Page 324 of 400 FirstFirst ... 224274314322323324325326334374 ... LastLast
Results 3,231 to 3,240 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #3231
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கதாநாயகன் திரைப்படத்தில் நான்கு பாடல்கள். இசை ஆர்.கோவர்த்தனம் அவர்கள். டி.எம்.எஸ்.பி.சுசீலா டூயட் ஒன்று உண்டு. மிக நீண்ட காலமாக வைத்திருந்த ஒலிநாடா சில ஆண்டுகளுக்கு முன் சிக்கிக்கொண்டு பாழாகி விட்டது. மனதுக்கு மிகவும் கஷ்டமாயிருக்கிறது. எம்பி3 சிடியி்ல் இருந்தால் தேடித் தருகிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks madhu thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  4. #3232
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    என்னுள் கலந்த கானங்கள் 5

    *

    நாட்டுப் புறப் பாட்டு என்றாலே ஒரு மென்மை, ஒரு மெல்லிய சோகம் எல்லாம் வரும்..அது எழுதிப் பார்க்க வேண்டுமெனப் பல நாளாய் ஆசை..

    முக நூலில் ஒரு கவிஞ நண்பர் பல மாதங்களுக்கு முன்ஒரு புகைப்படமிட்டிருந்தார்..

    ஒரு வயதான கிழவி..சுருக்கம் விளைந்த முகம் கன்னத்தில் கை..தலையில் நரை..அவ்ள் முன்னே குட்டி க் குட்டிக் கூறுகளாய் காய்கள் ஆறு வெங்காயம், சில வெண்டைக்காய், சில தக்காளி சில கத்தரிக்காய்கள் எனப் பரப்பி..கண்கள் முழுக்கக் கவலை.. அந்தப் பேசிய புகைப்படத்தின் கீழ் தலைப்பு..இவர்களைப் போன்றவர்களிடம் பேரம் பேசாதீர்கள்..

    புகைப்படமும் தலைப்பும் மனதை ஏதோ செய்ய.. நான் எழுதிப் பார்த்தேன்..

    கூறுகூறா வெச்சுப் புட்டு
    ..கூவிக்கூவிக் காத்தி ருந்தேன்
    ஆறுகூறு வெங்காயம்
    ..அஞ்சுகூறு தக்காளி
    வேறு கூறும் எடுத்துப்பிட்டு
    ..வெச்ச துட்டு பத்துரூபா
    ஊரு பஸ்ஸீ காசுபோக
    ஒலய எங்க வெக்கிறது

    என எழுதினேன்..இருந்தும் கிழவியின் சோகம் கண்முன் நின்று கொண்டேஇருந்தது..
    *
    நாட்டுப் புறப் பாடல்கள் திரையிலும் மலர்திருக்கின்றன.. எழுத்தாளர் சுஜாதா தனது கரையெல்லாம் செண்பகப்பூ ஆரம்பத்தில் எழுதிய இருவரி..
    காடெல்லாம் பிச்சிப் பூ கரையெல்லாம் செண்பகப்பூ
    நாடே மணக்கதுல்ல நல்லமகன் போற பாதை.. அதையே ஷங்கர் தனது முதல்வன் படத்தில் ஒரு இடத்தில் உபயோகப் படுத்தி இருப்பார்..
    *
    ம் இப்ப பார்க்கப் போவது என்ன..

    அவள் சேரிப் பெண்..வழக்கம் போல் தலையில் பானைச் சுமையுடன் காட்டு வழி நடக்கிறாள் ஒரு தேனினினும் இனிமையான பாட்டால்..பின்னாலே வெற்று மார்பு இடையில் அரைவேட்டி கட்டி தலையில் இரு பெரும் சாக்கில் கட்டப்பட்ட சுமைகளுடன் ஒருவன்..அவள் பாட்டைக் கேட்டவாறே..

    வாங்க.. நாமும் கேட்கலாம்..

    *

    மான த்திலே மீனிருக்க மதுரையிலே நீயிருக்க
    சேலத்திலே நானிருக்க சேருவது எக்காலம்
    அத்துவானக் காட்டுக்குள்ளே ஆயர்குழ்ல் ஊதையிலே
    சாடை சொல்லி ஊதினாலும் பாதையிலே நான் வருவேன்..

    //ஏ புள்ள ஏன் பாட்ட் நிப்பாட்டிட்ட
    எதுக்கு புறத்தாலவாரீக
    ஏன் பாடுற
    என் சுமைய மறக்கத் தான்..
    நானும் என் சுமைய மறக்கத் தான் ஒன் பாட்டக் கேட்டுக்கிட்டே பின்னால வாரேன் பாடு புள்ள //

    அத்திமரம் பூத்திருக்க அத்தனையும் சிறுவானே
    சக்திவலி..மச்சானுக்கு முத்துச்சரம் நானானேன்

    தாரவேட்டி திண்ணையிலே தரிசுமஞ்சள்
    அரைக்கையிலே
    என்னபொடி போட்டானோ
    சேர்த்தரைக்க முடியலையே

    //ஏன் புள்ள நின்னுட்ட்..
    அ..எங்க சேரிவந்துருச்சுல்ல
    ஓ சேரிப்புள்ளயா நீ
    நீங்க
    நான் நாயக்கர்மாரு வீடு தெக்கத்தி முக்குல தெக்கத்திபார்த்த
    ஓ நாயக்க வீட்டுக்காரவுகளா என் பாட்டு உங்க காதத் தீண்டிடுச்சேதப்பில்ல

    புள்ள அது என் மனசையுமில்லா தீண்டிச்சு எனக்கு இன்னும் போறதுக்குதூரம் இருக்கே..சுமைய எப்படித் தூக்குவேன்..

    அ.. நீர் போம் என் பாட்டு ஒங்க பின்னாலேயே வரும்//

    மான த்திலே மீனிருக்க மதுரையிலே நீயிருக்க
    சேலத்திலே நானிருக்க சேருவது எக்காலம்
    *
    வெகு ஜோரான பாடல் (மானத்தில போகுது பார் மாடில்லாத வண்டி கேட்ட போது நினைவில் வந்தது..பாடியவர் யார் எனத் தெரியவில்லை..படம் தண்ணீர் த்ண்ணீர்..இசை வி.எல் நரசிம்மனா தெரியவில்லை..ஆனால் இயற்கையான ஒலிகள் பாடல் நெடுகிலும் புள்ளினங்கள், டொம் டொம் என்று மரம் வெட்டும் ஓசை, மரமறுக்கும் ஓசை.. இலை உதிரும் ஓசை என..கூடவே பாடலில் இழையும் மெல்லிய சோகம்..
    *
    பட இறுதியில் அந்த சேரிப் பெண் (அருந்ததி) அந்த நாயக்க பையன் சேர்ந்துப் பிரிகையில் பாழாய்ப் போன தாகம் எடுக்க அந்தப் பெண் வேறு வழியில்லாமல் தண்ணீர் இல்லாததால் கிருமிகள் நிறைந்த நீர் என்று தெரிந்தும் தாகம் தவிர்க்கக் குடித்துவிட..பிறிதொரு நாள் காதலன் வந்துபார்க்கையில் அந்த நீரைக் குடித்ததனால் அவளது கால்கள் சுவாதீனம் இழந்து விட்டிருக்கும்..
    காதலனின் மனத்தையும் நம் மனத்தையும் சேர்ந்து உருக்கும்..இந்தப்பாடலின் ஆரம்ப வரி மட்டும் மறுபடி ஒலிக்கும் என நினைக்கிறேன்.
    *

    *
    மேகம் திரளுதடி மின்னிருட்டுக் கும்முதடி அப்புறம் கண்ணான கண்மகனே கண்ணுறங்கு சூரியனே என மேலும் இரு பாடல்கள் உண்டு..
    *
    அப்புறம் வரட்டா

    அன்புடன்
    சி.க
    Last edited by chinnakkannan; 9th August 2014 at 12:52 AM.

  5. #3233
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஒவ்வொருவருக்கும் ஒரு அபிப்ராயம் அவ்வள்வே வெங்க்கிராம்.. நீங்கள் உங்கள் நிலைப்பாட்டைச் சொல்லிவிட்டீர்கள் அல்லவா..

    ஜானகியம்மாவின் பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்தவை..

    சிங்கார வேலனே தேவா
    ஜல் ஜல் ஜல் என்னும் சலங்கைஒலி
    நினைத்தால் போதும் பாடுவேன்
    சிப்பியிருக்குது முத்துமிருக்குது (அவர் தானே)

  6. #3234
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    ஒங்க அலப்பரை தாங்கல. ஜானகியின் சார்பா நான் எனது பார்வைகளை இங்கே வைக்க விரும்பினாலும் அது விழலுக்கு இறைத்த நீர்தான். நீங்களும் அதையெல்லாம் வசதியாக புறக்கணித்து மறுபடியும் மறுபடியும் ஆக்டேவ் பிட்ச், ஸ்விட்ச் என்றே இசை இலக்கண ரீதியா ஜல்லியடித்து விடுவீர்கள். இந்த இலக்கணத்தையெல்லாம் தூரப் போட்டு வாங்க. குரல் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை (அன்பு, பாசம், கோபம் , சினம், ஆனந்தம் ,இன்பம், மகிழ்ச்சி , துக்கம் ,ஆசை , பொறாமை , வெறுப்பு , விரக்தி , அமைதி , பயம் , கவலை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், ஆச்சரியம் , வெட்கம், பரிவு, இரக்கம், காதல், காமம், விரகதாபம், எரிச்சல் ,சலிப்பு ,குற்றுணர்வு ,மனவுளைச்சல் அல்லது மன அழுத்தம், ஈர்ப்பு, பெருமை, உணர்வின்மை, நம்பிக்கை, மனக்கலக்கம், தவிப்பு, பற்று, அவநம்பிக்கை , சோம்பல், அதிர்ச்சி, மன நிறைவு அல்லது திருப்தி , தனிமை, அவா, வலி, அலட்சியம் , திகில், பீதி, பக்தி, தியாகம், தாய்மை) மற்றும் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் அவ்வித உணர்ச்சிகளை ஏற்றி ஏற்றிப் பாடும் ஞானத்தை மட்டுமே மையமா வைத்து பேசலாம். எந்தெந்த விதமான உணர்வுகளுக்கு குரல் பயன்படுத்தப் பட்டு நேர்த்தியாக செயல்பட்டிருக்கிறது என்பதையும் அலசலாம். பன்முகக் குரலில் யார் தேர்ந்தவர், சிறந்தவர் என்பதையும் கணக்கில் கொண்டு அப்புறம் முடிவு செய்யலாம் யாருடைய நிழலை யாரெல்லாம் தீண்ட முடியாது என்று.. ஆனால் இதுபோன்ற ஆரோக்யமான விவாதம் மையத்தில் நடைபெறும் என்ற நம்பிக்கை இப்போதில்லை. அதனால, காசா பணமா! "எந்த காலத்திலும், எந்த பாடகியும் அவர் நிழலையும் தீண்ட முடியாது." - போன்ற சிலாகிப்புகளை நீங்கள் தொடர்ந்து செய்யலாம்.
    நீங்களும் உங்களுக்கு பிடித்த ஜானகி பாட்டை இங்கே பதிவு செய்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டியது தானே .. அதைவிட்டு இந்த திரியில் எங்கே அவரைப்பற்றி பேசுகிறார்கள் என்று கண்ணில் விளக்கெண்னை விட்டுக்கொண்டு பார்த்து அதற்கு மட்டும் வந்து பதிவு செய்வது எப்படி நியாயம். நீ முன்பு சொன்னீர்கள் “ராசாவே உன்ன நம்பி “ பாடலை மட்டுமே பாடியிருந்தாலும் கூட அவர் தான் உங்களுக்கு மிகச்சிறந்த பாடகி என்று .. அப்படி நீங்கள் சொல்லலாம் .. அதையே தானே நாங்களும் சொல்கிறோம் .. பின்னே இது மட்டும் எப்படி அலப்பரையாகும்.. விஜயபாஸ்கர் தனது பேட்டியில் ஆக்டேவ் வார்த்தையை உபயோகித்து தான் சுசீலாவை பற்றி சொல்லியுள்ளார் .. அவரவர் கருத்து வைக்க உரிமை உண்டு .. இந்த மையத்தில் பல திரிகளில் monopoly தலை விரித்து ஆடுகிறது. இங்கேயும் அதை கொண்டுவந்துவிடாதீர்கள் ஃப்ளீஸ். இந்த திரி ஒன்று தான் ஒழுங்காக ஓடி கொண்டிருக்கிறது. எனக்கு வாசுஜி, கோபால்ஜிக்கு எங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை பதிவு செய்து அதைப்பற்றி பேசும் உரிமை உண்டு ..

    நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை உணர்ச்சிகளுக்கும், பாவங்களுக்கும் என்னாலும் பாடலுக்கு பாடல் தந்து வாக்குவாதம் செய்ய முடியும் ஆனால் அதுவும் விழலுக்கு இறைந்த நீராகத்தான் இருக்கும்.. என்னால் இந்த திரியின் ஓட்டதிற்கு எந்த தடங்கலும் வந்துவிடக்கூடாது ..அதே போல் மற்றவர்களாலும்.

    உங்களுக்கு பிடித்த பாடலை பதிவு செய்து அதை பற்றி சிலாகித்துக்கொள்ளுங்களேன் யார் வேண்டாம் என்கிறார்கள்
    Last edited by rajeshkrv; 9th August 2014 at 01:50 AM.

  7. #3235
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0

    வெங்கி ராம்,

    வருகைக்கு நன்றி. கேட்ட உடனே அருவருப்பு ஏற்படுத்தும் குரலில் உணர்ச்சிகளாவது ,மண்ணாவது.ஜானகியின் மிமிக்ரி குரல் உங்களுக்கு பிடித்திருக்கலாம்.முக்கால்வாசி நண்பர்கள்,ஜானகியின் குரலை ,இளைய ராஜாவோடு இணைத்து பார்ப்பதால் வரும் வினை.

    டி.எம்.எஸ்-சுசிலா மீது இருந்த பழைய சிறு உரசல்களை கொண்டு, கழுதை குரல் மலேசியா வாசுதேவன்,மிமிக்ரி குரல் ஜானகிக்கு ஆதரவு தந்து, பல காலத்தை வென்று நிற்கும் இளைய ராஜா பாடல்கள் உருக்குலைக்க பட்டன. பல பாடல்கள் சித்ரா,சுஜாதா,ஸ்ரேயா போன்றோர் பாடியிருந்தால்,என்று இளைய ராஜாவின் உண்மை ரசிகனாக,ஏங்க எனக்கு உரிமை இல்லையா?

    நீங்கள் குறிப்பிட்ட அன்பு,பாசம்,காதல்,நம்பிக்கை,உரிமை,காம-குரோதம்,நெகிழ்வு,சோம்பல்,சோகம்,இழப்பு ,தவிப்பு, பொறாமை , வெறுப்பு , விரக்தி , அமைதி , பயம் ,(etc etc) இதற்கு மேலும் எங்கள் சுசிலா பாடிய பாடல்களை எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன்.

    மற்ற படி, டானா சம்மர் காப்பி அடித்து,அறுபது வயதில் மிமிக்ரி குரலில் முக்கி, நிலா காய வேண்டிய(இது காமம் என்றால்,முனிவர் போல காமத்தை துறக்க நான் ரெடி) அவசியம் சுசீலாவிற்கு இல்லை.

    ஒன்றே ஒன்று .சுசிலாவின் குரலால் எனக்கு ஏற்படுத்த முடியாத இரண்டு உணர்ச்சிகள் ஜானகியின் குரலால் ஏற்பட்டுள்ளதை நான் நேர்மையாக ஒப்பு கொள்கிறேன்.

    ஒன்று, சிறு வயதில் ஆசிரியர்(அல்லது ஆசிரியை) சாக்கு கட்டியால் பலகையில் எழுதும் போது ,சில சமயம் கீச்சொலி ஏற்பட்டு ,என்னை உடம்பெல்லாம் கூச வைக்கும். ஜானகியின் குரலால் ,அடிக்கடி வகுப்பறைக்கு சென்று ,அந்த கூச்ச உணர்வின் பழைய நினைவுகளில் திளைத்தேன்.

    இரண்டாவது அருவருப்புணர்வு. இது எக்காலத்திலும் சுசீலாவின் குரல் எனக்கு ஏற்படுத்தியதில்லை.

    மயில் சாமி போன்றோரின் போட்டியாளரை, சுசீலாவின் முன்னே போட்டியாளராய் முன் நிறுத்தும் ,தங்கள் துணிவை மெச்சுகிறேன்.

    நீங்கள் என்னதான் சொன்னாலும் ஒரு சுசிலா,ஒரு ஈஸ்வரி போல மிமிக்ரி ஜானகி வரவே முடியாது. இளையராஜாவின் இசை ஜாலத்தால் அவர் தூக்கி நிறுத்த பட்டாலும், இழப்பு அந்த உன்னத பாடல்களுக்கே.
    Last edited by Gopal.s; 9th August 2014 at 04:39 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. #3236
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    நீங்களும் உங்களுக்கு பிடித்த ஜானகி பாட்டை இங்கே பதிவு செய்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டியது தானே .. அதைவிட்டு இந்த திரியில் எங்கே அவரைப்பற்றி பேசுகிறார்கள் என்று கண்ணில் விளக்கெண்னை விட்டுக்கொண்டு பார்த்து அதற்கு மட்டும் வந்து பதிவு செய்வது எப்படி நியாயம். நீ முன்பு சொன்னீர்கள் “ராசாவே உன்ன நம்பி “ பாடலை மட்டுமே பாடியிருந்தாலும் கூட அவர் தான் உங்களுக்கு மிகச்சிறந்த பாடகி என்று .. அப்படி நீங்கள் சொல்லலாம் .. அதையே தானே நாங்களும் சொல்கிறோம் .. பின்னே இது மட்டும் எப்படி அலப்பரையாகும்.. விஜயபாஸ்கர் தனது பேட்டியில் ஆக்டேவ் வார்த்தையை உபயோகித்து தான் சுசீலாவை பற்றி சொல்லியுள்ளார் .. அவரவர் கருத்து வைக்க உரிமை உண்டு .. இந்த மையத்தில் பல திரிகளில் monopoly தலை விரித்து ஆடுகிறது. இங்கேயும் அதை கொண்டுவந்துவிடாதீர்கள் ஃப்ளீஸ். இந்த திரி ஒன்று தான் ஒழுங்காக ஓடி கொண்டிருக்கிறது. எனக்கு வாசுஜி, கோபால்ஜிக்கு எங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை பதிவு செய்து அதைப்பற்றி பேசும் உரிமை உண்டு ..

    நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை உணர்ச்சிகளுக்கும், பாவங்களுக்கும் என்னாலும் பாடலுக்கு பாடல் தந்து வாக்குவாதம் செய்ய முடியும் ஆனால் அதுவும் விழலுக்கு இறைந்த நீராகத்தான் இருக்கும்.. என்னால் இந்த திரியின் ஓட்டதிற்கு எந்த தடங்கலும் வந்துவிடக்கூடாது ..அதே போல் மற்றவர்களாலும்.

    உங்களுக்கு பிடித்த பாடலை பதிவு செய்து அதை பற்றி சிலாகித்துக்கொள்ளுங்களேன் யார் வேண்டாம் என்கிறார்கள்
    நானே வலியக்க எங்கேயும் ஜானகிதான் சிறந்தவர் என நிறுவவில்லை. ஜானகி என்ற மிகப்பெரிய ஆளுமை திரு கோபால் அவரிகளின் பதிவுகளால் புறக்கணிக்கப் படுவதற்கு எனதளவில் பதியப்பட்ட எதிர் குரலே அக்குரல். பிரபல பத்திரிகை ஆனந்த விகடனில் கடந்த வருடத்தில் ஜானகி பற்றிய ஒரு கட்டுரையில் இப்படி சிலாகித்திருந்தனர். ஜானகி தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைபோல மிகப்பெரிய ஆளுமை. இன்னொரு இடத்தில் திரு கோபால் பதிவிட்டு இருந்த ஆகச்சிறந்த பத்து பாடகிகள் வரிசையில் அந்த ஆளுமைக்கு கொடுக்கப் பட்ட இடம் எது தெரியுமா? இடமே தரப்படவில்லை. நீங்கள் கேட்டீர்களா அவரிடம் இது சரியான பட்டியலா என ? இல்லையே! ஆனால் ஜானகி பற்றிய திரு கோபாலின் பதிவிற்கு "yes overusage of JAnaki killed many songs of IR that is true. " என பதிவு செய்தீர்கள். எந்தெந்த பாடல்களை ஜானகி பாழ்படுத்தினர் என லாவணி பாடுவது நேர விரயம் என தவிர்த்துவிட்டேன். அதுபோல இன்றைக்கும் ஜானகி பற்றிய எனது பதிவிற்கு (அதுவும் திரு கோபாலின் சுசிலாவின் நிழலைக் கூட யாரும் தொடமுடியாது என்ற பதிவிற்கான எதிர்பதிவு) கருத்து சொல்கிறேன் பேர்வழி என மறுபடியும் திரு கோபால் சார்பாக பேச வந்துட்டிங்க! அதுவும் "இந்த திரியில் எங்கே அவரைப்பற்றி பேசுகிறார்கள் என்று கண்ணில் விளக்கெண்னை விட்டுக்கொண்டு பார்த்து அதற்கு மட்டும் வந்து பதிவு செய்வது எப்படி நியாயம்." என்ற குற்றச்சாட்டோடு! காமெடிதான் போங்க. நடுநிலை என்ற போர்வையில் தேர்ந்த ரசனை என்ற முகத்தில் தன் வசதிக்கேற்ப தரவரிசைப் படுத்தும் பழக்கம் திரு கோபாலிடம் இருப்பதை பார்க்கிறேன். அதற்கான எதிர்குரலாக மட்டுமே என் பதிவுகளை நீங்கள் பார்க்கவேண்டும். மோனோபோலியை நான் என்றுமே ஆதரிப்பதில்லை. வெளியில் எல்லோருக்கும் ஒரு இடம் இருக்க வேண்டும். ஆனால் தேர்ந்த காரணிகளைக் கொண்டு சிறந்தது எது என பகுத்துப் பார்ப்பது ஒருவரின் தனி உரிமை. ஆனால் தேர்வு செய்யப்படும் காரணிகளே சரியானவைகளால் இல்லாத பட்சத்தில் ஒருவரது அபிப்ராயத்தில் பாரபட்சம் இருந்தால் எதிர்குரல் கொடுப்பது இன்னொருவரின் உரிமை. திரு கோபால் ராஜாவுக்கென்ற பிரத்யேகத் திரியில் கூட வேண்டுமென்றே எம்.எஸ்.விக்கு முதலிடம், ரஹ்மானுக்கு இரண்டாமிடம், ராஜாவுக்கு மூன்றாமிடம் என பதிவிட்டுச் சென்றவர்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  9. #3237
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    வெங்கி ராம்,

    வருகைக்கு நன்றி. கேட்ட உடனே அருவருப்பு ஏற்படுத்தும் குரலில் உணர்ச்சிகளாவது ,மண்ணாவது.ஜானகியின் மிமிக்ரி குரல் உங்களுக்கு பிடித்திருக்கலாம்.முக்கால்வாசி நண்பர்கள்,ஜானகியின் குரலை ,இளைய ராஜாவோடு இணைத்து பார்ப்பதால் வரும் வினை.

    டி.எம்.எஸ்-சுசிலா மீது இருந்த பழைய சிறு உரசல்களை கொண்டு, கழுதை குரல் மலேசியா வாசுதேவன்,மிமிக்ரி குரல் ஜானகிக்கு ஆதரவு தந்து, பல காலத்தை வென்று நிற்கும் இளைய ராஜா பாடல்கள் உருக்குலைக்க பட்டன. பல பாடல்கள் சித்ரா,சுஜாதா,ஸ்ரேயா போன்றோர் பாடியிருந்தால்,என்று இளைய ராஜாவின் உண்மை ரசிகனாக,ஏங்க எனக்கு உரிமை இல்லையா?

    நீங்கள் குறிப்பிட்ட அன்பு,பாசம்,காதல்,நம்பிக்கை,உரிமை,காம-குரோதம்,நெகிழ்வு,சோம்பல்,சோகம்,இழப்பு ,தவிப்பு, பொறாமை , வெறுப்பு , விரக்தி , அமைதி , பயம் ,(etc etc) இதற்கு மேலும் எங்கள் சுசிலா பாடிய பாடல்களை எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன்.

    மற்ற படி, டானா சம்மர் காப்பி அடித்து,அறுபது வயதில் மிமிக்ரி குரலில் முக்கி, நிலா காய வேண்டிய(இது காமம் என்றால்,முனிவர் போல காமத்தை துறக்க நான் ரெடி) அவசியம் சுசீலாவிற்கு இல்லை.

    நீங்கள் என்னதான் சொன்னாலும் ஒரு சுசிலா,ஒரு ஈஸ்வரி போல மிமிக்ரி ஜானகி வரவே முடியாது. இளையராஜாவின் இசை ஜாலத்தால் அவர் தூக்கி நிறுத்த பட்டாலும், இழப்பு அந்த உன்னத பாடல்களுக்கே.
    அடுத்த அஸ்திரத்தை எய்துவிட்டார் திரு கோபால். இதுபோன்ற திரியில் "உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டியது தானே " என ரொம்ப சாதாரணமாக சொல்லிவிட்டீர்கள் திரு ராஜேஷ்! எப்படிங்க முடியும்? எப்படி முடியும்னேன்! அதற்கான தகுதியை இத்திரி இழந்துவிட்டது என்றே கருதுகிறேன்.
    Last edited by venkkiram; 9th August 2014 at 04:39 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  10. #3238
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ஆ.த அ சி யில் எல்லாப் பாட்ட்டும் கேட்டிருக்கிறேன்..படம்பார்த்தது தியேட்டரில் தானே ஆனால் நினைவிலில்லை..ஜெயா டிவியில் மறுபடி பார்த்த போது மதுண்ணா ஏக பாட் கட்.. அதுவும் காளி என் ரத்தினம் கணீர்க்குரலில்பாடும் காளிப் பாட்டு கட்

    கதா நாயகன் பாட்டு கேட்டதா நினைவிலில்லையே..
    சிக்கா.. இந்தாங்க.... எஸ்.வரலக்ஷ்மியின் காதலாகினேன்..

  11. #3239
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    நானே வலியக்க எங்கேயும் ஜானகிதான் சிறந்தவர் என நிறுவவில்லை. ஜானகி என்ற மிகப்பெரிய ஆளுமை திரு கோபால் அவரிகளின் பதிவுகளால் புறக்கணிக்கப் படுவதற்கு எனதளவில் பதியப்பட்ட எதிர் குரலே அக்குரல். பிரபல பத்திரிகை ஆனந்த விகடனில் கடந்த வருடத்தில் ஜானகி பற்றிய ஒரு கட்டுரையில் இப்படி சிலாகித்திருந்தனர். ஜானகி தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைபோல மிகப்பெரிய ஆளுமை. இன்னொரு இடத்தில் திரு கோபால் பதிவிட்டு இருந்த ஆகச்சிறந்த பத்து பாடகிகள் வரிசையில் அந்த ஆளுமைக்கு கொடுக்கப் பட்ட இடம் எது தெரியுமா? இடமே தரப்படவில்லை. நீங்கள் கேட்டீர்களா அவரிடம் இது சரியான பட்டியலா என ? இல்லையே! ஆனால் ஜானகி பற்றிய திரு கோபாலின் பதிவிற்கு "yes overusage of JAnaki killed many songs of IR that is true. " என பதிவு செய்தீர்கள். எந்தெந்த பாடல்களை ஜானகி பாழ்படுத்தினர் என லாவணி பாடுவது நேர விரயம் என தவிர்த்துவிட்டேன். அதுபோல இன்றைக்கும் ஜானகி பற்றிய எனது பதிவிற்கு (அதுவும் திரு கோபாலின் சுசிலாவின் நிழலைக் கூட யாரும் தொடமுடியாது என்ற பதிவிற்கான எதிர்பதிவு) கருத்து சொல்கிறேன் பேர்வழி என மறுபடியும் திரு கோபால் சார்பாக பேச வந்துட்டிங்க! அதுவும் "இந்த திரியில் எங்கே அவரைப்பற்றி பேசுகிறார்கள் என்று கண்ணில் விளக்கெண்னை விட்டுக்கொண்டு பார்த்து அதற்கு மட்டும் வந்து பதிவு செய்வது எப்படி நியாயம்." என்ற குற்றச்சாட்டோடு! காமெடிதான் போங்க. நடுநிலை என்ற போர்வையில் தேர்ந்த ரசனை என்ற முகத்தில் தன் வசதிக்கேற்ப தரவரிசைப் படுத்தும் பழக்கம் திரு கோபாலிடம் இருப்பதை பார்க்கிறேன். அதற்கான எதிர்குரலாக மட்டுமே என் பதிவுகளை நீங்கள் பார்க்கவேண்டும். மோனோபோலியை நான் என்றுமே ஆதரிப்பதில்லை. வெளியில் எல்லோருக்கும் ஒரு இடம் இருக்க வேண்டும். ஆனால் தேர்ந்த காரணிகளைக் கொண்டு சிறந்தது எது என பகுத்துப் பார்ப்பது ஒருவரின் தனி உரிமை. ஆனால் தேர்வு செய்யப்படும் காரணிகளே சரியானவைகளால் இல்லாத பட்சத்தில் ஒருவரது அபிப்ராயத்தில் பாரபட்சம் இருந்தால் எதிர்குரல் கொடுப்பது இன்னொருவரின் உரிமை. திரு கோபால் ராஜாவுக்கென்ற பிரத்யேகத் திரியில் கூட வேண்டுமென்றே எம்.எஸ்.விக்கு முதலிடம், ரஹ்மானுக்கு இரண்டாமிடம், ராஜாவுக்கு மூன்றாமிடம் என பதிவிட்டுச் சென்றவர்.
    ஆனந்த விகடன் என்ன இன்னும் பல பத்திரிக்கைகளில் சுசீலாவையும் சிலாகித்து நிறைய நிறைய எழுதியிருக்கிறார்கள் அதை படிக்காமல் கண்ணை நீங்கள் மூடிக்கொண்டிருக்கலாம் அத்னால அதுவெல்லாம் உண்மை இல்லை என்று ஆகிவிடாது. கோபால் அவரது கருத்துக்களை சொல்கிறார். நீங்கள் ஏன் அப்படி சொன்னீர்கள் என்று எப்படி கேட்க முடியும். இது என் கருத்து என்று உங்கள் பதிவை வைத்தால் போதுமே ... “உங்கள் இந்த ஒரு பாட்டு போதும் வேறு எந்த பாட்டும் பாடவில்லை என்றாலும் அவர் எனக்கு சிறந்த பாடகி” என்று நீங்கள் சொன்னது சாதாரண தொனியா.. .. நான் யாருக்கும் வக்காளத்து வாங்கி கொண்டு வரவில்லை .. உங்கள் ரசனை உங்களுடன் எங்கள் ரசனை எங்கள் உரிமை .. ராஜா ரசிகர்கள் எம்.எஸ்.வியின் பாட்டை கேட்காமல் ராஜாவே தெய்வம் என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் .. அவர்களை ஒருவர் ஒருவராய் பார்த்து புரிய வைக்கவா முடியும்... .. இந்த திரி இனிதே தொடரவேண்டு .. இத்துடன் இது சம்பந்தபட்ட என் கருத்துக்களை நிறுத்திக்கொள்கிறேன். என்னை பொருத்தவரை மற்றவர்கள் பாடகிகள் அவ்வளவுதான்.. சுசீலா எல்லோரையும் காட்டிலும் ஒரு படி 2 படி அல்ல 1000 படிகள் மேலே ..

  12. #3240
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    கோபால் சார், உங்கள் கருத்து மிகவும் சரி . ஒரு சுசீலா , ஒரு ஈஸ்வரி உண்மை...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •