-
24th August 2014, 06:39 AM
#1151
Junior Member
Newbie Hubber
போன வாரம் வாழ்க்கை படத்தை மீண்டும் பார்த்தேன். (இதை மலையாளம்,ஹிந்தி ஆகியவை பார்த்துள்ளேன்.) வாழ்க்கையில், நம்பிக்கை சார்ந்து சுய மரியாதையோடு இயங்கும் ஒருவன், மனைவியுடன் ஆன உறவு முறை காதல் வய பட்டதாக இருப்பினும் ,ஒரு குற்ற உணர்வு இழையோடி கொண்டே இருக்கும்.(செல்வ நிலையில் இருந்த அவள் வாழ்க்கையை சிதைத்து விட்டதாக). இதையெல்லாம் விடுங்கள். கடைசியில் மனைவி தனக்கு உடன்பாடில்லாத ஒரு காரியத்தை செய்யும் போது ,அதை கைகேயி வரமாகவே உபயோகிக்கும் போது ,....
அந்த office scene ... நடிகர்திலகத்தின் உடல் மொழி, முக பாவம் வசன உச்சரிப்பு.... என் இதயத்தை யாரோ வெளியே எடுத்து பிழிந்து கொண்டிருப்பதை போல ஒரு அவலத்தை உணர்ந்தேன். அப்படியே சக்கையாய் பிழிய பட்டு ,குப்பையில் வீச பட்ட துறவு கலந்த ஒரு dryness , வெறுமை .....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
24th August 2014 06:39 AM
# ADS
Circuit advertisement
-
24th August 2014, 08:07 AM
#1152
Junior Member
Veteran Hubber
என்றுமே வற்றாத நடிப்புக்கடல் நடிகர்திலகத்தின் பொற்காலத் தமிழ் திரைச் சரித்திரத்தில் அவருக்கு ஈடு கொடுத்து அவர்தம் நடிப்பு மகுடத்தில் தங்கத்திலே வைரங்களாக ஜொலித்து சங்கமித்த நடிப்பு நதிகள் திருமிகு SV ரங்காராவ் , MRராதா, TSபாலையா, SV சுப்பையா மற்றும் V நாகையா ஆவர். திரு TS பாலையா அவர்களின் நூற்றாண்டு நினைவை முன்நிறுத்தி நம் நன்றியறிதலை நவில்வோமே. Royal salute to his longest association with NT in his Pa series movies, Thiruvilayaadal,Thillaana, and Ooty varai uravu.... and Thookku Thookki!
Last edited by sivajisenthil; 24th August 2014 at 10:45 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
24th August 2014, 09:31 AM
#1153
Junior Member
Newbie Hubber
நடிகர்திலகம் நடிப்பை ஒரு தவம் மாதிரி பண்ணியவர். அவர் நடித்த படங்களின் வெற்றி-தோல்வி எல்லை கோடுகளை மீறி பல படங்கள் நம் இதயத்தில் நீங்காமல் நின்றவை. அது போல 100 நாள் எல்லை கோட்டை தொடாவிடினும், சுமார் வெற்றி நிலையை அடைந்த என் மனம் கவர்ந்த படங்கள் .(அந்த நாள்,காவல் தெய்வம்,ஆண்டவன் கட்டளை போன்று மிகவும் பேச பட்ட பிரபல படங்கள் தனி)
1955- கோடீஸ்வரன்.
1956- ராஜா ராணி.
1957- மணமகன் தேவை.
1958- அன்னையின் ஆணை.
1959- அவள் யார்.
1960- குறவஞ்சி.
1961- எல்லாம் உனக்காக.
1962- வளர்பிறை.
1963- குலமகள் ராதை.
1965- நீலவானம்.
1966- செல்வம்.
1967- பாலாடை.
1969- அஞ்சல் பெட்டி 520.
1970- பாதுகாப்பு.
1971- தேனும் பாலும்.
1974- அன்பை தேடி.
1975- பாட்டும் பரதமும்.
1976- ரோஜாவின் ராஜா.
1977- இளைய தலைமுறை.
1978- என்னை போல் ஒருவன் .
1979- கவரி மான்.
1982- துணை.
1985- ராஜரிஷி.
1986- மண்ணுக்குள் வைரம்.
1987- தாம்பத்யம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th August 2014, 11:01 AM
#1154
Senior Member
Seasoned Hubber

விளக்கம் தேவையா?
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
24th August 2014, 12:14 PM
#1155
Junior Member
Seasoned Hubber
Style & Ultimate acting by NT.
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
24th August 2014, 12:25 PM
#1156
Junior Member
Newbie Hubber
நாம் நடிப்பின் தெய்வமாக வணங்கும் தெய்வமே வணங்கிய தெய்வ தாயின் நினைவு தினம் இன்று. மணி வயிற்றை தொழுகிறோம்.
ஈன்ற பொழுதின் பெரிதுவுக்கும் தன்மகன்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
என்ற குறளுக்கு உவமமாக திகழும் தலைத் தாய்.எங்களின் கலைக்கே தாய்.
Last edited by Gopal.s; 24th August 2014 at 12:28 PM.
-
24th August 2014, 12:28 PM
#1157
Junior Member
Seasoned Hubber
Tamil Nadu waiting for this type of leader. Only god will know whether it will take place or not.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
24th August 2014, 01:16 PM
#1158
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
sivajisenthil
என்றுமே வற்றாத நடிப்புக்கடல் நடிகர்திலகத்தின் பொற்காலத் தமிழ் திரைச் சரித்திரத்தில் அவருக்கு ஈடு கொடுத்து அவர்தம் நடிப்பு மகுடத்தில் தங்கத்திலே வைரங்களாக ஜொலித்து சங்கமித்த நடிப்பு நதிகள் திருமிகு SV ரங்காராவ் , MRராதா, TSபாலையா, SV சுப்பையா மற்றும் V நாகையா ஆவர். திரு TS பாலையா அவர்களின் நூற்றாண்டு நினைவை முன்நிறுத்தி நம் நன்றியறிதலை நவில்வோமே. Royal salute to his longest association with NT in his Pa series movies, Thiruvilayaadal,Thillaana, and Ooty varai uravu.... and Thookku Thookki!
சிவாஜி செந்தில் சார்,
நடிகர்திலகம் எவ்வளவு பெரிய ஜாம்பவான்களுடனெல்லாம் ஈடுகொடுத்து, அவர்களையும் நடிக்கவிட்டு, சவாலை எதிர்கொண்டு, வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை நினைக்கும்போது உண்மையிலேயே நடிகர்திலகத்திற்கு தன் திறமைமீது இருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையை உணரமுடியும். நாம் ஒவ்வொருவருமே, ஈடுபட்டிருக்கும் தொழிலில், பணியில் முழு ஈடுபாட்டுடன், சிரத்தையுடன் செயல்பட்டால் வெற்றிபெறலாம் என்பதற்கு நடிகர்திலகத்தை முன்னோடியாகக் கொண்டு பணியாற்றவேண்டும் என்பதே ரசிகர்களாகிய நமக்கு நடிகர்திலகம் அளித்துச் சென்ற கொடை என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
24th August 2014, 03:08 PM
#1159
Junior Member
Newbie Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
24th August 2014, 03:11 PM
#1160
Junior Member
Newbie Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks