-
30th July 2014, 04:48 AM
#81
Junior Member
Devoted Hubber
திரு. சீனு ராமசாமி,
.
நட்பு பாராட்டுவதும், பகைமை பேணுவதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்தது. நண்பர்களாக இருந்த இருவர், திடீரென்று பிரிந்து போனால், அவர்களில் யாராவது ஒருவர் கேட்டுக் கொண்டால் ஒழிய, அவர்களுக்கு இடையே பஞ்சாயத்து செய்ய மூக்கை நுழைப்பது அநாகரிகம்.
.
தன்னுடைய நண்பர் யார், பகைவர் யார் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அவரவர்க்கு உண்டு. என்ன பிரச்சனை என்ன பிரச்சனை என்று தோண்டித் துருவி, அந்த privacy க்கு உள்ளே நுழைய முற்படுவது ஒரு விதமான வன்முறை.
.
இதே திரையுலகில், தம்பதி சமேதராக இருந்து, பிறகு பிரிந்து, பின்னர் தனித்தனியாக ஜொலித்தவர்கள் இருக்கிறார்கள். திரையுலகின் நன்மைக்காக என்று கருதி, அவர்களின் அந்தரங்கத்துக்கு இடையே புகுந்து அவர்களைச் சேர்த்து வைக்க முயற்சி செய்வது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் நீங்கள் செய்து கொண்டிருப்பது.
.
தனக்குப் பிடித்தமில்லாதவர்களின் அண்மை வேண்டாம் என்று எல்லாவற்றிலுமிருந்து ஒதுங்கி இருப்பவரை, மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்து, எரிச்சலூட்டி, அவரிடம் இருந்து கோபமான பதில்களை வரவழைப்பதன் மூலம்,. (அவரைச் சுற்றியிருக்கும்) அனைவரும் தமிழ்நாட்டு மக்களின் அமைதிக்காகப் பாடுபடுபவர்கள் போலவும், அவர் மட்டும் சமாதான உடன்படிக்கைக்கு ஒத்துவராத கொடுங்கோலர் போலவும் கட்டமைக்கிற கேவலம் தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
.
இவர்கள் இருவரும் இணைவதென்பது இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை அல்ல. அந்தப் பிரச்சனை தீராவிட்டால் தமிழ்நாட்டு மக்கள் அடுத்த வேளை சோறு சாப்பிடமாட்டார்கள் என்பதுமில்லை. அதற்கான தீர்வு உங்களிடம் தான் இருக்கிறது என்றும் நினைத்துக் கொள்ளாதீர்கள்.
.
இந்த நட்பு பாலம் கட்டுகிற வேலைக்கும், உங்கள் படத்தின் வணிகத்துக்கும் ஏதாவது தொடர்பிருக்குமா என்ற கேள்விகளுக்குள் நான் போக விரும்பவில்லை. அதற்கான தரவுகளும் என்னிடம் கிடையாது. அவர் தனக்குக் கிடைக்கிற சின்னச் சின்ன வாய்ப்புகள் மூலம் தன் ரசிகர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கிறார். அதிலே கோடிக்கணக்கிலான வருமானச் சாத்தியங்கள் எல்லாம் இல்லை. அந்தப் படங்கள் எல்லாம் பல நேரங்களில் ரிலீஸ் ஆவது கூட இல்லை. மிகச் சிறிய வட்டம் இது. Do not disturb, please.
.
ஒருவேளை, நீங்கள் இதே போல, ஏஆர்.ரகுமானைப் பாட அழைத்து & 'தல' வில்லன் ரோலில் நடிக்கக் கூப்பிட்டு, அவர்கள் இருவரும் அதை ( நியாயமான காரணங்களுக்காகப்) பணிவுடன் மறுத்து, அதற்காக நீங்கள் கோபம் கொண்டு பாரதி வரிகளை எல்லாம் மேற்கோள் காட்டி பப்ளிக்காகக் கொந்தளிக்க, இதன் காரணமாக ஏ.ஆர்.ஆர். ரகுமான் / 'தல' ரசிகர்கள் உங்கள் மீது கோபப் பட்டால், என்னாகும் என்ற கவலையுடன்
.
ஒரு இளையராஜா ரசிகன்.
-
30th July 2014 04:48 AM
# ADS
Circuit advertisement
-
31st July 2014, 12:17 PM
#82
Senior Member
Seasoned Hubber
IR is singing a song written by Dhanush for the movie Vai Raja Vai with music by Yuvan. Rest of the songs for the movie will be written by Madhan Karky !!
http://www.indiaglitz.com/move-your-...il-news-111152
thanks,
Krishnan
-
2nd August 2014, 01:27 PM
#83
Junior Member
Devoted Hubber
இதய சாக்கடை சுத்தமாக படியுங்கள் - புத்தக திருவிழாவில் இளையராஜா பேச்சு!
http://cinema.dinamalar.com/tamil-ne...-Ilayaraja.htm
-
2nd August 2014, 02:38 PM
#84
Junior Member
Devoted Hubber
பைபிளையும், திருக்குறளையும் இன்னும் எத்தனை ஆண்டுகள் பேசினாலும் புது புது அர்த்தங்கள் தோன்றுகிறதோ, அது போல் இன்னும் எத்தனை ஆயிரம் மனிதர்கள் ராஜா சாரை பற்றி சிலாகித்தும், அவர் இசை குறிப்புகளை பற்றி ஆராய்ந்தும் விளக்க உரை கொடுக்க போகிறார்களோ?
நான் இசை தெரிந்தவன் அல்ல, ஒரு ரசிகன் மட்டுமே. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ பதிவில், அதை உருவாக்கிய நண்பர் சொல்வது போல் call & response என்கிற கான்செப்ட் இருக்கிறதா இல்லையா என்று எனக்கு தெரியாது. ஆனால் அதை அவர் சொன்ன விதம் அழகு.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th August 2014, 09:08 AM
#85
Junior Member
Devoted Hubber
என்ன ஒரு அருமையான பேச்சு !! ராஜாவின் பேச்சுக்கு முன்னால் சில நிமிடங்கள் ரெகார்ட் ஆகவில்லை. Please bare with this !!
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
mappi thanked for this post
-
6th August 2014, 10:31 PM
#86
Junior Member
Devoted Hubber

Originally Posted by
poem
என்ன ஒரு அருமையான பேச்சு !! ராஜாவின் பேச்சுக்கு முன்னால் சில நிமிடங்கள் ரெகார்ட் ஆகவில்லை. Please bare with this !!
நன்றி போயம்.
ராஜா சார் இது போன்ற நிகழ்சிகளில் கலந்து கொள்வது நல்ல விஷயம். இதெல்லாம் நமக்கு பொழுது போக்காக இருந்தாலும், அவருக்கு அறிவு தீனி ஊட்டுபவை. இது நாள் வரையில், தனக்கு தானே போட்டு கொண்ட வேலியில் அவருக்கான ஸ்ட்ரெஸ் ரெலீவிங் இசையை தவிர வேறொன்றும் இல்லை, அதனால் அப்படி பேசுவதும், மற்றவர் பேசுவதை கேட்பதும் அவருக்கு நல்லது தான். கமல் கூட தன அருகில் இது போன்ற ஒரு அறிவு ஜீவிகளை வைத்திருப்பார். (கு.ஞானசம்பந்தன், மறைந்த சுஜாதா, மதன் போன்றோர்) செலிப்ரிட்யாய் இருப்பதால், மண்டை சூட்டை தணிக்க அது எவ்வளவு முக்கியம் என்பது அவருக்கு தான் தெரியும்.
மலேசிய நச்சத்திர விழா மேடையில், ஒரு முறை ரஜினியை ஒரு ஸ்டைல் பண்ணி காட்டுங்க என்று ஒரு ரசிகர் சொல்ல, மிகவும் நொந்து போய், வேற ஏதாவது கேளுங்க, அது சினிமா இது வேற என்று கடுகடுத்தார். இதற்க்கு எதிர் மாறாய், ராஜா சாரை இந்த புத்தக விழாவில் பாடுங்கள் என்று சொன்ன போது ரெண்டு மூன்று பாடல்களை பாடியது பெரிய விஷயம். (இருந்தாலும் ரசிகர்கள் இதை தவிர்த்திருக்கலாம்)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th August 2014, 01:40 AM
#87
Junior Member
Devoted Hubber
-
8th August 2014, 01:43 AM
#88
Junior Member
Devoted Hubber
// ராஜா சாரை இந்த புத்தக விழாவில் பாடுங்கள் என்று சொன்ன போது ரெண்டு மூன்று பாடல்களை பாடியது பெரிய விஷயம். (இருந்தாலும் ரசிகர்கள் இதை தவிர்த்திருக்கலாம்)//
Yes, I totally agree with you, We have a long way to go..............................
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
K thanked for this post
K liked this post
-
8th August 2014, 04:42 PM
#89
Junior Member
Devoted Hubber

Originally Posted by
poem
ஆஹா... மலரும் நினைவுகள். 1983ல் நடந்த நிதி திரட்டு விழா நினைவில் இல்லை என்றாலும்,
1987ல் , +1 படிக்கும் போது ஸ்ரீ ரங்கம் கும்பாபிஷேகம் நடந்தது. பழைய கரூர் ரோட்டில் ஒரு தனியார் விடுதியில் தங்கி கொண்டு, நான் தெப்பகுளம் பிஷப் ஹீபரில் படித்துகொண்டிருந்தேன்.
விழாவை முன்னிட்டு ராஜா சார் கச்சேரி என்று விளம்பர படுத்தி இருந்ததால், மதத்தின் பால் அவ்வளவு நம்பிக்கை இல்லை என்றாலும், ராஜா சார் மீதிருந்த பற்றுதலால் அவரை பார்க்க இரவு கச்சேரிக்கு நானும் சில நண்பர்களும் காவேரி பாலத்தின் வழியாய் நடந்தே சென்று விட்டோம். கங்கை அமரன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், கடைசி வரை மேடையில் ராஜா சாரை பார்க்க முடிய வில்லை. ஏமாற்றத்துடன் திரும்பினாலும், மறுநாள் காலைஎப்படியும் அவரை பார்த்து விடலாம் என்று நினைத்து ஸ்ரீரங்கம் சென்ற நாங்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரை பார்த்தோம், கோபுர கலச நீர் துளி என் தலையிலும் விழுந்தது. இந்த புண்ணியம் ராஜா சாரையே சேரும், அவர் இல்லை என்றால் நிச்சயம் நான் ஸ்ரீரங்கம் போயிருக்கமாட்டேன். என்னை போல் எத்தனை ஆயிரம் பேர் அவருக்காக ஸ்ரீரங்கம் வந்தார்களோ..
ஸ்ரீரங்கம் விழா முடிந்த சில மாதங்களிலேயே , மறுபடியும் திருச்சி கண்டோன்மெண்டில் ஒரு கச்சேரி நடந்தது. சினி மியுசசியன்ஸ் அசோசியஷன் கட்டிட நிதிக்காக எல்லா இசை அமைப்பாளர்களும் பாடகர்களும் வந்திருந்த கச்சேரி அது (யேசுதாஸ் மட்டும் வரவில்லை). நிகழ்ச்சிக்கு என் தம்பி மற்றும் நண்பர் ஒருவருடன் சென்ற போது தான் எனக்கு முதன் முதலில் ராஜா சார் தரிசனம் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியையும் கங்கை அமரன் தான் தொகுத்து வழங்கினார்.
நிகழ்சியில் ராஜா சார் அதிகம் பாடவோ பேசவோ இல்லை. இப்போது போல் அப்போதும் வெள்ளை உடையில், தோளின் இருபுறமும் சால்வை மடித்து போட்டிருந்தார். TMS உடன் அதிகம் பேசி கொண்டிருந்தார். தென் பாண்டி சீமையிலே பாடலும், இறுதியில் எல்லோரும் சேர்ந்து பாடிய மெட்லி பாடல்களில் துப்பாக்கி கையிலெடுத்து பாடலை பாடியதும் , MSV யின் எங்கே நிம்மதி பாடலில் வரும் ஆண்கள் கோரஸில் ராஜா சாரும் சேர்ந்து பாடியது எல்லாம் இப்போது நினைத்தாலும் கண் கலங்கும்.
10th, 11th 12th படித்த அந்த காலகட்டங்களில்(1985 - 1988) ராஜா சார் இசை அமைத்து வெளிவந்த அத்தனை படங்களையும் மாரிஸ், சோனா மீனா, ரம்பா ஊர்வசி, ஸ்டார், கலையரங்கம், காவேரி திரை அரங்குகளில் பார்த்த சுகம் இன்று வரை வேறெங்கும் கிடைத்ததில்லை. அப்போது பார்த்த படங்களையும், கேட்ட பாடல்களையும் பட்டியலிட்டால், படிக்க யாருக்கும் நேரமிருக்காது.
ராஜா சாரை என் ஆழ் மனதில் பதித்த இலங்கை மற்றும் விவித்பாரதி ரேடியோவும், பக்கத்துக்கு அறையில் தங்கி இருந்த ஒரு ஆசிரியரின் டேப் ரிக்கார்டரும், டி கடையில் ஓசியில் படித்த தினதந்தியில் ராஜா சார் வேலை செய்த திரைபட விளம்பரங்கள், செய்திகள் மற்றும் தேவி வார இதழில் ராஜா சார் பற்றிய வாழ்கை கதை - எதுவும் மறக்கவில்லை.
அன்று போல் இன்றும் ராஜா சார் பற்றிய பக்தியும் அவர் மீது கொண்டுள்ள பற்றும் குறையவில்லை. அவரை யாரேனும் குறை சொன்னால் எதிரியாய் தெரிகிறார்கள். நான் வளர்ந்தும் பக்குவ படாததால், மல்லுக்கு நிற்க தோன்றுகிறது.
ஒரு 30 வயது குறைந்து போய் மறுபடியும் டீன் பருவத்தில் காலடி வைத்து திருச்சி வீதிகளில் அலைந்து திரிந்து ராஜா சாரின் படங்களை இரண்டாவது ஆட்டம் பார்த்து விட்டு, இருட்டு கடைகளில் பரோட்டா சால்னா சாப்பிட ஆசையாய் இருக்கிறது..
-
9th August 2014, 08:13 AM
#90
Junior Member
Devoted Hubber
Bookmarks