எம்ஜிஆர் ரசிகர்களின் பொற்காலம் மூன்று கால கட்டங்களில் முழுமையாக நிறைவு பெற்று இருக்கிறது .
1950-1965 - எம்ஜிஆர் ரசிகர்கள் - திமுக அனுதாபிகள் - எம்ஜிஆர் மன்ற செயல் வீரர்கள்
1965- 1977 - தீவிர எம்ஜிஆர் ரசிகர்கள் - எம்ஜிஆர் மீது தீவிர பற்று கொண்டு சினிமா - அரசியல் இரண்டிலும் வெறித்தனமாக தங்களை இணைத்து கொண்டு எம்ஜிஆரின் வெற்றிக்கு துணை நின்றவர்கள் .
1970-1977 அதி தீவிர எம்ஜிஆர் ரசிகர்கள் .- இந்த கால கட்டத்தில் எம்ஜிஆரின் புகழ் இமயம் அளவிற்கு உயர்ந்து
நின்றது .எம்ஜிஆரை முதல்வராகவும் உலக அரங்கில் அவருடைய புகழை பரப்பியதில் முக்கிய பங்கு பெற்றவர்கள் .
மூன்று கால கட்டங்களில் வாழ்ந்த எம்ஜிஆர் ரசிகர்கள் இன்றும் பலர் தங்களை எம்ஜிஆர் புகழ் பரப்புவதில் ஆர்வத்துடன்
செயல் பட்டு கொண்டு வருகிறார்கள் . ஒரு சிலர் வயது - குடும்ப சுமை -காரணமாக் ஒதுங்கி உள்ளார்கள் .ஆனாலும்
எம்ஜிஆரை நினைத்து கொண்டு வாழ்பவர்கள் .
வியக்கத்தக்க வைத்த விஷயம் என்னவென்றால் எம்ஜிஆரை பார்த்திராத இளம் வயதினர் , அவர் திரை உலகைவிட்டு
விலகிய பின்னர் 1977களில் பிறந்த வாலிபர்கள் எம்ஜிஆர் படங்களை பார்த்து அவருடைய ரசிகர்களாக இன்றும் தொடர்ந்து நீடிக்கிறார்கள் .
பிற நடிகர்கள் ரசிகர்களாக இருந்தவர்கள் கால சுழற்ச்சியில் எம்ஜிஆரின் நடிப்பு - பாடல்கள் தரும் சுகம் - தெம்பு
தன்னம்பிக்கை போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு தங்களை எம்ஜிஆர் ரசிகர்களாக மாற்றி கொண்டவர்கள் பலர் .
எம்ஜிஆரை வெறுத்தவர்கள் கூட ''என்னதான் இருந்தாலும் வாத்தியார் படம் என்றால் சூப்பர் என்று புகழும் அளவிற்கு
காலம் அவர்களை மாற்றியுள்ளது . - இந்த நிலை சாதி - மொழி -மாநிலம் கடந்து எம்ஜிஆர் எல்லோராலும் இன்றும்
மிகபெரிய அளவில் உயர்ந்து நிற்பதற்கு காரணம்
எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து - சிறந்த மனிதர் - நல்ல நடிகர் - சாதனையாளர் .
ஒரு நடிகருக்கு உலகளவில் இந்த அளவிற்கு பெயரும் புகழும் நிலைத்திருப்பது உலக அதிசயமே .
Bookmarks