014 at 06:38 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
25th July 2014, 06:42 PM
#2397
Senior Member
Diamond Hubber
ராட்சஸியின் முதல் பிரவேசம்.
இவரேதான் அவரு
அவரேதான் இவரு
'நல்ல இடத்து சம்பந்தம்' படத்தில். மாமா இசையமைப்பில்.
முதல் பாட்டிலேயே அந்த ராட்சஸத்தனம் தெரிகிறது.
-
25th July 2014, 06:51 PM
#2398
Senior Member
Diamond Hubber

Originally Posted by
vasudevan31355
'டெல்லி மாப்பிள்ளை' என்று ஒரு படம். ரவி ஹீரோ. ராஜஸ்ரீ ஹீரோயின்.
இந்தப் பாடலை யூ டியூப் தளத்தில் அப்லோட்செய்த புண்ணியவானுக்கு ஒரு வேண்டுகோள். பாடல் காட்சி முழவதையும் எழுத்தாலேயே மறைத்து விட்டால் எப்படி அந்தப் பாடலைப் பார்ப்பது?
டி.எம்.எஸ்.மேலே உங்களுக்கு உள்ள பக்தி புரிகிறது. அதற்காக இப்படியா? இதற்கு நீங்க பாடலைப் போடாமலேயே இருக்கலாம்.
வாசு ஜி... இதோ அதே பாட்டு எழுத்துக்கள் மறைக்காமல்...
-
25th July 2014, 07:47 PM
#2399
Senior Member
Diamond Hubber
மிக்க நன்றி மது சார். அப்பாடி! இப்போதாவது நிம்மதியாகப் பார்க்கலாம்
-
25th July 2014, 08:35 PM
#2400
Junior Member
Seasoned Hubber
Mr Neyveli Vasudevan Sir,
Your presence is required urgently in Our Acting
God Thread. Pls do come and start your posting.
It is not only my humble request but also most of
our hubbers.
Regards
Bookmarks