
Originally Posted by
venkkiram
ஒங்க அலப்பரை தாங்கல. ஜானகியின் சார்பா நான் எனது பார்வைகளை இங்கே வைக்க விரும்பினாலும் அது விழலுக்கு இறைத்த நீர்தான். நீங்களும் அதையெல்லாம் வசதியாக புறக்கணித்து மறுபடியும் மறுபடியும் ஆக்டேவ் பிட்ச், ஸ்விட்ச் என்றே இசை இலக்கண ரீதியா ஜல்லியடித்து விடுவீர்கள். இந்த இலக்கணத்தையெல்லாம் தூரப் போட்டு வாங்க. குரல் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை (அன்பு, பாசம், கோபம் , சினம், ஆனந்தம் ,இன்பம், மகிழ்ச்சி , துக்கம் ,ஆசை , பொறாமை , வெறுப்பு , விரக்தி , அமைதி , பயம் , கவலை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், ஆச்சரியம் , வெட்கம், பரிவு, இரக்கம், காதல், காமம், விரகதாபம், எரிச்சல் ,சலிப்பு ,குற்றுணர்வு ,மனவுளைச்சல் அல்லது மன அழுத்தம், ஈர்ப்பு, பெருமை, உணர்வின்மை, நம்பிக்கை, மனக்கலக்கம், தவிப்பு, பற்று, அவநம்பிக்கை , சோம்பல், அதிர்ச்சி, மன நிறைவு அல்லது திருப்தி , தனிமை, அவா, வலி, அலட்சியம் , திகில், பீதி, பக்தி, தியாகம், தாய்மை) மற்றும் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் அவ்வித உணர்ச்சிகளை ஏற்றி ஏற்றிப் பாடும் ஞானத்தை மட்டுமே மையமா வைத்து பேசலாம். எந்தெந்த விதமான உணர்வுகளுக்கு குரல் பயன்படுத்தப் பட்டு நேர்த்தியாக செயல்பட்டிருக்கிறது என்பதையும் அலசலாம். பன்முகக் குரலில் யார் தேர்ந்தவர், சிறந்தவர் என்பதையும் கணக்கில் கொண்டு அப்புறம் முடிவு செய்யலாம் யாருடைய நிழலை யாரெல்லாம் தீண்ட முடியாது என்று.. ஆனால் இதுபோன்ற ஆரோக்யமான விவாதம் மையத்தில் நடைபெறும் என்ற நம்பிக்கை இப்போதில்லை. அதனால, காசா பணமா! "எந்த காலத்திலும், எந்த பாடகியும் அவர் நிழலையும் தீண்ட முடியாது." - போன்ற சிலாகிப்புகளை நீங்கள் தொடர்ந்து செய்யலாம்.
Bookmarks