-
25th July 2014, 08:54 PM
#2401
Senior Member
Diamond Hubber
ராஜேஷ் சார்,
'முடியாது சொல்ல முடியாது என்று முன்னும் பின்னுமாய்த் தவிக்கிறேன்
அது முடியாவிட்டாலும் படியாவிட்டாலும் முடியும் என்று நான் நினைக்கிறேன்'.
அடேங்கப்பா! குடும்பம் ஒரு கதம்பம் விசு தேவல போல் இருக்கே!
'ராஜசேவை' திரைப்படத்தில் கண்டசாலாவின் கடித்துத் துப்பும் தமிழில்
இனிமையான பாட்டு. ஏனென்றால் கூட குயிலாக இசைப்பது இன்னிசை அரசி அல்லவா.
என்.டி .ராமாராவும், சௌகார் ஜானகியும் அழகோ அழகு என்று நான் நினைக்கிறேன்.
ராஜேஷ் சார்.... நீங்கள்?
Last edited by vasudevan31355; 25th July 2014 at 09:01 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
25th July 2014 08:54 PM
# ADS
Circuit advertisement
-
25th July 2014, 09:02 PM
#2402
Senior Member
Seasoned Hubber
டியர் வாசு ஜி, கார்த்திக் ஜி ஆணழகன் ரவி பற்றிய அலசல் அருமை. எனக்கு மிகவும் பிடித்த ஸ்மார்ட் ஹீரோஸ் ரவியும் ஜெய்யும்..
அந்த படான் பாடல் தூள்...
கார்த்திக், முதலில் பிற மொழிகள் பற்றி இங்கு சொல்வதற்கு ஒரு தயக்கம் இருந்தது. வாசு ஜி மற்றும் உங்கள் பாராட்டுக்களுக்கு பின்னர் தைரியம் வருகிறது.
ரவி ஷீலாவுடன் மலையாள படமான ஆரோல்மாஉண்ணியில் உதயகிரி கோட்டையிலே சித்ரலேகே(எண்டே பேவரிட்)
இசையரசியின் குரலில்
-
25th July 2014, 09:03 PM
#2403
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
ராஜேஷ் சார்,
'முடியாது சொல்ல முடியாது என்று முன்னும் பின்னுமாய்த் தவிக்கிறேன்
அது முடியாவிட்டாலும் படியாவிட்டாலும் முடியும் என்று நான் நினைக்கிறேன்'.
அடேங்கப்பா! குடும்பம் ஒரு கதம்பம் விசு தேவல போல் இருக்கே!
'ராஜசேவை' திரைப்படத்தில் கண்டசாலாவின் கடித்துத் துப்பும் தமிழில்
இனிமையான பாட்டு. ஏனென்றால் கூட குயிலாக இசைப்பது இன்னிசை அரசி அல்லவா.
என்.டி .ராமாராவும், சௌகார் ஜானகியும் அழகோ அழகு என்று நான் நினைக்கிறேன்.
ராஜேஷ் சார்.... நீங்கள்?
நானும்தான் நினைக்கிறேன்... மிகவும் அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல்
-
25th July 2014, 09:11 PM
#2404
Senior Member
Diamond Hubber
நன்றி ராஜேஷ் சார்!
பிரிய மனமில்லைதான். ஆனால் இரவுப்பணி அழைக்கிறது. குட் நைட்.
-
26th July 2014, 07:36 AM
#2405
Senior Member
Seasoned Hubber
இசைக்கு எந்த பேதமும் இல்லை ... மொழி பேதம் ... நிச்சயமாகக் கிடையாது... இனிமையாக காதில் விழும் எந்த இசையும் நெஞ்சில் நின்று விடும்.
ஹிந்தி தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் என ஒவ்வொரு மொழியிலும் உள்ள இனிமையான இசையே மனிதனின் வாழ்வில் பல்வேறு மன உளைச்சல்களுக்கு மருந்தாக திகழ்ந்து வருகின்றது. அந்த வகையில் வாசு சாரின் இந்தத் திரி பலரது உள்ளத்தில் மன நிம்மதியைத் தரும் மருந்தாகவும் திகழும், திகழ்கிறது என்பதும் உண்மை.
1960 மற்றும் 1970களில் தமிழில் டி.எம்.எஸ். போன்று கன்னடத்தில் பி.பி.எஸ். அவர்கள் தனி சாம்ராஜ்ஜியமே நடத்திக் கொண்டிருந்தார். இறுதி வரை அவரது புகழ் நிலைத்து நின்றது மட்டுமின்றி இன்றும் அவரது பாடல்கள் மூலம் வாழந்து கொண்டும் இருக்கிறார்.
அப்படிப்பட்ட பாடல்கள் சிலவற்றை கன்னட மொழித் திரைப்படங்களிலிருந்து நாம் கேட்டு மகிழ்வோம்.. இதில் குறிப்பிடத் தக்க விஷயம், இசையரசியின் பங்கும் அதே போல் குறிப்பிடத் தக்கதாகும். மொழியின் உச்சரிப்பில் சற்றும் சறுக்கலின்றி அவர் பாடிய கன்னடப் பாடல்கள் கேட்பவர் உள்ளங்களைக் குதூகலிக்கச் செய்யும்.
தொடக்கமாக கஸ்தூரி நிவாஸ படத்திலிருந்து ஒரு பாடல் நீ பந்து நிந்தாக என்ற பாடல், ஜி.கே. வெங்கடேஷ் இசையில் ஆர்.என்.ஜெயகோபால் வரிகளில்...
பல்லவியின் மொழி பெயர்ப்பு ... நீ வந்து நின்ற போது, நின்று நீ புன்னகை புரிந்த போது... எனத் தொடங்கும்..
ராஜ்குமார் அவர்களை புகழின் உச்சியில் கொண்டு சென்ற படம் கஸ்தூரி நிவாஸ.
தற்போது இப்படதத்தை வண்ண மயமாக்குவதாக ஒரு செய்தி நிலவுகிறது. இது உண்மையா தெரியவில்லை.
இந்த கஸ்தூரி நிவாஸ படத்தைப் பார்த்தால் நிச்சயம் நடிகர் திலகம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது.
ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடத்தைப் பிடித்த அவன் தான் மனிதன் படத்தின் ஒரிஜினல் தான் கஸ்தூரி நிவாஸ.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
26th July 2014, 07:41 AM
#2406
Senior Member
Seasoned Hubber

கன்னட திரைப்படப்பாடல் என்றாலே எனக்கு முதலில் நினைவுக்கு வரும், மிக மிக பிடித்த பாடல்... எரடு கனசு - படத்தில் இடம் பெற்ற இப்பாடல் தான். வாணி ஜெயராமின் குரல் நம்மை எங்கும் செல்ல விடாமல் கட்டிப் போட்டு விடும். பி.பி.எஸ்.ஸின் குரல் சொல்லவும் வேண்டுமா...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
26th July 2014, 07:48 AM
#2407
Senior Member
Seasoned Hubber
தன் குரலாலே நம் உயிருக்குள்ளாகவே ஊடுருவும் குரலுக்கு சொந்தக் காரர் எஸ்.பி.பாலா. அதற்கு ஒரு சான்று பந்துலம்மா படத்தில் இடம் பெற்ற சிரி மல்லி நீவே என்ற இப்பாடல். முதல் முறை கேட்பவர்கள், உடனே மீண்டும் அடுத்த முறை கேட்க விரும்புவார்கள் என்பது திண்ணம். ராஜன் நாகேந்திராவின் இனிமையான மெட்டும் உறுத்தாத பின்னணி இசையும் இப்பாடலுக்கு ஜீவனைத் தருகின்றன.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
26th July 2014, 07:59 AM
#2408
Senior Member
Seasoned Hubber
ஜேனு கூடு ... தேன் கூடு என்று தமிழில் பொருள் தரும் பெயர் கொண்ட படத்தில் இடம் பெற்ற இப்பாடல் இனிமையான இசை மனதில் எப்படி ரீங்காரமிடும் என்பதற்கு உதாரணமான பல பாடல்களில் ஒன்று. விஜய கிருஷ்ணமூர்த்தி இசையமைப்பில் பி.பி.எஸ். பி.சுசீலா பாடியுள்ளனர். ஜெயந்தியின் முதல் கன்னடப் படம் இது. உடன் நடித்தவர் சூர்யகுமார்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
26th July 2014, 08:18 AM
#2409
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
26th July 2014, 08:35 AM
#2410
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
RAGHAVENDRA
இசைக்கு எந்த பேதமும் இல்லை ... மொழி பேதம் ... நிச்சயமாகக் கிடையாது... இனிமையாக காதில் விழும் எந்த இசையும் நெஞ்சில் நின்று விடும்.
ஹிந்தி தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் என ஒவ்வொரு மொழியிலும் உள்ள இனிமையான இசையே மனிதனின் வாழ்வில் பல்வேறு மன உளைச்சல்களுக்கு மருந்தாக திகழ்ந்து வருகின்றது. அந்த வகையில் வாசு சாரின் இந்தத் திரி பலரது உள்ளத்தில் மன நிம்மதியைத் தரும் மருந்தாகவும் திகழும், திகழ்கிறது என்பதும் உண்மை.
1960 மற்றும் 1970களில் தமிழில் டி.எம்.எஸ். போன்று கன்னடத்தில் பி.பி.எஸ். அவர்கள் தனி சாம்ராஜ்ஜியமே நடத்திக் கொண்டிருந்தார். இறுதி வரை அவரது புகழ் நிலைத்து நின்றது மட்டுமின்றி இன்றும் அவரது பாடல்கள் மூலம் வாழந்து கொண்டும் இருக்கிறார்.
அப்படிப்பட்ட பாடல்கள் சிலவற்றை கன்னட மொழித் திரைப்படங்களிலிருந்து நாம் கேட்டு மகிழ்வோம்.. இதில் குறிப்பிடத் தக்க விஷயம், இசையரசியின் பங்கும் அதே போல் குறிப்பிடத் தக்கதாகும். மொழியின் உச்சரிப்பில் சற்றும் சறுக்கலின்றி அவர் பாடிய கன்னடப் பாடல்கள் கேட்பவர் உள்ளங்களைக் குதூகலிக்கச் செய்யும்.
தொடக்கமாக கஸ்தூரி நிவாஸ படத்திலிருந்து ஒரு பாடல் நீ பந்து நிந்தாக என்ற பாடல், ஜி.கே. வெங்கடேஷ் இசையில் ஆர்.என்.ஜெயகோபால் வரிகளில்...
பல்லவியின் மொழி பெயர்ப்பு ... நீ வந்து நின்ற போது, நின்று நீ புன்னகை புரிந்த போது... எனத் தொடங்கும்..
ராஜ்குமார் அவர்களை புகழின் உச்சியில் கொண்டு சென்ற படம் கஸ்தூரி நிவாஸ.
தற்போது இப்படதத்தை வண்ண மயமாக்குவதாக ஒரு செய்தி நிலவுகிறது. இது உண்மையா தெரியவில்லை.
இந்த கஸ்தூரி நிவாஸ படத்தைப் பார்த்தால் நிச்சயம் நடிகர் திலகம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது.
ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடத்தைப் பிடித்த அவன் தான் மனிதன் படத்தின் ஒரிஜினல் தான் கஸ்தூரி நிவாஸ.
அட்ரா அட்ரா .. என்ன அருமையான பாட்டு ... என்னுடைய கன்னட பேவரிட் பாடல்
ஆம் அக்*ஷர சுத்தமாகவும் பாவமும் அந்த மொழியின் உச்சரிப்பும் இசையரசியின் தனி ஸ்பெஷாலிடி
இன்னொரு கொசுரு தகவல், கஸ்தூரி நிவாஸா தான் தமிழில் அவன் தான் மனிதன்.
இதில் இன்னொரு அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இசையரசியின் குரலில்
எல்லே இரு ஏகே இரு எந்தெந்து மனதல்லி நீ தும்பிரு (எங்கே இருந்தாலும் எப்படி இருந்தாலும் என்றென்றும் என் மனதில் நீ இருப்பாய்)
அருமையான வரிகள்
ஆர்.என்.ஜெயகோபால் (மைக்கேல் மதன காமராஜனில் நாசரின் அப்பா) இவர் பழம்பெரும் நடிகர் நாகேந்திர ராவ்(எல்லோரும் இன்னாட்டு மன்னரில் வில்லன் )அவர்களின் மகன் .. சுதர்ஸன் இவரது சகோதரர்.
கே.ஜே.யேசுதாஸின் 50ம் ஆண்டு நிறைவுக்கு கன்னட இசை உலகம் ஹிருதயராகா என்ற விழா எடுத்தது
அதில் இசையரசி எல்லே இரு பாடலை பாடினார். இதோ
ராகவ் ஜி. கன்னட பாடலை போட்டு என்னை திக்குமுக்காட செய்து விட்டீர்கள்
பேஷ் பேஷ்
Bookmarks