-
7th August 2014, 02:42 PM
#751
Junior Member
Seasoned Hubber
மது போன்ற தீய பழக்கங்கள் பிடிக்காத நடிகர் M.G. ராமச்சந்திரன் அவர்கள் அரசியலில் குதித்து மக்கள் ஆதரவுடன் மக்கள் (திலக) முதல்வராக ஆனவுடன் அவர்தம் ஆட்சிக்காலம் முழுவதும் மதுவிலக்கை அமுல்படுத்தி மக்களை காப்பாற்றியிருந்தால் நீங்கள் இட்ட பதிவு அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும். கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல்லெறியலாமா!? ஏன் மது புகையோடு நிறுத்தி விட்டீர்கள்? 'மாது'க்களை கையாளும் விதத்தையும் குறிப்பிட்டிருக்கலாமே!
[QUOTE=sivajisenthil;1153739][QUOTE]
--------------------------------------------------------------------------------------------------------
எந்த விதமான தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகாமல், தனக்கென்று ஒரு கொள்கையும், கோட்பாடும் வகுத்துக்கொண்ட புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள், மற்றவர்கள் பழக்க வழக்கங்களில் தலையிடுவதும் குறுக்கிடுவதும் அநாகரீகம் என்பதை முழுமையாக அறிந்தவர். அறிவுரை தான் கூற முடியும். அதற்காக மது விலக்கு சட்டத்தை திணித்து தனது கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.
கணவன் - மனைவி ஆடிப்பாடி மகிழ்வது கூட தீய பழக்கம் என்றால் உங்களுடன் வாதிட விரும்ப வில்லை. புகை பிடிக்கும் காட்சியை நியாயப்படுத்துவதற்கு மேல் நாட்டு படக்காட்சிகள் பதிவிட வேண்டிய அவசியமும் இல்லை.
இந்த பதிவு திரு. ரவி கிரண் சூரியா இனி திரியினில் வந்து குழப்பங்கள் செய்யக்கூடாது என்பதற்காகத்தான். தகுந்த அறிவுரையை முதலில் அவருக்கு கூறுங்கள். எங்களிடம் விவாதம் வேண்டாம்.
எங்கள் மூலம் உங்கள் திரியின் பக்கங்கள் அதிகரிப்பதை நாங்களும் விரும்ப வில்லை.
கலைவேந்தன்
சத்த்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும் !
Last edited by KALAIVENTHAN; 7th August 2014 at 02:45 PM.
-
7th August 2014 02:42 PM
# ADS
Circuit advertisement
-
7th August 2014, 05:45 PM
#752
நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,
நடிகர் திலகம் திரிக்கு வருகை தந்தற்கு நன்றி. நீங்கள் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். இந்த மையம் மற்றும் திரி என்பது ஒரு discussion forum. பல்வேறு விஷயங்களை பற்றிய விவாதங்கள் நடைபெறும் இடம். இது இணையதளத்தில் நடத்தப்படும் ரசிகர் மன்ற இதழ் அல்ல. அது போன்ற ஒன்றில் புகழுரைகள் மட்டுமே எழுதப்படும், விமர்சனங்கள் இடம் பெறாது.
திரி என்பது பொதுவானது. இந்த திரியில் இன்னார் மட்டும்தான் வந்து பதிவிட வேண்டும் என்று சட்ட திட்டங்கள் ஏதும் கிடையாது. யார் வேண்டுமானாலும் எந்த திரியிலும் எழுதலாம். நண்பர்கள் வினோத், யுகேஷ் பாபு போன்றவர்கள் இங்கே ரெகுலராக பதிவிடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அதே போன்று எம்ஜிஆர் திரியில் நடிகர் திலக ரசிகர்கள் ராகவேந்தர் சார், வாசு, கிருஷ்ணாஜி போன்றவர்கள் பதிவிடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். அது போல்தான் rks அவர்களும் எம்ஜிஆர் திரியில் பதிவுகளை செய்தார் அவரின் பதிவுகள் தவறான முறையில் அமைந்திருந்தாலோ எம்ஜிஆர் அவர்களையோ தனிப்பட்ட நபர்களையோ தாக்குவதாக அமையுமானால் நீங்கள் moderator அவர்களுக்கு அதை குறித்து புகார் செய்யலாம்.
இவ்வளவு ஏன்? இங்கே நடிகர் திலகம் திரியில் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி தவறான செய்தி வந்தால் அதற்கு நேரிடையாக நீங்களே இங்கே வந்து உங்கள் மறுப்பை பதிவு செய்யலாம். யாரும் எதிர்க்க மாட்டார்கள்.
நடிகர் திலகத்தைப் பற்றி தவறான செய்தி வரும்போது மட்டுமே தான் எம்ஜிஆர் திரிக்கு சென்று மறுப்பு பதிவிடுவதாக RKS சொல்கிறார். அவரிடம் பதிலுக்கு பதில் பதிவிடுவதை தவிர்க்குமாறு இரண்டு நாட்களுக்கு முன்பு கூட சொல்லியிருந்ததை நீங்கள் படித்திருக்க கூடும். உங்களை புண்படுத்தும் அளவிற்கு எந்த பதிவும் எம்ஜிஆர் திரியில் பதிவிட வேண்டாம் என்பதை மீண்டும் அவரிடம் வலியுறுத்ததான் போகிறேன். அதே நேரத்தில் தேவையற்ற பதிவுகள் குறிப்பாக சிவாஜியை தாக்கி அன்றைய நாளில் அச்சடிக்கப்பட்ட பழைய ரசிகர் மன்ற நோட்டிஸ்கள் பதிவதை தவிர்க்க நீங்களும் அறிவுரை கூறலாமே!
Moderator என்று ஒருவர் இருப்பதை மறந்து நீங்கள் இங்கே வந்து நடிகர் திலகத்தை தாக்கி ஒரு பதிவிட அதற்கு இந்தப் பக்கத்திலிருந்து ஒரு ரசிகர் பதிலுக்கு பதிவிட அதன் காரணமாக இங்கே தேவையற்ற சண்டை உருவாகும் என்பதை தவிர வேறு பயன் உண்டா?
உங்களிடம் ஒரே ஒரு கேள்வி! உணர்வுகள் புண்படுதல் என்பது உங்களை மட்டும்தான் பாதிக்குமா/ உங்களிடம் எந்த விதமான சர்ச்சையிலும் ஈடுபடாத என்னை அறிவு ஜீவி, அரிச்சுவடி மாணவன் என்று கிண்டலடித்தது எந்த விதத்தில் சரி? உங்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு வேறு நியாயம் என்பதுதான் உங்கள் கொள்கையா?
RKS
நான் முன்பே பல முறை கூறியதுதான். எம்ஜிஆர் அவர்களின் திரியில் சென்று பதிவிடுவதை தவிர்த்து விடுங்கள். நடிகர் திலகம் பற்றி தவறான தகவலோ அல்லது அவதூறான செய்தியோ வந்தால் அதை நீங்கள் moderator அவர்களிடம் புகாராக அளிக்கலாம். அதை விடுத்து நீங்களே அவ்விடம் சென்று பல விஷயங்களைப் பற்றி பதிவிடுவது பல தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குவதாக எம்ஜிஆர் திரி நண்பர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இன்று நிகழ்ந்தவற்றையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். எனவே எந்த புகாருக்கும் இடம் கொடாமல் உங்கள் உழைப்பை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.
செந்தில் சார்,
அவர்கள்தான் தவறு செய்கிறார்கள் என்றால் நீங்களுமா? நாம் நம்முடைய நிலையிலிருந்து கீழே இறங்க வேண்டாம். தயை கூர்ந்து உங்கள பதிவை எடிட் செய்து விடுங்கள்.
அன்புடன்
-
7th August 2014, 06:00 PM
#753
Junior Member
Devoted Hubber
RKS don't go to another thread. Still I didn't go that thread. If you go there, then only necessity coming to reply for their posts. So avoid this.
-
7th August 2014, 06:14 PM
#754
Junior Member
Veteran Hubber
dear Murali sir, and RKS. I have deleted mine (it is only a natural response by default to the unwarranted impulse by an unknown friend from the other thread to defame NT under the disguise of warning RKS) in the wake of maintaining a healthy trend of interactions between threads. Hope friends from other threads would also do so. RKS sir, Kindly consider our request.
Last edited by sivajisenthil; 7th August 2014 at 06:41 PM.
-
7th August 2014, 06:49 PM
#755
Junior Member
Newbie Hubber
கலை வேந்தன்/யுகேஷ் பாபு,
பதிவுகளை எங்கள் திரியில் இருந்து நீக்கி விடுவது நல்லது. நாங்கள் பொறுமை காக்கிறோம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
7th August 2014, 07:05 PM
#756
Senior Member
Senior Hubber
வாங்க கலைவேந்தன் வாங்க. உங்க கிட்ட திரு. முரளி அறிவுஜீவி பட்டம் வாங்கியதை பாத்து இங்க பல பேரு புல்லரிச்சு போய் நிக்கறோம்.
ஒரு பேராசிரியர் இரண்டு இடங்களில் ஒரே தேதியில் ஒரு தியேட்டருக்கு, இரண்டு படங்களை போட்டதை - எப்படி வரும் என்று முரளி கேட்டதை, 'ஆ, அதெப்படி பேராசிரியர் சொன்னதை சந்தேகப்படலாம். நாங்க எல்லாம் யாரு? எங்க வாத்தியாரு பாரத் பட்டம் வாங்கியிருக்காரு, பாரத்ரத்னா பட்டம் வாங்கியிருக்காருன்னு சம்பந்தத்தோட பேசி அவரையே அவமானப்படுத்திட்டீங்கன்னு சொல்லி, பேராசிரியரே அந்தப் பட்டங்களை வாங்கின மாதிரி வானத்துக்கும் பூமிக்கும் நீங்க குதித்தத பார்த்து இங்க பல பேரு மலைத்துப்போய் நிக்கறோம்.
அதுக்கடுத்து செவாலியே பட்டம் யாரு வேணாலும் காசு குடுத்து வாங்கலாம்-ன்னு சொல்லி நடிகர்திலகத்தை நீங்க பெருமைபடுத்தினதை பாத்து இங்க பல பேரு திகைத்துப்போய் நின்னோம். அதுக்கு அங்க பல பேரு ஆதரவு குடுத்தத பாத்து இங்க பல பேரு மெய்மறந்து நின்னு பார்த்தோம்.
அதுல ஒருத்தரு, யாராரு காசு குடுத்து செவாலியே பட்டம் வாங்கினாங்கன்னு லிஸ்ட் போட்டு பெருமைபடுத்தினதை பாத்து இங்க பல பேரு மூச்சு பேச்சில்லாம நிக்கறோம்.
அப்புறம் நீங்க கொடுத்த நடிகர்திலகம் பட லிஸ்ட் ரொம்ப முக்கியமானது. சிவா என்னதான் 'மோட்டார் சுந்தரம்பிள்ளை' நூறாவதுநாள் விளம்பரம் கொடுத்தாலும், உங்க பேச்சுக்கு எதிரா யாரும் பேச முடியுமா? இனி நடிகர்திலகம் படங்கள் மட்டுமில்லை, ரஜினி, கமல்-இன் படங்களும் மற்ற எல்லா நடிகர்களின் படங்களும், வெற்றி பெற்றனவா, இல்லையா என்பதை உங்களை கேட்டே இந்த ஃபோரத்தில் பதியுமாறு எல்லா பதிவாளர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். அப்படி செய்யாவிட்டால் உங்கள் பதிவில் நீங்கள் சொன்னபடி செய்து கொள்ளலாம்.
இப்படி உங்கள் அற்புதமான பதிலால் இங்க பல பேரு என்ன செய்வதெனறியாமல் உறைந்து போயிருக்கிறோம். வாங்க கலைவேந்தன் வாங்க. அடிக்கடி வாங்க. எங்களுக்கு இந்த அதிசயம் காட்ட அடிக்கடி வாங்க. கூடவே புதுவையாரையும் கூட்டிட்டு வாங்க.
Last edited by kalnayak; 11th August 2014 at 03:46 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
7th August 2014, 09:36 PM
#757
Junior Member
Veteran Hubber

Originally Posted by
murali srinivas
rks
நான் முன்பே பல முறை கூறியதுதான். எம்ஜிஆர் அவர்களின் திரியில் சென்று பதிவிடுவதை தவிர்த்து விடுங்கள். நடிகர் திலகம் பற்றி தவறான தகவலோ அல்லது அவதூறான செய்தியோ வந்தால் அதை நீங்கள் moderator அவர்களிடம் புகாராக அளிக்கலாம். அதை விடுத்து நீங்களே அவ்விடம் சென்று பல விஷயங்களைப் பற்றி பதிவிடுவது பல தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குவதாக எம்ஜிஆர் திரி நண்பர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இன்று நிகழ்ந்தவற்றையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். எனவே எந்த புகாருக்கும் இடம் கொடாமல் உங்கள் உழைப்பை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.
அவர்கள்தான் தவறு செய்கிறார்கள் என்றால் நீங்களுமா? நாம் நம்முடைய நிலையிலிருந்து கீழே இறங்க வேண்டாம். தயை கூர்ந்து உங்கள பதிவை எடிட் செய்து விடுங்கள்.
அன்புடன்
முரளி சார்
இந்த இரண்டு திரி அன்பர்களை விட்டுவிடுங்கள்...இதில் வரும் பதிவுகளை படிக்கும் பொதுமக்களுக்கு தெரியும். மாற்று திரியில் வம்புக்கேன்றும் ...வீம்புகேன்றும் நடிகர் திலகத்தை தேவையில்லாமல் மறைமுகமாகவும் நேரிடையாகவும் பல பதிவுகள் பதிவிட்டுலார்கள்.
இது திரு எஸ்வி அவர்களுக்கும் தெரியும்...அவரே பல முறை அப்படி செய்யவேண்டாம் என்று பதிவு செய்துள்ளார் ! இருந்தாலும் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அந்த திரியில் பதிவிட்டால் அங்கு சென்று பதில் செய்வது தவறு அல்ல என்று நினைத்து தான் பத்விட்டேன். அவர்களுக்கு அது தவறாக தெரிகிறது.
நீங்கள் கூறியது போல இனி அப்படி நடிகர் திலகத்தை மறைமுகமாக அல்லது நேரிடையாக யாராவது தாக்கி எழுதும் பட்சத்தில் moderator கவனம் கொண்டுசெல்கிறேன்.
அவர்களில் யார் தவறு செய்தாலும் சரி.....நான் தவறு செய்தாலும் சரி......சிறிது கூட தயவு தாட்சண்யம் காட்டாமல் அந்த id யை ban செய்து விடுவதற்கு பரிந்துரையுங்கள் ...ban செய்துவிடுங்கள்...!
எந்த நடிகரை பற்றியும் எவரும் பொய் செய்திகள், புளுகு மூட்டைகள் அவிழ்த்து திரியில் விடாமல் இருக்க காலம் காலமாக நடிகர் திலகத்தை பற்றி ஒளரும் ஒளரல்கள் இனி வரும் காலங்களில் இடம்பெறாமல் இருக்க அதுதான் சரி என்று கருதுகிறேன்...!
Regards
rks
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
7th August 2014, 09:40 PM
#758
Junior Member
Veteran Hubber
dear Yukesh Babu sir/ Mr. Kalaivendhan. I have sent PMs to you. kindly peruse and understand the situation.
Last edited by sivajisenthil; 7th August 2014 at 09:52 PM.
-
7th August 2014, 10:18 PM
#759
Junior Member
Veteran Hubber
இந்த திரியை படிக்கும் நடுநிலையான பொதுமக்களுக்கு !
************************************************** ************************************************** ******************************
வேறு எந்த நடிகரையாவது வசூல் சக்ரவர்த்தி என்று அழைத்ததுண்டா என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள் !
இந்த பத்திரிகை விளம்பரத்தை பார்த்தாவது விநியோகஸ்தர்கள் யாரை அப்படி கருதி திரைஉலகில் உண்மையாக அழைத்தார்கள் ....அழைத்ததோடு மட்டுமல்லாமல் தங்கள் விநியோகம் செய்த பட விளம்பரத்தில் "நடிகர் திலகம்" என்ற பட்டத்தை கூட போடாமல் "வசூல் சக்ரவர்த்தி" சிவாஜி கணேசன் என்று விளம்பரபடுத்தியுள்ளார்கள், என்பதை இனியாவது கேள்விகேட்பவர்கள் தெரிந்துகொள்வார்கள் என்று நம்புவோம்.
************************************************** ************************************************** *******************************
THIS IS THE PROOF & EVIDENCE OF DISTRIBUTORS CALLING Mr.SIVAJI GANESAN as "VASOOL CHAKRAVARTHY" & EVEN PUBLISHED THE TITLE BEFORE HIS NAME
************************************************** ************************************************** *******************

WE DON'T BELIEVE IN BLUFFS !! WE HAVE Proof's to JUSTIFY OUR GENUINITY
இப்போதாவது திரிகளை பார்க்கும் நடுநிலயாலர்களுக்கு உண்மை விளங்கட்டும்...!
Last edited by RavikiranSurya; 7th August 2014 at 10:35 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
7th August 2014, 10:39 PM
#760
Junior Member
Senior Hubber

FROM AUG 15 TH ONWARDS TRICHY - GAIETY - DAILY 4 SHOWS
SIVAJI'S VELLAI ROJA UN BREAKABLE RECORD
--MEGA WINNER OF 1983 DEEWALI RELEASE
-- TRICHY - RAMBA A/C -FIRST 100 DAYS FILM
--ALSO TANJORE - JUPITER -84 DAYS --KUMBAKONAM - KARPAGAM -56 DAYS
-- THIRUVOTTIYUR -VENKATESWARA - FIRST 100 DAYS FILM
--ALL OVER TAMIL NADU VELLAI ROJA GOT HIGHEST COLLECTION AS WELL AS MORE NO OF SCREENS 100 DAYS IN 1983 DEEWALI RELEASE
--
Last edited by SPCHOWTHRYRAM; 7th August 2014 at 10:46 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks