-
25th July 2014, 06:06 PM
#511
Senior Member
Devoted Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 5 Likes
-
25th July 2014 06:06 PM
# ADS
Circuit advertisement
-
25th July 2014, 06:07 PM
#512
Senior Member
Devoted Hubber
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
25th July 2014, 06:07 PM
#513
Senior Member
Devoted Hubber
Better avoid caste issues here.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
25th July 2014, 07:27 PM
#514
அன்பு நண்பர்களே
என்னை விட வயதில்,அனுபவத்தில் பெரியவர்களும் சரி
அல்லது வயதில் சிறியவர்களும் அனுபவத்தில் பெரியவர்களும் சரி
அல்லது வயதில் பெரியவர்கள் அனுபவத்தில் சிறியவர்களும் சரி
அல்லது வயதில் அனுபவத்தில் சிறியவர்களும் சரி எல்லோருக்கும்
இது வரை நான் உங்களுக்கு எந்த வேண்டுகோளும் வைத்தது இல்லை
தயவு செய்து இந்த திரியை அரசியல் சாயம் பூசியோ அல்லது ஜாதி மத பேதம் கொண்டோ பிரித்து விட வேண்டாம் என்று நல்லதொரு சிவாஜி ரசிகர் என்ற முறையில் வேண்டி கேட்டு கொள்கிறேன்
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
25th July 2014, 10:03 PM
#515
Senior Member
Diamond Hubber
தயவுசெய்து தனிப்பட்ட சண்டைகளை விட்டு பொதுவாக சிவாஜி பற்றி உரையாடுவோம்.
-
25th July 2014, 10:08 PM
#516
Senior Member
Diamond Hubber
நான் அவர் சாதியில்லை
நான் அவர் மதமில்லை
நான் அவர் அரசியல் சித்தாந்த வழிவந்தவனுமில்லை
அவனைப்போல ஒரு கலைஞன் வேறில்லை என்பது மட்டுமே அவன் ரசிகனாக என்னை எப்போதும் வைத்திருக்கிறது .அதுவே போதுமானது.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
25th July 2014, 10:45 PM
#517
Junior Member
Junior Hubber
கிருஷ்ணா அவர்களே
கண்டிப்பாக இத்துடன் முடித்துக் கொள்வோம்.யார் மனமும் புண்பட வேண்டாம்.
-
26th July 2014, 12:34 AM
#518
மலையாள கவிஞர் எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு நடிகர் திலகத்தை சந்தித்த போது ஏற்பட்ட அனுபவங்களை குறிப்பிடும் போது சாதி சார்ந்த சில கருத்துக்களை சொல்லியிருக்க அது தவறான தகவல் என்பதை நிறுவவே சந்திரசேகர் அவர்கள் அதை சுட்டிக் காட்டினார் என்று நான் புரிந்துக் கொள்கிறேன். எப்படி இங்கே ஆரூர்தாஸ் போன்றவர்கள் தவறான தகவலை தருகிறார்களோ அது போன்றே பாலச்சந்திரன் தன அனுமானத்தை உண்மை என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார். 1950-களில் ஒன்றுபட்ட சென்னை ராஜதானியில் (கேரளம் பிரிவதற்கு முன்) பிறந்த பாலச்சந்திரன் போன்றவர்கள் அன்றைய நாட்களில் கேரளத்தில் நிலவிய சாதிய பிரச்சனைகலின் அடிப்படையில் இந்த கருத்துக்களை முன் வைக்கிறார் என்றே எனக்கு தோன்றுகிறது.
மேலும் இவரும் ஆரூர்தாஸ் போன்றே காலபிரமாணத்தில் தவறு செய்கிறார். நடிகர் திலகத்தை இவர்கள் சந்திப்பது 1995-ல். ராஜீவ்நாத் முதலில் எடுத்தது ஸ்வர்ண சாமரம் என்ற பெயரில் கருணை கொலையை அடிப்படையாக கொண்ட கதை. அது கைவிடப்பட்டு பின் சிறிது காலம் கழித்து பிரதாப் போத்தன் இயக்கத்தில் வேறு ஒரு கதையை ஒரு யாத்ரா மொழி என்ற பெயரில் எடுத்து அது 1997 ஆகஸ்ட் மாதம் வெளியானது.
தங்கபதக்கம் வெளியானது 1974 ஜூன் 1. ஆனால் பாலச்சந்திரன் நடிகர் திலகத்தை சந்திக்கும் போது (1995) 30 வருடங்களுக்கு முன்னால் பதக்கம் வெளியானது என்கிறார். ஆக பழைய சம்பவங்கள் மறந்து போகும் வயது முதிர்ந்த ஒரு காலகட்டத்தில் சொல்லபப்டும் விஷயங்களில் தகவல் பிழைகளே அதிகம் இடம் பெறும்.
எனவே இது போன்ற வயது முதிர்ந்த சில எழுத்தாளர்களின் சில வாக்கியங்களை வைத்துக் கொண்டு நாம் ஒரு நிலைப்பாட்டை எடுப்பது அல்லது எதிர் வினை புரிவது என்பது விரும்பத்தகாத விளைவுகளையே ஏற்படுத்தும்.
நடிகர் திலகத்தை எந்த சாதி ஆதரித்தது அல்லது ஆதரிக்கவில்லை என்ற சொற் போர் இப்போது தேவையற்றது. வெகு எளிதாக உணர்ச்சிகளை தூண்டக் கூடிய இது போன்ற வாதங்களை தவிர்ப்போம். அனைத்து இனத்தவரும் ஆதரித்த ஆதரிக்கும் ஒரே கலைஞன் நடிகர் திலகம் என்பதில் பெருமை கொள்வோம்.
அன்புடன்
ராமதாஸ்,
உங்களுக்கு பதில் நாளை.
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
26th July 2014, 09:12 AM
#519
Junior Member
Diamond Hubber
பாசமலர்' படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய 'வாராய் என் தோழி வாராயோ...' என்ற பாடல், அவருக்குப் பெரும் புகழ் தேடித்தந்தது. 1961-ம் ஆண்டு, எல்.ஆர்.ஈஸ்வரி வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய ஆண்டாகும்.
அந்த ஆண்டு, ஏ.பீம்சிங் டைரக்ஷனில், சிவாஜிகணேசன் -சாவித்திரி நடித்த 'பாசமலர்' படம் வெளிவந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்தனர்.
மகத்தான வெற்றி பெற்ற அப்படத்தில், 'வாராய் என் தோழி வாராயோ, மணப்பந்தல் காண வாராயோ' என்ற பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார்.
இந்தப்பாடல் பெரிய 'ஹிட்' ஆகி, மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது. குறிப்பாக, அன்று முதல் இன்று வரை திருமண வீடுகளில் பாடப்படும் பாடல் இது.
அதுவரை இளம் நடிகைகளுக்கு பின்னணியில் பாடிவந்த எல்.ஆர்.ஈஸ்வரி, 'பாசமலர்' வெற்றியைத் தொடர்ந்து, கதாநாயகிகளுக்கும் பாடத்தொடங்கினார்.
டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்த 'பணமா பாசமா' என்ற படமும், சூப்பர் ஹிட் படமாகும்.
அப்படத்தில், `எலந்த பயம்... எலந்த பயம்' என்ற கிராமியப் பாடலை விஜய நிர்மலாவுக்காகப் பாடினார். இந்தப்பாடல் வரும் கட்டத்தில், தியேட்டர்களில் விசில் சத்தம் காதைப் பிளக்கும்.
டைரக்டர் ஸ்ரீதர், 'சிவந்த மண்' படத்தை வெளிநாடுகளுக்குச் சென்று பிரமாண்டமாகப் படமாக்கினார்.
அதில் சிவாஜிகணேசனும், காஞ்சனாவும் எகிப்து உடையில் தோன்றும் ஒரு நடனக் காட்சி.
'பட்டத்து ராணி பார்க்கும் பார்வை, வெற்றிக்குத்தான் என எண்ணவேண்டும்' என்று, காஞ்சனாவுக்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல் மிக மிகப் பிரமாதமாக அமைந்தது. இடையிடையே சிவாஜி சவுக்கால் அடிப்பார். அப்போது எல்.ஆர்.ஈஸ்வரி கொடுத்த 'ஹம்மிங்', பாடலுக்கு மேலும் மெருகேற்றியது.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
26th July 2014, 10:11 AM
#520
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
murali srinivas
மலையாள கவிஞர் எழுத்தாளர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு நடிகர் திலகத்தை சந்தித்த போது ஏற்பட்ட அனுபவங்களை குறிப்பிடும் போது சாதி சார்ந்த சில கருத்துக்களை சொல்லியிருக்க அது தவறான தகவல் என்பதை நிறுவவே சந்திரசேகர் அவர்கள் அதை சுட்டிக் காட்டினார் என்று நான் புரிந்துக் கொள்கிறேன். எப்படி இங்கே ஆரூர்தாஸ் போன்றவர்கள் தவறான தகவலை தருகிறார்களோ அது போன்றே பாலச்சந்திரன் தன அனுமானத்தை உண்மை என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார்.
திரு.முரளி சார்,
தாங்கள் கூறியிருப்பது உண்மை. நானும் இதனைச் சுட்டிக்காட்டவே விரும்பினேன். தங்களுடைய விளக்கத்திற்கு நன்றி.
"கலைஞர்களையும், அறிஞர்களையும், ஒரு அரசியல் கட்சி, மொழி, ஜாதி வட்டத்துக்குள் அடைக்கும் துரதிஷ்டம் இங்குதான் நடக்கிறது. சிவாஜிகனேசன் போன்ற கலைஞர்கள், ஜாதி, அரசியல், மதம், இனம், மொழி எல்லாவற்றையும் கடந்தவர்கள்" - என்று நாடாளுமன்ற உறுப்பினர் திரு.திருச்சி.சிவா ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது குறிப்பிட்டார். அதுதான் என்னுடைய கருத்தும். மற்றவர்களுக்கு என்றால் மறுத்துக் கூற, கண்டனம் தெரிவிக்க, அரசியல் கட்சி, ஜாதி அமைப்புகள் இருக்கிறது. நமது, நடிகர்திலகத்தைப் பொறுத்தவரை எந்த தவறான தகவலையும், யாரும் கூறலாம், யாரும் கேட்கமாட்டார்கள் என்ற துணிச்சல் உள்ளது. அதற்காகவே என் தலைமையிலான நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை மூலமாக இதுமாதிரி நிகழ்வுகளுக்கு அவ்வப்போது கண்டனக் குரல் கொடுத்து வருகிறேன். உதாரணத்திற்கு, திருவிளையாடல், சரஸ்வதி சபதம் பெயர், சத்யராஜ், விவேக்கிற்கு கண்டனம் போன்றவை. எனவே, இதுமாதிரி தகவல்களை உணர்ச்சிப் பூர்வமாக அணுகாமல், தெளிவான தகவல்களோடு நாம் மறுப்பையும், கண்டனத்தையும் வெளியிடவேண்டும் என்பதுதான் எனது விருப்பம், வேண்டுகோள்.
Last edited by KCSHEKAR; 26th July 2014 at 10:58 AM.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
Bookmarks