-
6th August 2014, 03:04 PM
#3021
Senior Member
Senior Hubber
//இந்தப் பாடலும், 'பெண்' படத்தில் எஸ்.பாலச்சந்தருக்காக பாபு பாடிய 'கல்யாணம் அஹ்ஹஹ்ஹா கல்யாணம்' பாடலும் அனைவரையும் மிகவும் குழப்பும்.// நன்னி வாசு சார்.. அனைவரைக் குழப்பிச்சோ இல்லியோ என்னைக் கன்ஃபூஸ் பண்ணி விட்டுடுத்து.. 
யெஸ்.. டான்ஸ் வேகமான ஸ்டெப்ஸ்.. நல்லா இருக்கும்..
அதே கண்கள்ள அந்த டைபிஸ்ட் கோபு ஆர் வேற யாரோ மாதவியோட ஒரு வரிக்குக்கூட வேக ஸ்டெப்னு நினைவு..
-
6th August 2014 03:04 PM
# ADS
Circuit advertisement
-
6th August 2014, 03:06 PM
#3022
வணக்கம் வாசு சார்
இன்றைய ஸ்பெஷல் ஆனியன் ரோஸ்ட் ஆ அல்லது ghee ரோஸ்ட் ஆ அல்லது மசாலா ரோஸ்ட் ஆ
நேற்று போட்ட 'அம்மா பக்கம் வந்தா ' அதற்கு மது சார் போட்ட பாபா loves மீ இரண்டுமே சூப்பர்
-
6th August 2014, 03:08 PM
#3023
Senior Member
Senior Hubber
க.ப பிரம்மச்சாரி பேச்சு வந்ததனால் கூடவேஒரு பாட்டும் நினைவு..ஆனால் பாடல் வரியில் - இது 1954ங்க எனபத்மினி சொல்வது போல்..என்னவாக்கும்பாட்டு..(ஓஹ் 60 வர்ஷம் ஆச்சே
)
-
6th August 2014, 03:09 PM
#3024
Senior Member
Senior Hubber
//இன்றைய ஸ்பெஷல் ஆனியன் ரோஸ்ட் ஆ அல்லது ghee ரோஸ்ட் ஆ அல்லது மசாலா ரோஸ்ட் ஆ
நேற்று போட்ட 'அம்மா பக்கம் வந்தா ' அதற்கு மது சார் போட்ட பாபா loves மீ இரண்டுமே சூப்பர்// க்ருஷ்ணா ஜி கொஞ்சம் நார்த் இண்டியன் செளத் இண்டியன் காம்பினேஷன்ல தரச் சொல்லுங்க..
-
6th August 2014, 03:20 PM
#3025
Junior Member
Platinum Hubber
-
6th August 2014, 03:29 PM
#3026
thanks esvee sir for the information
-
6th August 2014, 03:38 PM
#3027

Originally Posted by
chinnakkannan
//இன்றைய ஸ்பெஷல் ஆனியன் ரோஸ்ட் ஆ அல்லது ghee ரோஸ்ட் ஆ அல்லது மசாலா ரோஸ்ட் ஆ
நேற்று போட்ட 'அம்மா பக்கம் வந்தா ' அதற்கு மது சார் போட்ட பாபா loves மீ இரண்டுமே சூப்பர்// க்ருஷ்ணா ஜி கொஞ்சம் நார்த் இண்டியன் செளத் இண்டியன் காம்பினேஷன்ல தரச் சொல்லுங்க..
நார்த் இந்தியன் ரதி அக்னிஹோத்ரி ,சவுத் இந்தியன் மொக்கை சுதாகர்
நடித்த பெண்ணின் வாழ்கை படம் நினைவு உண்டா
கே.விஜயன் இயக்கம்
g .k வெங்கடேஷ் இசை என்று நினைவு
சுசீலா ஜெயச்சந்திரன் குரல்களில்
'மாசி மாசம் முஹுர்த்த நேரம் மேடை மங்களம்
திருமணம் வந்த நாள் '

-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th August 2014, 03:56 PM
#3028
Senior Member
Senior Hubber
பெண்ணின் வாழ்க்கை ந்னு ஒரு படமா சுதாகர் (மொ என்பது சரியே..ஆனால் தெலுகில் சிரிப்பு நடிகராக மாறி விட்டார்) ரத்தியுமா..கேள்விப் பட்டதில்லையே..ம்ம் கேட்டுப் பார்க்கிறேன் பாட்டை..
ஜெயச்சந்திரன் கொஞ்சம் வித்யாசக் குரலுக்குச் சொந்தக் காரர்..அவரோட ஒரு பாட்டு..வடிவங்கள்னு ஒரு படம்..
இதயவானில் உலவுகின்ற புதிய மேகமே இதயராகம் பாட வந்த இளைய நெஞ்சமே
வசந்தங்கள் அழைக்கின்றதே
வரவேற்புத்தருகின்றதேன்னு போகும்..கேட்டதுண்டா..
-
6th August 2014, 03:56 PM
#3029
Senior Member
Diamond Hubber
இன்றைய ஸ்பெஷல் (48)
'இன்றைய ஸ்பெஷலி'ல் 1980-ல் வெளி வந்த, என்றும் மனதை மயக்கும் ஒரு பாடல். பாலா, வாணியின் தேன் மதுரக் குரல்களில். 'சௌந்தர்யமே வருக வருக' படத்தில் ஸ்ரீப்ரியாவிற்கும், சிவச்சந்திரனுக்குமான டூயட். ஸ்ரீதர் டைரெக்ஷன். விஜயபாஸ்கர் இசை. பாடலை இயற்றியவர் வாலி.

நெஞ்சை வருடிக் கொண்டே செல்லும் பாடல். ஒரே சீராகச் செல்லும். ஸ்ரீப்ரியாவிற்கு வாணியின் குரல் வெகுப் பொருத்தம்.
இதோ உன் காதலின் கண்மணி
இவள் மனம் இனி உனது
இளம்தளிர் இது புதிது
ஆசை என்பது அமுதம்
அதில் ஆடி வந்தது குமுதம்
இதோ உன் காதலின் கண்மணி
இவள் மனம் இனி உனது
இளம்தளிர் இது புதிது
ஆசை என்பது அமுதம்
அதில் ஆடி வந்தது குமுதம்
மஞ்சள் ரோஜா தள தள தள என
மன்னன் முன்னாடி
மாலைப் பொழுதில் பள பள பள என
மின்னும் கண்ணாடி
காளிதாசன் ஏட்டிலே
கம்பன் சொன்ன பாட்டிலே
காணும் காதல் மந்திரம்
கண்டு கொண்டேன் உன்னிடம்
கொள்ளை இன்பங்களோ
இதோ உன் காதலின் கண்மணி
இவள் மனம் இனி எனது
இளம்தளிர் இது புதிது
காமதேவன் முதன்முதல் எழுதிய
பாடல் நீதானோ
காலம் தோறும் உனக்கென உருகிடும்
பக்தன் நான்தானோ
காமதேவன் முதன்முதல் எழுதிய
பாடல் நீதானோ
காலம் தோறும் உனக்கென உருகிடும்
பக்தன் நான்தானோ
ஆறுகால பூஜையோ
அதற்கு மேலும் தேவையோ
பேசும் வார்த்தை வர்ணனை
யாவும்தானோ அர்ச்சனை
சொந்தம் தெய்வீகமே
இதோ உன் காதலின் கண்மணி
இவள் மனம் இனி உனது
இளம்தளிர் இது புதிது
ஆசை என்பது அமுதம்
அதில் ஆடி வந்தது குமுதம்
லலாலலாலலலாலலலா
லலாலலாலலலாலலா
லலாலலாலலலாலலா...
Last edited by vasudevan31355; 6th August 2014 at 04:07 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
6th August 2014, 03:58 PM
#3030
Senior Member
Diamond Hubber
போனஸ் ஸ்பெஷல்
(இது மது சாருக்காக... காரணம் உண்டு.)
'சௌந்தர்யமே வருக வருக'
இப்படத்தின் பாடல்கள் வெகு பிரமாதம். ஸ்ரீதர் ஆயிற்றே.
பாலா பாடும் ஒரு பாடலை வாழ்நாள் முச்சூடும் மறக்கவே முடியாது.
'ரசம் பழரசம் ராகம் பல ரகம்
ரசி ரசிகனே ராகம் மோகனம்'
ஐயோ! அமர்க்களமான பாடல்.பாலா குழைத்து பின்னியெடுத்து விடுவார்.
மது உண்டவனின் மயக்கத்தை தன் குரலில் அற்புதமாகப் பிரதிபலித்து தானும் சொக்கி நம்மை அப்படியே சொக்கிப் போக வைத்து விடுவார் பாலா. மிக மிக அனுபவித்து ரசித்துப் பாடியிருப்பார் பாலா. இது போன்ற ஒரு சில பாடல்களுக்கு ஸ்பெஷல் அக்கறை எடுத்து இவ்வளவு சிறப்பாக அனுபவித்துச் செய்திருப்பார் அவர்.
அதிக ஹிட்டடிக்காத பாடல். ஆனால் நம் நெஞ்சில் ஹிட்டடடித்த சூப்பர் பாடல்.
அதுவும்
'நான் இளமையில் இருக்கிறேன்
தேன் குளத்தினில் குளிக்கிறேன்'
அப்புறம் ஒரு
'ஹே ஹே ஹே'
அடடா! பாலா! என்னவென்று புகழ!
Last edited by vasudevan31355; 6th August 2014 at 04:13 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks