-
4th August 2014, 11:53 PM
#2951
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
esvee
கன்னட பாடல் . மனதை மயக்கும் பாடல் .
இசை - ஜி .கே .வெங்கடேஷ் - இசை வேந்தன் பி.பி. ஸ்ரீனிவாஸ்
படம் - பந்காரத மனுஷ்யா
நடிகர் ராஜ்குமார் . வாத்தியார் ஸ்டைலில் பாடிய காட்சி அருமை .இயற்கையான காட்சிகள் . இசையும் பாடலும்
பல முறை கேட்க சொல்லும் . ஒரு காட்சியில் உழைக்கும் பெண்மணி குழந்தைக்கு பாலூட்டும் காட்சியில் ராஜ்குமார்
அந்த ஏழை பெண்ணுக்கு பணம் தரும் காட்சி கண்ணீர் வர வைக்கும் . அருமையான பாடல் .
இதே பங்கரத மனுஷ்யாவில் இரண்டு மிகப்பிரபல பாடல்கள்
பாளா பங்கார நீனு இசையரசியின் குரலில் மிகப்பிரபல பாடல்
ஆஹா மைசூரு மல்லிகே ஜுண்டு மல்லிகே பி.பி.ஸ்ரீனிவாஸும், இசையரசியும் அமர்க்களப்படுத்தும் பாடல் (வாசு ஜி வாங்கோ வாங்கோ வந்து ஆதரவு தாங்கோ தாங்கோ)
-
4th August 2014 11:53 PM
# ADS
Circuit advertisement
-
5th August 2014, 05:18 AM
#2952
Junior Member
Newbie Hubber
சற்றே யோசித்தால் ,சங்கீதம் என்பது சத்தங்களின் ,சுத்தமான,சுகமான, கணித கூட்டு.
மேளகர்த்தா 72 இல் ஆரோகணம்,அவரோகணம் 7 ஸ்வரங்களையும் அடக்கி ,ஏற்ற,இறக்கம் அதே வரிசையில் அமைந்து,ஸ வில் தொடங்கி ஸ வில் முடிய வேண்டும் என்று பார்த்தோம்.
இப்போது உங்களுக்கு ஒரு சுதந்திரம் வழங்குகிறேன்.சுரங்களை எப்படி வேண்டுமானாலும் மாற்றி போடுங்கள். ஸ ரி க ம ப த நி என்று இல்லாமல் ஸ ப க ம த ரி நி என்று போட்டு கொள்ளுங்கள். 12 கூட்டில் எத்தனை சாத்தியம்? அதே போல ஆரோகணம்,அவரோகணம் இவற்றில்
மேளகர்த்தா போல ஸ ரிகமபதநி ஸ ,ஸ நிதபமகரிஸ என்று இல்லாமல்
ஆரோகணம் திருப்பி போடாமல் இஷ்டத்திற்கு போடுங்கள். இப்போது எத்தனை சாத்திய கூறுகள்?
இப்போது 7 சுரங்கள் இல்லாமல் 6 போதும்,5 போதும், அதிலும் ஆரோகணத்தில் 7,6,5,4அவரோகணத்தில் 6 ,5,4,7 என்று சமத்துவ ,ஒழுங்கு எதிலும் சேராமல், இஷ்டம் போல 12 சத்தங்களை வைத்து விளையாடுங்கள் என்றால்?(Sampurna - 7 note scale,Shadava - 6 notes,Audava - 5 notes,Svarantara - 4 notes)
1000 க்கும் மேற்பட்ட ராக சாத்தியங்கள்.ஒவ்வொரு மேளகர்த்தாவிற்கும் ,
ஒன்றிலிருந்து 25 வரை ஜன்ய சாத்தியங்கள்.
உதாரணம்-(For first melakarta )Black-ஆரோகணம்(Ascending).Red-அவரோகணம்(Descending)
1 Kanakāngi S R1 G1 M1 P D1 N1 S S N1 D1 P M1 G1 R1 S
Kanakāmbari S R1 M1 P D1 S S N1 D1 P M1 G1 R1 S
Kanakatodi S R1 G1 M1 P D1 S S N1 D1 P M1 R1 S
Karnātaka Shuddha Sāveri S R1 M1 P D1 S S D1 P M1 R1 S
Latantapriya S R1 G1 M1 P D1 S S D1 P M1 R1 S
Lavangi S R1 M1 D1 S S D1 M1 R1 S
Megha S R1 M1 P D1 N1 D1 P S S N1 D1 P M1 R1 S
Rishabhavilāsa S R1 M1 P D1 S S D1 P M1 R1 M1 R1 S
Sarvashree S M1 P S S P M1 S
Suddha Mukhāri S R1 M1 P D1 S S N1 D1 P M1 G1 R1 S
Tatillatika S R1 M1 P D1 S S D1 P M1 R1 S
Vāgeeshwari S R1 G1 M1 P D1 S S D1 M1 P G1 R1 S
அடுத்து 12 சத்தங்களை சுரங்களை பதிக்கிறேன்.
Last edited by Gopal.s; 5th August 2014 at 07:27 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
5th August 2014, 07:20 AM
#2953
Senior Member
Diamond Hubber
Gopalji.. சின்ன வயசுல மேத்ஸ் கிளாஸை கட்டடிச்சதுக்கு இப்போ வருத்தப்படுகிறேன்..
ம்ம்... எல்லா ராகங்களுமே ஸ-வில் ஆரம்பித்து ஸ-வில்தான் முடியுமா ? அதுக்கும் exceptions இருக்கா ?
-
5th August 2014, 07:31 AM
#2954
Senior Member
Seasoned Hubber
கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையிலிருந்தே துவங்கியிருக்கும் கோபால் சார்... தொடருங்கள்...
இத்தனை நாள் நீங்கள் போட்ட சத்தங்களை இப்போது தாங்கள் போட்டிருக்கும் சத்தங்கள் மிஞ்சி விட்டன. சூப்பர்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th August 2014, 07:38 AM
#2955
Junior Member
Newbie Hubber

Originally Posted by
madhu
Gopalji.. சின்ன வயசுல மேத்ஸ் கிளாஸை கட்டடிச்சதுக்கு இப்போ வருத்தப்படுகிறேன்..
ம்ம்... எல்லா ராகங்களுமே ஸ-வில் ஆரம்பித்து ஸ-வில்தான் முடியுமா ? அதுக்கும் exceptions இருக்கா ?
மேளகர்த்தா என்றால் அத்யாவசியம்.பெரும்பாலானவை அப்படித்தான் என்றாலும்,நிறைய விதிவிலக்கு ஜன்யங்கள் உண்டு.
உதாரணங்கள்.
நடனமாகிரியா -
ஆரோகணம்-ஸ ரி 1க 3ம 1ப த 1நி 3
அவரோகணம்-நி 3த 1ப ம 1க 3ரி 1ஸ நி 3
குறிஞ்சி
ஆரோகணம் ஸ நி 3ஸ ரி 2க 3ம 1ப த 2
அவரோகணம்-த 2ப ம 1க 3ரி 2ஸ நி 3ஸ
நவரோஜ்
ஆரோகணம்-ப த 2நி 3ஸ ரி 2க 3ம 1ப
அவரோகணம்-ம 1க 1ரி 3ஸ நி 2த 2ப
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
5th August 2014, 07:40 AM
#2956
Senior Member
Seasoned Hubber
உள்ள(த்)தை அள்ளித்தா

டி.வி. ராஜு ... அந்நாளைய பிரபலமான இசையமைப்பாளர். தெலுங்கில் இவருடைய படங்கள் பல நல்ல வெற்றி பெற்றுள்ளன, அதில் இவருடைய இசைக்கும் பங்குண்டு. நம்முடைய வேதா அவர்களைப் போல் வேற்று மொழி பாடல்களின் மெட்டுக்களையும் அவ்வப்போது எடுத்து தன்னுடைய திறமையால் நன்றாகக் கொண்டு வருவார். தமிழில் கனிமுத்துப் பாப்பா, ராணி யார் குழந்தை போன்ற படங்கள் இவரை நமக்கு அடையாளம் காட்டும்.
இவருடைய இசையமைப்பின் சிறப்பு மெலோடி. இவர் இசையமைத்த பாடல்களைக் கேட்கும் போதே நமக்குள் நம்மையும் அறியாமல் இனம் புரியாத உணர்வு ஏற்பட்டு அந்தப் பாடலுக்குள்ளே நம்மை அழைத்துச் சென்று விடும். சாதாரணமாகத் துவங்கும் மெட்டில் அமைந்தாலும் போகப் போக நம்மை ஆகர்ஷிக்கும் சக்தி இவருடைய இசையில் வந்த பாடல்களுக்கு உண்டு.
அப்படி ஒரு பாடலை இன்று தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
தஞ்சை ராமய்யா தாஸ் இயற்றி பி.லீலா பாடிய கண்ணான கண்மணியே என்ற இந்தப் பாடல் நல்ல தரத்தில் கேட்டால் தான் அதனுடைய சிறப்பை நம்மால் உணர முடியும். அதற்கேற்ப சி டி தரத்தில் இப்பாடல் இங்கு வழங்கப் படுகிறது. பாடல் இடம் பெற்ற திரைப்படம் ராஜ சேவை 1959
கேட்கக் கேட்கத் தங்களையும் அறியாமல் தாங்கள் இப்பாடலுக்குள் புகுந்து விடுவீர்கள் என்பது திண்ணம்.
கண்ணான கண்மணியே
பாடல் முடியும் போது அந்த கோரஸ் குரல் நம்மை மயக்கி விடும். சிந்து நதியின் மிசை பாடல் ஞாபகத்துக்கு வரும்
Last edited by RAGHAVENDRA; 5th August 2014 at 07:46 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th August 2014, 07:49 AM
#2957
Junior Member
Newbie Hubber

Originally Posted by
RAGHAVENDRA
கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையிலிருந்தே துவங்கியிருக்கும் கோபால் சார்... தொடருங்கள்...
இத்தனை நாள் நீங்கள் போட்ட சத்தங்களை இப்போது தாங்கள் போட்டிருக்கும் சத்தங்கள் மிஞ்சி விட்டன. சூப்பர்...
நன்றி தலைவரே. எனக்கு உலக இலக்கியம் ,உலக படங்கள்,அரசியல்,சரித்திரம் இவற்றில் உள்ள தேர்ச்சி சங்கீதத்தில் அறவே கிடையாது. இசையை,இசையாகவே கற்பனை பண்ணும் திறனும் அற்றவன். சிறு வயதில் சங்கீதம் கற்றவர்கள் சுற்றி இருந்தும், சில சமயம் சினிமா பாடல் கேட்கும் நேரம்,பெரியவர்கள் கர்நாடக இசை கச்சேரிகளுக்கு வானொலியை திருப்பும் போது சங்கீதத்தை வெறுத்தவன். ஆனால் இப்போது தவறு உணர்ந்து,எந்த குருவின் துணையும் அற்று ,தன்னிச்சையாய் சுய முனைவில் கற்று ,கற்றதை சிறிதே கற்பிக்கிறேன்.நான் விற்பன்னன் அல்ல.நம்பகமான நண்பன் மட்டுமே.
-
5th August 2014, 08:13 AM
#2958
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
மீண்ட சொர்க்கம் .... ஸ்ரீதர் சலபதி ராவ் இணையில் வெளிவந்த மற்றுமொரு இசைக் காவியம். பின்னாளில் வெளிவந்த பல இசை மற்றும் நாட்டியக் கலைஞர்கள் பற்றிய திரைப்படங்களுக்கு முன்னோடி எனக் கூட சொல்லலாம். கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்.. ஏ.எம்.ராஜாவின் புகழ்க் கிரீடத்தில் மாணிக்கமாய் ஜொலிக்கும் பாடல்.. இந்தப் படத்தில் இடம் பெற்ற மற்றோர் அருமையான மற்றும் இனிமையான பாடல், ஜிக்கி பாடிய சிங்காரத் தோப்பிலே பாடலாகும். எனக்கு மிகவும் பிடித்த இப்பாடலைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th August 2014, 09:51 AM
#2959
Last edited by gkrishna; 5th August 2014 at 09:53 AM.
gkrishna
-
5th August 2014, 11:33 AM
#2960
வாலி மாலை மலர் 04/08/14

அண்ணா வசனம் எழுதி, எம்.ஜி.ஆர். நடித்த "நல்லவன் வாழ்வான்" படத்தில் வாலியின் பாடல் இடம் பெற்றபோதிலும், பல சோதனைகளை வாலி சந்திக்க வேண்டியிருந்தது.
ப.நீலகண்டன் கூறியது போலவே மறுநாள் அவரைப் போய்ப் பார்த்தார், வாலி. சுமார் ஐம்பது பல்லவிகளைக் கொடுத்தார். அவற்றில், "சிரிக்கின்றாள், இன்று சிரிக்கின்றாள்" என்ற பல்லவியை தேர்வு செய்தார், நீலகண்டன்.
அதற்கு இசை அமைப்பாளர் டி.ஆர்.பாப்பா பலவிதமான மெட்டுகளைப் போட்டுக்காட்டினார். அதில் ஒரு மெட்டை தேர்வு செய்தார், நீலகண்டன்.
அதன் பிறகு, முழுப் பாட்டுக்கும் இசை அமைப்பதில் பாப்பா மும்முரமாக ஈடுபட்டார்.
இசை அமைக்கும்போது வந்திருந்த ஒருவரை வாலிக்கு அறிமுகம் செய்து வைத்தார், பாப்பா. அவர்தான் எழுத்தாளரும், வசன கர்த்தாவுமான மா.லட்சுமணன். "இவர்தான் உங்களைப்பற்றி ப.நீலகண்டன் சாருக்கு தெரிவித்து, அதன் மூலம் உங்களுக்கு பாட்டெழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது" என்று பாப்பா கூறினார்.
அதைக்கேட்டு வாலி பிரமித்து நின்றார். கண்கள் பனிக்க மா.லட்சுமணனுக்கு நன்றி தெரிவித்தார்.
"நல்லவன் வாழ்வான்" படத்துக்கு கதை-வசனம் எழுதுபவர் பேரறிஞர் அண்ணா என்பதை அறிந்து இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தார், வாலி.
வாலியின் பாடல், அண்ணாவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. பாடல் நன்றாக இருப்பதாகக் கூறியதோடு, சில வரிகளை அடிக்கோடிட்டு, பாராட்டினார்.
எம்.ஜி.ஆருக்கும் பாடல் பிடித்து விட்டது.
என்றாலும், அந்தப் பாடல் பதிவு செய்யப்படுவதிலும், படத்தில் இடம் பெறுவதிலும் பெரும் சோதனைகள் ஏற்பட்டன.
அதுபற்றி வாலி எழுதியிருப்பதாவது:-
"சாரதா ஸ்டூடியோவில் 'ரிக்கார்டிங்'கிற்கான தேதி முடிவாயிற்று. நான் இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டு சாரதா ஸ்டூடியோவிற்குச் சென்றேன்.
பகல் 12 மணியளவிற்கு எம்.ஜி.ஆர். வந்தார். பாட்டின் பின்னணி இசை திருப்தியாக இல்லை என்றார். சில மாற்றங்கள் செய்யப் போதுமான நேரம் இல்லாததால் ரிக்கார்டிங் ரத்து செய்யப்பட்டது.
10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் சாரதா ஸ்டூடியோவில் ஒலிப்பதிவிற்கான தேதி குறிக்கப்பட்டது. அன்று பகல் 12 மணியளவில் பி.சுசீலாவிற்கு உடல் நிலை சரியில்லையென்று ஒலிப்பதிவு ரத்து செய்யப்பட்டது.
பிறகு, ஒரு மாதம் கழித்து இன்னொரு நாள் ஒலிப்பதிவிற்கான தேதி குறிக்கப்பட்டது. அன்று சீர்காழி கோவிந்தராசனின் சாரீரம் உதவும்படியாக இல்லையென்று ஒலிப்பதிவு ரத்து செய்யப்பட்டது. அந்தக் காலத்தில் டிராக் எடுத்துவிட்டு பிற்பாடு குரலைப் பதிவு செய்யும் வழக்கமெல்லாம் அமலுக்கு வரவில்லை.
'இந்தப்பாட்டு, ராசியில்லாத பாட்டு... எனவே, மருதகாசியை வைத்து வேறு பாட்டு எழுதி ஒலிப்பதிவு செய்யலாம்' என்று நீலகண்டன் முடிவெடுத்தார்.
மருதகாசியும் பாட்டு எழுதவந்தார். ஏற்கனவே நான் எழுதியிருந்த பாட்டை, ஒரு முறை கையில் வாங்கிப் பார்த்தார்.
"இந்தப் பையன் நல்லா எழுதியிருக்கான். இவனுடைய வாழ்க்கை என்னால் கெட்டுப் போவதை நான் விரும்பவில்லை... இந்தப் பாட்டையே வைத்துக்கொள்ளுங்கள்... பாப்புலராகும்..." என்று சொல்லிவிட்டு, மருதகாசி அண்ணன் தன் பிளைமவுத் காரில் ஏறிப் போய்விட்டார். அண்ணன் மருதகாசிக்கு மனதுக்குள் ஆலயம் எழுப்பி வழிபட்டேன். பிறகு என் பாடலையே பதிவு செய்து படப்பிடிப்புக்குப் போனார்கள்.
நியூடோன் ஸ்டூடியோவில் ஒரு பெரிய செட் போட்டு இந்தப் பாடலைப் படம் பிடிக்க ஏற்பாடாயிற்று.
ஒரு மலை; அதனின்றும் வழியும் அருவி. அருவி வந்து விழும் தடாகம் எனப் பெரிதாக அழகுற அமைக்கப்பட்ட அந்த செட்டில் எம்.ஜி.ஆரும், ராஜசுலோசனாவும் ஆடிப்பாடுவதாக நடன இயக்குனர் அமைத்த வண்ணம் ஒத்திகை பார்க்கப்பட்டது.
முதல் ஷாட் எம்.ஜி.ஆர், 'சிரிக்கின்றாள், இன்று சிரிக்கின்றாள்' என்னும் பாடல் வரிக்கு வாயசைத்தவாறே, கரையிலிருந்த தடாகத்தில் இறங்குகையில் கரை உடைந்து ஸ்டூடியோ "செட்" முழுவதும் வெள்ளக்காடாயிற்று.
படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. நான் அதிர்ந்து போனேன். இந்த ஒரு பாடலுக்கே இத்துணை தடங்கல்களென்றால் என் எதிர்காலம் என்னாவது என்று அஞ்சலானேன்.
நல்லவேளை, செட் சீர் செய்யப்பட்டு பாட்டு நல்ல விதமாகப் படமாக்கப்பட்டு, படத்திலும் இடம் பெற்றது.
இறுதியில் பாடல் வரிகளில் ஆட்சேபணைக்குரியதாகக் கருதப்பட்டு, சரணத்தில் சில வாக்கியங்கள் சென்சாரால் வெட்டப்பட்டன.
இவ்வளவு அமர்க்களங்களுக்கு இடையே, எம்.ஜி.ஆருக்காக நான் எழுதிய முதல் பாடலுடன் "நல்லவன் வாழ்வான்" 1961 ஆகஸ்டு 31-ந்தேதி திரைக்கு வந்தது."
இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
Bookmarks