-
30th August 2014, 09:41 AM
#1491
Senior Member
Senior Hubber
ஹாய் ராஜேஷ்..குட்மார்னிங்க்..கண்டிப்பாய் உண்டு
ஒரு தெலுங்கு ராஜ ஸ்ரீ பாட் போடுங்களேன்..
-
30th August 2014 09:41 AM
# ADS
Circuit advertisement
-
30th August 2014, 09:44 AM
#1492
Senior Member
Senior Hubber
ராஜஸ்ரீ – சிலப்பதிகாரத்தின் கதையை மையமாக வைத்து வெளியான தமிழ்த் திரைப்படம் பூம்புகார். இப்படத்தில் மாதவியாக நடித்து புகழ்பெற்ற பழம்பெற்ற நடிகை ராஜஸ்ரீ. பல்வேறு படங்களில் நடித்து மக்கள் மனதைக் கவர்ந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.
“”ராஜஸ்ரீ பிறந்தது ஆந்திராவில் உள்ள ஏலூர் என்ற கிராமத்தில். அங்கு ராஜஸ்ரீயினுடைய அப்பா ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தார். இவருடன் கூட பிறந்தது ஒரே ஒரு அக்கா மட்டும் தான். அப்போதே அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் இருந்தார்கள். ராஜஸ்ரீக்கு பத்து வயதிருக்கும் பொழுது சென்னைக்கு வந்தார். அப்போ தி.நகரில் ராஜஸ்ரீ இருந்த தெருவில் தான் நடிகை ஜமுனா, கிருஷ்ணகுமாரி, ஹீரோ செல்லம் என தெலுங்கு நடிகர்கள் வீடும் இருந்தது.
“நாக தேவதை’ படத்தில் ஜமுனாவின் சின்ன வயசு கதாபாத்திரத்தில் நடித்தார். ஒரே பாட்டுல சின்ன வயசுல இருந்து பெரிய வயசுக்கு மாறுவது மாதிரி காட்சி. அது தான் ராஜஸ்ரீ நடித்த முதல் படம். அதன்பிறகு ஏவி.எம்மில் ராஜஸ்ரீயை நிரந்தர நடிகையாக ஒப்பந்தம் செய்தார்கள். மாதச் சம்பளம். இந்த நேரத்தில் சித்தூர் வி.நாகய்யா “பக்த ராமதாஸ்’ என்று தெலுங்கில் ஒரு படம் எடுத்தார். அந்தப் படத்தில் கண்ணாம்பாவுக்கு ஜூனியராக நடித்தார்.
அதன் பிறகு தமிழில் கதாநாயகியாக அறிமுகமானது “காதலிக்க நேரமில்லை’ படத்தில்தான். அந்தப் படத்தில் ராஜஸ்ரீ க்கு வாய்ப்பு கிடைத்தது.படம் சூப்பர் ஹிட்டா போனதால் அதை அப்படியே தெலுங்கில் எடுக்கப்பட்டது. அதில் ராஜஸ்ரீ யும், காஞ்சனாவும் தமிழில் நடித்த அதே கதாபாத்திரத்தில் நடித்தனர். அதே படம் இந்தியில் “பியார் கியே ஜான்’னு எடுத்தார்கள். அப்போதும் ராஜஸ்ரீயின் கேரக்டரை அவரே இந்தியில நடித்தார். மூன்று மொழிகளிலும் படம் நல்ல ஹிட். ஆனால் தெலுங்கில் மட்டும் பிளாக் அண்ட் வொயிட்டில் எடுத்தார்கள்.
“பாமா விஜயம்’,ஊட்டி வரை உறவு, “பூவா தலையா’, “அனுபவி ராஜா அனுபவி’, சிவாஜியுடன் “நீலவானம்’ எஸ்.எஸ்.ஆருடன் “பூம்புகார்’, ஜெயசங்கருடன் “செல்வமகள்’ என்று நிறைய தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார் ராஜஸ்ரீ.
எம்.ஜி.ஆருடன் முதன் முதலில் “கலையரசி’ என்ற படத்தில் நடித்தார். அதில் எம்.ஜி.ஆர். டூயல் ரோல் நடித்திருந்தார். ஒரு ஜோடி பி.பானுமதி, இன்னொரு ஜோடி ராஜஸ்ரீ. அதற்குப் பிறகு அவரோடு நடித்தப் படம் “குடியிருந்த கோவில்’. சிறிய இடைவெளிக்குப்பிறகு அவரோடு “பட்டிக்காட்டு பொன்னையா’, “நேற்று இன்று நாளை’, “நாளை நமதே’ போன்ற படங்களில் நடித்தார். தமிழில் ராஜஸ்ரீ கொஞ்சப் படங்களே நடித்திருந்தாலும் எல்லாமே நல்ல ஹிட் படங்கள்தான். தெலுங்கு, மலையாளம், கன்னட என பல்வேறு மொழிப்படங்களில் நடித்ததனால் நிறைய தமிழ் படங்கள் நடிக்கவில்லை.அதனால் சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆரின் நிறைய படங்களை இழந்துவிட்டார் ராஜஸ்ரீ. அப்படியிருந்தும் கிட்டதட்ட 300 படங்கள்ல நடித்துள்ளார்.
தமிழில் எம்.ஜி.ஆர். நடித்த “நாளை நமதே’ படம் தான் ராஜஸ்ரீ யினுடைய கடைசிப் படம். அதில் “நாளை நமதே’ன்னு வரும் பாடலில் மட்டும் தான் நடித்துள்ளார். இவரது கணவர் கல்யாணத்துக்குப் பிறகு நடிக்க வேண்டாம் என்று சொல்லிட்டார்.அதனால் இவரது கணவர் இறந்த பிறகு கூட ராஜஸ்ரீ நடிக்க விரும்பவில்லை.
இவரது கணவர் அரசியலில் இருந்தார். வெங்கல்ராவ் முதல்வராக இருந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்தார். என்.டி.ராமராவ் ஆட்சியில் இருந்தபோது கூட எதிர்க் கட்சியில் இருந்தார்.
1983-ல என் மகன் சின்னக் குழந்தையாக இருக்கும்போதே ராஜஸ்ரீயின் கணவர் இறந்துவிட்டார். அதன் பிறகு ஹைதராபாத், விசாகப்பட்டனத்தில் கொஞ்ச நாள் இருந்தார். 1991-இல் தான் மறுபடியும் சென்னை வந்துள்ளார். இங்கு வந்து பத்து வருஷம் யாருடனும் பேசுவதில்லை. எங்கேயும் போவதுமில்லை. நிறைய பேருக்கு ராஜஸ்ரீ இருப்பதே தெரியாது. ராஜஸ்ரீ எங்கேயாவது கடைவீதிக்குப் போனால் கூட கண்டுபிடிப்பதில்லை.
அதன் பிறகு 2009-இல் இவரது பையனுக்கு திருமணம் செய்துள்ளார். அப்போது எல்லாரையும் கூப்பிட்டிருக்கிறார். அப்போது ஜெயலலிதாவும் சென்றிருக்கிறார். ரொம்ப நேரம் பொறுமையாக இருந்து நிகழ்ச்சிகளைப் பார்த்துட்டு பையனை ஆசிர்வாதம் செய்துவிட்டுப் போயுள்ளார். ஜெயலலிதாதான் இவரைப் பார்த்துட்டு “திரும்பிப் பார்க்கிறேன்’ நிகழ்ச்சியில் பேட்டி எடுத்துக்கொள்ள சொல்லி வலியுறுத்தியுள்ளார்.
30 வருஷமாக ராஜஸ்ரீயை யாருமே பார்க்கவில்லை, இவரது முகமே மறந்து போய் இருக்கும். ராஜஸ்ரீயை யாருக்கும் அடையாளம் கூட தெரியாது. அதனால் வேண்டாம் என்று மறுத்துள்ளார். ஆனால் ஜெயலலிதா விடவில்லை. பேட்டி கொடுத்தார். அப்பறம்தான் ராஜஸ்ரீ இருப்பதே வெளியே தெரிய வந்தது.
சினிமா எக்ஸ்பிரஸ் வார இதழிலிருந்து எடுக்கப்பட்டு அன்று கண்ட முகம் என வலைப்பூவில் பதிந்து அங்கிருந்து இங்கே இடப்பட்டது.(கிருஷ்ணாஜியைப் பின்பற்றும் சி.க)
-
30th August 2014, 09:48 AM
#1493
Senior Member
Senior Hubber
*
காதல் வயப்பட்டால் அ.கா இளம்பெண்கள் எல்லாம் வெறித்துப் பார்ப்பார்கள்..காலில் அரைவட்டம்போடுவார்கள்..இ.கா.பெண்கள் செல்லில் என்னடா பண்றே என்பார்கள்..ஆனா இந்த இளவட்ட்டப் பசங்க இருக்காங்களே அந்தக்காலத்துலயும் சரி இந்தக்காலத்திலயும் ச்ரி (கொஞ்சம் ஒரு பதினஞ்சு வருஷம் முன்னால) காதலி தான் எல்லாம்னு இருப்பாங்க..அப்படியே சொல்லவும் செய்வாங்க. என்று சில பெரியவர்கள் சொல்வார்கள்.
.
அவர்க்ள் சொல்வதற்கேற்ப இரு பாடல்கள்..!
அந்தக் காலத்துத் தேன் நிலவி(படத்தி)ல் ஏகாந்தமாய் ஜெமினியும் வைஜூவும் காஷ்மீர் சோன் மார்க்கோ என்னவோ அந்த லொக்கேஷனில் ஏகாந்தமாய் வாயசைக்க ஏ.எம். ராஜாவும் ஜானகியும் மெலோடியாய்ப் பாடிய எப்போதும் ரீங்க்ரிக்கும்பாட்டு.. இது.
காலையும் நீயே மாலையும் நீயே
காற்றும் நீயே கடலும் நீயே
ஆலயமணிவாழ் ஓசையும் நீயே
அருள் வடிவாகும் தெய்வமும் நீயே
பாலில் விழுந்த பழங்களைப் போலே
பருவம் முழுதும் நிறைந்தவள் நீயே
மனதில் மேடை அமைத்தவள் நீயே
மங்கல நாடகம் ஆட வந்தாயே
தொண்ணூறுகளிலும் அதே கான்செப்ட் கொண்ட பாட்டு தான்..இதுவும் அழகு..எழுதியவர் யார் எனத்தெரியவில்லை..மே.பி..வைரமுத்து..
நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி
எங்கே விழுந்தாலும் ஏந்திக்கொல்வேன்
நீ இரவு நான் விண்மீன்
நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன்
நீ அலை நான் கரை
என்ன அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்
நீ உடல் நான் நிழல்
நீ விழ வேண்டாம் நான் விழுவேன்
நீ கிளை நான் இலை
உன்னை ஒட்டும் வரைக்கும் தான் உயிர்த்திருப்பேன்
நீ விழி நான் இமை
உன்னை சேரும் வரைக்கும் நான் துடித்திருப்பேன்
நீ ஸ்வாசம் நான் தேகம்
நான் உன்னை மட்டும் உயிர்த்திட அனுமதிப்பேன்
நீ வானம் நான் நீலம்
உன்னில் நானாய் கலந்திருப்பேன்
நீ எண்ணம் நான் வார்த்தை
நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்
நீ வெயில் நான் குயில்
உன் வருகை பார்த்து தான் நான் இசைப்பேன்
நீ உடை நான் இடை
உன்னை உறங்கும் பொழுதும் நான் உடுத்திருப்பேன்
நீ பகல் நான் ஒளி
என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நான் இருப்பேன்
*
கவிதை நன்னாத் தான் இருக்கு..ஆனா
/நீ அலை நான் கரை
என்ன அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்/ // ஒருவேளை கல்யாணத்துக்கப்புறம் அனுபவத்துல இருந்து பாடறாங்களா இருக்கும்..
Last edited by chinnakkannan; 30th August 2014 at 09:53 AM.
-
30th August 2014, 09:57 AM
#1494
Senior Member
Seasoned Hubber
சி க
இதோ ராஜஸ்ரீ, காந்தாராவ் நடித்த அருமையான பாடல்
-
30th August 2014, 09:59 AM
#1495
Senior Member
Seasoned Hubber
ராஜஸ்ரீ மற்றும் ரத்னா ஆடும் ஆட்டம்
-
30th August 2014, 10:17 AM
#1496
Senior Member
Veteran Hubber

Originally Posted by
chinnakkannan
“பாமா விஜயம்’,ஊட்டி வரை உறவு, “பூவா தலையா’, “அனுபவி ராஜா அனுபவி’, சிவாஜியுடன் “நீலவானம்’ எஸ்.எஸ்.ஆருடன் “பூம்புகார்’, ஜெயசங்கருடன் “செல்வமகள்’ என்று நிறைய தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார் ராஜஸ்ரீ.
(சினிமா எக்ஸ்பிரஸ் வார இதழிலிருந்து எடுக்கப்பட்டு)
ராஜஸ்ரீ...?. ஊட்டிவரை உறவு படத்தில்...??... எந்த ரோலில் நடிக்க வைத்தார் அந்த சினிமா எக்ஸ்பிரஸ் நிருபர்...????.
-
30th August 2014, 10:27 AM
#1497
Senior Member
Diamond Hubber
ராஜேஷ்ஜி
வணக்கம்.
'ஏழு சுந்தர ராத்ரிகள்
ஏகாந்த சுந்தர ராத்ரிகள்'
பாடல் அருமை. அழகாக ஷீலாவை வைத்து ஒரு வீட்டுக்குள்ளேயே படமாக்கியிருக்கிறார்கள். வீட்டுக்குள் ஜன்னலின் உள் இருந்து ஷீலா பாடுவது வெளியிலிருந்து காமெராவினால் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. அதனால் ரூமில் எரிந்து கொண்டிருக்கும் பல்ப் வெளிச்ச லைட்டிங் தத்ரூபமாகத் தெரிகிறது. அந்தக் காலத்து குண்டு பலப், அதனுடைய ஷேடோ நம் பழைய காலத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறது.
சுசீலா அம்மாவைப் பற்றிக் கேட்கணுமா?
பாடலின் சரண வரிகளை முடிக்கும் தருவாயில்
'ஈ பூ... இத்திரிப் பூ'
என்று சுசீலா அவர்கள் வசன நடையில் பாடுவது அருமையாக உள்ளது. கண்களில் மை பூசி ஷீலா கவர்கிறார். எடுப்பான வாளிப்பான உடல்.
பாடல் பரம சுகம் தருவது உண்மையே! நன்றி ராஜேஷ் சார்.
-
30th August 2014, 10:28 AM
#1498
Senior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th August 2014, 10:30 AM
#1499
Senior Member
Diamond Hubber
வணக்கம் சி.க சார், கார்த்திக் சார்.
-
30th August 2014, 10:35 AM
#1500
Senior Member
Diamond Hubber
சி.க சார்,
பட்டுக்கோட்டையார், ராஜஸ்ரீ பதிவு அருமை. 'நீ காற்று' பாடல் எனக்குப் பிடிக்காது. அது போலே மலரே நலமா பாடலும். ஆனால் எல்லோரும் ஓஹோ என்பார்கள். என்ன இருக்கிறது அந்தப் பாட்டில் என்று தெரியவில்லை. கேட்டால் மெலடி என்று ஒரு சேரக் குரல் கொடுப்பார்கள்.
ஆமாம் அருமையான 'ருத்ர தாண்டவம்' புது மஞ்சள் பாடலை பார்த்தீர்களா. வீட்டுக்குப் போய் பார்க்கணும் என்றீர்களே.
Bookmarks