Page 61 of 400 FirstFirst ... 1151596061626371111161 ... LastLast
Results 601 to 610 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #601
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    படிக்காத மேதை

    திரைக்கதை இயக்கம்: பீம்சிங்
    வசனம்: கே.எஸ்.ஜி
    தயாரிப்பு: பாலா மூவிஸ்
    இசை : கே.வி.மஹாதேவன்
    வெளியான நாள்: 25.06.1960

    By Murali Srinivas

    மறக்க முடியாத ப வரிசை படங்களில் ஒன்று.

    ஊரில் பெரிய செல்வந்தர் ராவ்பகதூர் சந்திரசேகரன் பிள்ளை. அவருக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள். மூத்த மகள் ராஜம்மா ஒரு விதவை. அவளின் மகன் சந்துரு. மூத்த மகன் தியாகு அவன் மனைவி கமலா. இரண்டாவது மகன் ஸ்ரீதர், அவன் மனைவி மங்களா. மூன்றாவது மகன் சேகர், கடைக்குட்டி கீதா. இவர்கள் அனைவரும் (சந்திரசேகரின் மனைவியையும் சேர்த்து) ஒன்றாக வசிக்கிறார்கள். இவர்கள் வீட்டில் இருக்கும் இன்னொரு முக்கியமான நபர் ரங்கன். ஒரு தூரத்து உறவினர் மகன். ஆனால் சிறு வயது முதல் இங்கே வாழ்ந்து வருபவன். ரங்கன் படிக்கவில்லை. ஆனால் வீட்டில் உள்ள எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்பவன். சந்திரசேகருக்கு மணி விழா (60th Birthday) கொண்டாட்டத்துடன் படம் ஆரம்பம்.

    அந்த மணி விழாவிலே சந்திரசேகரின் நண்பரான ஒரு தொழில் அதிபருக்கு கீதாவை பிடித்து போய் விடுகிறது. அவரது மகனுக்கு இந்த பெண்ணை மனமுடிக்கலாம் என்று நினைக்கிறார். சந்திரசேகரின் மூன்றாவது மகன் சேகர் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அவள் ஒரு சாதரண குடும்பத்தை சேர்த்த பெண். ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் வேலை பார்க்கும் அவளை அந்த வீட்டு பெண்ணாக நினைத்துக்கொண்டு கல்யாணம் செய்து கொள்ள நினைக்கிறான். அந்த பெண் தன் அக்கா வீட்டில் இருக்கிறாள். அக்காள் கணவன் ரிக்க்ஷா ஓட்டுகிறான். இதற்கிடையில் சந்திரசேகரின் மனைவி கோவிலில் வைத்து தன் பழைய Friend-ai பார்க்கிறாள். அவளின் பெண்ணையே தன் மருமகளாக்கி கொள்ள முடிவெடுக்கிறாள். ஆனால் மகன் ஒப்பு கொள்ள மறுத்து வீட்டை விட்டு வெளியேறுகிறான். கொடுத்த வாக்கை காபாற்றுவதற்க்காக ரங்கன் அந்த பெண் லக்ஷ்மியை கல்யாணம் செய்துகொள்கிறான். கல்யாணத்தன்று சந்திரசேகரின் மூன்றாவது மகனுக்கு தான் காதலித்த பெண் பணக்கார வீட்டு பெண் இல்லை என்று தெரிகிறது. வீட்டுக்கு சென்று சொத்தில் பங்கு கேட்கும் மகனை சந்திரசேகர் துரத்தி விடுகிறார்.

    கீதாவிற்கு கல்யாணம் நிச்சயமாகிறது. தடபுடல் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்திருந்த 20 லட்சம் நஷ்டமாகிறது. இதனால் கல்யாணம் நின்று போகிறது. ராஜம்மாளும் அவளது மகனும் சேர்ந்து வீட்டில் உள்ள பொருட்களை திருடி விற்கிறார்கள். பழி லக்ஷ்மியின் மேல் விழுகிறது. சந்திரசேகருக்கு வீட்டில் மரியாதை குறைகிறது. மகன்களும் மருமகள்களும் அவரை உதாசினப்படுத்துகின்றனர். காரை விற்க வேண்டிய சூழ்நிலை வருகிறது. இந்த சூழ்நிலையில் தன் மாமாவிற்கும் அத்தைக்கும் விசுவாசமாக இருக்கும் ரங்கனுக்கும் மகன்கள்- மருமகள்கள் இடையே சண்டை வருகிறது. ரங்கனின் மனைவி லக்ஷ்மி நாம் தனி குடித்தனம் போய்விடலாம் என்று சொல்ல ரங்கனுக்கு பயங்கர கோபம் வருகிறது.

    இதையெல்லாம் பார்க்கும் சந்திரசேகர் ரங்கனை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். முதலில் வேடிக்கையாக சொல்கிறார் என்று நினைக்கும் ரங்கனுக்கு அவர் சீரியசாக சொல்கிறார் என்று தெரிந்ததும் திகைத்து போய் சண்டை போட்டும் அவர் மனசு மாறவில்லை. மனைவியுடன் வெளியே போகும் அவனுக்கு சேகரின் சகலையின் நட்பு கிடைக்கிறது. தன் வீட்டிலேயே அவர்களை தங்க வைத்து ஒரு மில்லில் வேலையும் வாங்கி கொடுக்கிறான். சம்பளம் வாங்கின பணத்திலிருந்து மாமாவிற்கு பிடித்தமான சிகரெட்டை வாங்கி போக, அவர் சத்தம் போட்டு அவனை அனுப்பி விடுகிறார். மகன்களின் உதாசினம் மற்றும் ரங்கனின் பிரிவு அவரை அதிகமாக பாதித்து அவர் உயிரை பறித்து விடுகிறது. ஆனால் அவரின் மரணம் பற்றி ரங்கனுக்கு தகவல் தெரிவிக்காமலே எல்லாம் முடிந்து விடுகிறது.

    இது தெரியாமல் வீட்டிற்க்கு வரும் ரங்கன் உடைந்து போய் விடுகிறான். தகப்பனாருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை பணம் செலவாகி விடும் என்று செய்யாமல் தவிர்க்கும் மகன்களை பார்க்கும் போது அவனுக்கு கோபம் வருகிறது. தன் அத்தை கல்யாணத்தின் போது போட்ட நகைகளை விற்று பொருட்கள் வாங்கி வரும் ரங்கனை " பெற்ற மகன்களுக்கே இல்லாத அக்கறை உனக்கு ஏன்" என்று சொல்லி சத்தம் போடும் அத்தையிடம் ரங்கன் வாக்கு வாதம் செய்ய, அத்தை கோவத்தில் நீ வீட்டு வாசல்படி மிதிக்க கூடாது என்று சொல்லி அனுப்பி விடுகிறாள். அந்த வீட்டிற்க்கு மேலும் பல கஷ்டங்கள். வெளியிலிருந்து கேள்விப்படும் ரங்கன் தன்னால் ஆன உதவிகளை செய்ய முற்படுகிறான்.

    மில்லில் ஒரு பெரிய விபத்திலிருந்து முதலாளி மகனை காப்பாற்றும் ரங்கன் அவன்தான் கீதாவை கல்யாணம் செய்து கொள்ள மறுத்தவன் என்பது தெரிந்ததும் அவனையும் அவனது தந்தையையும் கடுமையாக பேசி விடுகிறான். ராஜம்மாளின் மகன் சந்துருவை கடன்காரார்களிடமிருந்து காப்பாற்றும் ரங்கன் அவனுக்கும் மில்லில் வேலை வாங்கி கொடுக்கிறான். சந்திரசேகரின் மகன் சேகர் மனைவியோடு திரும்பி வர அவனையும் வாழ வைக்கிறான்

    சோதனைகளின் உச்சக்கட்டமாக சந்திரசேகரின் வீடு ஏலத்திற்கு வர, அவரது மனைவியை அது கடுமையாக பாதிக்கிறது.. மகன்கள் இருவரும் கை விரித்து விட அவள் நோய்வாய்ப்படுகிறாள்

    அத்தையின் உயிருக்கே ஆபத்து என்று தெரிந்ததும் ஒரு ஆன்மிகவாதியிடமிருந்து ஒரு மந்திர தாயத்து வாங்கி கொண்டு வீட்டிற்க்குள் சுவரேறி குதிக்கும் ரங்கனை (அத்தை வீட்டு வாசல் படி மிதிக்க கூடாது என்று சொன்னதால்) இரு மகன்களும் தாக்க அப்போது உண்மையை சொல்கிறான்.

    சந்திரசேகரின் தொழில் அதிபர் நண்பர் அந்நேரம் ஏலம் போன வீட்டை மீட்டு அதை ரங்கன் பெயருக்கே பதிவு செய்து கொண்டு வருகிறார். மேலும் கீதாவை தன் மகனுக்கு கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். ரங்கனின் பெயரில் வீடு வந்து விட்டது என்று தெரிந்ததும் வீட்டை விட்டு வெளியேற நினைக்கும் தியாகுவையும் ஸ்ரீதரையும் ரங்கன் நீங்க ரெண்டு பேரும் இல்லேன்னா நானும் இந்த வீட்டிலே இருக்கபோறதிலே என்று சத்தம் போட, அவர்களுக்கு ரங்கனின் பாசமும் பண்பும் புரிகிறது. எல்லோரும் மீண்டும் அந்த வீட்டில் சந்தோஷமாக வாழ தொடங்குகிறார்கள்.

    அன்புடன்

    பாகம் 2

    நடிகர் திலகத்தின் ஒரு சில படங்களை பற்றி விமர்சிக்கும் போது சில காட்சிகள் நம்மை வெகுவாக கவரும். அதைப்பற்றி எழத தூண்டும். வேறு சில படங்களை எடுத்துகொண்டோமானால் எதை எழுதுவது எதை விடுவது என்று திகைத்து போய் நிற்போம். அந்த இரண்டாவது ரகத்தை சேர்ந்தது படிக்காத மேதை. நண்பர் சிவன் சொன்னது போல இப்படியும் நடிக்க முடியுமா என்ற மலைப்பு பார்ப்பவர் மனதினில் அலையடிக்கும்.

    NT அறிமுகமாகும் முதல் காட்சியிலிருந்து A Film from Krishnaswamy Bala Movies என்று படம் முடியும் வரையிலும் பின்னியிருப்பார். எப்போதுமே வெகுளி,அப்பாவி வேடங்கள் என்றால் வெளுத்து வாங்கும் NT இதில் முரட்டுத்தனமான விசுவாசமிக்க ரங்கன் கதாபாத்திரத்தை மெருகேற்றி ஜொலிக்க வைத்திருப்பார். சில உதாரணங்கள். மணி விழாவில் குடும்பத்தினரை எல்லாம் நண்பருக்கு அறிமுகப்படுத்தும் காட்சி. எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு செய்யும் NT-யை யார் என்று கேட்க, தூரத்து சொந்தக்கார பையன் என்று ரங்கராவ் சொல்ல அதற்கு " அட போங்க மாமா! தூரத்து, பக்கத்து எல்லாம் சொல்லிக்கிட்டு, யாருமில்லாத அனாதை பய, சின்ன வயசிலிருந்தே நம்ம வீட்டிலே தான் இருக்கான்னு சொல்லுவீங்களா" என சாதாரணமாக சொல்வது, மூன்றாவது மகன் தாய் சொல்லும் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டு சென்று விட, கொடுத்த வாக்கை நினைத்து தாய் கவலைப்பட, அங்கே வரும் NT " நான் பண்ணிக்கிறேன் அத்தை" என்பார். "ஏண்டா நீ பொண்ணை பார்க்க வேண்டாமா?" என்று கேட்கும் போது "வேண்டாம்! வேண்டாம்! நீ பார்த்திடில்லே,அம்புடுதான். காரியத்தை முடி! காரியத்தை முடி!" என்று NT பதில் சொல்லுவது அவ்வளவு அருமையாக இருக்கும்.

    கீதாவை பெண் பார்க்க வரும் மாப்பிளையின் கையை பிடித்து பலம் பார்த்துவிட்டு ஆள் நல்ல பலசாலிதான் என்று முகபாவத்திலேயே வெளிப்படுத்துவது, தன்னை மட்டம் தட்டும் மருமகள்களையும் மகன்களையும் அழகாக பதில் சொல்லி மடக்குவது, இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்த்து நாம் தனியே போய் விடலாம் என்று சொல்லும் மனைவியிடம் கோபப்படுவது (" என்னது பிறத்தியாரா? தியாகுவையும் ஸ்ரீதரையுமா நீ பிறத்தியார்னு சொன்னே? நாங்க இன்னிக்கு அடிச்சிகுவோம்,நாளைக்கு சேர்ந்துகுவோம். இனிமே இந்த மாதிரி பேசினே எனக்கு கெட்ட கோபம் வரும்"), வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் மாமாவிடம் பேசும் பேச்சு (இதை நண்பர் பிரபுராம் ஏற்கனவே எழுதிவிட்டார்), வேலை கொடுக்க லஞ்சம் (1960 லியே அன்பளிப்பு என்ற வார்த்தை வந்து விட்டது) கேட்கும் கிளார்க்கை மானேஜரிடம் மாட்டி விடுவது, முதல் சம்பளம் வந்தவுடன் மாமாவிற்கு பிடித்த Black & White சிகரெட் பாக்ஸ் ஐ வாங்கி கொண்டு போய் நீட்ட, அவர் "உன் மனைவிக்கு சம்பளத்தை கொடுத்தியா" , உடனே NT " இல்லை " என்று casuala-ga சொல்ல, மாமா சத்தம் போட, NT அதற்கு " புரிஞ்சிடுச்சு! தலையை சுத்தி மூக்கை தொடறீங்க. நீ வீட்டுக்கு வந்தது பிடிக்கலேனு நேரடியா சொல்லாம இப்படி சொல்றீங்க" என்று கோபித்து கொள்வதாகட்டும்,கையில் இருக்கும் கட்டை பார்த்து என்னவென்று கேட்க " ஓவர் டைம் பண்ணும் போது கொஞ்சம் கண்ணசந்துடேனா, சுத்தியை கையிலே போட்டுடாங்க" என்று கூலாக பதில் சொல்லுவது, மாமா இறந்து தெரிந்தவுடன் வெடித்து சிதறுவது, மாமாவின் காரியங்களுக்கு செலவு செய்ய மகன்கள் யோசிக்கும் போது எல்லா சாமான்களையும் தானே போய் வாங்கி வருவது, ஏது பணம் என்று கேட்கும் அத்தையிடம் " என் கல்யாணத்திற்கு நீ போட்ட நகையை வித்தேன்" என்று சொல்லுவது, அத்தை கோபித்து கொண்டவுடன் வீட்டுக்கு போகாமல் இருப்பது, அத்தைக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்தவுடன் டாக்டரை பணம் கொடுத்து அனுப்பி வைப்பது, மனைவியிடம் புலம்புவது ("உனக்கு கொஞ்சம் கூட இரக்கம், நன்றி உணர்ச்சியே இல்லை. என்னைத்தானே வீட்டுக்கு வரவேண்டாம்னு சொன்னாங்க, நீ போய் பார்த்துட்டு வரலாம்லே"), வீட்டு வாசலில் அசோகனிடம் "அத்தையையும் சாகடிச்சுடீங்கனா உங்களுக்கு நிம்மதியாடும். நான் இந்த Road-ile நின்னு பார்த்துட்டு போறேன்" என்று உணர்ச்சிவசப்படுவது, தனக்கு உதவி செய்ய வரும் முதலாளி மகனை கீதாவை கல்யாணம் செய்து கொள்ள மறுத்ததை கண்டிப்பது, கிளைமாக்ஸ்-ல் தாக்கப்படும் அவர் அதற்கான காரணத்தை சொல்லுவது ( "மந்திர தாயத்து கொடுக்க வந்த என்னை இந்த தியாகு பய மண்டையிலே அடிச்சிபிட்டான்"), வீட்டை விட்டி வெளியேற முற்படும் மகன்களை தடுத்து நிறுத்துவது (ஏண்டா, நீங்க வீட்டை விட்டு விட்டு வெளியே போனா, என் மகன்களை வீட்டை விட்டு துரத்திட்டியேனு மாமா என்னக்கு சாபம் கொடுக்க மாட்டாரு?")

    ஒரே வரியில் சொன்னால் அவர் அறிமுகமாகும் முதல் காட்சியிலிருந்து கிளைமாக்ஸ் வரை எல்லா காட்சிகளையுமே குறிப்பிட வேண்டும்.

    இந்த படத்தின் மற்றொரு தூண் ரங்காராவ். அவரது மிக சிறந்த படங்களை எடுத்தால் அதில் படிக்காத மேதைக்கும் கண்டிப்பாக இடம் உண்டு. அவருக்கே உரித்தான அந்த casualness இதிலும் வெளிப்படும். எல்லாவற்றையும் easy-aga எடுத்துக்கொள்ளும் மனோபாவம் ( "அவன் Point of View-vile அவன் சொல்லறது கரெக்ட்,இவன் Point of View-vile இவன் சொல்றதும் கரெக்ட்."). NT-யை வெளியே போக சொல்லிவிட்டு அவர் படும் வேதனை, செலவை குறைக்க சொன்னவுடன் மருமகள்கள் தான் சிகரெட் குடிப்பதை குத்தி காட்ட, சிகரெட் பாக்ஸ்-ஐ தூக்கி எரிந்துவிட்டு,கையில் புகையும் சிகரெட்டை கடைசியாக ஒரு இழுப்பு இழுத்துவிட்டு தூக்கி போடுவது கிளாஸ். எங்கிருந்தோ வந்தான் பாடல் காட்சி அவரது மற்றொரு சிறப்பு.

    கணவனுக்காக வாழும் மனைவியாக சௌகார் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பார். கண்ணாம்பா என்றாலே சோகம் என்பதற்கு இதுவும் விதி விலக்கல்ல. அசோகனும் முத்துராமனும் மகன்கள். சந்தியாவும் வசந்தாவும் மருமகள்கள். வீட்டை விட்டு ஓடி போகும் மகனாக T.R. ராமசந்திரன், TRR காதலிக்கும் பெண்ணாக ஏ.சகுந்தலா,விதவை மகளாக சுந்தரிபாய். கடைக்குட்டி கீதாவாக E.V.சரோஜா, NT-kku உதவும் தம்பதிகளாய் T.S..துரைராஜ், T.P.முத்துலக்ஷ்மி எல்லோரும் குறைவற செய்திருப்பார்கள்.

    கே எஸ் ஜியின் Down to Earth வசனம் படத்திற்கு மிக பெரிய பலம். “மாமா” இசை அமைப்பில் பீம்சிங் இயக்கிய மிக சில படங்களில் இதுவும் ஒன்று (மற்றொன்று பாலாடை). பாடல்கள் எல்லாமே தேனிசை பாடல்கள்.

    சிந்தையிலும் பெரிய - E.V.சரோஜா டான்ஸ் பாடல்

    பக்கத்திலே கன்னி பெண்ணிருக்கு - TRR, ஏ.சகுந்தலா பாடுவது

    சீவி முடிச்சு சிங்காரிச்சு - E.V. சரோஜவை கிண்டல் செய்து NT பாடுவது

    இன்ப மலர்கள் - இந்த பாடலை விட பாடலின் ஆரம்பத்தில் வரும் Prelude ரொம்ப பிரபலம். இலங்கை தமிழ் சேவை வானொலியில் மாலை 4 மணிக்கு தினமும் இது ஒலிபரப்பாகும்.

    ஒரே ஒரு ஊரிலே - இதை பற்றி எதுவும் சொல்ல தேவை இல்லை

    உள்ளதை சொல்வேன் - NT பாடுவது.

    எங்கிருந்தோ வந்தான்- சீர்காழியின் டாப் 10 பாடல்களில் ஒன்று. கிருஷ்ண பரமாத்மாவாக தோற்றமளிக்கும் NT எந்த வேஷவும் தனக்கு கச்சிதமாக பொருந்தும் என்பதை நிருபித்திருப்பார்.

    படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு - சௌகார் பாடும் பாடல்.

    இது தவிர குழந்தைகளுக்கு நடன பயிற்சி அளிக்கும் E,V.சரோஜா பாடும் ஒரு பாடலும் உண்டு.

    இந்த படம் வியாபார ரீதியாகவும் மிக பெரிய வெற்றி பெற்ற படம் என்பதற்கு ஒரு சான்று, ஆசியாவிலேயே மிக பெரிய திரையரங்கமான மதுரை தங்கம் தியேட்டரில் 112 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது.

    ஒரே வரியில் சொல்வதென்றால் நடிகர் திலகத்தின் மணி முடியில் ஒரு வைரம்.

    By Prabhu Ram (P_R)


    Yes. The thing is, he works us to such an emotion high with his demeanor that after a point every single moment is touching.
    I guess it is pretty much like what they say about stand up comedy. It is the ice-breaking and getting the first laughs that is the problem. But once you've got the audience going you every joke is going to get a laugh.

    Similarly here, Sivaji pierces through my cynicism and thereafter I am totally captivated. Every line, every scene works. The scene where he learns Sundari Bai's son has worked overtime to redeem the jewel he stole and pawned, all he says is: "என் மாமா வீட்டு பிள்ளைங்க, யாருமே கெட்டவங்க இல்லை". Regard for the family dominates every fibre of his being. Extremely moving. Look at the time when he says that, it is when Asokan and Muthuraman are still at their worst behaviour.


    When asked about the money for spending on the tenth day ceremony: உன் பணம் தானே அத்த...நீ தானே நகை பண்ணி கொடுத்தே, அதைத் தான் வித்தேன்....மாமாவுக்கு இல்லாம பின்ன இந்த அம்மா போட்டு மினுக்குறதுக்கா?. It is uncharitable of him to talk about his wife - who is the most undemanding person - in such a manner. But even she knows that he is saying that out of love for RangaRao. That it seems obvious to him, that that is the course of action, is moving in itself. And his expression heightens the emotions. It is not even selflessness, in the normal meaning of putting others before oneself. But truly breathing meaning to the word selflessness in not even being aware of oneself as a separate entity, and relegating one's interest being a natural, unconscious response.

    The scene where he meets SundariBai gathering wood when he running to meet the sAmiyAr is just fantastic. "உனக்கு அறிவு இருக்கா" he rails at her for not coming to his home directly. Her wrongs do not even register with him. This is not even a நன்னயம் செய்து விடல் or a "they know not what they are doing", this is just being a much larger person than anyone around him. In the end also, when Sowcar Janaki asking him about his bleeding head, he says dismissively: "இந்தப்பய அடிச்சுட்டாம்....போறான் விடு"

    His posture with when he talks to the piLLaiyAr, is just earnestness personified. When the sAmiyAr asks him to bathe, in one shot he plunges into the pond and hastily crawls back out to her.

    .....

    SVR is terrific. Their scenes together are simply on a different level. Such ease of performance.
    அடிக்கடி தான் நினைச்சிக்கிறீங்களா...எனக்கு சதா உங்க நினைப்பு தான்.

    He describes his work as 'nothing too difficult' and elaborates on his salary: எட்டு மணிநேரம் வேலை பார்த்தா த்ரீ ருபீஸ்...ஓவர்டைம் பார்த்தா ட்டூ ருபீஸ்...அகமொத்தம் ஃபைவ் ருபீஸ்.The way he pronounces the 'rubees' has a childishness that cannot be explained, nor can one imagine it being taught. Only experienced. So much so that the 'உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன், வேறொன்றும் தெரியாது' is rendered an unnecesaary elaboration - when after all he exudes that in every action, every word, intonation.

    ....

    When he asks him why he bought him cigarettes and didn't buy his wife anything, he says

    "ஓ..இப்படி (தலையை சுத்தி மூக்கைத் தொடுவார்)...இப்படி கேக்குறீங்களாக்கும். ஏண்டா வந்தேங்கறதை....ஏண்டா சிகரெட் வாங்கிட்டு வந்தேன்னு"

    In their whole exchange, their are parts where his mumbling is even unintelligible, still they are communicating. Their is a free flow of emotions on the surface and simultaneously a torrent of emotional running deeper - which these two fantastic actors make it so evident to us, the audience. We think we have perceived a miscommunication. That we 'understand' SVR's concerns, but the simple Rangan is not getting it. But at the same time we are conscious that they share a communication whose depth is just beyond what we can perceive. A bond so strong, that while we are moved, we perhaps cannot entirely dismiss a jealousy we feel for their bond.

    .....

    In the end he says, with a bleeding head: ஏண்டா நான் திருடன்னு நினைச்சு தானேடா அடிச்சீங்க....இப்பொ நான் நல்லவன்னு தெரிஞ்சதும் ஏண்டா வீட்டை விட்டு போறேன்றீங்க?

    The logic is astounding, isn't it? Sounds like wise words that tumble out of a child's mouth and stun us adults, who considered ourselves the child's intellectual superiors all along.

    Of course they will leave. That is their natural reaction (and so too goads Sundaribai). But the way Rangan puts it, he points out that what they are abandoning is 'goodness itself'. That is what he regards the house to be. An embodiment of goodness. Why on earth, will people who seek good, leave it? Even in their misconception of taking him to be a thief, he can see the goodness of their thinking that ' a thief deserves to be beaten'. Jaw dropping how he is able to see goodness every-bloody-where!

    And he is just incapable of taking offence. When Kannamba thoughtlessly asks him if he has indeed stolen like those around accuse him (and we the audience are annoyed with her for asking Rangan such a question), Rangan says: என்ன அத்த நீயும் வரவர என்னை சந்தேகப்பட ஆரம்பிச்சுட்ட. The way he says it, it is abundantly clear he has not taken it to heart. Merely pointing out the silliness in her supposition.

    And the cherry is of course his response to Kannamba when she asks him why he didn't come by the door. I can't recall a moment which matches this in stature in being simultaneously hilarious and poignant.

    திருவாசகத்துக்கு உருகாரும் இப்படத்துக்கு உருகுவார்.

    By Gopal,S.


    படிக்காத மேதை ரங்கன் மூடனுமல்ல ,உலகம் தெரியாதவனும் அல்ல. படத்தின் தலைப்பே சொல்வது போல formal education தர படாத ,transparency கொண்ட, நேரிடை சிந்தனை கொண்ட (no crookedness ), utility man என்று சொல்ல படும் நல்லவன் .(வெகுளி என்ற சொல்ல விரும்பினால் அது உங்கள் விருப்பம்)

    பின்னாளில் பிரபலமான Emotional Intelligence (intelligence Quotient என்ற பிரபல மனித வள மதிப்பீட்டு முறைக்கு மாற்றானது) என்பதை ஒட்டி Forest Gump போன்ற படங்கள் 1990 களில் பிரபலம் அடைந்தது. ஆனால் 1960 இல் இதை நம் கே.எஸ்.ஜி, பீம்சிங் ,சிவாஜி இணைவு கொடுத்ததை நாம் அவசியம் பாராட்டியே ஆக வேண்டும்.

    இதில் முக்கிய அம்சங்கள் -
    Emotional Intelligence, or EI, describes an ability or capacity to perceive, assess, and manage the emotions of one's self, and of others.* EQ, or Emotional Quotient, is how one measures Emotional Intelligence.*

    Impulse Control- Delay his own gratification by allowing others ahead on priority.
    Self Awareness-Understand his own moods and Emotions .
    Self Management-More Action and utility oriented.
    Social Awareness- Ability to connect and develop Rapport with new people.
    Relationship Management-Understand other's emotions and treat them as they wish to be treated.(Empathy)

    பல ஆய்வுகள் நடத்தி ,மனிதர்களின் திறனை,வாழ்க்கையில் அடைய போகும் உயரங்களை வெற்றிகளை நிர்ணயிக்க IQ போதுமானதல்ல என்று கண்டு பின்னாளில் develop ஆனா ஒரு concept EQ . ஆனால் நமக்கு சிவாஜியின் வழி 1960 இலேயே கிடைத்தது. நம் இனம் அதை புரிந்து ஆதரித்ததா என்பது வேறு. ஆனால் 1960 யின் அதிக பட்ச வசூலை கொடுத்தது தமிழகம்.

    நடிகர்திலகத்தின் நடிப்பிலேயே மிக மிக சிறந்த படங்களில் ஒன்று. பாத்திரத்தை மிக மிக துல்லியமாக புரிந்து கொண்டு நூல் பிடித்து accurate ஆக ரசிக்கும் படி கலை நுட்பத்துடன் பின்னியிருப்பார்.(What a Spontaneity???)
    Last edited by Gopal.s; 29th July 2014 at 06:25 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Thanks KCSHEKAR thanked for this post
    Likes KCSHEKAR, kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #602
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    17/8/1963 இல் முத்து லக்ஷ்மி-சண்முகம் தம்பதியருக்கு மகனாக பிறந்த (தாய்,மகன் இருவரும் சிவாஜி ரசிகர்கள்) எஸ்.ஷங்கருக்கு செவாலியே சிவாஜி விருது தந்த விஜய் டி.வீ க்கு நன்றிகள்.



    இவர் தாய் சிவாஜி பட பாத்திரத்தின் பெயரை வைத்திருந்தால் , அது 17/8/1963 க்கும் முன் வெளியானதாக இருக்க வேண்டும். நினைவு தெரிந்து 1952 முதல் 1963 வரை வெளியான படங்களில், அன்னையின் ஆணை 1958(அப்பா சிவாஜி பெயர்), பலே பாண்டியா 1962 (விஞ்ஞானி ரோல் பெயர்) ஷங்கர் என்று இருப்பதால் ,பலே பாண்டியா நினைவான பெயரே ஷங்கருக்கு சூட்ட பட்டிருக்க வேண்டும்.
    Dear Gopal Sir

    You are great sir

    C.Ramachandran.

  5. #603
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    கோபால் (இனி சார் மோர் எல்லாம் கிடையாது அன்பரே!),

    உங்களுடைய தமிழ்ப் புலமை மெய் சிலிர்க்க வைக்கிறது - குறிப்பாக, கவிதை. அதை விட பெரிய விஷயம் - உங்களுடைய வேகம் - நேற்று தான் சூளுரைத்தீர்கள் - சுடச் சுட உடனே - கணமும் வீணாகாமல்!!

    படிக்காத மேதை - மும்மூர்த்திகளின் ஆய்வு - உங்களுடையது சிறிதே ஆயினும் - அருமை.

    என் சிற்றறிவுக்கு எட்டியவரை, அவருடைய சரளமான மற்றும் spontaneous முதல் பத்து பெர்பார்மன்ச்களில் இது முதல் மூன்று இடங்களில் வரக் கூடியது என்பேன். மற்ற இரண்டு பாரிஸ்டர் மற்றும் விக்ரமன்/விஜய் (எனக்கு!)

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி

  6. #604
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    <Dig>

    அறிவு ஜீவி பட்டத்திற்கு நன்றி. பரவாயில்லை இப்படியாவது அறிவு ஜீவி ஆகி விட்டோம். 03-11-1989 என்ற ஒரே தேதியில் ஒரே பாரகன் திரையரங்கில் இரண்டு படங்கள் எப்படி வெளியாகியிருக்க முடியும்? அல்லது ஒன்று பகல் காட்சியும் மற்றொன்று ரெகுலர் காட்சிகளாக நடைபெற்றதா? அப்படி இருக்கும் பட்சத்தில் பட்டியலில் ஒரு படத்தின் பெயர் மட்டும்தானே இருக்கிறது? என்ற கேள்விகளுக்கு பதில் தராமல் வேறு ஏதேதோ எழுதி அருமை நண்பர் நடிகர் திலகத்தின் மேல் உள்ள வெறுப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பரவாயில்லை நன்றி நண்பரே!

    பாரத் பட்டம் பற்றியும் பாரத் ரத்னா பற்றியும் பதிலுக்கு பதில் லாவணி பாட நாங்கள் விரும்பவில்லை. இந்த திரியைப் பொறுத்தவரை எம்ஜிஆர் அவர்களை பற்றியோ அவர்தம் படங்களைப் பற்றியோ எதிர்மறையான விமர்சனங்கள் இங்கே முன் வைக்கப்படுவதில்லை. அதை நாங்கள் அனுமதிப்பதும் இல்லை. நடிகர் திலகத்தைப் பற்றிய தவறான தகவல்கள் எம்ஜிஆர் அவர்களின் திரியில் வரும்போது மட்டுமே அதற்கு இங்கு மறுப்பு தெரிவிக்கிறோம். ஆனால் நடிகர் திலகத்தைப் பற்றிய தேவையற்ற கமன்ட்ஸ் எம்ஜிஆர் திரியில் பலமுறை வந்திருக்கிறது.அதன் காரணமாக இங்கே ஏதேனும் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி விமர்சன பதிவுகள் வந்தால் அதில் கூட ஆட்சேபத்துக்குரிய வரிகள் ஏதேனும் இருப்பின் அதை நீக்கியிருக்கிறோம்.

    ஒன்றை மட்டும் குறிப்பிட வேண்டும். சந்தடி சாக்கில் [வழக்கம் போல்] 100 நாட்கள் ஓடிய மோட்டார் சுந்தரம் பிள்ளை [மதுரை கல்பனா] ராஜபார்ட் ரங்கதுரை [சேலம்] போன்ற படங்களை ஓடவில்லை என்று சேர்த்து விட்டீர்கள். பராசக்தி முதல் எந்தப் படமும் ஓடவில்லை என்று சொல்லாமல் விட்டீர்களே, அது வரை மகிழ்ச்சி. அதனால் என்ன அடுத்த முறை நீங்கள் பதிவிடும்போது அந்த குறையையும் போக்கி விடுங்கள்.

    மீண்டும் நன்றி நண்பரே!

    <end dig>

    அன்புடன்

  7. Thanks kalnayak thanked for this post
    Likes Gopal.s liked this post
  8. #605
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    367
    Post Thanks / Like
    மோட்டார் சுந்தரம்பிள்ளை
    100வது நாள் விளம்பரம்



  9. Thanks Russellmai, Russellbpw, Gopal.s, kalnayak, eehaiupehazij thanked for this post
    Likes Russellbpw, Gopal.s liked this post
  10. #606
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சில சமயம் மனித மனங்களை புரிந்து கொள்வது விசித்திரமாக உள்ளது.



    1)தேங்கி நின்று விட்டார்களோ என்று சந்தேகம் வரும் படி ,இன்றைய சூழ்நிலை,இதனால் கிடைக்கும் புதிய வெளிச்சங்கள்,புதிய அறிவு இவற்றினால் தேர்ந்தெடுப்பு நிகழ வேண்டும்.



    2)வளர்ந்த மனநிலையில் regression என்ற பயிற்சியினால், heritage ,Arts,Fine arts and History என்பதை பிரத்யேகமாக ரசிக்கும் பயிற்சி அடைய வேண்டும்.



    3)Nostalgia என்பது ஒரு புள்ளி வரை மகிழ்வு,கிளர்ச்சி தர கூடியதெனினும், அதிக அளவில் உழன்றால், அறிவின் வாசல்களை மூடி விடும்.



    4)ஆவணங்கள் என்பது ஒரு stamp collection போல நல்ல விஷயமே. அதற்கென்று ஒரு சம்பந்தமில்லாத பேசும் படத்தின் அட்டையை (1954 ஜூன்) போட்டு விட்டு காலர் தூக்கும் போக்கும் ,அதற்கு திலக பட்டங்களும் ,யப்பா ..... பொறுக்கலைடா ...சாமி......



    5)ஒரு முயன்று ,பல தெரிந்த விஷயங்களை தொகுத்து,தெரியாததை தேடி கொணர்ந்து, தெரிந்த விஷயங்களுடன் இணைத்து, உழைத்து, இன்றைய அறிவின் வெளிச்சத்தில், புதிய பார்வையில் நடிகர்திலகத்தை கொண்டு வந்தால் ,அதை உணர்ந்து ரசிக்க ஒரு ஆத்மா கூட இல்லை என்றால், சிவாஜி ரசிகர் என்று பீற்றி கொள்வதில் என்ன இருக்கிறது?



    6)எந்த ஒரு சராசரி மனிதருக்கும், அன்றைய வளர்ந்த சூழ்நிலையில் பத்திரிகைகள்,சினிமா,ரேடியோ இவற்றின் பரிச்சயம் இருக்கும்.இரண்டு ஒத்த நண்பர்கள் உரையாடி கொள்ளும் சமாச்சாரங்கள். ஆனால் வேலை மென கேட்டு வந்த போதே நிராகரிக்க பட்ட குப்பை கூளங்களை கொட்டும் இடமாக, பொது தளங்கள் உபயோக பட ஆரம்பித்து விட்டன. இதனால் தேர்வு செய்து ,வெளியிட படும் உன்னதங்கள்,அதற்குரிய கவன ஈர்ப்பை இழக்கின்றன.ஒரு குறைந்த பட்ச பொறுப்புணர்ச்சி கூட இன்றி குப்பைகள் பக்கம் பக்கமாக நிரப்ப பட்டால்?



    7)இந்த சூழ்நிலையில், சிறிதே ஆயாசம் எழுவது தவிர்க்க முடியாதது. நாம் சரியான இடத்தில் தவறானதை செய்கிறோமா, அல்லது தவறான இடத்தில் சரியானதை செய்கிறோமா என்று?ஆரம்பிக்கும் போது சரியான இடத்தில் சரியானதை செய்ய போகிறோம் என்று உற்சாகமாக துவங்கியவன், இன்று சராசரி தனம்,பாமர மனநிலை,வேண்டாத விமரிசனங்கள்,அரசியல்,தனி நபர் காழ்ப்பு,வேண்டாதவற்றில் கவன குவிப்பு,தவறான திரிகளை முன்னுதாரனம் போல நினைத்தல்,புகழுக்கு ஏங்குதல் போன்றவற்றில் திளைத்து, தவறான இடத்தில் தவறானதை செய்கிறோமோ என்று விரக்தி மேலெழுகிறது.



    8)உதாரணங்கள்- நான் மிக மதிக்கும் ராகவேந்தர் , முதலில் என்னுடைய தொடருக்கு அவருடைய பதிவுகளில் மதிப்பளித்து வந்தார். ஒரு கருத்து முரண்பாடு ,அவர் அதை நீக்க காரணமானது. அப்போது சிவாஜியின் மகத்துவத்தை விட ,தனி நபர் காழ்ப்புதானே முன்னிற்கிறது?அதே போல இன்னொரு திரியில் என் நண்பர் பதிவிட்டு வந்தார். அவருக்கு நிறைய பிரதி கவனிப்பு (response hits )கிடைத்ததை கண்டு ,இன்னொரு நண்பர் அங்கு பதிவிட்டு, இரவு முழுவதும் கண் விழித்து, கணினியை விட்டு வெளியேறி,உள்வந்து ,400 முறைக்கு மேல் செய்து ,அவர் பதிவுக்கு பிரதி கவனிப்பு (ஹிட்ஸ்) அதிகம் என்று காட்ட தலைப்பட்டுள்ளார்.



    9)இதில் எழுதும் முறையோ,புதுமையோ,புது வெளிச்சங்களோ எங்கே வரும்? கோபால் என்பதை மறந்து எழுத படும் முறை,எழுதிய விஷயங்கள் அல்லவா கொண்டாட படவோ,நிராகரிக்க படவோ வேண்டும்?



    10)இப்போது எனக்கு சிறிதே சுணக்கம் உள்ளது. புதிய தொடர் ஆரம்பிக்கும் எண்ணம் இருந்தது. ரசிகன் இல்லாத அழகும்,கலையும் பெருமை கொள்ளாது. அதனால் ஒத்தி வைத்து (சரியான ஒரு மனநிலை அல்லது மூட் இல்லை)வேடிக்கை பார்க்கவே போகிறேன்.



    மேற்கூறியவற்றுக்கு ,நண்பர்களின் சரியான புரிதல் பற்றிய பார்வையை பதிவு செய்து,எனக்கு தெளிவு தர வேண்டுகிறேன்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. #607
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Thank you siva sir. We need similar help for Parthal pasi theerum,rajapart rangadurai..
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. #608
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    சில சமயம் மனித மனங்களை புரிந்து கொள்வது விசித்திரமாக உள்ளது.





    மேற்கூறியவற்றுக்கு ,நண்பர்களின் சரியான புரிதல் பற்றிய பார்வையை பதிவு செய்து,எனக்கு தெளிவு தர வேண்டுகிறேன்.
    Dear Gopal Sir,

    I have also started realizing about this even though late yet better late than never.

    When it comes to expressing our opinion, I feel people in whichever thread they may be, "are not as broad minded" as truthful as few.

    When they say, it is just fine ..but when we respond appropriately for the foul games that they play , then we are stamped as "Fault" ! Quite Strange !

    People who have better authentic records in soft copy and proofs do watch this thread and still they remain too quiet especially when controversies arise.

    They know very well that they can publish those proofs and documentary evidences to handle the deliberate lies with left hand. Unfortunately, they are not doing so.

    May be they are more into business these days and fear of business loss may be one reason.

    Anyway, I have decided today that rather than giving reply at other threads for their false news spreading activities, I shall continue here spreading the name and fame of Nadigar Thilagam.

    There will certainly a big change in me atleast from now on ...

    Excellent writeup on Padikaadha Medhai - The nuances of performance re-defined by NT in this film !

    Best Regards
    RKS

  13. Thanks eehaiupehazij thanked for this post
  14. #609
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    காட்சிப்பிழை என்ற முகநூலில் கீழ்கண்ட செய்தி இருந்தது ..எவ்வளவு உண்மையோ தெரியாது ..ஆனால் சுவாரஸ்யமாக இருந்தது .எனவே பகிர்கிறேன்.

    நடிகர் திலகத்தின் தவப்புதல்வன் ரிலீஸ். சென்னை வடபழனி கமலா திரையரங்கில் முதல் காட்சி ஹவுஸ்புல். நண்பர்களோடு வந்திருந்த பதினாறு வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் டிக்கெட் கவுண்டரில் ஐந்து டிக்கெட்டுகள் கேட்கிறார். ஹவுஸ்புல் போர்ட் பார்க்கலையா என்று கவுண்டரில் இருந்தவர் சொல்லிவிட்டு, அடுத்த காட்சிக்கு வா என்று திருப்பி அனுப்புகிறார்.
    “எங்கப்பா இந்த படத்துலே நடிச்சிருக்காரு. அதனாலே முதல் காட்சியே பார்த்தாகணும். பிரெண்ட்ஸையும் கூட்டி வந்திருக்கேன்”
    “அப்படின்னா மேனேஜரை போய் பாருப்பா” என்கிறார் கவுண்டரில் இருந்த ஊழியர்.
    மேனேஜரை போய் இளைஞர் பார்க்கிறார்.
    “என் பேரு பிரபு. எங்கப்பா இந்த படத்துலே நடிச்சிருக்காரு. முதல் காட்சியே பிரெண்ட்சோட பார்க்கணும்னு ஆசைப்படுறேன். ஐஞ்சு டிக்கெட் கொடுங்க”
    “யாரு உங்க அப்பா?”
    “நடிகர் திலகம் சிவாஜி கணேசன்”
    மேனேஜர் வாய்விட்டு சிரித்துவிட்டார். “ஏம்பா. சிவாஜி பையன் கவுண்டரில் வந்துதான் டிக்கெட் கேட்பானா? எனக்கெல்லாம் சின்ன வயசுலேயே காது குத்திட்டானுங்கப்பா”
    என்ன செய்வது என்று புரியாமல், அடுத்த காட்சிக்கு நிற்கும் நீண்ட வரிசையில் போய் நிற்கிறார்.
    கூட்டத்தை கட்டுப்படுத்த கையில் லத்தியோடு அலைந்துக் கொண்டிருந்த தியேட்டர் ஓனர் வி.என். சிதம்பரம், பிரபுவை கூட்டத்தில் பார்த்ததுமே பதறிப் போகிறார். நடிகர் திலகத்தின் குடும்ப நண்பரான அவருக்கு பிரபுவை நன்றாகவே தெரியும். விஐபி பாக்ஸில் பிரபுவுக்கும், அவரது நண்பர்களுக்கும் உடனடியாக இருக்கை ஏற்பாடு செய்கிறார்.
    இடைவேளையில் சிதம்பரமே டீ, காபி, பாப்கார்ன் எடுத்துக்கொண்டு போய் பிரபுவை சமாதானப்படுத்துகிறார்.
    “பசங்களுக்கு உங்களை தெரியாது. அதனாலேதான் அலைய விட்டுட்டானுங்க. அப்பா கிட்டே சொல்லிடாதீங்க தம்பி. கோவக்காரரு. கன்னாபின்னான்னு என்னை திட்டி தீர்த்துப்புடுவாரு”
    “கண்டிப்பா சொல்லமாட்டேன் அங்கிள். அதே மாதிரி நீங்களும் என்னை இங்க பார்த்ததை அவருகிட்டே சொல்லிடாதீங்க. ஸ்கூல் கட் அடிச்சிட்டு, கூட்டுக்கார பயல்களோட சினிமா பார்த்தியா படவான்னு சொல்லி செம அடி அடிச்சிடுவாரு” என்றார் பிரபு.
    கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் கழித்து இந்த சம்பவத்தை மணியனின் இதயம் பேசுகிறது இதழில் எழுதினார் சிதம்பரம். படித்துவிட்டு சிவாஜி, பிரபுவை செம அடி அடித்தாரா என்று தெரியவில்லை.

  15. Thanks Russellmai thanked for this post
    Likes Murali Srinivas liked this post
  16. #610
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    <Dig>

    நாம் கேட்ட கேள்விக்கும் நண்பர் சொன்ன பதிலுக்கும் சம்பந்தமேயில்லை. ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒரு குறிப்பிட்ட அரங்கில் ஒரு படம் ரெகுலர் காட்சிகளில் வெளியானதாக முதல் பதிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது, அதற்கு அடுத்த பதிவில் ஒரு excel sheet போல் கட்டங்கள் அடங்கிய அதே ஆண்டில் மறு வெளியீடு கண்ட படங்களின் பட்டியலை பதிவு செய்திருக்கிறார். அது நண்பரே முன்பு எப்போதோ எழுதி அனுப்பி ஒரு பத்திரிக்கையில் வெளியான பக்கங்களின் நகல் பதிப்பு என்பதும் புரிகிறது. ஆனால் இப்போது [அதாவது] முதல் பதிவில் எழுதியபடி அந்த நாளில் வெளியாயிற்று என்று சொல்லப்பட்ட படம் இரண்டாவது பதிவில் இடம் பெற்ற பட்டியலில் இல்லை. அந்த பட்டியலில் ஒரே அரங்கில் இரண்டு படங்கள் ஒரே தேதியில் இடம் பெற்றிருந்தால் கூட இந்த கேள்வியே வந்திருக்காது. அது இல்லாத காரணத்தினால்தான் கேள்வி வந்தது. மேலும் அதே 1989-ல் ஸ்ரீனிவாச அரங்கில் வெளியானது என்றும் முதல் பதிவில் சொல்லப்பட்டதே அந்த தகவலும் பட்டியலில் reflect ஆகவில்லையே என்பதனாலும்தான் கேட்டோம். நாம் என்ன சொல்கிறோம் என்பது புரிந்தும் கூட நண்பர் நடிகர் திலகம் மேல் உள்ள வெறுப்பை பதிவு செய்வதற்கு இதை பயன்படுத்திக் கொண்டார் என்பது புரிகிறது. சரி இது வழக்கமான ஒன்றுதான். இதை பற்றி பேசி பயனில்லை.

    <end dig>

    அன்புடன்

    RKS, நீங்களும் இதை இத்துடன் விட்டு விடுங்கள்.

    சிவா, MSP விளம்பர பதிவிற்கு நன்றி.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •