Page 75 of 401 FirstFirst ... 2565737475767785125175 ... LastLast
Results 741 to 750 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #741
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதிய கவிஞர் வாலி, கமலஹாசன் தயாரித்த "ஹேராம்" உள்பட 4 படங்களில் நடித்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோர் நடித்த படங்களுக்கும், அந்தக் காலகட்டத்தில் உருவான மற்ற படங்களுக்கும் இரவு - பகலாக பாடல்கள் எழுதிக்கொண்டிருந்தபோது, படங்களில் நடிப்பதற்கு வந்த அழைப்புகளை வாலி ஏற்கவில்லை.

    பிற்காலத்தில், நண்பர்களின் அழைப்பின் பேரில், சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். கே.பாலசந்தர் இயக்கிய "பொய்க்கால் குதிரை", கமலஹாசனின் "ஹேராம்", "சத்யா", "பார்த்தாலே பரவசம்" ஆகிய 4 படங்களில் நடித்ததுடன், "கையளவு மனசு", "அண்ணி" ஆகிய டெலிவிஷன் தொடர்களிலும் நடித்தார். ஏராளமான கவிதை நூல்கள் எழுதியிருப்பதுடன், "அவதாரபுருஷன்" (ராமாயணம்), "பாண்டவர் பூமி" (மகாபாரதம்), ராமானுஜ காவியம், கிருஷ்ண விஜயம் ஆகிய காவியங்களையும் படைத்துள்ளார்.

    "நானும் இந்த நூற்றாண்டும்" என்ற தலைப்பில் தன் சுய சரிதையை எழுதியுள்ளார். 1984 அக்டோபரில், எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அவர் குணம் அடைய தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகள் நடந்தன.

    அப்போது "ஒளிவிளக்கு" படத்தில் வாலி எழுதியிருந்த "இறைவா, உன் மாளிகையில் எத்தனையோ திருவிளக்கு! தலைவா, உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு" என்ற பாடல்தான் பிரார்த்தனை கீதமாக ஒலிபரப்பப்பட்டது.

    இதுகுறித்து வாலி எழுதியிருப்பதாவது:-

    "எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தபொழுது, மிகுந்த மனச்சுமையோடு அவரைப் பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். அண்ணியார் ஜானகி அம்மாளும், சத்தியவாணிமுத்து அம்மையாரும் கண் கலங்க நின்று கொண்டிருக்க, நான் அண்ணியாருக்கு ஆறுதல் சொன்னேன். "உங்கள் ஒளிவிளக்கு படத்து பாடலைத்தான், நாடே பாடி உங்கள் அண்ணனுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறது.

    அந்த பிரார்த்தனையின் பலனாகத்தான், அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். இனிமேல் அவருக்கு ஆபத்து இலலை" என்று திருமதி ஜானகி அம்மையார் கண்கள் பனிக்க என்னிடம் சொன்னார்கள்.

    என் பாட்டுடைத் தலைவனுக்கு என் பாட்டே பிரார்த்தனை கீதமாக ஆனது குறித்து, நான் அளவில்லாத ஆனந்தம் அடைந்தேன். இருந்தாலும் அண்ணியாரிடம், "அம்மா! இது வாலி பாக்கியம் அல்ல; உங்கள் தாலி பாக்கியம்" என்று சொன்னேன்."

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

    10 ஆயிரம் பாடல்கள் திரைப்படங்களுக்கு கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் 10 ஆயிரத்துக்கு மேல். அவற்றில் எம்.எஸ்.விஸ்வநாதன் ஏறத்தாழ 3 ஆயிரம் பாடல்களுக்கும், இளையராஜா சுமார் 3 ஆயிரம் பாடல்களுக்கும் இசை அமைத்துள்ளனர்.

    வாலியின் பாடல்களில் பி.சுசீலா பாடியவை சுமார் 1,500. டி.எம்.சவுந்தரராஜன் பாடியவை ஏறத்தாழ 700.

    "திரை உலகில் நீண்ட காலம் இருந்திருக்கிறீர்கள். இதுவரை வெளிவந்துள்ள படங்களில் உங்களுக்குப் பிடித்த 20 படங்களைக் கூறுங்கள்" என்று கேட்டதற்கு, வாலி கூறியதாவது:-

    "அந்தக் காலத்துப் படங்களில், பாகவதர் நடித்த படங்களில் எனக்குப் பிடித்தது "சிவகவி." இதைவிட நீண்ட காலம் ஓடிய படம் "ஹரிதாஸ்" என்றாலும், சகல அம்சங்களிலும் சிறப்பான படம் "சிவகவி." பி.யு.சின்னப்பா நடித்த படங்களில் என்னைக் கவர்ந்தது "குபேர குசேலா." சில ஆண்டுகளுக்கு முன் கமலஹாசன் நடித்த "கல்யாணராமன்" படத்தை இன்றைய தலைமுறையினர் பலர் பார்த்திருப்பார்கள்.

    இதே கதை, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் "இது நிஜமா" என்ற பெயரில் வெளிவந்தது. எஸ்.பாலசந்தர் இரட்டை வேடங்களில் அற்புதமாக நடித்திருந்தார். நான் மிகவும் ரசித்த படம் அது.

    1947-ல் வெளிவந்த "ஏவி.எம்" தயாரித்த "நாம் இருவர்", கே.சுப்பிரமணியம் தயாரித்த "தியாகபூமி", ஜெமினியின் "நந்தனார்", "அவ்வையார்" ஆகிய படங்களும் என்னைக் கவர்ந்தவை. என் மனதில் இடம் பெற்ற சிறந்த படங்களின் பட்டியலில் உள்ள மற்ற படங்கள்:-

    மந்திரிகுமாரி, மனோகரா, நாடோடி மன்னன், பெற்றால்தான் பிள்ளையா, உலகம் சுற்றும் வாலிபன், தில்லானா மோகனாம்பாள், வியட்னாம் வீடு, அபூர்வ சகோதரர்கள் (கமல்), நாயகன், இருகோடுகள், புவனா ஒரு கேள்விக்குறி, அந்த 7 நாட்கள், சில நேரங்களில் சில மனிதர்கள்."


    இவ்வாறு வாலி கூறினார்.

    விருதுகள் சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதுகளை 4 முறை பெற்றவர் வாலி. 1972-ல் "கலைமாமணி" விருது பெற்றார். "கலை வித்தகர்" என்பதற்கான தமிழக அரசின் பாரதிதாசன் விருது, தமிழக அரசின் பாரதி விருது (ரூ.1 லட்சம்) முரசொலி அறக்கட்டளை விருது (ரூ.1 லட்சம்), ஆழ்வார் மையத்தின் தமிழ்த்தாத்தா உ.வே.சா. விருது (ரூ.25,000) முதலான விருதுகள் கிடைத்துள்ளன. இவர் கதை - வசனம் எழுதிய "ஒரே ஒரு கிராமத்திலே" படம், மத்திய அரசின் விருது பெற்றது. ஒரே மகன் வாலி -திலகம் தம்பதிகளுக்கு ஒரே மகன் வி.பாலாஜி. "எம்.ஏ" பொருளாதாரம் படித்தவர். சொந்த தொழில் செய்கிறார்.

    தமிழில் பேசும் படங்கள் வரத்தொடங்கி 75 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை திரையில் ஒலித்த பல்லாயிரக்கணக்கான பாடல்களில், தனக்குப் பிடித்த 20 பாடல்களை வாலி கூறுகிறார். (தான் எழுதிய பாடல்களை அவர் தவிர்த்துள்ளார்.)

    1. வள்ளலைப் பாடும் வாயால்... (படம்: `சிவகவி' பாடியவர்: பாகவதர் பாடலாசிரியர்: பாபநாசம் சிவன் இசை: ஜி.ராமநாதன்)
    2. மானமெல்லாம் போனபின்னே... (`கண்ணகி' பி.யு.சின்னப்பா உடுமலை நாராயணகவி எஸ்.வி.வெங்கட்ராமன்)
    3. காற்றினிலே வரும் கீதம்... (`மீரா' எம்.எஸ்.சுப்புலட்சுமி கல்கி எஸ்.வி.வெங்கட்ராமன்)
    4. வெண்ணிலாவே... (`அவ்வையார்' கே.பி.சுந்தராம்பாள் கொத்தமங்கலம் சுப்பு எம்.டி.பார்த்தசாரதி, ராஜேஸ்வரராவ்)
    5. சிந்தையறிந்து வாடி... (`ஸ்ரீவள்ளி' பி.ஏ.பெரியநாயகி பாபநாசம் சிவன் சுதர்சனம்)
    6. இந்த உலகில் இருக்கும் மாந்தரில்... (`கஞ்சன்' எம்.எம்.மாரியப்பா அய்யா முத்து எஸ்.எம்.சுப்பையா நாயுடு)
    7. வாழ்க்கை என்னும் ஓடம்... (`பூம்புகார்' கே.பி.சுந்தராம்பாள் கலைஞர் மு.கருணாநிதி சுதர்சனம்)
    8. அருள் தரும் தேவமாதாவே... (`ஞானசவுந்தரி' பி.ஏ.பெரியநாயகி கம்பதாசன் எஸ்.வி.வெங்கட்ராமன்)
    9. ஆடல் காணீரோ!... (`மதுரை வீரன்' எம்.எல்.வசந்தகுமாரி உடுமலை நாராயணகவி ஜி.ராமநாதன்)
    10. மணப்பாறை மாடு கட்டி... (`மக்களைப் பெற்ற மகராசி' டி.எம்.சவுந்தரராஜன் மருதகாசி கே.வி.மகாதேவன்)

    11. துணிந்தபின் மனமே... (`தேவதாஸ்' கண்டசாலா கே.டி.சந்தானம் சி.ஆர்.சுப்பராமன், எம்.எஸ்.விஸ்வநாதன்)
    12. வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்... (`நான் பெற்ற செல்வம்' டி.எம்.சவுந்தரராஜன் கா.மு.ஷெரீப் ஜி.ராமநாதன்)
    13. மயக்கமா, கலக்கமா?... (`சுமைதாங்கி' பி.பி.சீனிவாஸ் கண்ணதாசன் எம்.எஸ்.விஸ்வநாதன்)
    14. சோதனை மேல் சோதனை... (`தங்கப்பதக்கம்' டி.எம்.சவுந்தரராஜன் கண்ணதாசன் எம்.எஸ்.விஸ்வநாதன்)
    15. நான் ஒரு சிந்து... (`சிந்துபைரவி' சித்ராறீ வைரமுத்து இளையராஜா)
    16. வசந்த கால கோலங்கள்... (`தீபம்' எஸ்.ஜானகி கண்ணதாசன் இளையராஜா)
    17. சின்னச்சின்ன ஆசை... (`ரோஜா' மின்மினி வைரமுத்து ஏ.ஆர்.ரகுமான்)
    18. ஆயிரம் நிலவே வா... (`அடிமைப்பெண்' எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சுசீலா புலமைப்பித்தன் கே.வி.மகாதேவன்)
    19. திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... (`கந்தன் கருணை' சுசீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி பூவை செங்குட்டுவன் குன்னக்குடி வைத்தியநாதன்)
    20. அன்புக்கு நான் அடிமை.... (`இன்றுபோல் என்றும் வாழ்க' ஜேசுதாஸ் முத்துலிங்கம் எம்.எஸ்.விஸ்வநாதன்)
    Last edited by gkrishna; 21st August 2014 at 05:36 PM.
    gkrishna

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #742
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'காஷ்மீர் காதலி' படத்தில் ராஜ்குமாரும், ரஜனி சர்மாவும்.



    இதில் ராஜ்குமாரின் ஜோடி ரஜனி சர்மா. (இவர் 'மாடி வீட்டு ஏழை' படத்தில் நடிகர் திலகத்துடன் 'இங்கே இங்கே இங்கே... இன்ப உள்ளங்களில் எல்லை இங்கே.... சிம்மக்குரல் கொண்ட கலைஞன் இங்கே'.. என்ற பாடலில் ஜோடி போல பாடி ஆடுவார்)

    'காஷ்மீர் காதலி' திரைப்படத்தில் ஒரு அருமையான பாடல் உண்டு. ஜி.கே.வெங்கடேஷ் இசையில் ஜெயச்சந்திரனும், சுசீலாவும் பாடும் நல்லதொரு பாடல் 'சங்கீதமே! என் தெய்வீகமே!'

    Last edited by vasudevan31355; 21st August 2014 at 05:44 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes Russellmai, gkrishna liked this post
  6. #743
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தில் இடம்பெற்ற இரண்டு அருமையான பாடல்களில் ஒன்றான 'கண்டதைச் சொல்லுகிறேன்' பாடலைப்பற்றிய ஆய்வு ரொம்ப பிரமாதம். ஆர்.கே.விஸ்வநாத சர்மாவாக வரும் நாகேஷ் படத்துக்கே முக்கிய பாத்திரங்களில் ஒருவர். கதை நகர்வுக்கு மிகவும் உதவியாக இருப்பார்.

    ஜெயகாந்தன் எழுதிய பாடல். முதலில் எழுதப்பட்டு அதன்பின் இசையமைக்கப்பட்டது. ஜெயகாந்தன் வீட்டிலிருந்தபடியே பாடலை உரைநடைபோல எழுதிக்கொடுத்து விட, மெல்லிசை மன்னரும், பீம்சிங்கும் வேறொரு சின்ன கவிஞரை வைத்து (ஜெயகாந்தனின் ஒப்புதலோடுதான்) அங்கங்கே வார்த்தைகளை மெட்டுக்கு வருவதுபோல பட்டி, டிங்கரிங் எல்லாம் பார்த்து முழுமை பெற்றதாக ஆனந்த விகடனில் படித்ததுண்டு.

    ஆனால் படப்பிடிப்பு நடைபெறும் நேரங்களில் ஜெயகாந்தன் அடிக்கடி ஷூட்டிங்க் ஸ்பாட்டுக்கு வந்து பார்வையிடுவாராம்.

    இது முழு ஆர்ட் பிலிமா, அல்லது செமி ஆர்ட் செமி கமர்ஷியல் பிலிமா என்பதெல்லாம் தெரியாது. ஆனால் மாபெரும் வெற்றிப்படம் என்பதில் எல்லோருக்கும் மகிழ்ச்சி. திரையில் கருப்பு வெள்ளையில் வரையப்பட்ட ஓவியம்.

    தங்கள் சிறந்த ஆய்வுக்குப் பாராட்டுக்கள்.....

  7. #744
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    கௌசிகன் னு ஒரு டைரக்டர்

    பிரார்த்தனை மற்றும் சந்ததி இரண்டு படம் டைரக்ட் செய்த நினைவு

    சந்ததி நல்ல நினைவில் உள்ள படம் .1976 கால கட்டத்தில் பிலிமாலய பத்திரிகை இதை ஆகா ஓஹோ என்று புகழ்ந்து எழுதிய நினைவு
    சிவகுமார் வசந்த மாளிகை கெட் up இல் சால்வை எல்லாம் போட்டு கொண்டு வருவார் .சிவகுமார் ஸ்ரீப்ரியா மேஜர் நடித்து வந்த படம்
    சிவகுமார் கான்செர் நோயாளி பெரிய பணக்காரர் .அவர் அப்பா மேஜர்
    சிவகுமர்க்கு கல்யாணம் செய்து வித்து தனக்கு ஒரு சந்ததி உருவாக்கி விடவேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்ரீப்ரியவை திருமணம் செய்து வைப்பார் .

    சிவகுமார் ஒரு பேட்டியில் தான் மிகவும் ரசித்து செய்த படம் .ஆனால் படம் ஓடவில்லை என்று கேள்விப்பட்டு மெரினா பீச் இல் தனியாக உட்கார்ந்து அழுதேன் என்று கூறினார்

    இந்த பிரார்த்தனை நடிப்பு சுடர் படமா அல்லது மக்கள் கலைஞ்ர் படமா நினைவில் இல்லை
    gkrishna

  8. #745
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    பிரார்த்தனை ஏ.வி.எம்.ராஜன், சௌகார் ஜானகி, வெண்ணிற ஆடை நிர்மலா நடித்த படம் என்று ஞாபகம்.

    நேற்று வரை பதினாறு இன்று முதல் பதினேழு
    நான் வாழ நல்வாழ்த்து சொல்லுங்கள்
    எல்லோரும் நில்லுங்கள்..ம்ம்..ம்ம்..ம்ம்..

    என்று ஒரு பி.சுசீலா பாடல் ... பெல்பாட்டம் போட்டுக் கொண்டு நிர்மலா டான்ஸ்..

  9. #746
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    டியர் வாசு சார்,

    'சில நேரங்களில் சில மனிதர்கள்'
    தங்கள் சிறந்த ஆய்வுக்குப் பாராட்டுக்கள்.....

    கார்த்திக் சார்
    நல்ல வேளை நினைவு கூர்ந்தீர்கள். காலையில் படித்த உடன்
    பதில் எழுத நினைத்த பதிவு .திரு வாசு அவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன் . மிக சிறந்த ஆயுவு .
    ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த ஒரு நல்ல சித்திரம்
    சுந்தரி பாய் மொட்டை அடித்து கொண்டு வரும் யாரும் எதிர் பாராத ஒரு காட்சி. மன்மத லீலை y G பார்த்தசாரதி கங்காவின் (லக்ஷ்மி) மாமாவாக வந்து லக்ஷ்மியை பாலியல் பலாத்காரம் செய்ய நினைக்கும் காட்சியில் லக்ஷ்மி மற்றும் YGP இருவருமே கலக்கி இருப்பார்கள்
    சிநா கானா கூட வாணியின் 'வேறு இடம் தேடி போவாளோ ' பாடலை சிலாகித்து எழுதி இருந்தார்
    gkrishna

  10. #747
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    பிரார்த்தனை ஏ.வி.எம்.ராஜன், சௌகார் ஜானகி, வெண்ணிற ஆடை நிர்மலா நடித்த படம் என்று ஞாபகம்.

    நேற்று வரை பதினாறு இன்று முதல் பதினேழு
    நான் வாழ நல்வாழ்த்து சொல்லுங்கள்
    எல்லோரும் நில்லுங்கள்..ம்ம்..ம்ம்..ம்ம்..

    என்று ஒரு பி.சுசீலா பாடல் ... பெல்பாட்டம் போட்டுக் கொண்டு நிர்மலா டான்ஸ்..
    thanks madhu anna

    என்னுடய நினைவில் இது நடிப்பு சுடர் படம் என்று தான் நினைவு
    ஆனால் விக்கியில் ஜெய் என்று போட்டு உள்ளார்கள்

    மீண்டும் ஒரு முறை நன்றி
    gkrishna

  11. #748
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    thanks madhu anna

    என்னுடய நினைவில் இது நடிப்பு சுடர் படம் என்று தான் நினைவு
    ஆனால் விக்கியில் ஜெய் என்று போட்டு உள்ளார்கள்

    மீண்டும் ஒரு முறை நன்றி
    ஏ.வி.ராஜன், சௌகார் ஜானகி தம்பதிகள் வாழ்வில் ஆபீஸ் கலீக் நிர்மலாவால் வம்பு வளர, ஸ்ரீகாந்தால் கெடுக்கப்பட்ட நிர்மலாவின் சாவுக்கு ராஜன் ஜெயிலுக்குப் போக சௌகார் பைத்தியமாக.. கடைசியில் வயசானப்புறம் திரும்ப ஒன்று சேருவது போல கதை என்று நினைவு... ( எல்லாமே பனிமூட்டத்தில் தெரியும் மலைப்பாதை மாதிரி மனசுக்குள் மங்கலா தெரியுது )

    விக்கிபீடியாவில் சோ, மனோரமா என்றே போட்டிருக்காங்க பாருங்க.. இது வேற பிரார்த்தனையோ ?

  12. Thanks gkrishna thanked for this post
  13. #749
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    திருமதி சாரதா madem அவர்கள் எழுதிய பதிவின் மீள் பதிவு

    "சில நேரங்களில் சில மனிதர்கள்"

    ஸ்ரீகாந்தின் புகழ் மகுடத்தில் ஒளிவீசும் வைரம்
    லட்சுமிக்கு ஊர்வசி பட்டம் தந்த காவியம்
    பீம்சிங்கின் கடைசி வெற்றிச்சித்திரம்
    கருப்புவெள்ளை யுகத்தின் கடைசி வெற்றி அத்தியாயம்
    ஜெயகாந்தனின் ஒப்பற்ற திரை ஓவியம்

    .....இப்படி புகழ்மாலை சூட்டிக்கொண்டே போகலாம் இப்படத்துக்கு.

    ஆர்ட் பிலிம் என்றாலே வெற்றிக்கும் அதற்கும் வெகுதூரம். மக்களைச் சென்றடையாது என்ற சித்தாந்தங்களைப் பொய்யாக்கி மாபெரும் வெற்றியடைந்ததன் மூலம், இதுபோன்ற திரைப்படங்களை எடுக்கும் தைரியத்தை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு தந்த உன்னதச் சித்திரம்.

    ஒரே வீட்டில் பல குடித்தனங்கள் சேர்ந்து, அதே சமயம் தனித்தனியாக வாழும் ஒண்டுக்குடித்தன வாழ்க்கையில் தன் தாயுடன் வசிக்கும் ஒருத்தி ஒரு மழைபெய்த மாலை நேரத்தில் காரில் வந்த காமுகனால் சூறையாடப்பட, அதை மறைக்கத்தெரியாமல் தாயிடம் வெகுளித்தனமாகச் சொல்லப்போக, அதை அந்தத்தாய் அவளைவிட வெகுளித்தனமாக, ஒண்டுக்குடித்தனக்காரர்கள் மத்தியில் விஷயத்தைப்போட்டு உடைத்து, மகளைத் அடிக்க, வெறும் வாய்களுக்கு கிடைத்த அவலாக, அவளது அந்த கருப்பு சம்பவம் அலசப்பட, அவள் களங்கப்படுத்தப்பட்டதை விட அதை வெளியில் சொன்னதுதான் மகா பாவம் என்ற நிலைமைக்கு ஆளாகிப்போனாள்.

    முள்ளில் விழுந்த சேலையாக ரொம்ப ஜாக்கிரதையாகக் கையாளப்பட வேண்டிய கதை. கொஞ்சம் நூலிழை பிசகினாலும் விரசம எனும் பள்ளத்துக்குள் விழுந்துவிடக்கூடிய கதையை, இந்திய பாகிஸ்தான் பிரிவினையை விட கவனமாகக் கையாண்டிருந்தார் இயக்குனர் பீம்சிங். அதற்கு அடித்தளமாக அமைந்தது ஜெயகாந்தனின் யதார்த்தமான நடை.

    ஊர்வாயில் விழுந்த அவலாக மெல்லப்படும் அவள் அவஸ்தை தாங்காமல் துடிப்பதை லட்சுமியை விட இன்னொருவர் சிறப்பாகக் காண்பித்திருக்க முடியுமா என்ன?. அதிலும் அந்த 'அக்கினிப்பிரவேசம்' என்ற நாவலை தாயிடம் கொடுத்து, அதில் வரும் குறிப்பிட்ட இடத்தைச்சுட்டிக்காட்டும்போது, மீண்டும் பழைய காட்சி... அம்மா சுந்தரிபாய் லட்சுமியை அடிக்கும்போது, வீடு மொத்தமும் எழுந்துபார்க்க.. 'ஒண்ணுமில்லே, இப்படி மழையிலே நனைஞ்சிட்டு வந்திருக்காளேன்னுதான் அடிச்சேன்' என்று சொல்ல மொத்த வீடும், மீண்டும் தங்கள் வேலையைப் பார்ப்பதைக்காண்பித்து, 'அன்னைக்கு மட்டும் நீ இப்படிச் சொல்லியிருந்தால், என் வாழ்க்கை இன்று சேற்றில் போட்டு இழுக்கப் பட்டிருக்குமா' என்பது போல லட்சுமி பார்ப்பாரே ஒரு பார்வை. அப்பப்பா... (தேசிய விருதுக்கமிட்டி அந்த இடத்தில்தான் விழுந்திருக்க வேண்டும்). எப்பேற்பட்ட ஒரு நடிகையை வெறுமனே டூயட் பாடவைத்ததன் மூலம், ஒரு நாதஸ்வரத்தை அடுப்பு ஊத பயன்படுத்தியுள்ளோம் என்ற குற்ற உணர்வு எழுகிறது.

    ஸ்ரீகாந்த் மட்டும் என்னவாம். சூப்பர்ப். பாத்திரத்தின் தன்மைக்கு ஈடுகொடுத்து அற்புதமாகச்செய்துள்ளார். ஆரம்பத்தில் லட்சுமியை ஏமாற்றிவிட்டுப்போனதும், அவருக்கு வழக்கமான ரோல்தானோ என்று தோன்றும். ஆனால் மீண்டும் லட்சுமியைச் சந்தித்தபின், அவர் தொடரும் அந்த உறவில் அவர் காட்டும் கண்ணியம், நேர்மை. ஏற்கெனவே தனக்கு ஒரு குடும்பம் இருந்தும், லட்சுமியிடம் அவர் காட்டும் அன்பு, வரம்பு மீறாத பெரியமனுஷத்தனம் .....வாவ். இன்னும் ஒரு நாலைந்து படம் இதுபோல தேர்ந்தெடுத்து நடித்திருந்தால் மனிதர் எங்கோ போயிருப்பார்.

    மறக்காமல் குறிப்பிடப்படவேண்டிய இருவர் அம்மாவாக வரும் சுந்தரிபாய் (வெகுளியான அம்மா), மற்றும் மாமாவாக வரும் ஒய்.ஜி.பார்த்தசாரதி. தங்கை மகள் கெட்டுப்போய்விட்டாள் என்று தெரிந்ததும், அவளைத் தான் அடைய அவர் மேற்கொள்ளும் முயற்சிகள், பெரிய மனிதனின் வக்கிர புத்திக்கு ஒரு எடுத்துக்காட்டு. சாய்வு நாற்காலியில் படுத்துக்கொண்டே, கட்டிலில் படுத்திருக்கும் லட்சுமியிடம் செய்யும் சேஷ்டைகள் எல்லைமீறுமுன், கொதித்தெழும் லட்சுமி அவரை பெல்ட்டால் விளாச, தன் மனதில் இருந்த சாத்தான் விரட்டியடிக்கப்பட்டதும், லட்சுமி தூக்கி எறிந்த பெல்ட்டை கையில் வைத்துக்கொண்டு கண்ணீர் சிந்தும்போது, இந்த மனிதர் ஏன் நாடக மேடைகளிலேயே தன்னைக் குறுக்கிக்கொண்டார் என்ற ஆதங்கம் நமக்கு வரும். அதற்கு ஈடாக இன்னொரு காட்சியைச் சொல்வதென்றால், மறுநாள் பொழுது விடிந்ததும் ஒய்.ஜி.பி., லட்சுமியின் அறைக்கதவைத்தட்டி, 'ஐ ஆம் லீவிங்' என்று சொன்னதும், லட்சுமி சட்டென்று அவர் காலில் விழுந்து நமஸ்கரிப்பாரே அதைச்சொல்லலாம்.

    இப்படி, படிப்படியாக நம்மை படத்துடன் ஒன்றவைத்து, படம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற நினைவை மாற்றி, அல்லது மறக்கடித்து, ஏதோ நம் கண்முன் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களில் நாமும் ஒன்றாகிப்போனோம் என்ற நினைவில் நம்மைக்கொண்டு விடுவதால்தான், அந்த கிளைமாக்ஸ் காட்சி நம்மை அப்படி பாதிக்கிறது.

    நம் ஊனையும் உருக வைக்கும் வாணி ஜெயராம் குரலில்....
    'வேறு இடம் தேடிப்போவாளோ - இந்த
    வேதனையில் இருந்து மீள்வாளோ' என்ற பாடல் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்க,
    அவர் (ஸ்ரீகாந்த்) இனிமேல் மாட்டார் என்று தெரிந்தும், வாசலை வாசலைப் பார்த்துக்கொண்டும், திரைச்சீலை அசையும்போதெல்லாம் ஆவலோடு திரும்பிப் பார்த்துக்கொண்டும் இருக்கும் லட்சுமி இனி வரமாட்டார் என்ற நிதர்சனத்துடன் கடைசியில் ஸ்ரீகாந்த் கழற்றி வைத்துவிட்டுப்போன கோட்டை எடுத்து தன்னோடு அணைத்துக்கொள்ளும்போது, உணர்ச்சிப்பெருக்கால் நம் மனதில் விழும் சம்மட்டி அடி. (பின்னாளில், 'பூவே பூச்சூட வா' கிளைமாக்ஸில் நதியாவை ஆம்புலன்ஸில் கொண்டுபோனபின், கண்களில் நீருடன் மீண்டும் காலிங் பெல்லை பொருத்திக் கொண்டிருக்கும் பத்மினியைப் பார்த்தபோது, மீண்டும் மனதில் விழுந்த அதே சம்மட்டி அடி). ஆம், செல்லுலாய்டில் கவிதை வரையும் திறன் சிலருக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.

    படம் முடிந்தபின்னும் பிரம்மை பிடித்தது போன்ற உணர்வுடன், இருக்கையை விட்டு எழக்கூட மனமில்லாமல் எழுந்து செல்கையில், அடுத்த காட்சிக்காக கியூவில் நிற்பவர்களைப்பார்த்து, 'பீம்சிங் கொன்னுட்டாண்டா' என்று கத்திக்கொண்டு போகும் ரசிகர் கூட்டம் (அன்று 'பாகப்பிரிவினை' பார்த்துவிட்டு இவர்களது அப்பாக்கள் கத்திக்கொண்டு போன அதே வார்த்தை).

    இப்படத்துக்கு அற்புதமான இசையைத் தந்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். 'கண்டதைச் சொல்லுகிறேன்' என்ற பாடலும், 'வேறு இடம் தேடிப்போவாளோ' என்ற பாடலும் படத்தின் தரத்தை மேலும் உயர்த்தின. பின்னணி இசையிலும் மனதை வருடியிருந்தார்.

    தமிழ்த்தாயின் தலைமகன் ஜெயகாந்தன் எழுதி, முதலில் தினமணி கதிர் பத்திரிகையில் தொடர்கதையாகவும், பின்னர் முழுநாவலாகவும் வெளியாகி மக்கள் உள்ளங்களைக்கொள்ளை கொண்டு, கிடைத்தற்கரிய 'சாகித்ய அகாடமி' விருதையும் பெற்ற இந்நாவல், திரைப்படமாகிறது என்றதும் ஒரு பயம். காரணம் அதற்கு முன் திரைப்படமாக உருப்பெற்ற நாவல்களில் 95 சதவீதம், சிதைந்து உருமாறி, நாவலைப்படித்து விட்டு படம் பார்க்கச்சென்றோர் மனங்களை ரணமடையச்செய்தன என்பதுதான் உண்மை. ஆனால், இப்படி மாமல்லபுரம் சிற்பமாக இப்படம் உருப்பெற்று, உயர்ந்து நிற்கும் என்பது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி என்றால், 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற இப்ப்டம் மாபெரும் வெற்றிப்படமாகவும் அமைந்தது தமிழ் ரசிகர்களை தலைநிமிரச்செய்தது. ஆம், 112-ம் நாள் படம் பார்க்கச்சென்று டிக்கட் கிடைக்காமல் ரசிகர்கள் திரும்பிய அதிசயமும் நடந்தேறியது.

    லட்சுமிக்கு, இந்தியாவின் சிறந்த நடிகை என்ற தேசிய விருதான 'ஊர்வசி' விருதையும் பெற்றுத்தந்தது. ஸ்ரீகாந்த்தை நினைக்கும்போதெல்லாம் எனக்குத்தோன்றுவது, "உங்களுக்கு இந்த ஒரு படம் போதுமய்யா".
    gkrishna

  14. #750
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் கிருஷ்ணாஜி,

    கவிஞர் வாலி பற்றிய பதிவுக்கு நன்றி.

    இறைவா உன் மாளிகையில், வாலி பாக்கியம் தாலி பாக்கியம் எல்லாம் பலமுறை படிக்கப்பட்டது. "வேறொரு" திரியில் பத்து பக்கங்களுக்கு ஒருமுறை பதிவிடப்படும்.

    பதிவு ரொம்ப பழையதா, அல்லது தொகுத்தவர் விட்டுவிட்டாரா தெரியவில்லை. விருதுகள் பட்டியலில் அவர் பெற்ற 'பத்மஸ்ரீ' இடம்பெறவில்லை...

  15. Likes gkrishna liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •