-
31st August 2014, 07:28 PM
#1311
Junior Member
Veteran Hubber
1968-ல் ஏவி.எம். தயாரிப்பான "உயர்ந்த மனிதன்'' படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சிவாஜியின் மகன் வேடம். உயிரே போனாலும் பொய் சொல்லாத ஒரு அப்பாவி இளைஞனாக நடித்தேன்.
ஒரு மாதம் படப்பிடிப்பு நடந்திருக்கும். எம்.ஜி.ஆர். என்னை அழைத்து, "பூலரங்குடு'' என்ற தெலுங்குப்படத்தைப் போட்டுக் காட்டினார். அப்படத்தில் நாகேஸ்வரராவ் கதாநாயகனாகவும், சோபன்பாபு இரண்டாவது கதாநாயகனாகவும் நடித்திருந்தனர்.
சோபன்பாபு வேடத்தை எனக்குத் தருவதாக எம்.ஜி.ஆர். சொன்னார். "உயர்ந்த மனிதன்'' படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால், எம்.ஜி.ஆர். படத்தில் நடிக்க இயலாமல் போய்விட்டது.''
இவ்வாறு சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.
உயர்ந்த மனிதன் படத்தின் உச்சகட்ட காட்சி-பொய்யே பேசாத - தவறே செய்யாத சிவகுமாரை, சிவாஜி சந்தேகத்தின் பேரில் அடி அடி என்று அடித்து விரட்டி விடுவார். இறந்து போன தாயாரை (வாணிஸ்ரீ) நினைத்து அழுதுகொண்டே ரோட்டில் நடந்து வருவார், சிவகுமார்.
அப்போது, தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும். தீப்பிழம்புக்குள் தாயாரின் உருவம் சிவகுமாருக்குத் தெரியும். "ஊரே உன்னை வெறுத்தாலும், உனக்காக நான் இருக்கிறேன். வாப்பா, வா!'' என்று அழைப்பார்.
"அம்மா... அம்மா...!'' என்றபடி, தீக்குள் நுழைந்து விடுவார், சிவகுமார்.
இதற்கிடையே, சிவகுமார் தன் மகன் என்பது சிவாஜிக்கு தெரிந்து விடும். மகனைத் தேடி ஓடி வருவார். தீக்குள் புகுந்து விட்ட சிவகுமாரை காப்பாற்ற அவரும் தீக்குள் நுழைந்து விடுவார். இந்த "கிளைமாக்ஸ்'' காட்சியை படமாக்க 6 நாட்கள் ஆயிற்று.
"உயர்ந்த மனிதன்'' தரத்தில் சிறந்த படமாகவும், வசூலில் வெற்றிப்படமாகவும் விளங்கியது.
உயர்ந்த மனிதனில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் பாரதி.
-
31st August 2014 07:28 PM
# ADS
Circuit advertisement
-
1st September 2014, 11:10 AM
#1312
Junior Member
Senior Hubber
JUST TO SATISFY A SECTION OF PEOPLE MR CHOKALINGAM HAS MADE AN UNWANTED SARCASTIC STATEMENT ABOUT KARNAN WHICH CAN NOT BE DIGESTED MOT ONLY BY SIVAJI FANS BUT ALSO GENERAL PUBLIC AND PRESSMEDIA VERY WELL.
all power mongers and jalra people. definitely god will not tolerate this people.
-
1st September 2014, 09:07 PM
#1313
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Subramaniam Ramajayam
MR CHOKALINGAM HAS MADE AN UNWANTED SARCASTIC STATEMENT ABOUT KARNAN
அப்படி என்ன சொன்னாரு ?
அவர் ஒரு வியாபாரி .. கர்ணன் பட வெளியீட்டின் போது அவரை தலையில் தூக்கி வச்சு ஆடியிருக்க வேண்டியதில்லை ..இப்போது என்னென்ன நிர்ப்பந்தமோ யார் கண்டா ?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st September 2014, 09:17 PM
#1314
Junior Member
Newbie Hubber

Originally Posted by
joe
அப்படி என்ன சொன்னாரு ?
அவர் ஒரு வியாபாரி .. கர்ணன் பட வெளியீட்டின் போது அவரை தலையில் தூக்கி வச்சு ஆடியிருக்க வேண்டியதில்லை ..இப்போது என்னென்ன நிர்ப்பந்தமோ யார் கண்டா ?
அவர் ஒரு சாமர்த்தியமான வியாபாரியாக கூட நடந்து கொள்ளவில்லையே? தனக்கு பணமும் ,புகழும் தந்ததை எந்த வியாபாரியாவது மறப்பானா?கலி காலம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st September 2014, 11:21 PM
#1315
ஒரு தவறான புரிதலின் விளைவே இந்த எதிர் வினைகள் என்றே எனக்குப் படுகிறது. சொக்கலிங்கம் கர்ணன் படத்தையும் ஆயிரத்தில் ஒருவன் படத்தையும் restoration செய்த விதத்தைதான் ஒப்பீடு செய்திருக்கிறார் என்பதாகவே நான் புரிந்துக் கொள்கிறேன். இரண்டு படங்களையும் re-master செய்தபோது வந்த result-ஐ எடுத்துப் பார்த்தால் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு கிடைத்த technical success rate அதிகம் என்ற அர்த்தத்தில்தான் அந்த வாக்கியம் எழுதப்பட்டிருக்கிறதே தவிர இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் பற்றிய ஒப்பிடு அல்ல அது. இந்த கட்டுரையை எழுதிய இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் டேனியல் திம்மையாவின் தெளிவற்ற வரிகளால் விளைந்த குழப்பம் இது. தமிழை தாய் மொழியாக கொள்ளாத(?) இந்த நிருபர் தமிழில் மட்டுமே பேசக்கூடிய சொக்கலிங்கத்தின் பேச்சை அதில் சொல்ல வந்த விஷயத்தை புரிந்துக் கொள்ளாமல் அப்படியே மொழி மாற்றம் செய்திருக்கிறார் என்றே எனக்கு படுகிறது.
சொக்கலிங்கத்தின் வக்கீலாக இதை இங்கே விளக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. ஆனால் இந்த பத்திரிக்கை கட்டுரை இங்கே பலரையும் உணர்ச்சி வசப்பட வைக்கிறது அதன் காரணமாக பதிவிடப்படும் எதிர் வினைகள் மேலும் குழப்பத்தையும் தேவையற்ற சர்ச்சைகளையும் இந்த திரியில் ஏற்படுத்தும் என்பதனால் அதை தவிர்ப்பதற்காகவே இந்த விளக்கம்.
Let us give the benefit of doubt to Chokkalingam in this regard!
அன்புடன்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
joe liked this post
-
1st September 2014, 11:47 PM
#1316
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.
கடந்த பதிவின் இறுதி பகுதி.
அரசியல் ஒரு பக்கம் சூடு என்றால் தொடர் வெற்றிகளும் வெளியாக போகும் படங்களின் எதிர்பார்ப்பும் மற்றொரு பக்கம் சூட்டை கிளப்பிக் கொண்டிருந்தது.
இங்கிருந்து பதிவு தொடர்கிறது.
அந்த நாள் ஞாபகம்
தர்மம் எங்கே திரைப்படம் பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். தெய்வமகன் வெளியாகி மூன்று வருட இடைவெளிக்கு பின் சாந்தி பிலிம்ஸ் தயாரித்த படம். அதே நாயகி அதே வில்லன் அதே இயக்குனர் என்ற combination. அதையெல்லாம் விட ஒரு period பிலிம் என்பது ஒரு எதிர்பார்ப்பை தூண்டியிருந்தது. படத்திற்கு வந்த விளம்பரங்கள்.பத்திரிக்கைகளில் வெளியான ஸ்டில்ஸ் அதிலும் மதி ஒளி தர்மம் எங்கே சிறப்பு மலராக வெளியிட்ட இதழில் அச்சாகியிருந்த சில புகைப்படங்கள் ரசிகர்களின் ஆவலை தூண்டியிருந்தன.
எல்லா இடங்களிலும் இதை பற்றிய பேச்சு. அந்த கல்வியாண்டில் ஸ்கூல் மாறி விட்ட பழைய ஸ்கூல் நண்பன் ஒருவனை சந்தித்தேன். அவன் வீட்டிற்கு சென்றால் அங்கே அவனது அண்ணன் தர்மம் எங்கே பற்றி எதிர்பார்ப்போடு பேசுகிறான். நாங்கள் மட்டுமல்ல பலரும் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது.
கடந்த பதிவில் நான் குறிப்பிட்ட ஒரு நாள் வேலை நிறுத்தத்தை முறியடிக்க அரசாங்கம் முழு முனைப்புடன் வேலை செய்தது. அன்றைய தினம் திண்டுக்கல் ரோடு, மேலமாசி வீதி போன்ற இடங்களில் பூட்டிக் கிடந்த கடைகளை திறக்க சொல்லி ஆளும் கட்சியினர் கடை உரிமையாளர்களை மிரட்டியதை நானே நேரில் பார்த்தேன். போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தினால் குண்டுகள் பாயாமல் பூமாரியா பெய்யும் போன்ற சில கமன்ட்கள் ஆளும் கட்சியின் முச்சிய தரப்பினரிடமிருந்து வந்தது. ஆனால் ஒரு விஷயம் உறுதியாக தெரிய ஆரம்பித்தது. அதுதான் பொது மக்கள் ஆளும் கட்சியின் மேல் கோவம் கொள்ள ஆரம்பித்து விட்டான்ர் என்ற உண்மை.
அறிவித்தபடியே தர்மம் எங்கே ஜூலை 15-ந் தேதி சனிக்கிழமை அன்று வெளியானது. மதுரையில் ஸ்ரீதேவியில் படம் ரிலீஸ். ரிலீசிற்கு முதல் நாளே தேவியில் கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது. படத்தைப் பற்றிய செய்திகளும் தமிழகமெங்கும் நடிகர் திலகத்தின் படங்கள் வீறு நடை போட்டு புதிய சாதனைகள் படைப்பதையும் அங்கே விவாதிக்கபட்டுக் கொண்டிருந்தன.
ரிலீசன்று முழு பக்க விளம்பரம். காலையில் பார்த்தவுடன் படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமானது. ஆனால் ஸ்கூல் இருந்த காரணத்தினால் போக முடியவில்லை. வழக்கம் போல் என் கசின் அவன் ஓபனிங் ஷோ பார்பதற்கு ஏற்பாடு செய்து விட்டான். என்னை மாலைக்காட்சிக்கு கூட்டிப் போவதாக சொல்லியிருந்தான். அப்போது நான் படித்திருந்த ஸ்கூல் சனிக்கிழமைகளிலும் புல் ஸ்கூல். ஸ்கூல் விட்டு வந்தவுடன் போய் விடலாம். மாலை 6.30 மணிக்குதானே ஷோ என்று நினைத்துக் கொண்டே ஸ்கூல் போனேன். அங்கே போனாலும் மனதில் படம் பற்றிய நினைவுகளே சுற்றி சுற்றி வந்தன. மாலை வேக வேகமாக வீட்டிற்கு வருகிறேன். என் கஸினை காணோம். வீட்டில் கேட்டால் வெளியில் போயிருக்கிறான் என்று சொன்னார்கள். காத்திருந்து காத்திருந்து பார்த்தேன். அவன் வரவில்லை. அதுவரை படத்தைப் பற்றிய ரிப்போர்ட்-ம் கேட்க முடியவில்லை. இரவு 9.30 மணிக்கு வந்தான். படம் எப்படி இருக்கு? ரிப்போர்ட் எப்படி? ஓபனிங் ஷோ போனியா? ஈவ்னிங் ஷோ போகலாம்னு சொல்லிட்டு நீ பாட்டுக்கு போயிட்டியே? என்று கேள்விகளால் அவனை அரித்து எடுத்து விட்டேன்! படம் நல்லா இருக்கு. மத்ததை அப்புறம் சொல்லுறேன் என்றான். தாத்தா வீட்டில் இருந்தார் ஆகவே நிறைய பேச முடியாது.
மறுநாள் காலை 8 மணிக்கு நாங்கள் இரண்டு பேரும் கடைக்கு போவதற்காக வெளியே செல்கிறோம். முதலில் நகை கடை பஜார் என்றழைக்கப்படும் தெற்காவணி மூல வீதி சென்றோம். தெரு முழுக்க நகைக் கடைகள் நிறைந்து இருக்கும். அன்றைய நாளில் ஞாயிறன்று நகைக் கடைகள் கிடையாது. ஆகவே அங்கே ஞாயிறு வாசக சாலை செயலபடும். இது சிவாஜி ரசிகர்களால் நடத்தப்படுவது. அங்கே சந்தித்த சில ரசிகர்கள் படத்தைப் பற்றியும் முதல் நாள் ஓபனிங் ஷோவில் நடந்த அலப்பரை பற்றியும் பேசினார்கள். அங்கிருந்து மேலமாசி வீதி வாசக சாலைக்கு செல்கிறோம். அங்கேயும் அதே நிலை. இறுதியாக டவுன்ஹால் ரோடு தானப்ப முதலி தெரு சந்திப்பில் இயங்கி வந்த லால் பகதூர் சாஸ்திரி மன்றம் [உட்கிளை சிவாஜி மன்றம்] சென்றோம். அங்கே சென்றபோதுதான் படத்திற்கு முதல் நாள் வந்த கூட்டம் பற்றி தெரிந்தது. அது மட்டுமல்ல அன்று காலையில் தேவி டாக்கீஸ் சென்றிருந்த ரசிகர் அங்கே வந்து கூட்டம் அதிகமாக இருப்பதால் இன்று 5 காட்சிகள் போட்டு விட்டார்கள். காலையில் 9.15 மணிக்கு ஷோ ஆரம்பித்து விட்டது என்றார். இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு மந்திரித்து விட்டது போல் ஆகி விட்டது. எப்படியும் அன்று படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பட ஆரம்பித்தது. இதற்கு நடுவில் கசின் ஓபனிங் ஷோ தவிர முதல் நாள் மாலைக் காட்சியும் பார்த்த விஷயம் வெளியில் வந்து விட்டது. எனக்கு சமாதானம் சொல்லும் விதமாக மாலை 5.30 மணிக்கே படம் போடப் போகிறார்கள் என்பதனால் நான் கிளம்பி விட்டேன் என்றான்.
வீட்டிற்கு போனவுடன் மாலைக் காட்சி போவதற்கு அடி போட ஆரம்பித்து விட்டேன். ஆனால் அனுமதி எளிதில் கிடைக்கவில்லை. இதற்கு நடுவில் படத்திற்கு பயங்கர கூட்டம் என்றும் போலீஸார் அடித்து விரட்டுகிறார்கள் என்ற செய்தியையும் எனது இளைய மாமன் என் தாயாரிடம் சொல்லி விட எனக்கு முட்டுக்கட்டை பலமானது. எந்த பிரச்சனையுமில்லை. எந்த வித சிக்கலிலும் மாட்டிக் கொள்ளாமல் சென்று வருகிறோம். வேண்டுமென்றால் மாமா எங்களுக்கு துணையாக வரட்டும் என்று கேட்டு அந்த நிபந்தனையின் பேரில் அனுமதி கிடைத்தது. நாங்கள் மாலை 5 மணிக்கே கிளம்ப இப்பவே எதற்கு என்று மாமா கேட்க இப்போது சென்றால்தான் டிக்கெட் கிடைக்கும் என்று நாங்கள் சொல்ல அப்படியானால் நீங்க இரண்டு பேரும் முன்னாடி போங்க. நான் அங்கே வந்துர்றேன் என்றார். நாங்கள் ஓட்டமும் நடையுமாய் தேவி டாக்கீஸ் சென்றோம். தானப்ப முதலி தெரு வழியாக வடக்கு மாசி வீதி கடந்து கிருஷ்ணாராயர் தெப்பக்குள தெரு தாண்டி B 4 போலீஸ் ஸ்டேஷன் பக்கத்து தெருவில் நுழைந்தபோதுதான் புரிந்தது கூட்டம் பற்றி பல ரசிகர்களும் சொன்னது எந்தளவிற்கு சரி என்று!
(தொடரும்)
அன்புடன்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
2nd September 2014, 03:53 AM
#1317
Senior Member
Devoted Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
2nd September 2014, 10:56 AM
#1318
Junior Member
Veteran Hubber

மேலே கூறப்பட்டுள்ள விஷயம் எந்த நூற்றாண்டில் நடந்ததென்று தெரியவில்லை !
எந்த விதத்தில், எப்படி, எங்கு ATLEAST ஏதேனும் ஒரு சென்டரில் இந்த விஷயம் நடந்தது என்பதை கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்..!
இதை பார்க்கும்போது...வடிவேல் கூறுவாரே ஒரு திரைப்படத்தில்...ஏ....நல்லா பாத்துக்குங்கப்பா....நானும் ரவுடி..நானும் ரவுடி...என்று....அந்த காட்சிதான் ஞ்யபகதிர்க்கு வருகிறது !
வலுக்கட்டாயமாக உருவாக்கப்படும் தடயங்கள், ஆவணங்களை பார்த்தால் ...இந்த காட்சியும் ஞாபகதிற்கு வருகிறது..!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd September 2014, 11:01 AM
#1319
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Murali Srinivas
ஒரு தவறான புரிதலின் விளைவே இந்த எதிர் வினைகள் என்றே எனக்குப் படுகிறது. சொக்கலிங்கம் கர்ணன் படத்தையும் ஆயிரத்தில் ஒருவன் படத்தையும் restoration செய்த விதத்தைதான் ஒப்பீடு செய்திருக்கிறார் என்பதாகவே நான் புரிந்துக் கொள்கிறேன். இரண்டு படங்களையும் re-master செய்தபோது வந்த result-ஐ எடுத்துப் பார்த்தால் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு கிடைத்த technical success rate அதிகம் என்ற அர்த்தத்தில்தான் அந்த வாக்கியம் எழுதப்பட்டிருக்கிறதே தவிர இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் பற்றிய ஒப்பிடு அல்ல அது. இந்த கட்டுரையை எழுதிய இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் டேனியல் திம்மையாவின் தெளிவற்ற வரிகளால் விளைந்த குழப்பம் இது. தமிழை தாய் மொழியாக கொள்ளாத(?) இந்த நிருபர் தமிழில் மட்டுமே பேசக்கூடிய சொக்கலிங்கத்தின் பேச்சை அதில் சொல்ல வந்த விஷயத்தை புரிந்துக் கொள்ளாமல் அப்படியே மொழி மாற்றம் செய்திருக்கிறார் என்றே எனக்கு படுகிறது.
Let us give the benefit of doubt to Chokkalingam in this regard!
அன்புடன்
திரு.சொக்கலிங்கமும் இதுமாதிரிதான் விளக்கம் தெரிவித்து E -Mail அனுப்பியிருக்கிறார். அதே பேட்டியில் தான் ஒரு சிவாஜி ரசிகன் என்று சொல்லியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Last edited by KCSHEKAR; 2nd September 2014 at 11:06 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
2nd September 2014, 11:10 AM
#1320
Junior Member
Newbie Hubber
Murali ,
If this is true,Ask chokkalingam to make amends with the report with clarification. Let them regret. Anycase, People will know the difference in Quality ,Class and Truth.
Last edited by Gopal.s; 2nd September 2014 at 11:18 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks