-
26th July 2014, 09:33 AM
#2421
Senior Member
Seasoned Hubber
இது அடவி ராமுடுவிற்கு முன்னாடியே வந்திருக்க கூடும் .. ஏனென்றால் என்.டி.ஆர், ஜெய்பிரதா, ஜெயசுதாவின் அடவி ராமுடு 80’களில் வந்த படம்
ஆம் ஷைலஸ்ரீ ஆஷா என்றும் பின் ஷைலஸ்ரீ என்றும் பல மொழிகளில் நடித்தார்
தமிழில் பல படங்களில் நடித்தார். தமிழிலும் கன்னடத்திலும் சரளம் அதனால் தான் திருமலை தென்குமரியில் கன்னட பாடலுக்கு இவரே வரிகள் எழுதினாராம்.
-
26th July 2014 09:33 AM
# ADS
Circuit advertisement
-
26th July 2014, 09:39 AM
#2422
Senior Member
Seasoned Hubber
மன்னிக்கவும் அடவி ராஜா நம்ம யானை வளர்த்த வானம்பாடி மகன் தான்
கன்னடத்தில் வந்திருக்கலாம்
-
26th July 2014, 10:41 AM
#2423
Senior Member
Diamond Hubber
சைலஸ்ரீ என்றதும் எனக்கு 'முத்துச்சிப்பி' படம்தான் நினைவுக்கு வரும்.
சைலஸ்ரீ ஒரு நல்ல டான்சர். இந்தப்படத்தில் எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில் நம் எல்லோர் மனதையும் கவர்ந்த ராட்சஸி ஒரு பாடலைப் பாடியிருப்பார். சும்மா அதம் பறக்கும்.
சைலஸ்ரீ டைட்டான ஆடைகள் அணிந்துகொண்டு இந்த கிளப் டான்ஸ் ஆடுவார்.
'ஹோய்..
தட்ட்டட்டும் கைகள் மெல்லத் தாளக் கட்டோடு
பேசட்டும் கண்கள் இந்த பருவச் சிட்டோடு'
அமர்க்களம் சார். பாடகி, நடிகை, இசையமைப்பாளர் மூவரும் இணைந்து பின்னிப் பெடலெடுக்கும் பாடல்.
என்னை மிகவும் கவர்ந்த கிளப் பாடல். பாடல் முடிகையில் come september 61.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th July 2014, 11:13 AM
#2424
-
26th July 2014, 11:16 AM
#2425
Senior Member
Diamond Hubber
ராஜேஷ் சார்
'அடவி ராஜா' தெலுங்கு படம் கன்னடத்திலிருந்து தெலுங்கிற்கு டப்பிங் ஆனதுதான். 1970 இல் வந்தது. ஆனால் 1969 இலேயே 'காடின ரஹஸ்யா' என்று கன்னடத்தில் வெளியாகி விட்டது. சத்தியம்தான் மியூசிக். இவ்ளோவ் நேரம் மண்டையைப் போட்டு பிச்சிக்கிட்டிருந்தேன்.
கடலூர் கமர் தியேட்டரில் பள்ளிப் பருவத்தில் இப்படத்தை காலை காட்சியாகப் பார்த்தது நினைவிருக்கிறது தமிழில். 'காட்டு ராஜா' என்று டைட்டில்.
கிருஷ்ணா சார் சந்தோஷப் படுவார். சரி! இனிமேல் தமிழை பிரிச்சி மேய்வோம்.
-
26th July 2014, 11:20 AM
#2426
Senior Member
Diamond Hubber
வாங்க கிருஷ்ணா சார்! ஏன் லேட்டு. பெஞ்ச்சு மேலே ஏறி நில்லுங்க.
இப்பதான் 'கிருஷ்ணா சார் சந்தோஷப் படுவார்' அப்படின்னு டைப் அடிச்சி போஸ்ட் பண்ணா உங்க 'அடவி ராமுடு' நிக்கிறாரு. ம்..வயசு 200. உங்களுக்கு இல்லே. இந்தப் படத்தில் தேவுடுகாருக்கு. படு கிழம்
-
26th July 2014, 11:28 AM
#2427
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்,
நேற்று நம்ம படமான 'வரவேற்பு' பார்த்து சிலிர்த்தேன்.

சி.ஐ.டி சகுந்தலா, தேங்காய் காட்சிகள் எப்படி சென்சாரில் தப்பின?
ஜெயகௌசல்யா பால்மணம் மாறாத பச்சைக் குழந்தை. இந்தக் குழந்தையும் இந்தியில் பிரபாத் என்ற ஒரு மாதிரிப் படத்தில் நடித்தது.
மக்கள் கலைஞர் அதே சுறுசுறுப்பு.
மனோகர் பியானோ வாசித்தால் மரணம் நிச்சயம்.
பாடல்களில் ராட்சஸி பாடும் 'வரவேண்டும் மகராஜா'வும், ஜெய் கௌசல்யா டூயட்டன 'பொன்வண்ண மாலையில் நீ தொடும் போது'ம் அட்டகாசம்.
ராதா ராதா ராதா.... டொடக் டொடக் டக்
ராஜா ராஜா ராஜா....
சூப்பர் சார்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th July 2014, 11:43 AM
#2428

Originally Posted by
vasudevan31355
வாங்க கிருஷ்ணா சார்! ஏன் லேட்டு. பெஞ்ச்சு மேலே ஏறி நில்லுங்க.
இப்பதான் 'கிருஷ்ணா சார் சந்தோஷப் படுவார்' அப்படின்னு டைப் அடிச்சி போஸ்ட் பண்ணா உங்க 'அடவி ராமுடு' நிக்கிறாரு. ம்..வயசு 200. உங்களுக்கு இல்லே. இந்தப் படத்தில் தேவுடுகாருக்கு. படு கிழம்
அண்ணா
அந்த எங்கள் தலைவன் ஸ்டெப்ஸ்ஊ
தமிழ் dabbing பாட்டு - 'அப்பா யானை அம்மா யானை என் யானை உன் யானை எல்லா யானை இங்கு உண்டு '
அந்த 200 வயது தொண்டு கிழம் காலை காலை உதையும்
யாராவது ராமராவ் காரு ரசிகர்கள் நம்மை பின்னிர போறாங்கா அண்ணா
வரவேற்பு எந்த தொலைகாட்சியில்
I N moorthy direction
-
26th July 2014, 11:46 AM
#2429

Originally Posted by
vasudevan31355
நேற்று நம்ம படமான 'வரவேற்பு' பார்த்து சிலிர்த்தேன்.
வாசு அண்ணா
கல்கண்டு தமிழ்வாணன் ஒரு தமிழ்படம் ஜெய் வைச்சு எடுத்தார்
ஷப்னம் னு ஒரு நடிகை
அந்த படத்தின் டைட்டில் என்ன அண்ணா
-
26th July 2014, 11:50 AM
#2430
Senior Member
Seasoned Hubber
கிருஷ்ணா ... காதலிக்க வாங்க..
அய்ய்யோ... வேற மாதிரியெல்லாம் நினைச்சுடப் படாது...
தமிழ்வாணன் தயாரித்த படத்தின் பேரைச் சொன்னேன்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks