Page 30 of 401 FirstFirst ... 2028293031324080130 ... LastLast
Results 291 to 300 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #291
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மது அண்ணா!

    மிக மிக அரிய 'தாலாட்டு' வீடியோக்களுக்கு நன்றி!

    'விளக்கிலாமல் கணக்கெழுதி' என்னை அழ வைத்த ஒரு பாடல். ராஜபாண்டியனும் அருமை. பாடகர் திலகம் பட்டி கிளப்பியிருப்பார். இப்பாடல் நடிகர் திலகத்திற்கு அமைந்திருந்தால்?
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #292
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஆதெள கீர்த்தனாரம்பத்திலே

    எல்லாரும் செளக்கியமா. ம்க்கும் இதுவரைக்கும் இருந்தோம் நு நீங்க நினைக்கறது புரியறது..

    இன்னிக்குப் பேசற அல்லது பாடற மேட்டர் என்னனனாக்க (எத்தனைன !)

    பொடி விஷயம் தான்.

    பொடி என்பது அந்தக்கால லாஹிரி வஸ்து(அப்படின்னா) என்ன விதமான விஷயங்கள் அதில் இன்க்ளூடட்னு தெரியாது.. மதுரையில் நான் இருந்த தெருவின் முக்கில் ஒருகடை உண்டு..அதில் காய்ந்த வாழைப் பட்டைகள் சில கட்டுகள், சிலபல ஜாடிகள் வைத்து ஒரு கடை இருக்கும்..

    கேட்டால் ஒரு வாழைப் பட்டையை எடுத்து காசிற்கேற்ப ஒன்றிரண்டு சிட்டிகை (அந்த ஸ்பூனும் ரொம்பக்குட்டியாய் அதே சமயத்தில் காம்பு நீளமாக இருக்கும்) போட்டு மடித்துக் கொடுப்பார்கள்.

    என் தந்தைக்கும் அந்த வழக்கம் உண்டு.. அந்த வாழைப்பட்டைப் பேக்கிங்கை வெகு லாகவமாகத் திறந்து கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்து ஒரு சிட்டிகை எடுத்து சர்ரென்று மூக்கில் ஏற்றுவார்..பார்க்கக் கொஞ்சம் தமாஷாக இருக்கும்..

    மதுரை சித்திரைத் திருவிழாவில் டி.ஏ.எஸ் ரத்தினம் பட்டணம் பொடி என பெரிய பெரிய பேனர், அப்புறம் சென் ட் ரல் சினிமாவைத் தாண்டி மீனாட்சி கோவிலுக்குப் போகும் வழியில் ஒரு அட்டைச் சித்திரம்..ஒரு குண்டோதரன் டைப் படம் கண்கள் விழித்துத் தலையாட்டிய படி இருக்கும் என்.ஏ.எஸ் பொடியோ என நினைவு..

    நிற்க. Gentlemen! நாம் பேசப் போவது அந்தப் பொடியில்லை.. பொடி விஷயம் என்பதற்குச் சின்ன விஷயம் என்றும் கொள்ளலாம்..

    சின்ன விஷயம் என்றால் என்னைப் போன்ற இளந்தாரிகள்..சரி சரி.. பொதுவாய் இளவட்டப் பசங்கள் சில விஷயத்தைப் பார்த்தாலே உற்சாகம் கொள்வார்க்ள்..

    ஒரு வயதான அம்மா பையனைப் பெற்றவள் என்ன சொல்கிறாள்..

    என்னபொடி போட்டாளோ எம்மவனத் தெரியலையே
    ..எப்பொழுதும் சுறுசுறுப்பாய் சுத்துகிற எளந்தாரி
    கண்ணுபட்டுப் போனதுபோல் கருத்திழந்து நிக்குறதும்
    கனவுகண்ட கோழியெனக் கண்டபடி நடக்குறதும்
    சொன்னசொல்லைக் கேட்டுப்புட்டு கடைகண்ணி போறவனும்
    .சோம்பித்தான் நிக்குறதும் ஏங்கித்தான் தவிக்கறதும்
    பெண்ணவளக் கண்டுப்பிட்டா பெத்தஎன்ன ஒதுக்கிவிட்டு
    ..பேதையாத்தான் இருக்கறத பெருமாளே என்னசொல்வேன்..

    ஸோ இந்தம்மா பேசற பொடி சொக்குப் பொடி..ஆளை மயக்குற பொடி..

    வட்ட விழிப்பார்வை வாகாக உள்ளத்தைக்
    கட்டமிட்டுச் சுண்டுவதைக் காண்

    நு யெஸ் .. ஆன்றோர் சொல்லியிருக்காங்க..

    பாவையரோட கண், மூக்கு, வாய் மத்த பார்ட்ஸ்லாம் செய்யும் தான்.. அதையெல்லாம் விட ஆடைகளும் செய்யுமாக்கும்

    சேலாடும் விழியாட செங்காந்தள் விரலாட
    ..செம்பவள உதட்டினிலே தித்திக்கும் தேனாட
    கோலாட்டம் போட்டபடி குதித்திடுதே பின்னாலே
    ..கொள்ளைகொளும் கூந்தலுமே பலவிதமாய்த் தானாட
    தாலாட்டும் தென்றலதைத் தக்கவைத்து நெற்றியிலே
    தகதிமிதா போட்டபடி சுருள்முடியும் தானாட
    மேலாடை குறுஞ்சிரிப்புக் கொண்டபடி அங்குமிங்கும்
    ..மென்மையுடன் சிறிதாட மனமாடி விட்டதடி

    (ஹப்பாடா..விஷயத்துக்கு வந்தாச்சு) என்ன இந்த மேலாடை இருக்கே.. ஆண்களுக்கெல்லம் அவ்வளவு சிறப்பில்லை.. பாவம் அந்தக்காலம்னா மன்னா போருக்குப் போய்ட்டு வரட்டுமான்னு சொல்ற தளபதியும் சரி மன்னரும் சரி சரிகைத்தகடி பளபளான்னு போட்டுக்கிட்டு வருவாங்க..அவ்வளவு சுகமில்லை..இந்தக்காலத்திலும் தான் அலுவல்னா பேண்ட் டிஷர்ட் டை சூட் மத்தபடி ஜீன்ஸ் டிஷர்ட் தான்.. இந்தப் பெண்க்ளுக்கு அந்தக்காலத்தில் புடவை இந்தக்காலத்தில் பாவாடை சட்டை தாவணி, சுரிதார் துப்பட்டா..அப்புறம் ஏகப்பட்ட வெரைட்டீஸ்..

    நம்ம டை ஆடினா யாரும் பாக்க மாட்டாங்க..அதுவே அவ்விடத்துல..

    ம்ம் இன்னிக்கு ப் பாக்கற பாட்டுல இந்த மேலாடையைப் பத்திக் கேள்விபதில் டைப்புல கவியரார் எழுதியிருக்காராக்கும்.. பட்ம் நாணல்..பாடியவர் பாடகர் திலகம் இசையரசி.. அப்புறம் ஆடியவர்கள் முத்துராமன் கே.ஆர்.விஜயா..

    வெகு அழகிய பாடல்..எனக்கு மிகவும் பிடிக்குமாக்கும்

    *

    விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
    வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
    கண்ணுக்கு மேலாடை காக்கும் இரு இமைகள்
    கனவுக்கு மேலாடை தொடர்ந்து வரும் தூக்கம்

    மண்ணுக்கு மேலாடை
    மண்ணுக்கு மேலாடை மரத்தின் நிழலாகும்
    .. வண்ணமயில் இருட்டு
    மனதுக்கு மேலாடை வள்ர்ந்து வரும் நினைவு

    பத்துக்கு மேலாடை

    நிறுத்து ராகம் பாடாதே பதிலச்சொல்லு

    பத்துக்கு மேலாடை தெரியலையா சொல்ல்ட்டுமா

    பத்துக்கு மேலாடை பதினொன்றேயாகும்
    பக்கத்தில் நீயிருந்தால் பலகதை உருவாகும்

    காலத்தின் அடையாளம் பருவங்களே ஆகும்
    காதலர்கள் நடத்துவது கண்சேர்தல் ஆகும்
    இது வரையில் புதுவுலகம் நாம் கண்டதுமில்லை..
    வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்..

    *
    நல்ல பாட்டு தானே என கார்த்திக் சார் சொன்ன சிக்னேச்சர் போட்டு முடிக்குமுன் இந்தக் காலத்தில ஒரு பாட்டுல ஒருவரி

    தோகை கொண்ட மயிலே அவளின் துப்பட்டாவை பார்த்தாயா..ன்னு காதல்ன் கேக்க்றான்..அது என்ன சொல்லும்..லூசு.. வேற வாங்கிக்கொடேன் இட்ஸ் அவெய்லபிள் இன் நாயுடு ஹால் அண்ட் ஆர்ம்கேவின்னு சொல்லிட்டு ககக்னு பறந்து போயிடுமோல்லியோ..

    அப்புறம் வரட்டா..

    உருவாய் அருவாய் உளதா இலதா
    ..
    அருள்வாய் குகனே

    அன்புடன்
    சி.க
    Last edited by chinnakkannan; 16th August 2014 at 11:08 PM.

  4. #293
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணாஜி

    கேப்டன் வொர்க் அருமை. மிக அருமையான பதிவுகள். ஏராளமாக. எதைப் பார்ப்பது எதைப் பாராட்டுவது என்று தெரியவில்லை. குறிப்பாக நாம் மறந்து போன ஜெயசிம்மன் பதிவு. இதற்கு என்னுடைய ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    'ஜானேமன்' பற்றி மதியம் போனிலே உரையாடி விட்டோம். அப்பாவி அமோலின் சிரிப்பு ரொம்பப் பிடிக்கும். ஜேசுதாஸ் இந்தியில் கலக்கி எடுத்தது. அளித்ததற்கு நன்றி!

    என் ராட்சசியை மறந்து விட்டீர்களே! கேப்டன் சொன்னால்தான் முழுமை பெறும். ஆகட்டும் பார்க்கலாம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #294
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சி.க.சார்

    'பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம்' பாடல் தந்தமைக்கு நன்றி. அதற்கு தங்களுடைய முன்னுரை அருமை.

    ஏனோ அவ்வளவாக இந்தப் பாடல் என்னை இம்ப்ரெஸ் செய்யவில்லை அப்போதிலிருந்தே. ஆனால் எல்லோரும் நல்ல பாடல் என்று கொண்டாடுவார்கள். ரொம்ப லெங்க்தி. திரும்பத் திரும்ப 'டொன் டொடன்' ஆரம்ப மியூசிக் வந்து கொண்டே இருக்கும்.அது எனக்கு எரிச்சலாகவே இருக்கும். எனக்குத்தான். ஆனால் அனைவருக்கும் விருப்பமான பாடலை தங்கள் பாணியில் வழங்கி விட்டீர்கள் மிகச் சிறப்பாக.

    'கண்ணா நலமா'வில் என்னுடைய பிடித்தம்

    'நான் கேட்டேன்
    அவன் தந்தான்
    தாலாட்டும் தாயானேன்'

    சுசீலா பின்னல். ராஜேஷுக்கும் சேர்த்து. (அப்படியே நைஸா நானும் கேட்டு ரசிச்சுக்குவேன்)

    Last edited by vasudevan31355; 16th August 2014 at 11:14 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Likes Russellmai liked this post
  7. #295
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாசு சார். நன்றி மெய்னா அந்தப் பாட்டு அடிக்கடி சிலோன் ரேடியோல் வெச்சுடுவாங்க..பாட்டும்பதமும், இசையும் கதையும் இசைக்களஞ்சியம் அப்படின்னு பல நிகழ்ச்சிகள்ல. நான்கேட்டேன் அவன் தந்தானும் பிடிக்கும்.. நன்றி

  8. #296
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    அதை மறப்பேனா ?

    இப்போது தான் அந்த பாட்டை கேட்டு ரசித்தேன்

    பதம் பதம் பரமபதம் ஈஸ்வரி உச்சரிக்கும் போதே மனசு கொள்ளை கொள்ளுமே . கர்ணனின் அசைக்க முடியாத நம்பிக்கை (சங்கர் சிமெண்ட் )இறுதி வரை கவ்பாய் படங்களாகவே எடுத்தார் . தமிழ் நாட்டில் எந்த ஊரில் கம்பளியும் தலயில் தொப்பியும் இடுப்பில் பெல்ட் அதற்கு நடுவில் துப்பாக்கி யும் வைத்து கொண்டு மக்கள் அலைகிறார்கள் . ஆனால் கர்ணன் ஆங்கில படம மாதிரி 'உணவு விடுதி ','கேளிக்கை விடுதி ' என்றல்லாம் காட்சிகள் அமைத்து இருப்பார் .
    நடுவில் சங்கர் கணேஷ் இன் ட்ஜங்கோ இசை 'டட டண்டண்டை'

    கிட்டத்தட்ட 11/2 மணி நேரம் வித்யா சின்ஹா நினைப்பில் இருந்து விட்டேன் . அந்த சோட்டி சி பாத் சற்று மறுந்து இருந்த படத்தை வித்யா சின்ஹா என்ற மருந்தை கொடுத்து நினைவு படுத்தி விட்டீர்கள்

    யதார்த்த காதல் என்பதற்கு மிக சிறந்த படம
    gkrishna

  9. #297
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்று ஸ்ரீதர், காஞ்சனா, திவ்யபாரதி, எம்.பானுமதி, சலீல் சௌத்திரி. ஆஷா பரேக், பாசு சட்டர்ஜி, வஹீதா ரஹ்மான், வித்யா சின்ஹா என்று ஏகப்பட்ட கலைஞர்களை நமது திரி நினைவு கூர்ந்துள்ளது பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது. பதிவாளர்கள் அத்தனை பேரும் சும்மா அதகளம் பண்ணி விட்டீர்கள்.

    அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மூன்று நாட்களில் பார்வையாளர்கள் மூவாயிரத்தைத் தாண்டி நமது திரி ஒரு நிலையான ஒரு அந்தஸ்த்தையும், ஆதரவையும் பெறத் தொடங்கியுள்ளது.

    இதற்கு உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கும் அத்துணை பேருக்கும் நன்றிகள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #298
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    நாளை உங்களிடம் இருந்து 'ரஜனிகந்தா' படத்தின் பாடல்களை எதிபார்க்கிறேன் ப்ளீஸ்

    இன்று மாலையில் மீண்டும் ஒரு முறை கரும்பு படத்தின் ராஜேஷ் குறிப்பிட்ட பாடலை கேட்டேன். மிகவும் அருமை
    ராஜேஷ்க்கு எனுடைய சிறப்பு வணக்கங்களை சொல்லவும்
    (கோழி கூவுது தம்பி ராமகிரிஷ்ணனுக்கு இந்த கடிதத்தை படித்து காட்டவும் பூவே இளைய பூவே - மலேசிய வாசு இங்கே எங்கள் நெய்வேலி வாசு )
    Last edited by gkrishna; 16th August 2014 at 11:19 PM.
    gkrishna

  11. #299
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்,

    குதிரைகள் மெயின்டனன்ஸ், அது இதுன்னு டைட்டிலில் போடுவாரு கர்ணன். ரொம்பக் கஷ்டப்பட்டு எடுப்பாரு. ஆனா?

    ஒரு வெள்ளை ஸீ த்ரூ டிரஸ் தண்ணியில் நனைஞ்சுதனாலதான் பணமா கொட்டுச்சு அவரு படத்துக்கு.

    நாங்கல்லாம் அள்ளி அள்ளி கொடுத்திருக்கோமில்ல.:-d

    அந்த சூப்பர் சிரிப்பு :-d வேலை செய்ய மாட்டேங்குது பார்த்தீயளா?
    நடிகர் திலகமே தெய்வம்

  12. #300
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    நாளை உங்களிடம் இருந்து 'ரஜனிகந்தா' படத்தின் பாடல்களை எதிபார்க்கிறேன் ப்ளீஸ்

    (கோழி கூவுது தம்பி ராமகிரிஷ்ணனுக்கு இந்த கடிதத்தை படித்து காட்டவும் பூவே இளைய பூவே - மலேசிய வாசு இங்கே எங்கள் நெய்வேலி வாசு )
    'தூங்கப் போறன்னு' கூச்சப் படாம சொல்லலாமில்லே. கேப்டன் கில்லாடிய்யா.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •