-
13th August 2014, 09:42 PM
#3941
Senior Member
Senior Hubber
நன்றி என்ற வார்த்தை சிறியது ஆனால் அதை சொல்லும் மனது பெரியது என்பார்கள்.. அதைப்போல ஆஹா உங்கள் நன்றி தோரணம் பலே ஜோர்... ஒவ்வொரு பங்களிப்பாளரையும் நினைவு கூர்ந்து ஒரு வரியில் சொல்லிவிடாமல் அதையும் அழகாக பாங்காக சொல்வது அருமை அருமை. வாசு ஜி தமிழ் உமது கைகளில் விளையாடுவதற்கு என்ன பாக்கியம் பெற்றதோ ..
வாழ்க .. இரண்டாம் பாகத்தை விரைவில் தாரும் ... // நான் என்ன் சொல்ல .. எல்லாம் ராஜேஷ் சொல்லிய பிறகு.. வழி மொழிகிறேன்..ஆஆ ஆனால் வாழ்த்த வயதில்லை (?!) வாசு சார்..வணங்குகிறேன்..ஆசிர்வதியுங்கள் எனக்கு இன்னும் எழுத வருவதற்கு 
அன்புடன்
சி.க
-
13th August 2014 09:42 PM
# ADS
Circuit advertisement
-
13th August 2014, 09:48 PM
#3942
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
நன்றி என்ற வார்த்தை சிறியது ஆனால் அதை சொல்லும் மனது பெரியது என்பார்கள்.. அதைப்போல ஆஹா உங்கள் நன்றி தோரணம் பலே ஜோர்... ஒவ்வொரு பங்களிப்பாளரையும் நினைவு கூர்ந்து ஒரு வரியில் சொல்லிவிடாமல் அதையும் அழகாக பாங்காக சொல்வது அருமை அருமை. வாசு ஜி தமிழ் உமது கைகளில் விளையாடுவதற்கு என்ன பாக்கியம் பெற்றதோ ..
வாழ்க .. இரண்டாம் பாகத்தை விரைவில் தாரும் ... // நான் என்ன் சொல்ல .. எல்லாம் ராஜேஷ் சொல்லிய பிறகு.. வழி மொழிகிறேன்..ஆஆ ஆனால் வாழ்த்த வயதில்லை (?!) வாசு சார்..வணங்குகிறேன்..ஆசிர்வதியுங்கள் எனக்கு இன்னும் எழுத வருவதற்கு
அன்புடன்
சி.க
சி.க உண்மையிலேயே உமது எழுதும் திறன் மிக அபாரம் ..எல்லோரும் ஒரு சீரிய நடையில் எழுதுவது என்பது இயல்பு ஆனால் உமது எழுத்து பாணி வித்தியாசம் . நிறைய எழுதுங்கள்
படித்து மகிழ நாங்களெல்லாம் இருக்கிறோம்
-
13th August 2014, 10:01 PM
#3943
Senior Member
Senior Hubber
குரு ராஜேஷ்ஜி
நன்றி..இன்னும் பயம்மா இருக்கு.. வெகுதூரம் போக வேண்டும்..ஆமா..400 பக்கம் போலாமா..அல்லது எப்போ ஆரம்பிக்கப் போறாங்க புது இழை தெரியலையே..
அதுக்காக இன்னிக்கு எழுந்திருச்சு ஒரு சுசீலாம்மா பாட்டும் போடலைன்னா எப்படி..ஒரு கண்டிஷன் நல்ல பாட்டு+அழகு நடிகையாவும் இருக்கணும்..
-
13th August 2014, 10:08 PM
#3944
Senior Member
Diamond Hubber
ராஜேஷ் சார்
நம் 'தெய்வாம்சக் குரல் நாயகி'யின் ஒரு அருமையான அரிதான பாடலை பார்ப்போம். 'பணத்துக்காக' படத்தில்
மௌனம் இங்கே நிம்மதி
மஞ்சம் ஒரு சந்நிதி
மங்கையின் அங்கங்கள்
பூஜைக்காக
கொள்ளை அழகுப் பாடல். இந்த இசை தேவதை என்ன அழகாகப் பாடுகிறார்! திருஷ்டி சுற்றிப் போட வேண்டும் ராஜேஷ் சார் இந்த அற்புத பாடகிக்கு.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
13th August 2014, 10:13 PM
#3945
Senior Member
Seasoned Hubber
மெளனம் இங்கே நிம்மதி,, நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி பாடல்கள் எல்லாமே நமக்கு நிம்மதி கிடைக்க வைக்கும் பாடல்கள் ..
அருமை அருமை
வேறு பாடகிகள் பாடிய பாடல்களை இசையரசியின் குரலில் கேட்பது எப்பொழுதுமே தனி சுகம் .. ஒரு பூரிப்பு
இதோ
சின்ன தாயவள் தந்த ராசாவே (ஆட ஜென்மகு என்னி சோகாலோ )
சின்ன சின்ன பூங்கொடி (தெலுங்கில் இசையரசியுடன் கல்பனா)
-
13th August 2014, 10:21 PM
#3946
Senior Member
Senior Hubber
//மௌனம் இங்கே நிம்மதி
மஞ்சம் ஒரு சந்நிதி
மங்கையின் அங்கங்கள்
பூஜைக்காக // நல்ல பாட்டு வாசு சார்.. தாங்க்ஸ்.. தாங்க்ஸ் ராஜேஷ்..
வாசு சார்..ராவேளைல கறுப்பு புட்டா புடவையும் கறுப்பு ப் பொட்டுமா ஜெ.சி..ம்ம் சிவகுமாருக்கும் தூக்கம் போச்சா படத்துல
-
14th August 2014, 06:24 AM
#3947
Senior Member
Diamond Hubber
vasu ji
லேட்டஸ்டாக நம்ம திரியில் பதிந்திருந்த "அவளும் பெண்தானே" பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருது.
" நன்றியைச் சொல்ல நான் என்ன செய்தேன்.
திரியினில் திளைத்தேன் வேறென்ன செய்தேன்"
ஹி ஹி.. கொஞ்சம் உல்டா செஞ்சாச்...
கருத்து வேற்றுமைகள் இருந்தபோதும் யாருக்கும் காயம் படாமல் கத்தி முனையில் நடப்பது போல திரியை நகர்த்தி சென்ற அனைவருக்குமே நன்றிதான்.
ஒவ்வொருவரின் பங்களிப்பும் மலர்கள் என்றால் வாசுஜி ... நீங்கள் அதைத் தாங்கி நிற்கும் வைரம் பதித்த தங்க ஃப்ளவர் வாஸ். ( சிக்கா.. வம்புக்கு வருவீர் என்று தெரியும்.. )
OK... ராத்திரி ராஜேஷின் சுசீலாம்மா பாடலைக் கேட்டு உறங்கியவர்கள் இந்தப் பாடலைக் கேட்டு எழுந்திருங்க
பொழுதும் விடியும் பூவும் மலரும்
பொறுத்திருப்பாய் ( சின்ன ) கண்ணா
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
14th August 2014, 06:35 AM
#3948
Senior Member
Seasoned Hubber
மதுண்ணா அருமையான தொடக்கம் சூப்பர் பாட்டு
-
14th August 2014, 07:56 AM
#3949
Senior Member
Seasoned Hubber
மது அண்ணா அழகாக பொழுதை துவக்கி வைத்து விட்டார்.
இதோ அதை தொடர்ந்து ஒரு அருமையான பாடல்
வாசு ஜி , கன்னட பாடல்களின் பைத்தியமாகி விட்டேன் என்றீரே இதோ ஒரு அருமையான பாடல் இசையரசியின் குரலில் இனிமையான ... தெள்ளத்தெளிவான பாடல்
கப்பு பிளுப்பு (கருப்பு வெள்ளை) என்ற கன்னட படம் . புட்டண்ணாவின் இயக்கம்
கல்பனா பிரதான வேடம்
இது தான் நம்ம ஊர் இருளும் ஒளியும்..
இந்த பாடல் தான் திருமகள் தேடி வந்தாளின் ஒரிஜினல்..
இதோ ஈ செந்ததத மனையல்லி ஸ்ரீ கந்ததத குடி அல்லி
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th August 2014, 08:15 AM
#3950
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
பொண்ணு மாப்பிளே இன்றைய ஸ்பெஷலை நேற்று படித்து அதற்கு பதில் அளிக்க முயற்சிக்கும் முன் இன்றைய ஸ்பெஷலே வந்து விடும் போலிருக்கிறது.. அவ்வளவு ஸ்லோ நான்... எனிவே ...பெட்டர் லேட் தேன் நெவர்.
பொண்ணு மாப்பிளே பாடல் நிஜமாகவே சூப்பர்.. இதில் இசைக்கருவிகளின் ஆளுமை பற்றி முன்னரே நான் எங்கோ எழுதியிருந்தேன். தாங்கள் எழுதியதைப் படித்த பொழுது அடியேனுடையது ஒன்றுமே இல்லை என உணர்ந்து கொண்டேன். அவ்வளவு அழகாக அந்தப் பாடலைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். ஒரு சினிமா பாடலை அதுவும் நகைச்சுவையான பாடலுக்குள் ஒரு ஜூகல்பந்தியே நடத்தி விட்டார் இசையமைப்பாளர். அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த பாடல் மணமகன் அழகனே..
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks