Page 170 of 401 FirstFirst ... 70120160168169170171172180220270 ... LastLast
Results 1,691 to 1,700 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #1691
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நண்பர்கள் விருப்பபட்டால் இன்னும் புகழ் பெற்ற நாம் கேட்டு மகிழ்ந்த ஈழத் திரைப்படப் பாடல்களை அளிக்கலாம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1692
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Eelaththu Tamil Feature films Details

    Film is a one of the popular medium in the world. Film was invented by Lumiere brothers. Cinema is the production of films as an art or industry. Films have motion pictures.
    In early period we had motion pictures. Several names called as film .Such as cinema, picture shows, flicks, movies, photo plays and silver screen. Film influences the people and their life strongly. Films used as entertainment, educate, inform the audience.
    Each and every film is reflecting their cultures and their life style. People don’t interest in what is happening around us. But they are interesting in cinema very well. Films reach even the rural areas also.
    There are number of film industries in the world. Tamil Cinema, Telungu cinema, Kannada cinema, Malayalam cinema, Hindi cinema, Sinhalese cinema &Srilankan Tamil cinema are some of it.
    Sri Lankan Tamil film industry began with 1951s. Although there is a well-established Sinhala cinema in Sri Lank there is no a well-established Tamil cinema here. Even though many Tamil films were produced and released in Sri Lanka. Such a way following films are some of it.

    1. Samuthayam (1962)
    2. Thottakkari (1962)
    3. KadamiyinEllai(1966)
    4. PasaNila (1966)
    5. Taxi Driver (1966)
    6. Nirmala (1968)
    7. ManjalKungumam (1970)
    8. Vensangu (1970)
    9. KuththuVilakku (1972)
    10. Meenava Penn (1973)
    11. PudhiyaKattru (1975)
    12. Komaligal (1976)
    13. Ponmani (1977)
    14. KaathirupaenUnakaaha (1977)
    15. NaanUngalThozhan (1978)
    16. Vadaikkattru (1978)
    17. ThendralumPuyalum (1978)
    18. TheivamThanthaVeedu (1978)
    19. Aemalikal (1978)
    20. Anuragam (1978)
    21. EngalilOruvan (1979)
    22. MaamiyarVeedu (1979)
    23. NenjukkuNeethe (1980)
    24. RathathinRathamae (1980)
    25. AvalOruJeevanathi (1980)
    26. Nadu PotraVaalka (1981)
    27. PathaiMaariyaParuvangal (1982)
    28. SharmilavinIthayaRagam (1993)
    29. Aanivaer (2006)
    30. Mann (2006)
    31. Operation Ellalan (2010)
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #1693
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    The famous Chinna Mamiye Song. Enjoy



  5. Likes Russellmai liked this post
  6. #1694
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடம்ன்றோ என்ற வரியை கேட்டுவிட்டு வாலி மீது எம்.ஜி.ஆர் கோபம் கொண்டாராம் என்னய்யா மூன்று தமிழ் அவரிடம் தான் தோன்றியதோ அதற்கு வாலி சொன்னாராம், புது பையன் முதல் பாடல் அதனால் தான் அப்படி என்று , உடனே எம்.ஜி.ஆர் ஹ்ம்ம்ம் சரி சரி தமாஷுக்கு சொன்னேன் பையன் நல்லா வரட்டும் என்று சொன்னாராம்..
    ஆனால் வாலி அவர்களின் கூற்று வேறுமாதிரி இருந்தது.

    தேவி பாரடைஸ் தியேட்டரில் பிள்ளையோ பிள்ளை வெளியீட்டு விழாவில் (ஆனால் படம் ரிலீசானது பக்கத்திலிருந்த பிளாசா தியேட்டரில்) கலந்துகொண்டு முழுப்படத்தையும் பார்த்த எம்.ஜி.ஆர். தன்னுடன் காரில் வந்த வாலியுடன் எதுவும் பேசவில்லையாம். மூன்று நாட்கள் கழித்து தோட்டத்திலிருந்து வாலிக்கு போன்செய்து சின்னவர் பேச விரும்புவதாக அழைக்க, வாலி சென்றாராம். இறுக்கமான முகத்துடன் இருந்த எம்.ஜி.ஆர். வாலியைப்பார்த்ததும், சைகையால் உட்காரச்சொன்னவர் "என்ன எழுதியிருந்தீங்க, மூன்று தமிழ் தோன்றியது மு.க.முத்துவிடமா?. இந்த பாட்டை ஏன் என்னுடைய படத்துக்கு எழுதவில்லை?' என்று கேட்க ஆடிப்போன வாலி, "அப்படியெல்லாம் இல்லீங்க. பாட்டெழுதும் முன்னர் கலைஞர் என்னிடம் 'வளர்கின்ற பையன் முத்து, அதனால் நல்ல இலக்கிய நயமா ஒரு டூயட் எழுதிக்கொடுங்க' என்று கேட்க, சட்டென்று எனக்குத்தோன்றிய இந்த வரிகளை சொன்னேன். அவருக்கும் மற்றவர்களுக்கும் பிடித்துப்போக அதைவைத்தே மற்ற வரிகளையும் எழுதினேன். அதனால் என்ன உங்க அடுத்த படத்துக்கு இதைவிட பிரமாதமா எழுதி தந்துடுறேன்" என்று சமாதானப்படுத்தினாராம். இருந்தாலும் எம்.ஜி.ஆர். சமாதானம் அடைந்ததாக தெரியவில்லை என்று வாலி கூறியிருந்தார்...

  7. #1695
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு சார்

    ஈழ பாடல்கள் தொகுப்பு உங்களின் ரசனைக்கு மேலும் ஒரு மகுடம் என்றால் அது மிகை ஆகாது . ஏமாளிகள் மற்றும் கோமாளிகள் இரண்டுமே திரு ராமதாஸ் அவர்களின் வெற்றி படைப்பு .அந்நாளைய சிலோன் ரேடியோவில் இதன் விளம்பரம் மிகவும் பிரபலம்
    gkrishna

  8. #1696
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வாசுதேவன் சார்,

    'சின்ன மாமியே' பாடலுக்கு மிக்க நன்றி! டைமிங் பதிவு.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #1697
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    கோமாளிகள் 1976இல் வெளிவந்த ஓர் ஈழத்துத் திரைப்படம் ஆகும். இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட புகழ் பெற்ற கோமாளிகள் கும்மாளம் என்ற வானொலித்தொடர் நாடகமே கோமாளிகளாக திரைப்படமாக்கப்பட்டது. எஸ். ராம்தாஸ் எழுதிய இந்த தொடர் நாடகத்தில் நடித்தவர்களில் சிலர் திரைப்படத்திலும் நடித்தார்கள். புதிய கதாபாத்திரங்களும் திரைப்படத்திற்கென உருவாக்கப்பட்டன.

    எஸ். ராம்தாஸ், ரி. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், அப்துல் ஹமீட், கே. சந்திரசேகரன், சுப்புலட்சுமி காசிநாதன், ஆன்ந்தராணி பாலேந்திரா (இராசரத்தினம்), சில்லையூர் செல்வராஜன், கமலினி செல்வராஜன், கே. ஏ. ஜவாஹர் போன்ற பலர் நடித்தார்கள். முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்கெனவே வானொலி மூலம் பிரபலமாக இருந்தது இத்திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. சிறந்த படத்தொகுப்பாளராக சிங்களப்படங்களில் பணியாற்றிய எஸ். ராமநாதன் இத்திரைப்படத்தின் இயக்குனராவார்.

    யாழ்ப்பாணத்தில் பிரபல இசைக்குழுவான கண்ணன் இசைக்குழுவைச் சேர்ந்த எம். கண்ணன், கொழும்பில் பிரபலமான டிறம் வாத்தியக்கலைஞரான நேசம் தியாகராஜா இருவரும் இணந்து இசை அமைத்தார்கள். சில்லையூர் செல்வராஜன், சாது, பெளசுல் அமீர் ஆகியோர் இயற்றிய பாடல்களை, மொஹிதீன் பெக், வி. முத்தழகு, கலாவதி, சுஜாதா, ராம்தாஸ் ஆகியோர் பாடினார்கள்.

    சிங்களத் திரைப்படங்களில் பின்னணி பாடிய மொஹிதீன் பேக் முதன்முதலாக தமிழ்த் திரைப்படத்தில் பாடியது இத்திரைப்படத்தில் தான்.

    1995ல் வெளியான மணிரத்தினத்தின் பம்பாய் திரைப்படத்தில், பிறப்பால் இஸ்லாமியரான நடிகர் நாசர் ஒரு இந்துவாகவும், இந்துவான நடிகர் சிட்டி இஸ்லாமியராகவும் நடித்தது சிறப்பாக பேசப்பட்டது. ஆனால் ஏற்கெனவே 1976ல் வெளியான கோமாளிகள் திரைப்படத்தில் இஸ்லாமியரான பி. எச். அப்துல் ஹமீட் இந்துவாகவும், பிறப்பால் இந்துவான எஸ். ராம்தாஸ் இஸ்லாமியராக அதாவது "மரிக்காராக"வும் நடித்திருந்தார்கள்



    பெண் வேடத்தில் இருப்பவர் இடது புறம் திரு ராமதாஸ்

    ''கோமாளிகள் ஒலிபரப்பு நேரத்தை மாற்ற முடியுமா என்று குணரட்னம் என்னிடம் கேட்டார்...''
    கோமாளிகள்' புகழ் மரிக்கார் ராமதாஸ்


    மரிக்கார் என்றதும் எவருக்குமே அடுத்ததாக ஞாபகத்தில் வரும் பெயர் ராமதாஸ் என்பதாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு மக்களை வசீகரித்தவர் இவர். தொழில்என்ற ரீதியில் இவர் நிறுவனங்களில் வேலை செய்திருந்தாலும் இவரது பிரதான தொழில் நாடக மேடையாகவும் பின்னர் சினிமா, டெலி நாடகங்களாகவுமே இருந்தன. இலங்கைத் தமிழ் ரசிகர்களை எடுத்துக் கொண்டால் அவர்களை அதிகம் சிரிக்க வைத்த ஒரே நபர் ராமதாஸாகத்தான் இருக்க வேண்டும். சிரிக்க வைப்பது ஒரு சிரமமான கலை என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதை சுலபமாகச் செய்த, செய்ய முடிந்த நபர் ராமதாஸ் என்றால், அவர் எத்தனை ஆளுமை கொண்டவராக இருக்க வேண்டும்! மேலும் அறுபதுகளைச் சேர்ந்த நம்மூர்க் கலைஞர்களில், கலையில் கரைந்தவர்கள்தான் அதிகம் பேர். வாழ்ந்தவர்கள் மிகக் கொஞ்சமானவர்களே. இவ்வகையில் நாடகம், சினிமா என கலைத்துறையிலும் விளம்பரத்துறையிலும் ஈடுபட்டு அவற்றின் மூலம் பொருளாதார வளத்தையும் பெருக்கிக் கொண்டவர் இவர் என்பது இன்னொரு விசேஷமான தகவல்.

    “ராமநாதபுர மாவட்ட சிவகங்கையில் தான் நான் பிறந்தேன். நான் பிறந்து ஆறு மாதத்திலேயே என்னை கொழும்புக்கு தூக்கிக்கொண்டு வந்து விட்டார்கள்.

    என் அப்பா பெயர் சத்தியவாகீஸ்வரன். அம்மா நாகலட்சுமி. ஆசாரமான ஐயர் குடும்பத்தில் வந்தவர்கள் அவர்கள். குடும்பத்தில் நான்தான் மூத்தவன் . எனக்கு நான்கு சகோதரிகள். எனது இரண்டு சகோதரிகளுக்கு கர்நாடக இசையில் நல்ல ஈடுபாடு என் அம்மா நாகலட்சுமி இலங்கை வானொலியில் கர்நாடக சங்கீதம் இசைத்தவர். என் அப்பாவும் ஒரு நல்ல ரசிகர். என்னை அழைத்துச் சென்று பழைய படங்களைக் காட்டுவார். பழம்பெரும் நடிகர் பி. யூ. சின்னப்பா என் உறவுக்காரர்தான். அதனால் என்னவோ நான் நடிகனாக வேண்டும் என்பது என் அப்பாவின் விருப்பமாக இருந்தது. ஆனால் அதை அவர் வெளிப்படையாக சொல்லவில்லை.

    வெள்ளவத்தை கிரீன்லைன் கல்லூரியில் தான் என் முதல் அரிவரி தொடங்கியது. இப்போது அந்தக் கல்லூரியின் பெயர் ஹிசிபதன மகா வித்தியாலயம்.

    அப்பாதான் என்னை அந்தப் பாடசாலைக்கு அழைத்துச் செல்வார். திருமதி ஆறுமுகம் டீச்சர் எனக்கு ‘அகரம்’ கற்பித்த ஆசிரியை.

    அந்தப் பள்ளியில் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். ரியோ தியேட்டர் உரிமையாளர் நவரத்தினம், கனகேந்திரா, கனகரட்ணம், அன்டன், இப்ராஹீம் உள்ளிட்ட சிலரைக் குறிப்பிடலாம்.

    நான் பள்ளிக்கூடத்தில் எஸ். எஸ். சி. வரையும் சும்மா போய் வந்தேன் என்றுதான் கூறவேண்டும். படித்தேன் என்றால் அது தவறாகிவிடும். வரலாற்றில் பதிவு செய்யும் படி நான் பெரிய குறும்பு செய்யவில்லை தான். ஆனால் குறும்பு இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. கிரீன்லைன் கல்லூரியின் தலைமை ஆசிரியர் குருப்பு தன் சேவைக்காலத்தில் என்னைத்தான் அதிகமாக அடித்திருப்பார். ஆனால் என் அம்மாவும், அப்பாவும் என்னை எப்போதும் அடித்ததே இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு என்னைக் கண்டாலே பயம்’ என்று சொல்லும் ராமதாஸ் தனது கலையுலக பிரவேசம் பற்றி இப்படி கூறுகிறார் :

    “கலைப் பிரவேசம் பற்றி சொல்லவதென்றால் என் தங்கை மஞ்சுளா சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பாட்டு பாடுவாள். அவளை வானொலி நிலையத்திற்கு அழைத்துச் செல்வதுதான் என் வேலையாக இருந்தது. என் தங்கையைப் போல என் குரலும் வானொலியில் வரவேண்டும் என்பதில் எனக்கு ஒரே ஆசை. ஒருநாள் சிறுவர் மலர் நிகழ்ச்சியை நடத்தி வந்த சரவணமுத்து மாமாவிடம் நேரிடையாக சென்று எனக்கு ஒரு வாய்ப்பு தரும்படி கேட்டேன். அவரும் என் குரலை பரிசோதித்துவிட்டு சிறுவர் மலர் நாடகத்தில் ‘சிங்காரம்’ என்ற பாத்திரத்தில் நடிக்க ஒரு சந்தர்ப்பம் வழங்கினார். அதன் பிறகு எனக்கு தொடர்ந்து நாடகத்தில் நடிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. பிறகு தமிழ் நாடக தயாரிப்பாளராக இருந்த சானாவின் நாடகத்திலும் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.

    எனக்கு அந்த நாடகத்தில் 45 ரூபா சம்பளமும் கிடைத்தது. எனக்கு கிடைத்த முதல் சம்பளமும் அதுதான். நான் வானொலி உலகில் பிரவேசம் செய்யும் போதே ஹமீத், எஸ். செல்வசேகரன், கே. சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் எனக்கு நண்பரானார்கள். என் கலை வாழ்க்கையும் அவர்களோடு பயணித்தது. சானா தயாரித்து வந்த ‘மத்தாப்பூ’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நான், ராஜேஸ்வரி சண்முகம், ரொசரியோ பீரிஸ், சற்சொரூபவதி நாதன் ஆகியோர் நடித்திருந்தோம். அந்த அனுபவங்களை நினைத்தாலே இன்றும் மெய்சிலிர்க்கிறது.

    திடீர் வெடி, நடிகர்கள், வாடகை வீடு, புரோக்கர் கந்தையா உள்ளிட்ட பல மேடை நாடகங்களில் நான் தொடர்ந்து நடித்ததால் ராமதாஸ் என்ற என் பெயர் கலையுலகில் பிரகாசிக்க தொடங்கிய போதுதான் எனக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. முதல் படம் ‘குத்து விளக்கு’, அதன் பிறகு எனது நண்பரான வி. பி. கணேசனின் ‘புதியகாற்று’ படத்தில் நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

    எம். ஜி. ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் என்ற கட்டுமஸ்தானா உடல்வாகுடன் அழகான தோற்றம் கொண்ட நடிகர்கள் உலாவந்த அந்தக் காலத்தில் இலங்கை சினிமாவால் கதைக்கேற்றபடி ஒரு சாதாரண குடும்பத்து இளைஞன் எப்படியிருப்பான் என்பதை கிரகித்து அதன்படியே ஒரு ஹீரோ அறிமுகமானார். அவர்தான் வி. பி. கணேசன். பார்க்க தனுஷ் மாதிரி இருப்பார்.

    இப்போது கதைக்கேற்றபடி நாயகர்கள் வருகிறார்கள் என்று சினிமா விமர்சனத்தில் எழுதுகிறார்களே அந்த நாயகர்களின் முன்னோடியாக விளங்கியவர் தான் வி. பி. கணேஷ் என்ற அடித்துச் சொல்வேன். புதிய காற்றை தொடர்ந்து ஏமாளிகள், மாமியார் வீடு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறேன்’ என்ற ராமதாஸ், தினகரன் நாடக விழாவில் முதல் பரிசு பெற்ற ‘சுமதி’ நாடகத்திலும் நகைச்சுவை வேடத்தில் நடித்து விருதும் வென்றேன் என்கிறார் மகிழ்ச்சியுடன்.


    நாடக வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் பற்றி ராமதாஸ் எம்மிடம் விளக்கினார். ‘அப்போது நான் நடித்த கோமாளிகளின் கும்மாளம் நாடகம் இலங்கை வானொலியில் ஞாயிறு தோறும் மாலை நான்கு மணிக்கு இலங்கை வங்கியின் அனுசரணையுடன் ஒலிபரப்பாகி வந்தது. ஒருநாள் பிரபல திரைப்பட இறக்குமதியாளர் சினிமாஸ் குணரட்ணம் என்னிடம் தொலைபேசியில் அழைத்து என்னை சந்திக்க விரும்புவதாக கூறினார்.

    உடனே நான் அய்யய்யோ நீங்கள் எவ்வளவு பெரிய மனிதர் நீங்கள் என்னை சந்திப்பது அழகாக இருக்காது நான் உங்களை வந்து சந்திக்கிறேன், என்று கூறிவிட்டு அவரின் இல்லத்திற்கு சென்றேன். என்னைக் கண்டதும் குணரத்தினம் கட்டிப்பிடித்து ‘நீங்கள் நடிக்கும் கோமாளிகள் தொடரை தொடர்ந்து நான் கேட்டு வருகிறேன் ரொம்பவும் நன்றாக இருக்கிறது என்று பாராட்டியவர் கூடவே ஒரு வேண்டுகோளையும் முன்வைத்தார்.

    ஞாயிற்றுக்கிழமை நான்கு மணிக்கு கோமாளிகள் நாடகம் ஒலிபரப்பாவதால் தாங்கள் இறக்குமதி செய்து திரையிட்டுள்ள தமிழ்ப் படங்களின் பிற்பகல் காட்சிக்குக் கூட்டம் வருவது குறைவாக இருப்பதாகவும் பெரும்பாலானோர் கோமாளிகள் நாடகத்தையே அந்த நேரத்தில் ரேடியோவில் கேட்கிறார்கள் என்றும் சொன்னவர் இந்த எனது கோமாளிகள் நாடகம் ஒலிபரப்பாகும் நேரத்தை மாற்றும்படி வேண்டிக் கொண்டார். அதிர்ச்சியடைந்த நான் இதை நீங்கள் என்னிடம் கேட்பதைவிட இலங்கை வங்கியிடம் தான் கேட்க வேண்டும்... ஏனென்றால் அவர்கள்தான் அந்த நாடகத்தை ஒலிபரப் புகிறார்கள் என்றேன்.

    (பிறகு குணரத்தினம் இலங்கை வங்கி தலைவரிடம் தன் கோரிக் கையை முன்வைக்க அவர் மறுத்து விட்டார்.” நாடக திரைப்பட நடிகரான அவரிடம் காதல் அனுபவங்கள் பற்றிக் கேட்டோம். நிறையவே களஞ் சியத்தில் இருக்கும் என்பது என் எண்ணம்.

    “இப்போது எனக்கு அறுபத்தி மூன்று வயதாகிறது. பழைய ஞாபகங்கள் அப்படியே தான் இருக்கின்றன. எனக்கு கண் பார்வைதான் கொஞ்சம் மங்கி விட்டது. சிலரை அடையாளம் காண்பது ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் என் மனைவியோ வீட்டுக்கு எந்த பொம்பிளை வந்தாலும் நல்லா அடையாளம் தெரியுது ஆனால் ஆண்களை மட்டும்தான் அடையாளம் தெரியிறதே இல்லைன்னு சொல்றா.

    ஒருநாள் சென். பெனடிக்ஸ் மண்டபத்தில்ல ஒரு கலை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நானும் அதைப் பார்ப்பதற்காக அங்கு சென்றிருந்தேன். எனக்கு பின் வரிசையில், பெயர் ஞாபகத்தில் இல்லை, ஏதோ மேரின்னு ஒரு பெயர், அந்தப் பொண்ணும் நின்னுக்கிட்டு இருந்தது. அந்தப் பொண்ணு இலங்கை வானொலியில் ஒரு சில நாடகங்களில் நடித்திருந்தது. என்னைப் பார்த்த அந்தப் பொண்ணு நீங்கதானே ராமதாஸ்! உங்க நாடகங்க எல்லாமே ரொம்பவும் நல்லா இருக்கு என்றாள். நானும் ‘தேங்ஸ்’ என்றேன். அடுத்ததாக அவள் என்னிடம் ஒன்றை கேட்டாள்.

    ‘உங்களை எனக்கு பிடிச்சிருக்கு. நான் உங்களை காதலிக்க ஆசைப்படுகிறேன்’ என்றாள். அப்போது மேடையில் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்ததால் இரைச்சலாக இருந்தது. எனக்கும் அவள் என்ன சொன்னாள் என்றே புரியவில்லை. என்ன சொன்னீர்கள் என்று நான் திரும்பவும் கேட்க ‘நான் உங்களை காதலிக்கிறேன்’ என்று அவள் சத்தமாக சொன்னாள். நான். ஒரு நிமிஷம் அப்படியே ஆடிப் போயிட்டேன்.

    பிறகு சுதாகரித்துக் கொண்ட நான் என்னை நம்பி நாலு தங்கச்சிங்க இருக்காங்க! அவங் கள கரைசேர்ப்பதுதான் என் முதல் கடமை அதனால இந்த காதல் எல்லாம் எனக்கு தேவையில்லை சாரி! என்றேன். அதற்கு அவள் நன்றாக யோசித்து சொல்லுங்க என்றாள். எனக்கு நல்லா யோசித்து சொல்லுற அளவுக்கு மூளை கிடையாதுங்க என்றேன். அவள் சிரித்தாள். அவ்வளவுதான் அதற்குப் பிறகு நான் அவளை பார்க்கவே இல்லை.

    அவள் இன்று எங்கு இருக்கிறாளோ? என்று சொல்லும் ராமதாஸ் இந்த விசயம் இதுவரைக்கும் என் மனைவிக்குக்கூட தெரியாது. அப்படித் தெரிந்தாலும் பயமில்லை... அப்படி அவ வந்தாள் அவளுட னேயே போயிடுங்க.. எனக்கும் நிம்மதின்னு சொல்லுவா” என்று சொல்லிச் சிரிக்கிறார் ராமதாஸ்.

    திருமணம் பற்றிக் கேட்டோம். வீட்டில் ஒரு படத்தைக் காட்டி, உனக்கும் வயது வந்திருச்சி... இந்தப் பெண்ணை கட்டிக்கிறியா? என்று கேட்டார்கள். நானும் சரி என்று சம்மதம் சொல்லிவிட்டேன். ஏனென்றால் என் மனைவி இப்போ இருக்கிறதவிட அப்போ அழகாதான் இருந்தாள். எனக்கு திருமணம் பேசிய விடயம் பற்றி எனது நண்பிகளாக பி. எச். அப்துல் ஹமீதின் துணைவியான சசிகலா, அவரின் தங்கை கீதாஞ்சலி ஆகியோரிடம் கூறினேன். அவர்களும் போட்டோவை காட்டுங்க நாங்கள் பார்த்துவிட்டு பொண்ணு நல்லா இருக்கான்னு சொல்லுறோம் என்றார்கள். நானும் வீட்டில் கேட்டு போட்டோவை வாங்கி சசிகலா, கீதாஞ்சலியிடம் கொடுத்தேன். அவர்களும் அந்தப் போட்டோவை பார்த்துவிட்டு பொண்ணு நல்லா இருக்கு என்று நற்சான்றிதழ் வழங்கினார்கள்.” என்று சொல்லி அது ஒரு காலம் என்று பெருமூச்சி விடுகிறார் ராமதாஸ். ராமதாஸின் திருமணம் வெள்ளவத்தை பிள்ளையார் கோயிலில் நடைபெற்றதாம். திருமணத்திற்கு கலை உலகை சேர்ந்த பலர் கலந்து சிறப்பித்தார்கள் என்று சொல்கிறார் ராமதாஸ். மறக்க முடியாத நபர்கள் பற்றி கேட்டதற்கு பி. எச். அப்துல் ஹமீதை என்னால் மறக்க முடியாது என்கிறார்.

    ம்... அது ஒரு காலம் என்று நீங்கள் ஏங்குவது?

    ‘கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு நண்பர்கள் யாராவது வெளிநாட்டிலிருந்து வரும்போது அவர்களை அழைத்துவர நான் எனது நண்பர்கள் சிலரோடு விமான நிலையம் செல்வது வழக்கம். அப்படி செல்லும் போது சீதுவையில் இருந்த ஒரு மதுச்சாலைக்குச் சென்று கொஞ்சமாக ஏற்றிக் கொள்வோம்.

    விமான நிலையத்திலி ருந்து வரும் போதெல்லாம் அந்த மதுக்கடை ஞாபகத்திற்கு வரும்... சீதுவையை கடக்கும் போதெல்லாம் காரின் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி மதுக்கடையை தேடுகிறேன்... பார்க்க முடியவில்லை....’ என்று அந்தக் காலத்தை நினைத்து ஏங்கும் ராமதாஸிடம், இன்றைக்கும் பயப்படுகிற விடயம் எது என்று கேட்டேன். ‘எழுபத்தி மூன்றாம் ஆண்டிலிருந்து என் பொண்டாட் டிக்குதான் பயப்படுகிறேன். ஏனென்றாள் என் கல்யாணம் 73ல் தான் நடைபெற்றது.”

    உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?

    என்று கேட்டதற்கு ராமதாஸ் இப்படி பதிலளிக்கிறார். “இருக்கிறது. என் குலதெய்வம் திருநெல்வேலி கலக்காடு மாரியம்மன்தான். வருடந்தோறும் அந்தக் கோயிலுக்கு சென்று படையல் போட்டு சாமி கும்பிடுவது எங்கள் குடும்ப வழக்கம்.’ வாழ்க்கையை பற்றி ராமதாஸ் கூறும் போது... ‘வாழ்க்கை இனிமையானது. ஆனால் இன்னும் நான் வாழ்க்கையில் முழு நிறைவுபெற்றதாக நினைக்கவில்லை. இன்னும் ஏதாவது செய்ய வேண்டும், கலை சார்ந்த ஒரு வேலையை செய்ய வேண்டும் என்பதுதான் எனது ஆசை!”என்று தனது பழைய ஞாபகங்களின் தேடல்களிலிருந்து விடைபெற்றுக் கொள்கிறார் ராமதாஸ்.

    Last edited by gkrishna; 2nd September 2014 at 02:57 PM.
    gkrishna

  10. #1698
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹாய் ஆல் ..குட் ஆஃப்டர் நூன்

    காலையில் வர இயலவில்லை.. இப்போதும் கொஞ்சம் லஞ்ச்ல் தான் படித்தேன்

    வாடைக்காற்று பாடல் தந்த வாசு சாருக்கும் விரிவான பதிவுகள் தந்த கிருஷ்ணா சாருக்கும் ஒரு ஓ + பல நன்றிகள்.. இலங்கைத் திரைப்பட லிஸ்ட்க்கும் நன்றி..சின்ன மாமியே மட்டும்கேட்டிருக்கிறேன். அண்ட் அத்தானே அத்தானே அதுவும் கேட்டிருக்கிறேன்.பட் வாடைக் காற்று பற்றிக் கேட்டதாக நினைவில்லை..பாடல் இனிமேல் தான் கேட்கணும்..


    //சில நண்பர்கள் புதிய தொடர்களைத் துவங்குகிறார்களாம். துவங்கட்டும். இதுவரை அவர்களின் அனைத்துப்பதிவுகளையும் (அவை ஒருவரிப்பதிவோ அல்லது முழு ஆராய்ச்சியோ) விடாமல் படித்தவன் நான். இனிமேல் சில பதிவுகளை படிக்காமல் தள்ளிவிட வேண்டியிருக்கும். அவ்வளவே...// ஹை..அப்படியெல்லாம் விட்டுவிடுவோமா கார்த்திக் சார்.. பி.எம் அல்லது இமெய்ல் அனுப்பிடுவோம்.. ஹி ஹி

    கோமாளிகள் பதிவுக்கும் நன்றி கிருஷ்ணாஜி.. அந்தப் பொண்ணு யாரு.. ஹூ இஸ் த ப்ளாக் ஷீப் என்று குரலொலிக்க படிப்பினை ஊட்டும் குடும்பச் சித்திரம்னு ஒரு படம் வரும் அதோட ஹீரோயின் கூட இலங்கைப் பொண்ணு தானே.. (ஹப்பாடா மத்யானமும் வெடி போட்டாச்சு)
    Last edited by chinnakkannan; 2nd September 2014 at 03:24 PM.

  11. #1699
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    இலங்கையில் உருவான தமிழ்ப்படங்களின் பாடல்களையும், அங்கு மிகவும் பிரபலமான 'சின்ன மாமியே' மற்றும் 'சுராங்கனி' போன்ற ஈழத்து பப்பிசைப் பாடல்களைப்பற்றியும் விவாதிக்கப்பட்டு வரும் இந்நேரத்தில், இந்திய இலங்கை கூட்டுத் தயாரிப்பான பைலட் பிரேம்நாத் படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடலை பதிவிடுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.

    இலங்கை மண்வாசனையோடு மெல்லிசை மன்னர் மெட்டமைத்திருக்கும் இப்பாடலில் நமது ராட்சசியும் சிலோன் மனோகரும் இணைந்து கலக்கியிருப்பார்கள். படத்துக்குப்போருத்தமான இசையைத்தருவதில் வல்லவரான மெல்லிசை மன்னரின் இன்னொரு பரீட்சாத்த முயற்சியின் வெற்றி சாதனை இந்தப்பாடல்...

    கோப்பித்தோட்ட முதலாளிக்கு
    கொழும்புலதானே கல்யாணம்
    கண்டியில வாங்கி வந்த
    சண்டி குதிரை ஊர்கோலம்

    மெருமகனா வந்தவருக்கு
    அறுபதுதானே வயசாச்சு
    மென்மகனா இருக்கிறாரு
    மூக்கு முழியைப் பார்த்தாச்சு

    குங்குருக்கு.. குங்குருக்கு
    குங்குருக்கு காமாட்சி
    குழந்தைகுட்டி பொறக்கலையா
    கட்டிக்கொடுத்து நாளாச்சு

    திரிகோண மலையிலதானே திருமணத்தை ப்பார்க்க
    யாழ்ப்பாண மக்களெல்லாம் வந்திருந்து வாழ்த்த
    பளபளன்னு பப்பாளி போல மணமகளும் சிரிக்க
    பார்த்து பார்த்து மாப்பிள்ளைக்கிழவன்
    பித்துப் பிடிச்சு கிடக்க

  12. Likes Russellmai, chinnakkannan, gkrishna liked this post
  13. #1700
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    திரையிசைப்பாடல்கள் வழியாகவே நம்மில் பெரும்பான்மையோருக்கு அறிமுகமானவர் கவிஞர் கண்ணதாசன் என்றாலும் திரைப்பாடலாசிரியர் என்பதைத் தவிரவும் எண்ணற்ற பன்முகங்களைக் கொண்ட அவர் என் பார்வையில் ஆகச்சிறந்ததொரு இலக்கியவாதியாகத்தான் புலப்படுகிறார்.இலக்கியங்களிலிருந்து வரிகளையும் கருத்துக்களையும் தான் எடுத்தாள்வதைக் கவிஞரே நேர்மையாக ஒப்புக்கொண்டபடியால்,இலக்கியங்களைக் களவாடி கவிதைகளில் புகுத்துகிறார் என்பவர்களின் குற்றச்சாட்டை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. பந்தியில் பரிமாறப்படும் உணவுக்கான பாராட்டு பரிசாரகரிடம்தான் வழங்கப்படுகிறது. ஆனால் அது தனக்கானதில்லை என்பதை அவரும் அறிவார்; நாமும் அறிவோம்.


    தமிழிலக்கியம் என்பது பாமர மக்களில் சிலருக்கு எட்டிக்காய், சிலருக்கோ எட்டாக்கனி. புலவர்களும் தமிழறிஞர்களும் ஆய்வறிஞர்களுமே இலக்கியங்களின் நயத்தையும் இன்பத்தையும் மாந்தி மகிழும் பேறு பெற்றவர்களாய் இருக்கிறார்கள். ஆர்வமிருக்கும் பலருக்கு அதற்கான வாய்ப்பு அமைவதில்லை. வாய்ப்பு அமைந்த பலரும் பிறருக்கு அவற்றை அறியத்தரும் முயற்சியில் இறங்குவதில்லை. அதனால் நம்மில் பலர் வாழ்நாளில் தமிழின் இலக்கிய இன்பங்களை நுகரும் வாய்ப்பு கிட்டாமலேயே வாழ்ந்து மறைந்துபோகிறோம்.

    இலக்கியப் பாற்கடலைக் கடைய கதியற்ற பாமரர்களுக்காக கவிஞர், தானே கடைந்தெடுத்துக் கொண்டுவந்த கவி வெண்ணெயை நம் நாவிலும் தடவி ருசிக்கச்செய்கிறார். அத்தன்மையதான அமரத்துவம் வாய்ந்தவையன்றோ இலக்கியஞ்சார்ந்த அவரது அமுதகானங்கள்?

    நம்மில் எத்தனை பேர் கம்பராமாயணத்தையும் கலித்தொகையையும் கலிங்கத்துப்பரணியையும் நளவெண்பாவையும் படித்திருக்கிறோம்? அந்தப் பெயர்களையாவது கேள்விப்பட்டிருப்பவர்கள் எத்தனை பேர்? எத்தனை பேர் திருக்குறளின் அத்தனை அதிகாரங்களையும் வாசித்து அர்த்தம் புரிந்து பரவசப்பட்டிருக்கிறோம்? பள்ளியில் படித்திருக்கும் ஒரு சில குறள்கள் தவிர பிறவற்றை நாம் அறிய முனைந்ததே இல்லை.

    பள்ளியிலும் கூட முப்பாலில் மூன்றாம் பாலான இன்பத்தை ஒதுக்கிவிட்டு அறமும் பொருளும்தான் போதிக்கப்படும். காமத்துப்பாலில் காதலின் அத்தனைப் பரிமாணத்தையும் அழகாக அலசியிருக்கும் வள்ளுவரின் திறனை நாம் அறியாமலேயே போய்விடுகிறோம். திருக்குறள்மட்டுமல்ல, கடலென விரிந்துகிடக்கும் சங்க இலக்கியம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம்,மணிமேகலை போன்ற காப்பியங்கள் பலவற்றுள் இருக்கும் இலக்கியச்சுவை இன்னதென அறியாமலிருக்கிறோம்.

    நம்மைப் போன்ற இலக்கியம் அறியாதோருக்காக, பல கவிஞர்களும் தங்கள் பாடல்களில் இலக்கியங்களை நயமாகப் புகுத்தி இலக்கிய நயத்தை நாம் அனுபவிக்கத் தந்திருக்கிறார்கள். ஆனால் அனைவரிடத்தும் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பங்கு அலாதியானது. சங்க இலக்கியம் முதல் சிற்றிலக்கியங்கள் வரை, பாரதியார் முதல் பட்டினத்தார் வரை யாதொரு தெளிவுரை, பதவுரையின் தேவைகளின்றி எளிதில் எவரும் விளங்கிக்கொள்ளும் வண்ணம் இனிய தமிழ் வார்த்தைகளால் திரைப்பாடல்களின் வழியே இலக்கியத்தைப் பகிர்கிறார் இந்த இன்சுவைக் கவிஞர்.

    யாயும் ஞாயும் யார் ஆகியரோ
    எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
    யானும் நீயும் எவ் வழி அறிதும்,
    செம் புலப் பெயல் நீர் போல,
    அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

    என்ற குறுந்தொகைப் பாடலை அறியாதோர் அநேகருண்டு. ஆனால் கண்ணதாசனின் இப்பாடலை அறியாதோர் யாவர்?

    நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
    இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
    காணும் வரை நீ எங்கே நான் எங்கே
    கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே


    இதே பாடலில் காமத்துப்பாலில் குறிப்பறிதல் அதிகாரத்திலிருந்து ஒரு குறளையும் நமக்குச் சுட்டியுள்ளார்.

    யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
    தான்நோக்கி மெல்ல நகும்.

    நம் கவிஞர் என்ன சொல்கிறார்?

    உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே
    விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே


    இதோ இன்னொரு குறள் அதே குறிப்பறிதலில் இருந்து…

    இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
    நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

    ‘கலையே உன் எழில் மேனி கனியாவதேன்’ பாடலில் கவி சமைத்த எளிய வரிகள்…

    இரு வேறு பொருள் கூறும் கண்பார்வை ஏன்
    ஒன்று நோய் தந்ததேன் ஒன்று மருந்தானதேன்
    பருவத்தின் ஒரு பார்வை நோயாகுமே
    எழில் உருவத்தின் துணை சேர மருந்தாகுமே

    தமிழிலக்கியம் கற்க எனக்கு ஆர்வமிருந்தும் அதற்கான வாய்ப்பு அமையவில்லை என்பதை தமிழறிஞரான என் மாமனாரிடம் ஆதங்கத்தோடு வெளியிடுவதுண்டு. அவர்களும் அவ்வப்போது இலக்கியங்களிலிருந்து சில பாடல்களை எடுத்து நான் அறியத் தருவார்கள்.

    ஒருநாள் கலித்தொகையில் புலவர் பெருங்கடுங்கோ பாடிய ஒரு பாடலை சிலாகித்து விளக்கினார்கள். தனக்குப் பிடித்தவனுடன் பெண் ஊரைவிட்டுப் போகும் பழக்கத்தை அன்று ‘உடன்போக்கு’ என்பார்களாம். இன்றைய வழக்கத்தில் ‘ஓடிப்போதல்’ என்போம். அப்படி உடன்போக்கு போன பெண்ணை அவளுடைய வளர்ப்புத்தாய் தேடிக்கொண்டு போகிறாள். வழியில் எதிர்ப்படுபவர்களைப் பார்த்து ‘இந்த வழியே என் மகள் ஒரு ஆடவனோடு போனதைப் பார்த்தீர்களா?’ என்று அழுதுகொண்டே கேட்கிறாள். அவ்வழியே வந்த பெரியவர்கள் அவளைத் தடுத்து நிறுத்தி அவளுக்கு அறிவுரை சொல்கிறார்கள்.

    பலஉறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
    மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என்செய்யும்?
    நினையுங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
    சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை,
    நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என்செய்யும்?
    தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
    ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை,
    யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என்செய்யும்?
    சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே

    “மலையிலுள்ள காட்டிலிருந்து பெறப்படும் சந்தனத்தால் அதைப் பூசுவாருக்கு அல்லாமல் மலைக்கு என்ன பயன்? கடலிலிருந்து கிடைக்கும் முத்தால் அதை அணிபவர்க்கு அல்லாமல் கடலுக்கு என்ன பயன்? யாழிலிருந்து கிடைக்கும் இனிய இசை, அதைக் காதால் கேட்பவர்க்கு அல்லாமல் அந்தக் கருவிக்கு என்ன பயனைத் தரும்? அதுபோல் உன் மகளும் உரிய காலத்தில் தலைவனைச் சேர்தலே முறை. அவ்வாறின்றி அவளை உன்னோடு தக்கவைப்பதால் உனக்கென்ன பயன்?” என்று கூறி அவளை சமாதானப்படுத்தித் திருப்பி அனுப்பினர்.

    ஆஹா.. என்னவொரு அற்புதமான வாழ்வியல் தத்துவம். என் மாமனார் சொல்லிக்கொண்டிருக்கும்போதே எனக்குள் ஏதோ குறுகுறுத்தது. இதை.. எங்கோ கேட்டிருக்கிறேன்.. எங்கே..? ஆங்…. அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னும் பாடலில் இந்த வரிகளைக் கவியரசர் இப்படிக் குறிப்பிடுகிறார்.

    மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
    மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
    நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
    நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
    காலம் மாறினால் காதலும் மாறுமோ...


    இப்படித் தொடர்கிறது அப்பாடல். கலித்தொகைப் பாடலைப் புரிந்துகொள்ள எனக்கொரு தமிழறிஞரின் உதவி தேவைப்பட்டது. ஆனால் கண்ணதாசனின் பாடலை எவர் உதவியுமின்றி அழகாக ரசித்து மகிழமுடிகிறதே..

    மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
    பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
    காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
    வேர்த்தளைக் காணென்றான் வேந்து.

    புகழேந்திப் புலவர் பாடிய இந்த நளவெண்பா பாடலை நம்மில் எத்தனைப் பேர் அறிவோம்? இந்த உவமையின் ஒரு பாதி கையாளப்பட்டத் திரைப்பாடல் இந்நேரம் நினைவுக்கு வந்திருக்கவேண்டுமே... ஆம், அதேதான்.

    பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
    நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
    என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
    நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற...


    கவியரசரின் இந்தப் பாடல் மூலம் நளவெண்பாவின் அறிமுகம் கிடைத்தது எனக்கு.

    புலவர் செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணியில் ஒரு பாடல். போர் முடிந்து நெடுநாள் கழித்து வீடு திரும்பிய கணவர்களிடம் ஊடல் கொண்டு வாயிற்கதவைத் திறக்க மறுக்கும் மனைவியரின் ஊடல் தீர்க்க புலவர் பாடுவது….

    வாயின் சிவப்பை விழிவாங்க
    மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்கத்
    தோயக் கலவி அமுதளிப்பீர்
    துங்கக் கபாடம் திறமினோ.


    இந்த வரிகளின் நயத்தைக் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் வெளிப்படுத்திய திரைப்பாடல் வரிகள்…

    வாயின் சிவப்பு விழியிலே
    மலர்க்கண் வெளுப்பு இதழிலே


    கவிஞரை ஈர்த்த கலிங்கத்துப்பரணியின் மற்றுமொரு பாடல்,

    கலவிக் களியின் மயக்கத்தால்
    கலைபோய் அகலக் கலைமதியின்
    நிலவைத் துகிலென் றெடுத்துடுப்பீர்
    நீள்பொற் கபாடம் திறமினோ

    கவிஞர் நமக்கு வழங்கும் எளிய வரிகள்….

    ஆடையிதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
    அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது வழக்கம்


    முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
    மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
    பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
    பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்

    - -- - இது திருநாவுக்கரசரின் திருத்தாண்டகப் பதிகம்

    அன்றொருநாள் அவனுடைய பேரைக்கேட்டேன்
    அடுத்தநாள் அவனிருக்கும் ஊரைக்கேட்டேன்
    இன்றுவரை அவன் முகத்தை நானும் காணேன் - அவன்
    என்னைத்தேடி வரும்வரைக்கும் விடவும் மாட்டேன்


    - ---- இது பதிகத்தைப் பாமரர்க்குக் கவியரசர் கொண்டு சென்ற வ(ழி)ரி..

    இலக்கியச் சான்றுகளை ஆங்காங்கே தொட்டுக்காட்டி “உள்ளே வாருங்கள், இன்னும் இன்னும் அனுபவிக்கலாம்” என்று ஈர்க்கிறார் தமிழின் சுவையறியத் துடிக்கும் உள்ளங்களை.

    நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்
    தினிதடங் கினரே மாக்கண் முனிவின்று
    நனந்தலை யுலகமுந் துஞ்சும்
    ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.

    ஊர் உறங்கிவிட்டது, உலகம் உறங்கிவிட்டது. உரியவன் அருகில் இன்மையால் நான் மட்டும் உறங்காமல் விழித்துக்கிடக்கிறேனே என்ற பொருள்படும் குறுந்தொகைப்பாடலின் சாரத்தை எடுத்துக்கொண்டார் கவிஞர். தலைவியின் கூடவே நிலவும் உறங்காமல் விழித்திருப்பதாக கற்பனை கூட்டி எளிய வரிகளால் நமக்களிக்கிறார்.

    பூ உறங்குது பொழுதும் உறங்குது
    நீ உறங்கவில்லை நிலவே
    கானுறங்குது காற்றும் உறங்குது
    நான் உறங்கவில்லை....


    கண்ணதாசன் அவர்களின் மகன் காந்தி கண்ணதாசன் ஒருமுறை தந்தையாரிடம் சென்று, “நானும் பாட்டு, எழுதலாம் என்றிருக்கிறேன் அப்பா” என்றாராம். “பாட்டெழுதுவதில் கஷ்டம் இல்லை. ஆனால், சில விஷயங்கள் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும். கம்பராமாயணம் தொடங்கி தமிழிலக்கியம் எல்லாவற்றையும் படிக்கவேண்டும். பிறகு அனுபவங்களுடன் கற்பனையைக் கலந்தால் பாட்டு தானாக வருகிறது” என்று தந்தை பதிலளித்தாராம். பாட்டு எழுதுவது வெகுசுலபம் என்பது போல் சொன்னாலும் தமிழிலக்கியத்தை நன்கு கற்றுணர்ந்திருக்கவேண்டும் என்ற அவரது வார்த்தையில் எவ்வளவு அழுத்தம்! கவியரசரின் பாடல்களில் பலவற்றுள் கம்பராமாயணத்தின் ஈர்ப்பிருப்பதைக் காணமுடியும்.

    நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை; அற்றே
    பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்
    மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
    விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?' என்றான்.

    இந்த வரிகள் கண்ணதாசனின் எண்ணத்தில்

    நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
    நதி செய்த குற்றமில்லை
    விதி செய்த குற்றமின்றி வேறு யாரம்மா?


    என்று அழகிய பாடலாய் விரியும்.

    கண்ணில் தெரியும் பொருளினைக்
    கைகள் கவர்ந்திட மாட்டாவோ?-அட
    மண்ணில் தெரியுது வானம்,
    அதுநம் வசப்பட லாகாதோ?

    என்னும் பாரதியின் வரிகள் கவிஞரின் கவிவண்ணத்தில் மிளிர்கிறது இப்படி!

    கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ?

    என் சொந்தக் கருத்துக்களோடு இணையத்திலிருந்து பெறப்பட்ட பல தகவல்கள் இக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தாலும் இலக்கியத்தின்பால் என்னை வழிநடத்தி அழைத்துச் சென்றவை கண்ணதாசன் பாடல்களில் காணப்பட்ட இலக்கியச்சுவடுகளே. சங்கப் பாடல்களின் பொருளுணர்ந்து அவற்றுள் என்னால் சங்கமிக்க இயல்வதற்கும், நளவெண்பாவையும் கலிங்கத்துப் பரணியையும் கம்ப ராமாயணத்தையும் வாசித்து வாசித்து இன்புற்றுக் களிப்பதற்கும் பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநல்வாடையை எளிய தமிழில் புதுக்கவிதை பாணியில் எழுதும் துணிவைப் பெற்றமைக்கும் முக்கியக் காரணம் இலக்கியம் சார்ந்த கவியரசரின் இனிய பாடல்களே என்றால் அது கிஞ்சித்தும் மிகையில்லை.

    நன்றி கீதமஞ்சரி
    Last edited by gkrishna; 2nd September 2014 at 03:27 PM.
    gkrishna

  14. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •