-
26th July 2014, 12:00 PM
#2431
Senior Member
Seasoned Hubber
உள்ள(த்)தை அள்ளித்தா

பேருன்னதும் ஞாபகம் வருது..
முத்துராமன் இரு வேடங்களிலும் விஜயகுமாரி, ஸ்ரீகாந்த் மற்றும் பலர் நடித்த படம் பேர் சொல்ல ஒரு பிள்ளை. 1978ம் ஆண்டு வெளிவந்தது. கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய இப்படத்திற்கு இசை விஜயபாஸ்கர். வாணி ஜெயராமுடைய குரலை தமிழ்த் திரையுலகில் அதிக அளவில் பயன் படுத்திக் கொண்ட இசையமைப்பாளர்கள் விஜயபாஸ்கர் மற்றும் சங்கர் கணேஷ். இதிலும் வாணி ஜெயராமுக்கு இரண்டு சூப்பர் பாடல்கள். அது மட்டுமின்றி இசையரசி சுசீலா அவர்களின் குரலில் இன்னொரு இனிமையான பாடலும் உண்டு.
முத்துராமன் சிறந்த தொழிலாளி, நிர்வாகத் திறமையுள்ளவர். பண வசதியில்லை, குறிப்பாக முதல் பிள்ளை பிறக்கும் போது அவர் சிரமப் படுகிறார். அதன் காரணமாக அவரை தரித்திரம் எனத் திட்டுகிறார். இரண்டாவது பிள்ளை பிறக்கும் சமயத்தில் அவருடைய தொழில் திட்டம் ஒரு பணக்காரரால் ஒப்புக் கொள்ளப் பட்டு பண உதவி செய்கிறார். இதன் காரணமாக இரண்டாம் பிள்ளையை செல்லமாக வளர்க்கிறார். வளர்ந்து பெரியவனாகும் இளைய பிள்ளை ஒழுக்கமில்லா வாழ்க்கை வாழ்கிறார். செலவு நிறைய செய்து விடுகிறார். ஒரு கட்டத்தில் திருடவும் முனைகிறார். அதே நேரத்தில் அவரால் பெண்டாளப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்து அந்தக் குழந்தையை அவள் பாட்டுப் பாடி வளர்க்கிறாள். இறுதியில் இளைய பிள்ளை திருந்துகிறாரா, அதில் நல்லவனான மூத்த பிள்ளையின் பங்கு என்ன இவையே கதையின் இறுதிப் பகுதி.
இதில் மூத்த பிள்ளையாகவும் முத்துராமன் நடிக்க, இளைய பிள்ளை நம்ம தென்னாட்டு ஓமர் ஷெரீஃப் ஸ்ரீகாந்த்.
ஸ்ரீகாந்த் திருடனாக உருவெடுக்கும் சமயத்தில் குழந்தையை வைத்து அவருடைய தாலி கட்டாத மனைவி பாடும் பாடலை இசையரசி அருமையாகப் பாடியிருப்பார்.
இந்தப் பாடலைத் தான் இப்போது நீங்கள் தரவிறக்கிக் கேட்க உள்ளீர்கள்.
பாடலாசிரியர் பஞ்சு அருணாசலமா அல்லது கவியரசரா தெரியவில்லை.
முத்து நகை சிந்தி வரும்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
26th July 2014 12:00 PM
# ADS
Circuit advertisement
-
26th July 2014, 12:02 PM
#2432
Senior Member
Seasoned Hubber
பேர் சொல்ல ஒரு பிள்ளை படத்தில் இடம் பெற்ற வாணி ஜெயராமின் மயக்க வைக்கும் குரலில் அற்புதமான பாடல்
பாடச் சொல்லும் நெஞ்சம் நெஞ்சம்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
26th July 2014, 12:12 PM
#2433

Originally Posted by
RAGHAVENDRA
உள்ள(த்)தை அள்ளித்தா
per solla oru pillai
இதில் முத்துராமன் ஜோடி யாரு வேந்தர் சார் ஒரு புதுமுகம் னு நினைவு
இந்த படம் நினைவில் உண்டு
1978 ரிலீஸ் னு நினைக்கிறன்
வாணி இன்னொரு பாட்டு ரொம்ப நல்ல இருக்கும் வேந்தர் அண்ணா
கலைமகள் உறவும்
திருமகள் வரவும்
அவரவர் விதிப்படி இறைவனின் பரிசு
Last edited by gkrishna; 26th July 2014 at 12:22 PM.
gkrishna
-
26th July 2014, 12:17 PM
#2434
அண்ணா
எல்லோரும் இனிமேல் எனக்கு அண்ணா தான்
கூப்பிடலாம் இல்லையோ
கண்ணன் வருவான் னு ஒரு படம் ஜெய் லக்ஷ்மி ஜோடி
பாட்டு எல்லாம் சூப்பர்

'பூவினில் மெல்லிய பூங்கொடி பொன்னிறம் காட்டும் பைங்கிளி
அவள் வாழ்க தினம் வாழ்க ' சூப்பர் triumphat சாக்ஸ் 'பபபபா பபபப'
மூன்றாம் பிறையில் பார்த்தது, பூரண நிலவாய் ஆனது, பிள்ளைத் தமிழை கேட்டது,'
'நிலவுக்கு போவோம் மாளிகை அமைப்போம் '
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
26th July 2014, 12:27 PM
#2435
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்,
கல்கண்டு தமிழ்வாணரின் படம் 'காதலிக்க வாங்க'. மற்றவர்கள் படங்களை எல்லாம் கல்கண்டில் 'கிழி கிழி' என்று விமர்சனத்தில் கிழித்த தமிழ்வாணன் இந்தப் படத்தை எடுத்து எல்லோருக்கும் தீனி போட்டார். தமிழ்வாணனை எல்லாம் கிழித்துவிட்டார்கள். தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும், திருகு வலியும்.
ஆனால் ஒன்றிரண்டு பாடல்கள் தேவலை ராகம்.
இந்தப் பாட்டைப் பாருங்க.
ஆச்சிக்கு ஜோடி மீசை மாமா மேஜராம். கொடுமைடா சாமி.
ஸ்ரீகாந்த் பரட்டை முடி தாடியுடன் வருவார்.
ஜெயக்கு ஜோடி கவிதாவா? (ஒ.மஞ்சு கவிதா இல்லை)
மூன்று ஜோடிகளும் சேர்ந்து வரும் பாட்டு.
காதல் என்றாலே தேனல்லவா
காணும் பேரின்ப வீடல்லவா
-
26th July 2014, 12:30 PM
#2436
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்!
'நிலவுக்குப் போவோம்' இன்றைய ஸ்பெஷலுக்காக வைத்திருந்தேன். நீங்கள் போட்டு விட்டீர்கள். என்னே ஒற்றுமை! என்ன திடீர்னு 'அண்ணா'? ஏதாவது விஷயம் இருக்குமே!
-
26th July 2014, 12:34 PM
#2437
Senior Member
Diamond Hubber
ம்..எங்க கோபால் இல்லையென்று தைரியத்தில் ஜெய் பாட்டா போடறீங்க.
ஓஹோ! அவருக்கும் ஒரு அண்ணா போட்டால் சரியாய்ப் போயிற்றா?
நல்ல டெக்னிக்கா இருக்கே. இருங்க நான் கூப்பிட்டுப் பார்த்துக்கிறேன்.
கோபால் அண்ணா! கோபால் அண்ணா!
நல்லாத்தான் போய்க்கிட்டு இருக்கு. ஆமாம்! பேசும்படம் 'அண்ணாவின் ஆசை' பார்த்தாச்சா.
Last edited by vasudevan31355; 26th July 2014 at 12:37 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
26th July 2014, 12:53 PM
#2438
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்/ ராகவேந்திரன் சார்,
இன்று 'சைலஸ்ரீ' தினம். அதனால் உங்களுக்கெல்லாம் ஒரு ஸ்பெஷல் சைலஸ்ரீ (ஆஷா )படம். இதுவரை வெளிவராதது.
பேசும்படம்.
-
26th July 2014, 01:18 PM
#2439

Originally Posted by
vasudevan31355
கிருஷ்ணா சார்!
'நிலவுக்குப் போவோம்' இன்றைய ஸ்பெஷலுக்காக வைத்திருந்தேன். நீங்கள் போட்டு விட்டீர்கள். என்னே ஒற்றுமை! என்ன திடீர்னு 'அண்ணா'? ஏதாவது விஷயம் இருக்குமே!
எல்லாம் சும்மா ஒரு இதுக்கு தான் அண்ணா
சார் னு போட்டா கோவுக்கு கொஞ்சம் கஷ்டம்
அதனால அண்ணா ஓகே தானே அண்ணா
இன்றைய ஸ்பெஷல் நிச்சயம் நிலவுக்கு போவோம்
எதிர் பார்த்து கொண்டு இருக்கும்
-
26th July 2014, 01:20 PM
#2440

Originally Posted by
vasudevan31355
கிருஷ்ணா சார்,
கல்கண்டு தமிழ்வாணரின் படம் 'காதலிக்க வாங்க'. மற்றவர்கள் படங்களை எல்லாம் கல்கண்டில் 'கிழி கிழி' என்று விமர்சனத்தில் கிழித்த தமிழ்வாணன் இந்தப் படத்தை எடுத்து எல்லோருக்கும் தீனி போட்டார். தமிழ்வாணனை எல்லாம் கிழித்துவிட்டார்கள். தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும், திருகு வலியும்.
ஆனால் ஒன்றிரண்டு பாடல்கள் தேவலை ராகம்.
இந்த படம் தான் நேற்று சன் லைப் தொலைக்காட்சியில்
தமிழ்வாணன் தயாரிப்பு கிழிச்சு எடுத்துட்டாங்க நீங்க சொன்ன மாதிரி
மேஜர் ஸ்ரீகாந்த் ஒரு சண்டை காட்சி வேற காமெடி தான் போங்க அண்ணா
Bookmarks