-
6th August 2014, 03:58 PM
#10
Senior Member
Diamond Hubber
போனஸ் ஸ்பெஷல்
(இது மது சாருக்காக... காரணம் உண்டு.)
'சௌந்தர்யமே வருக வருக'
இப்படத்தின் பாடல்கள் வெகு பிரமாதம். ஸ்ரீதர் ஆயிற்றே.
பாலா பாடும் ஒரு பாடலை வாழ்நாள் முச்சூடும் மறக்கவே முடியாது.
'ரசம் பழரசம் ராகம் பல ரகம்
ரசி ரசிகனே ராகம் மோகனம்'
ஐயோ! அமர்க்களமான பாடல்.பாலா குழைத்து பின்னியெடுத்து விடுவார்.
மது உண்டவனின் மயக்கத்தை தன் குரலில் அற்புதமாகப் பிரதிபலித்து தானும் சொக்கி நம்மை அப்படியே சொக்கிப் போக வைத்து விடுவார் பாலா. மிக மிக அனுபவித்து ரசித்துப் பாடியிருப்பார் பாலா. இது போன்ற ஒரு சில பாடல்களுக்கு ஸ்பெஷல் அக்கறை எடுத்து இவ்வளவு சிறப்பாக அனுபவித்துச் செய்திருப்பார் அவர்.
அதிக ஹிட்டடிக்காத பாடல். ஆனால் நம் நெஞ்சில் ஹிட்டடடித்த சூப்பர் பாடல்.
அதுவும்
'நான் இளமையில் இருக்கிறேன்
தேன் குளத்தினில் குளிக்கிறேன்'
அப்புறம் ஒரு
'ஹே ஹே ஹே'
அடடா! பாலா! என்னவென்று புகழ!
Last edited by vasudevan31355; 6th August 2014 at 04:13 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks