-
26th July 2014, 08:37 AM
#2411
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
RAGHAVENDRA
தன் குரலாலே நம் உயிருக்குள்ளாகவே ஊடுருவும் குரலுக்கு சொந்தக் காரர் எஸ்.பி.பாலா. அதற்கு ஒரு சான்று பந்துலம்மா படத்தில் இடம் பெற்ற சிரி மல்லி நீவே என்ற இப்பாடல். முதல் முறை கேட்பவர்கள், உடனே மீண்டும் அடுத்த முறை கேட்க விரும்புவார்கள் என்பது திண்ணம். ராஜன் நாகேந்திராவின் இனிமையான மெட்டும் உறுத்தாத பின்னணி இசையும் இப்பாடலுக்கு ஜீவனைத் தருகின்றன.
ராஜன் நாகேந்திராவின் அற்புத இசை. இதே படத்தில் மேடைக்கச்சேரிகளில் பாட மிகவு கஷ்டமான ஒரு பாடல்
பாலுவுடன் இசையரசி .. திரையில் ரங்கநாத் மற்றும் தீபா
-
26th July 2014 08:37 AM
# ADS
Circuit advertisement
-
26th July 2014, 08:39 AM
#2412
Senior Member
Seasoned Hubber
அதே பந்துலம்மாவில் லக்*ஷ்மிக்கு இசையரசியின் குரலில் மனசெரிகனவாடு மா தேவுடு ஸ்ரீ ராமுடு
-
26th July 2014, 08:46 AM
#2413
Senior Member
Diamond Hubber
ராஜேஷ் சார்!
கன்னடப் பாடல்களில் எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லை. நீங்களும், ராகவேந்திரன் சாரும் புகழும் போது கண்டிப்பாக அதில் அற்புத விஷயங்கள் இருக்கும் என்று மட்டும் புரிகிறது. நிச்சயமாக பார்க்கிறேன். கேட்கிறேன். நல்ல பாடல்களை வழங்கியமைக்கு தங்களுக்கும், ராகவேந்திரன் சாருக்கும் நன்றி!
-
26th July 2014, 08:49 AM
#2414
Senior Member
Seasoned Hubber
அண்ணாவின் ஆசையில் எப்பொழுதும் கேட்டு ரசித்த பாடல் பாட்டெழுதட்டும் பருவம் , வாலி ஐயாவின் வரிகள் .. நீங்கள் அதில் அதிகம் கேட்காத பாடலை தந்ததற்கு நன்றி நன்றி .. கே.ஆர்.வி க்யூட்டாக இருந்த காலங்கள்
-
26th July 2014, 09:01 AM
#2415
Senior Member
Diamond Hubber

ராஜேஷ் சார்,
நடிகர் நாகேந்திர ராவ் எம்.கே ராதா, பானுமதி நடித்த பழைய 'அபூர்வ சகோதரர்கள்' படத்தின் 'மார்த்தாண்டன்' என்ற அட்டகாசமான வில்லன். (மேலே உள்ள படத்தில் குளோஸ்-அப் பில் இருப்பவர்) 'அபூர்வ சகோதர்கள்' நீரும் நெருப்பும் ஆகும் போது அசோகன் அதில் வில்லன ஆனார்.
நடிகர் சுதர்சன் (நடிகர் திலகத்தின் சில படங்களில் பிரதான வில்லன்) கன்னட மற்றும் தமிழ் நடிகையான சைலஸ்ரீயை ('அள்ளிப் பந்தல் கால்கலெடுத்து') புகழ் மணந்து கொண்டார். சைலஸ்ரீயின் அப்போதைய பெயர் ஆஷா.


இன்னொரு தகவலும் உண்டு. நடிகர் சுதர்சனின் சகோதரி நடிகை சுமித்ரா. சரியா?
Last edited by vasudevan31355; 26th July 2014 at 09:14 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
26th July 2014, 09:11 AM
#2416
Senior Member
Diamond Hubber
நன்றி ராஜேஷ் சார்.
//கே.ஆர்.வி க்யூட்டாக இருந்த காலங்கள்//
'அண்ணாவின் ஆசை' யில் இன்னொரு நல்ல பாடலும் உண்டு. நமது இசையரசி அழகாகப் பாடியிருப்பார். கே.ஆர்.விஜயா படு ஸ்லிம்மாக பிகினியில் கவர்ச்சியாக வருவார். விஜயா 'பட்டணத்தில் பூதம்' படத்தில் மட்டுமே நீச்சல் உடையில் நடித்திருந்தார் என்று சொல்லுவார்கள். ஆனால் இந்தப் படத்திலும் நீச்சல் உடையில் வருவார்.
கண்ணியப் பாடகியின் குரல் வெகு இனிமை. அருமை. பாடலும் சுகமாகவே இருக்கும்.
'பூப்போல் மலர பொட்டு வைத்தான்
புன்னகையில் தேன் சொட்டு வைத்தான்
பார்வையிலே இளம் சிட்டு வைத்தான்
இதைப் படைத்தவன் தனியே விட்டு வைத்தான்'
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th July 2014, 09:11 AM
#2417
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
ராஜேஷ் சார்,
நடிகர் நாகேந்திர ராவ் எம்.கே ராதா, பானுமதி நடித்த பழைய 'அபூர்வ சகோதரர்கள்' படத்தின் 'மார்த்தாண்டன்' என்ற அட்டகாசமான வில்லன். (மேலே உள்ள படத்தில் குளோஸ்-அப் பில் இருப்பவர்) 'அபூர்வ சகோதர்கள்' நீரும் நெருப்பும் ஆகும் போது அசோகன் அதில் வில்லன ஆனார்.
நடிகர் சுதர்சன் (நடிகர் திலகத்தின் சில படங்களில் பிரதான வில்லன்) கன்னட மற்றும் தமிழ் நடிகையான சைலஸ்ரீயை ('அள்ளிப் பந்தல் கால்கலெடுத்து') புகழ் மணந்து கொண்டார்.
இன்னொரு தகவலும் உண்டு. நடிகர் சுதர்சனின் சகோதரி நடிகை சுமித்ரா. சரியா?
ஆம் பழைய படங்களில் ரஞ்சன் மற்றும் எம்.கே.ராதாவுடன் நடித்திருக்கிறார். மிகச்சிறந்த நடிகர்
ஆம் சுதர்சன் சைலஸ்ரீயை மணந்து கொண்டார்.
சுமித்ராவிற்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இல்லை ..
NagendarRaoMKRadha_StrangeBrothers-300x220.jpg
-
26th July 2014, 09:13 AM
#2418
Senior Member
Seasoned Hubber
பூ போல மலர பொட்டு வைத்தான் .. ஆஹா இனிமையான பாடல் . நீண்ட நாட்களுக்கு பின் கேட்கிறேன்
யாரங்கே வாசுஜிக்கு ஆயிரம் பொற்காசுகள் கொண்டு வா..
-
26th July 2014, 09:18 AM
#2419
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rajeshkrv
யாரங்கே வாசுஜிக்கு ஆயிரம் பொற்காசுகள் கொண்டு வா..
சொக்கா! அவ்வளவும் எனக்கே எனக்கா?
-
26th July 2014, 09:24 AM
#2420
Senior Member
Diamond Hubber
ராஜேஷ் சார்,
/posters/Adavi%20Raja%20(1970).jpg)
தெலுங்கில் 'அடவி ராஜா' என்று ஒரு படம் வந்தது. அனேகமாக கன்னடத்திலிருந்து மொழி மாற்றப் பட்டிருக்க வேண்டும். இதில் சைலஸ்ரீ சுதர்சனோடு இணைந்து நடித்திருந்தார். சுதர்சன் இப்படத்தின் ஹீரோ. டார்ஜான் சுந்தரி ரேஞ்சுக்குக் கலக்குவார் சைலஸ்ரீ.
இங்கேயும் ஒரு கங்கை தமிழ்ப்படத்தின் நாயகி கன்னட தாரா முகமும், பழைய சைலஸ்ரீ முகமும் அப்படியே அச்சில் வார்த்தது போல் ஒன்றாக இருக்கும்.
Bookmarks