Page 177 of 401 FirstFirst ... 77127167175176177178179187227277 ... LastLast
Results 1,761 to 1,770 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #1761
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    அடுத்த ரவுண்டில் பானுபிரியா சத்யராஜுடன் 'ஜோர்' படத்தில் நடித்தார் கிட்டத்தட்ட ஜோடி போலவே.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1762
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    கார்த்திக் சார்
    நீங்கள் சொல்வது போல் இந்த கட்டுரையில் அதை தான் கட்டுரை யாளரும் குறிப்பிட்டு உள்ளார்
    தனி திறமை எதுவும் இல்லாதவர்கள் தமிழ் திரை உலகில் நீண்ட நாள் காலம் கழிக்க முடியாது
    gkrishna

  4. #1763
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு சார்
    நீங்கள் பதிவு இட்ட சர்வாதிகாரி பாடல் சில நினைவு அலைகளை மீட்டி விட்டது . 1977 நெருக்கடி நிலை கால கட்டத்தில் சென்சார் என்று சொல்லப்படும் தணிக்கை துறை இந்திய அரசுக்கு எதிராக எழுந்த கிளர்ச்சிகளை பல்வேறு வித நடவடிக்கைகளின் மூலமாக ஒடுக்கி வந்தது . அதில் ஒன்று பத்திரிகை தணிக்கை .அதில் பெரிதும் பாதிக்கப்பட்டது ஆங்கிலத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாள் இதழும் தமிழ் இல் துக்ளக் வார சஞ்சிகையும் தான் . அப்போது வழக்கமாக ஒரு மாதத்திற்கு துக்ளக் இரண்டு முறை வரும் என்று நினைவு அதாவது 15 தினங்களுக்கு ஒரு முறை வெளி வரும் (fortnight). அதில் ஒரு இதழில் எல்லா பக்கங்களும் தணிக்கை செய்யப்பட்டு இரண்டு பக்கங்கள் தவிர மீதி எல்லாம் வெறும் வெள்ளை பேப்பர் ஆக வெளி வந்தது. அந்த இரண்டு பக்கங்களிலும் இந்த சர்வாதிகாரி திரை படத்தின் விமர்சனம் (அதாவது திரை படம் வெளியாகி 25 ஆண்டுகள் கழித்து) வெளியிட்டு இருந்தது. தணிக்கை துறை அதை ஒன்றும் செய்ய முடியவில்லை
    சோவின் சாதுர்யத்தை எல்லோரும் வியந்து பாராட்டி இருந்தனர்
    gkrishna

  5. Thanks chinnakkannan thanked for this post
  6. #1764
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    தமிழ்த் திரைப்பட வரலாறு - அரிய தகவல்கள்!

    தமிழ்த் திரைப்பட வரலாறு குறித்து எண்ணற்றோர் நூல்களை எழுதி உள்ளனர். அவற்றுள் குறிப்பிடத்தக்கது, ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள் எழுதிய தமிழ்த் திரைப்பட வரலாறு என்ற நூல்தான். தமிழ் சினிமா குறித்த ஒட்டுமொத்தத் தகவல் திரட்டாகத் திகழ்கிறது. இந்த நூலை வெளியிடுவதற்கு, தமிழக அரசு ஐந்து இலட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தது.

    அறந்தை நாராயணன் அவர்கள் எழுதிய சினிமா வரலாறு என்ற புத்தகத்தை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டு உள்ளது.

    ராண்டார்கை அவர்கள், இந்து ஆங்கில நாளிதழில் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். அவற்றைத் தொகுத்து பல நூல்களையும் வெளியிட்டு உள்ளார்.

    பிரபல வரலாற்று ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன், பல நூல்களை எழுதி உள்ளார்.

    தினத்தந்தி நாளிதழ் வெளியிட்ட வரலாற்றுச் சுவடுகள் தொடரில், சண்முகநாதன் அவர்கள் தமிழ்த் திரைப்பட வரலாறு குறித்து, பேசும்படம் இதழ் வந்த காலத்தில் இருந்து நிறையச் செய்திகளை எழுதினார். பேசும்படம் இதழில் பணி ஆற்றிய ஜெ.வி. என்ற புகைப்படக் கலைஞர், அந்த இதழில் வெளிவந்த படங்கள் அனைத்தையும் தொகுத்துத் தம்மிடம் வைத்து உள்ளார்.

    சினிமா எக்ஸ்பிரஸ் ராமமூர்த்தி அனுபவம் வாய்ந்தவர். தமிழ் சினிமா குறித்து, பல நூல்களை எழுதி உள்ளார். தற்போது, ஜெயா தொலைக்காட்சியில், தேன் கிண்ணம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டு இருக்கின்றார்.

    சிவன் என்பவர், சினிமா வரலாறு என்று ஒரு நூலை எழுதினார். கற்பகம் புத்தகாலயம், கவிதா பதிப்பகம் வெளியீடுகளாக வெளியிட்டு இருக்கின்றது.

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள், நான் ஏன் பிறந்தேன்? என்ற தலைப்பில் தமது வாழ்க்கை வரலாறை எழுதினார். அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி அவர்கள், எம்.ஜி.ஆர். முதல்வரானபோது, ராணி வார இதழில், என் தம்பி எம்.ஜி.ஆர். என்ற தொடரை எழுதினார்.

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் வாழ்க்கை வரலாறை, பேராசிரியர் நாராயணசாமி எழுதி, ஒரு புத்தகமாக வெளிவந்து உள்ளது. தாய் வார இதழில், சிவாஜிகணேசனைப் பற்றி, பேராசிரியர் ராமு என்பவர் ஒரு தொடர் எழுதினார்.

    சந்தமாமா பப்ளிகேசன்ஸ் சார்பில், பொம்மை என்ற சினிமா இதழ் நீண்ட காலம் வெளிவந்தது. அதில் பணிபுரிந்த வீரபத்திரன் என்பவர் பல நூல்களை எழுதி உள்ளார். சிவாஜியின் நெருங்கிய நண்பர். அதே இதழில் பணிபுரிந்த வேம்பட்டு கிருஷ்ணன், தமிழ் சினிமா குறித்து நிறைய எழுதி உள்ளார். சினிமா எக்ஸ்பிரஸ் இதழில், தமிழகத்தில் உள்ள திரை அரங்குகள் குறித்த தகவல்களைத் தொகுத்து ஒருவர் எழுதினார்.

    எம்.ஜி.ஆரும், சிவாஜியும் இரு துருவங்களாகத் தமிழ்த் திரையில் கோலோச்சிக் கொண்டு இருந்த காலத்தில், எம்.ஜி.ஆருக்காக திரை உலகம் என்ற இதழை துரைராஜ் என்பவரும், மதி ஒளி என்ற ஏட்டை சண்முகம் என்பவரும் நடத்தி வந்தனர்.

    ஜூனியர் விகடன் செய்தியாளர் திருவாரூர் குணா, சிவாஜி முதல் சிவாஜி வரை என்ற தொடரை, ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படம் வெளியாகும்போது எழுதினார்.

    ஏ.வி.எம். மக்கள் தொடர்பாளர், பெரு. துளசி பழனிவேல், சினிமா கதை விவாதங்களில் கலந்து கொள்பவர். தமிழ் சினிமா குறித்து, பல நூல்களை எழுதி உள்ளார்.

    நடிகர் சோ அவர்கள், தமது திரைப்பட அனுபவங்களை, துக்ளக் வார இதழில் எழுதி உள்ளார்.

    இயக்குநர் சித்ரா இலட்சுமணன், சினிமா வரலாறு குறித்து ஒரு நூலை எழுதி உள்ளார். தமிழ்த் திரைப்பட இசை அமைப்பாளர்களைப் பற்றிய தகவல்கள், படங்களைத் தொகுத்து, வாமனன் என்பவர் இரண்டு தொகுதிகளாக ஒரு நூலை எழுதி உள்ளார்.

    மக்கள் தொடர்பாளர் சுரா என்பவர், மலையாளத்தில் இருந்து வைக்கம் பசீர் அவர்களுடைய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதி உள்ளார். உலகப் புகழ் பெற்ற ஓவியர் வான்கா அவர்களைப் பற்றி, தமிழில் முதலில் எழுதியவர் அவரே. தமிழ்த் திரைப்படங்கள் குறித்து நிறைய எழுதி உள்ளார்.

    இயக்குநர் மகேந்திரன், சினிமாவும், நானும் என்று புத்தகம் எழுதி உள்ளார். விடுதலைப்புலிகளின் அழைப்பின்பேரில், தமிழ் ஈழத்துக்குச் சென்று திரைப்படப் பயிற்சி அளித்தபோது, நடிப்பு என்பது..., திரைக்கதை என்பது... என இரண்டு நூல்களை எழுதி உள்ளார். எம்.ஜி.ஆரைப் பற்றியும் ஒரு நூல் எழுதி உள்ளார்.

    வாலி 1000 என்ற தலைப்பில், அவரது ஆயிரம் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டு உள்ளனர். ஏ.வி.எம். அவர்களைப் பற்றி, இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், எழுத்தாளர் ராணி மைந்தன் உள்ளிட்ட பலர் எழுதி உள்ளனர். சக்திவேல் என்ற செய்தியாளர் எழுதிய பல நூல்களை, நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது.

    உலக சினிமா என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன் ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.

    திரைப்பட புகைப்படக் கலைஞர் ஸ்டில்ஸ் ரவி, தாம் எடுத்த படங்கள் குறித்து, ஆனந்த விகடனில், ஒரு தொடர் எழுதினார்.

    குமுதம் வார இதழில் பணிபுரிந்து வந்த மேஜர் தாசன், ஒரு புத்தகம் எழுதி உள்ளார். நிறையப் படங்கள் வைத்து உள்ளார். ஜெ. பிஸ்மி என்ற எழுத்தாளர், சினிமாவில் சேருவது எப்படி? என்று, சினிமா எக்ஸ்பிரஸ் வார இதழில் ஒரு தொடர் எழுதினார்.

    குமுதம், ராணி போன்ற பல இதழ்களில் பணி ஆற்றிய சபீதா ஜோசப், ராணி வார இதழில் விஜயகாந்த், சிவகுமார் வாழ்க்கை வரலாறு தொடர்களை எழுதினார். மறைந்த எம்.பி.மணி என்பவர், தினமலர் வார இதழில் நிறைய தொடர்கள் எழுதினார்.

    இயக்குநர்கள் கே. சங்கர் முதல் ஷங்கர் வரை என்ற ஒரு நூலை, தமிழ்மகன் என்பவர் ஒரு தொடராக எழுதி உள்ளார். தினமணி, குமுதம், தினமணி கதிர், வண்ணத்திரை, குங்குமம் போன்ற பல ஏடுகளில் நிறைய கட்டுரைகள் எழுதி உள்ளார்.

    சிவகங்கை குமரன்தாஸ், தமிழ்த் திரையின் நிழல் அரசியலும், நிஜ அரசியலும் என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்.

    தினமலர் வார இதழில், எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் இராமகிருஷ்ணன், இதயக்கனி விஜயன் ஆகியோர் எழுதினர். டி.எஸ்.ஆர். சுபாஷ் (மறைந்த பத்திரிகையாளர் ரவீந்திரதாஸ் மகன்) பாக்யா வார இதழில், பல ஆண்டுகளாக எழுதி வருகிறார்.

    பல பதிப்பகங்கள், சினிமா குறித்த புத்தகங்களை வெளியிட்டு உள்ளனர்.

    வாழ்க்கை வரலாறு நூல்கள் சில:

    ராஜபாட்டை - நடிகர் சிவகுமார் (அல்லயன்ஸ்)

    பால் நிலா பாதை - இளையராஜா (அரும்பு மற்றும் குமுதம் வெளியீடு)

    இவன்தான் பாலா - பாலா (விகடன் பிரசுரம்)

    டூரிங் டாக்கீஸ் - நடிகர் சேரன் (விகடன் பிரசுரம்)

    சுட்டாச்சு சுட்டாச்சு - சுதாங்கன் (தினமணி கதிர் தொடர்)

    எம். ஆர். ராதா வாழ்வியல் சிந்தனைகள் - விந்தன் (தோழமை பதிப்பகம்)

    தமிழ் சினிமா வரலாறு - இராஜேந்திரன் (செம்புலம் வெளியீடு)

    கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களைப் பற்றி, தமிழ் அறிஞர்கள் எழுதிய கருத்துகளை எல்லாம் தொகுத்து, கலைவாணர் என்ற தலைப்பிலும், ஹாலிவுட்டின் சிறந்த படங்கள் குறித்த விமர்சனங்களைத் தொகுத்து, குருதியில் படிந்த மானுடம் என்ற புத்தகத்தையும், தோழமை வெளியிட்டு உள்ளது.

    தேவிகாபுரத்தில் நண்ப்ர் மூர்த்தி என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக 12 மொழிகளில் திரைப்படங்கள் செய்தித்தாளில் வெளியான தேதி முதல் அப்படம் கடைசியாக ஓடிய நாள் முதல் செய்தித்தாள் துணுக்குகளை சேகரிதது வைத்துள்ளார். இதுவரை சுமார் 40000 செய்தித்தாள் துணுக்குகளை சேகரித்து வைத்துள்ளார். திரைத்துறை பற்றிய ஒருகலைக்களஞசியம ாக விளங்குகிறார். இவர் இவ்வாறு சேகரித்து வைத்து இருப்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரியும்.

    திருநெல்வேலியைக ் களமாகக் கொண்டு/ ஒரு ரசிகனின் பார்வையில் திரைப்பட அனுபவங்களைச் சுவையாகக் கூறி உள்ளார் கவிஞர் கலாப்ரியா.
    தமிழ் திரைப்பட வரலாறு குறித்து அறிய விழைவோர் தவறாமல் படிக்க வேண்டிய நூல்.

    Thanks to Keetru.com
    gkrishna

  7. #1765
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    42 ஆண்டுகளுக்கு முன் வந்த இந்தி தழுவல் படம் . ''அவள் ''

    வெண்ணிற ஆடை நிர்மலா - சசிகுமார் - ஸ்ரீகாந்த் - ஏ .வி .எம் . ராஜன் ஆகியோரின் நடிப்பில் வந்த
    சிறந்த படம் . நிர்மலாவின் பரிதாப முகம் - நடிப்பில் கொடி கட்டினார் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .1972ல் வெளிவந்த சிறந்த படங்களில் ''அவள் '' மறக்க முடியாத படம் .

  8. Thanks chinnakkannan, gkrishna thanked for this post
  9. #1766
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்..புத்தகங்கள் பற்றிய தகவல்களுக்கு நன்றி..

    என் நினைவுக்கு வருபவை..

    எனது நாடக வாழ்க்கை - ஒளவை டி.கே ஷண்முகம் - கல்லூரிப் பருவத்தில் படித்ததாக நினைவு
    சிவகுமார் டயரி - புகைப்படங்களுடன் வழவழப்பான காகிதத்தில் - கொஞ்சம் ராஜபாட்டையின் ரிபீட்டாக வரும்

    நாகேஷ் கதை - நாகேஷிடம் கேட்டு சந்திர மெள்லி எழுதியது நன்றாக இருக்கும்
    எனது கலைப்பயணம் - வி.கே ராமசாமி - நாடக அனுபவங்கள் மட்டும் - நன்றாக இருக்கும்
    ஆனால் கல்கியில் சினிமா அனுபவங்களையும் வைத்து எழுதியிருந்தார்.. அழகான கதை திரைக்கதை எழுதுபவர் என்று அதைப் படித்தாலே விளங்கும்..
    எம்.என். நம்பியாரும் சுயசரிதை எழுதியதாய் நினைவு..கல்கியில்..

    சோவின் அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் -அ வர் சந்தித்தவர்களைப் பற்றியது துக்ளக்கில் வந்ததாம்.. பட் புத்தகமாக நான் படித்திருக்கிறேன்.. ஒ.சா.மா.அசா என கு்முதத்தில் சமீபத்தில் நிறைவு பெற்ற்து..

    அவன் - ரா.கி.ர தனது சினிமா அனுபவத்தையும் ஒரு அலசு அலசியிருப்பார்..

    நான் பேச நினைப்பதெல்லாம் - ந.தி - இரண்டு பாகம் தான் படித்திருக்கிறேன்..மூன்றாவதுவந்ததா தெரியாது..

    உலகம் சுற்றும் வாலிபன் அனுபவங்கள் - ஒருவர் எழுதியிருக்கிறார் அவர் பெயர் மறந்து விட்டது..அறந்தை நாராயணனா..

    கோடம்பாக்கத்தில் அறுபது ஆண்டுகள் - ஆரூர் தாஸ்

    சினிமா வாழ்க்கையோ என்னவோ தலைப்பு நினைவில்லை - நாகி ரெட்டியார்..எழுதியது..

    ஜெமினியின் ஆட்டோ பயாக்ரஃபியை டிவிடியாக டாக்டர் கமலா செல்வராஜ் வெளியிட்டிருக்கிறார்.. நன்றாக இருக்கும்..அதை ப் பார்த்த பிறகு அதுவரை மனதில் சாதாரணமாக நினைத்திருந்த ஜெமினி விஸ்வரூபம் எடுத்தது நிஜம்..

  10. #1767
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //பிறகு சுகன்யா உடன் ஐக்கியமாகி உடன்பிறப்பு,// கிருஷ்ணா ஜி..சிரிக்க வைக்கிறீர்களே.. ஸ்வர்ணமுகி உஷாராஜேந்தரின் தங்கை என்ற தகவலுக்கு நன்றி..

    கார்த்திக் சார்.. அந்தக் காலத்தில் சில பேருக்கெல்லாம் பயங்கர லக்.. அதில் வருபவர்கள் மைக் மோகன், ராமராஜன்,ஆனந்தராஜ்..ம்ம்..இ.கா.ப ஹீரோஸ் பத்தி நான் பேசமாட்டேன் ! விஜயன் வயதான பிறகுகொஞ்சம் ஓ.கே படங்கள் - மீன்ஸ் குணசித்ர வேடங்களுக்கு ஓ.கே..உதா..ஆகஸ்ட் ஒன் அதில் செட்டியார் வேடம், ரன்னில் வில்லன் உதவியாள் என..

  11. #1768
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தங்கை சாந்திப்ரியா என்கிற நிஷாந்தியும் // அஞ்சலியில் இரவு நிலவில் வருபவர் தானே அவர்..

    சுரேஷ்,சுதாகர் காலகட்டத்திய கதானாயகிகளில் தன்னை இம்ப்ரூவ் செய்து கொண்டு, சற்றே வயதானதும் தனக்கான களத்தைத் தேர்ந்தெடுத்து (டிவி) இன்றும் நன்கு நடித்துவரும் ராதிகா ஒரு இனிய ஆச்சர்யம்.. கிழக்கே போகும் ரயில் முகமும் நடிப்பும் பார்த்துவிட்டு இப்போதைய ஈவன் பசும்பொன்னில் அம்மாவாக ஆச்சர்யப் படுத்தினார்..

  12. #1769
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    நன்றி வினோத் சார்

    உங்கள் ஆவணங்கள் அனைத்தும் அருமை.
    ராதா ,தெய்வ குழந்தைகள்,அவள்,பிள்ளையோ பிள்ளை எல்லாமே தங்க ஆவணங்கள்
    gkrishna

  13. #1770
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    சி கே சார்
    உண்மையில் ராதிகா ஆச்சர்யம் தான். 1979-80 கால கட்டத்தில் திருநெல்வேலியில் ஒரு விழாவில் சந்தித்த நினைவு . கொஞ்சம் கருப்பாக குண்டாக shape எதுவும் இல்லாமல் ஆனால் சிரித்த முகத்துடன் அப்போதைய ஜீன்ஸ் பெல் பாட்டம் pant மற்றும் 2 அல்லது 3 இன்ச் ஹை ஹீல்ஸ் பக்கத்தில் முகத்தில் எந்த வித முக பாவமும் இல்லாமல் மொக்கை சுதாகர் (பார்த்த உடன் எரிச்சல் இன்றும் அதன் காரணம் புரியவில்லை) .

    gkrishna

  14. Likes chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •