Page 84 of 400 FirstFirst ... 3474828384858694134184 ... LastLast
Results 831 to 840 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #831
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. Likes Russellmai, gkrishna liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #832
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post


    maalaimalar 08/08/14 vaali

    எம்.ஜி.ஆரின் ஏராளமான படங்களுக்கு வாலி பாடல் எழுதிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் (1964), சிவாஜி படங்களுக்கும் பாட்டு எழுத அழைப்பு வந்தது. சிவாஜியின் அன்பைப் பெற்றவரும், அவருடைய நீண்ட கால குடும்ப நண்பருமான பெரியண்ணன், தனது சாந்தி பிலிம்ஸ் சார்பாக "அன்புக்கரங்கள்" என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்தார்.

    படத்தின் கதாநாயகன் சிவாஜிதான். அப்படத்துக்கு வாலி பாடல் எழுதவேண்டும் என்று பெரியண்ணன் விரும்பினார். வாலியை அழைத்துச்சென்று சிவாஜியிடம் அறிமுகம் செய்தார். அதன்பின் நடந்தது பற்றி வாலி கூறியதாவது:-

    "கணேசு! இவருதான் வாலி. நம்ம ஊர்க்காரர். திருச்சி" என்று, சிவாஜியிடம் பெரியண்ணன் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது நான் ஏகப்பட்ட எம்.ஜி.ஆர். படங்களுக்கு பாடல்கள் எழுதிக் கொண்டிருப்பது சிவாஜிக்குத் தெரியும். அதன் காரணமாக, என்பால் அவருக்கு ஒரு எரிச்சல் இருக்கக்கூடும் என்று எண்ணினேன்.

    ஆனால் என் எண்ணத்திற்கு மாறாக, சிவாஜி சிரித்த முகத்தோடு "வாங்க" என்று என் வலக்கரத்தில் தன் வலக்கரத்தை கோத்து வரவேற்றார். 1964-ல் ஆரம்பமான இந்த அறிமுகம், பிறகு நான் 60 சிவாஜி படங்களுக்கு பாடல்கள் எழுத ஓர் ஆரம்பமாக அமைந்தது.

    `பராசக்தி' காலத்திலிருந்தே சிவாஜியின் நடிப்பில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்த நான் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றக் கூட்டங்களில், சிவாஜியை விமர்சித்துப் பேசவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானதுண்டு. இதுகுறித்து சிவாஜிக்கு மனத்தளவில் என்பால் ஒரு கசப்புணர்வு மெல்லியதாய் பரவியிருந்தபொழுதும், அவர் படங்களுக்கு நான் பாடல் எழுதக்கூடாது என்றெல்லாம் தடை விதிக்கக்கூடிய குறுகிய கண்ணோட்டம் அவரிடம் இருந்ததில்லை.

    தனிப்பட்ட முறையில் சிவாஜியும், எம்.ஜி.ஆரும் ஆரத்தழுவி அன்பு பாராட்டும் நண்பர்களாக இருந்தபோதும், தொழில் ரீதியாக அவர்களுக்கிடையே ஒரு போட்டி மனப்பான்மை இருந்தது முக்காலும் உண்மை.

    சிவாஜி நடிக்கும் `அன்புக்கரங்கள்' படத்திற்கு நான் பாடல்கள் எழுதுவதாக, என் பெயரைத்தாங்கிய முழுப்பக்க விளம்பரம் நாளேடுகளில் வெளியான அன்று `தாழம்பூ' படப்பிடிப்பில், நான் எம்.ஜி.ஆரைத் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. என்னைப் பார்த்தவுடன், "உங்க `அன்புக்கரங்கள்' எப்ப ரிலீஸ்?" என்று எம்.ஜி.ஆர். புன்னகைத்தவாறு என்னிடம் கேட்டார்.

    "உங்க அன்புக்கரங்களில் இருந்து, என்றைக்குமே எனக்கு ரிலீஸ் கிடையாது" என்று நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார். பிற்காலத்தில், தமிழக முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி வகித்தபோது, புயல் - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, நட்சத்திரங்கள் நிதி திரட்டினார்கள்.

    5 முக்கிய நகரங்களில் எம்.ஜி.ஆர். தலைமையில் அனைத்துப் பிரபல நடிகர்களும் பங்கு பெறும் வகையில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடாகியிருந்தன. திருநெல்வேலியில் நடந்த கலை நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர். தலைமை வகிக்கையில், நான் அவருக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தேன்.

    அமைச்சர்கள் காளிமுத்து, எட்மண்ட் முதலானோர் பின் வரிசையில் அமர்ந்திருந்தார்கள். "அசோக சக்ரவர்த்தியின் கலிங்கத்துப்போர்" என்னும் ஓரங்க நாடகத்தில் -சிவாஜி அவர்கள் சாம்ராட் அசோகனாக மேடையில் தோன்றி, அற்புதமாக நடித்தார்.

    இந்த ஓரங்க நாடகம், முரசொலி மாறன் "அன்னையின் ஆணை" படத்திற்காக எழுதியது. சிவாஜி அவர்கள் தனக்கே உரித்தான வசன உச்சரிப்பாலும், வியத்தகு நடிப்பாலும், வெகுவாகப் பலரையும் கவர, நான் உடனே எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்: "அண்ணே! சிவாஜி மாதிரி ஒரு நடிகர், இந்த சகாப்தத்திலே வேறு யாருமில்லை... என்ன நடிப்பு பார்த்தீங்களா?" என்றேன்.

    "சிவாஜிக்கு அடுத்ததாக நடிகர் முத்துராமனையும் சொல்லலாம்..." என்றார் எம்.ஜி.ஆர். பிறகு, எம்.ஜி.ஆர். தலைமை வகித்துப் பேச மேடைக்குச் சென்றுவிட்டார். உடனே, என் பின்னே அமர்ந்திருந்த அமைச்சர் எட்மண்ட், "என்னங்க வாலி! சிவாஜி நடிப்பைப் புகழ்ந்து எம்.ஜி.ஆர்.கிட்டயே பேசிட்டீங்களே... உங்களப்பத்தி, தப்பா நினைச்சுக்கப் போறாரு..." என்று என்னிடம் சொன்னதும்தான், நான் நாகரிகக் குறைவான முறையில் நடந்து கொண்டுவிட்டேனோ என்னும் சந்தேகம் என்னைத் தொற்றிக் கொண்டது.

    இருப்பினும், எம்.ஜி.ஆர். அதைத் தவறாக எடுத்துக்கொள்ளாமல், என்னிடம் தொடர்ந்து அன்பு குறையாமலே பழகினார்.
    எப்பொழுதுமே நான் ஒளிவு மறைவின்றிப் பேசியதாலேயே, என்னை எம்.ஜி.ஆர். விரும்பினார் என்று நான் நினைக்கிறேன்.

    எம்.ஜி.ஆர். அறிய, சிவாஜியைப் பாராட்டியது போல் -சிவாஜி அறிய நான் எம்.ஜி.ஆரைப் பாராட்டும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். முதல்வராகப் பதவியேற்றதும், அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்த நடிகர் சங்கம் தீர்மானித்தது. வாழ்த்து மடல் ஒன்றை வாசித்துக் கொடுக்கவும் ஏற்பாடாயிற்று.

    அப்போது நடிகர் சங்கத்தின் தலைவராயிருந்த சிவாஜி, சங்கத்தின் செயலாளராயிருந்த மேஜர் சுந்தர்ராஜனை என்னிடம் அனுப்பி, எம்.ஜி.ஆரைப் பாராட்டி வாசித்தளிக்கும் வாழ்த்து மடலை எழுதி வாங்கி வரச்சொன்னார். அந்த வாழ்த்து மடலில், எம்.ஜி.ஆரின் இனிய பண்புகளையும், இயல்பான நடிப்பையும் மிகவும் சிலாகித்து நான் எழுதியிருந்தேன். படித்துவிட்டு, சிவாஜி, புன்னகைத்தாரே தவிர பொருமினார் இல்லை."

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
    THAT's NADIGAR THILAGAM - A THOROUGH PROFESSIONAL BY ALL MEANS !!!
    Last edited by RavikiranSurya; 10th August 2014 at 10:28 PM.

  5. Likes Subramaniam Ramajayam liked this post
  6. #833
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Just Relax


  7. Likes Russellmai liked this post
  8. #834
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post

    சில

    சாதனைகள் எல்லோரிடமும் உண்டு
    என்பதை ஒப்புகொள்ள பழகுங்கள்

    ஆமாம் நடிகர்திலகத்தின் சாதனைகளை
    ஏற்றுகொண்டு வாழப்பழகுங்கள்

    மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்
    என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்

    உங்கள் வீட்டு மல்லிகை மட்டும்தான்
    மணக்கிறது என்று பிடிவாதம் பிடிக்காதீர்கள்

    பொய்யான ஆவணங்களை தயாரித்து பதிவிட்டு
    மனச்சாந்தி அடையுங்கள்

    சிவாஜியின் புகழ் - சாதனைகள் -ஏற்று கொள்ள இயலாதவர்களின் அறியாமையை கண்டு பரிதாபம்
    படுகிறோம் .

    சிவா சார்

    விட்டு விடுங்கள் சார் ! அவர்கள் திரியில் போட்ட பதில் பதிவையும் நீக்கிவிடுங்கள் சார். என்னுடைய தாழ்மையான விண்ணப்பம் !

    எதுக்கு? நம்முடைய ENERGY தான் வேஸ்ட் !
    SOME OF THEM WONT REALISE !
    SOME ARE OF THE WRONG IMPRESSION THAT " ONLY IF THEY SCOLD (or) TALK ILL (or) SPREAD WRONG INFORMATION ABOUT NADIGAR THILAGAM, THEY WILL BE ACCEPTED & RECOGNIZED AS HARDCORE Mr.MGR DEVOTEES" - WE CANNOT TALK (or) TRY TO EXPLAIN TO PEOPLE BELONGING TO THAT CATEGORY !

    எஸ்வி சார் பதிவை பார்த்தால் ஒருவித COMPULSION அவர் மேல் இருப்பது நமக்கு தெரியாமல், புரியாமல் இல்லை. LET US NOT MAKE HIM MORE UNCOMFORTABLE.

    Am not blindly supporting him sir because usually அவர் அப்படி பதிவு பதிபவர் அல்ல ! Even, am surprised and rather shocked with his comments off late.

    இது சமீப காலமாக அவர் இப்படி எழுத தொடங்கியுள்ளார். SOMETHING STRANGE !

    அவருடைய முந்தைய பதிவு மற்றும் இப்போதைய பதிவு COMPARE செய்து பார்த்தால் நமக்கு உண்மை விளங்கும்..!

    HE WAS A THOROUGH GENTLEMAN ! LET US BELIEVE THAT HE WILL ALWAYS BEHAVE AS ONE.

    அந்த திரியில் இனி நாம் பதிவு போடவேண்டாம் சார் ! ப்ளீஸ் !

    Moderator கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் திரு முரளி சார் கூறியதை போல..!

    Regards

    RKS
    Last edited by RavikiranSurya; 10th August 2014 at 10:59 PM.

  9. #835
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Friends,

    Do not visit the other thread to increase their pages. Let us concentrate on our thread to propagate the
    glory of Acting God. Finally Truth will triumph.

    Regards

  10. Thanks eehaiupehazij thanked for this post
  11. #836
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    எஸ்வி சார் பதிவை பார்த்தால் ஒருவித COMPULSION அவர் மேல் இருப்பது நமக்கு தெரியாமல், புரியாமல் இல்லை. LET US NOT MAKE HIM MORE UNCOMFORTABLE.

    Am not blindly supporting him sir because usually அவர் அப்படி பதிவு பதிபவர் அல்ல ! Even, am surprised and rather shocked with his comments off late.

    இது சமீப காலமாக அவர் இப்படி எழுத தொடங்கியுள்ளார். SOMETHING STRANGE !

    அவருடைய முந்தைய பதிவு மற்றும் இப்போதைய பதிவு COMPARE செய்து பார்த்தால் நமக்கு உண்மை விளங்கும்..!

    HE WAS A THOROUGH GENTLEMAN ! LET US BELIEVE THAT HE WILL ALWAYS BEHAVE AS ONE.
    எறும்பு ஊறக் கல்லும் தேயுமே ! Strange Ambient Circumstances may also make a seasoned gentleman to get transformed into an estranged jungleman! We wish Mr.Esvee to sustain his 'gentleman' image!!
    Last edited by sivajisenthil; 11th August 2014 at 10:04 AM.

  12. Likes Subramaniam Ramajayam liked this post
  13. #837
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    All the recognition/awards is gettable in our country unlike NAYAGARA MAYOR POST.

    The Only actor in the world went by plane for makeup test - NT.

    Regards

  14. Thanks Subramaniam Ramajayam thanked for this post
    Likes Subramaniam Ramajayam liked this post
  15. #838
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by s.vasudevan View Post
    All the recognition/awards is gettable in our country unlike NAYAGARA MAYOR POST.

    எதுக்கும் கலைவேந்தனிடம் கேட்டு உறுதி செய்து கொள்ளவும்.

  16. #839
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalnayak View Post
    எதுக்கும் கலைவேந்தனிடம் கேட்டு உறுதி செய்து கொள்ளவும்.
    good joke. Nam nilamai ippadiyaga venduma oh my lord.

  17. #840
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    விஜய் டி.வி.யின் நீயா நானா நிகழ்ச்சியில் நமது ஆருயிர் நண்பர் முரளி சார்.. அவருக்கு இடது புறம் இரு இருக்கைகள் தள்ளி அடியேன்...

    ஒளிபரப்பாகும் நாள் நேரம் தெரியவில்லை...

    கீழிருந்து மேலாக மூன்றாவது வரிசையில் இடமிருந்து வலமாக இரண்டாவதாக அமர்ந்திருக்கும் நண்பர் பாலாஜி அவர்களின் ராஜா ராணி சேரன் செங்குட்டுவன் வசன நடிப்பு அனைவரிடமும் பலத்த கரகோஷத்தைப் பெற்றது. தொலைக்காட்சியில் இது இடம் பெறுமா தெரியவில்லை.

    முன் வரிசையில் இடமிருந்து வலமாக முதலில் அமர்ந்திருப்பவர் நமது மற்றோர் ஆருயிர் நண்பர் கிருஷ்ணாஜீ... தற்போது மதுர கானத்தில் மயக்கிக் கொண்டிருப்பவர்...
    Last edited by RAGHAVENDRA; 11th August 2014 at 05:44 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  18. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Harrietlgy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •