Results 1 to 10 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

Hybrid View

  1. #1
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (64)

    'இன்றைய ஸ்பெஷல்' பாடல் மிக, மிக அருமையான, அபூர்வமான, அடிக்கடி நாம் கேட்க முடியாத பாடல்.



    'ருத்ரதாண்டவம்' (1978) படத்திலிருந்து


    நடிகர்கள்: விஜயகுமார், சுமித்ரா, வி.கே.ஆர், நாகேஷ், எம்.ஆர்.ஆர்.வாசு, சுருளி, மனோரமா, லாவண்யா

    இசை: 'மெல்லிசை மன்னர்'

    தயாரிப்பு : ஸ்ரீமதி ஆர் .ரமணி (வி.கே.ஆரின் மனைவி) (அலமேலு மங்கா புரொடக்ஷன்ஸ்)

    கதை வசனம்: ஏ.வீரப்பன்

    பாடல்கள்: கண்ணதாசன், வாலி

    ஒளிப்பதிவு: ஜி.ஆர். நாதன்

    இயக்கம்: கே.விஜயன்




    வி.கே.ராமசாமி தன் மனைவி ரமணி பெயரில் தயாரித்த முழு நீள நகைச்சுவை சித்திரம். அத்தனை நகைச்சுவை நடிகர்களும் உண்டு. வி.கே.ஆர். சிவனாக பூமிக்கு வந்து படாத அவஸ்தையெல்லாம் படும் ஜாலி கதை. வி.கே.ஆருக்கு இதெல்லாம் 'ப்பூ' கேரக்டர். மனிதர் உடம்பை அசைக்காமல் சிவன் வேடத்தில் நின்றபடியே வாயாலேயே வலை போட்டு விடுவார். பூசாரியாக நாகேஷ். படத்தில் ராதாரவியும், லாவண்யாவும் ஒரு ஜோடி.



    'புரட்சிக் கலைஞர்' விஜயகுமாருக்கும் (அப்படித்தான் டைட்டிலில் போடுவார்கள்) சுமித்ராவுக்கும் அருமையான ஒரு காதல் பாட்டு.

    பாலாவும், வாணி ஜெயராமும் கலக்கி எடுத்து விடுவார்கள்.

    மிகக் கடினமான, இடைவெளி விடாத, அதிகமான வரிகள். அழாகான தமிழில் வரிகள் கொஞ்சி விளையாடும் சற்றே காமம், மோகம் கொண்டு.

    உதாரணத்திற்கு இரண்டு வரிகள்.

    'உடலெங்கும் உங்கள் பூஜை
    இதுதானே உங்கள் ஆசை'



    விஜயகுமாருக்கும், சிவக்குமாருக்கும், ஜெய் கணேஷுக்கும் பொருத்தமான ஜோடி சுமித்ரா. விஜயகுமார் வழக்கம் போல். ஆனால் ஆள் 'ஜம்'மென்றிருப்பார். குடும்பப் பாங்கான லட்சணம். டீசன்ட்டான லவ் சாங்.

    பாலா அப்படி ஒரு குழைவு. அவருக்கு சரியான ஈடு வாணி. 'மெல்லிசை மன்னரி'ன் இன்னுமொரு அற்புதம்.

    எத்தனை முறை திரும்பத் திரும்பக் கேட்டாலும் சலிப்புத் தட்டாத பாடல்.




    இப்பாடலை 'பொங்கும் பூம்புனல்' தொடரில் அபூர்வமான பாடல்களை அள்ளித்தரும் 'ரசிக வேந்தர்' என் இனிய நண்பர் ராகவேந்திரன் சாருக்கு அன்புப் பரிசாக அளிக்கிறேன்.

    இனி பாடலின் முழு வரிகள்

    புது மஞ்சள் மேனிச் சிட்டு
    புடவைக்குள் ஊஞ்சல் இட்டு
    நடனங்கள் ஆடிடும் நயமான அழகு
    புது மஞ்சள் மேனிச் சிட்டு
    புடவைக்குள் ஊஞ்சல் இட்டு
    நடனங்கள் ஆடிடும் நயமான அழகு
    விழியே இது என்ன ராஜாங்கமோ
    விழியே இது என்ன ராஜாங்கமோ

    இதழ் தொட்டு தென்றல் பூஜை
    இடை தொட்டு காமன் பூஜை
    உடலெங்கும் உங்கள் பூஜை
    இதுதானே உங்கள் ஆசை
    மோகம் அழைக்கின்றதே
    நாணம் தடுக்கின்றதே
    ம்ஹூம் நாணம் தடுக்கின்றதே

    புது மஞ்சள் மேனிச் சிட்டு
    புடவைக்குள் ஊஞ்சல் இட்டு

    நடனங்கள் ஆடிடும் நயமான அழகு
    விழியே இது என்ன ராஜாங்கமோ

    நீர்கொண்ட மேகங்கள் குடை போடவும்
    நிலைகொண்ட புஷ்பங்கள் மணம் தூவவும்
    தேர் கொண்ட பறவைகள் சுதி மீட்டவும்
    திருமேனி வலம் வந்த சுகம் என்னவோ

    கார்கூந்தல் கடல் கண்ட அலையாகவும்,
    கல்யாணப் பூச்செண்டு அசைந்தாடவும்
    தேர்கொண்ட மணிச்சங்கு ஒலி காட்டவும்
    நிழல் கொண்ட ரதிதேவி உருவந்ததோ
    நிழல் கொண்ட ரதிதேவி உருவந்ததோ

    அங்கம் தொடமால் சங்கம் இலாமல்
    கண்ணில் சுகங்கள் இல்லை
    மன்னன் வராமல் மகராணி என்னும்
    பெண்மை நலங்கள் இல்லை

    புது மஞ்சள் மேனிச் சிட்டு
    புடவைக்குள் ஊஞ்சல் இட்டு

    நடனங்கள் ஆடிடும் நயமான அழகு
    விழியே இது என்ன ராஜாங்கமோ

    தேன் சிந்தும் சிறு கூடு நடமாடுது
    சிறுமுல்லை மகரந்தப் பொடி தூவுது
    பால்வண்ணம் மடிமீது விளையாடுது
    மழைராகத் தமிழ் வீணை இசைபாடுது

    உறவென்றும் சுகமென்றும் நினையாதது
    ஒரு நெஞ்சில் நிலையான இடம் தேடுது
    இரவென்றும் பகலென்றும் அறியாமலே
    இதமான சுகம் காண உன்னை நாடுது
    இதமான சுகம் காண உன்னை நாடுது

    தஞ்சம் புகுந்த மஞ்சள் நிலாவை
    என்றும் மறந்ததில்லை
    அஞ்சும் நடுங்கும் பிஞ்சாக நின்றும்
    ஆசை இழந்ததில்லை

    புது மஞ்சள் மேனிச் சிட்டு
    புடவைக்குள் ஊஞ்சல் இட்டு
    நடனங்கள் ஆடிடும் நயமான அழகு

    விழியே இது என்ன ராஜாங்கமோ

    விழியே இது என்ன ராஜாங்கமோ


    Last edited by vasudevan31355; 29th August 2014 at 12:46 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks Russellmai thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •