Page 178 of 401 FirstFirst ... 78128168176177178179180188228278 ... LastLast
Results 1,771 to 1,780 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #1771
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    1972 ல் வெளி வந்த தமிழ் பட விளம்பர பதிவுகளுக்கு பாராட்டு தெரிவித்த
    இனிய நண்பர்கள் திரு வாசு . திரு சின்ன கண்ணன் , திரு கார்த்திக் , திரு கிருஷ்ணா அவர்களுக்குஎன் இனிய நன்றி .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1772
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    பாம்பே டாக்கி[Bombay Talkie][1970][இந்தியா]



    பாம்பே டாக்கி என்னும் படம் 1970 ஆம் ஆண்டு வெளியானது,இதன் தயாரிப்பாளர்கள் மெர்சன்ட் ஐவரி நிறுவனத்தார். இவர்கள் தேசம், இனம், மொழி, கடந்து நல்ல சினிமா ,ஆவணப்படங்கள்செய்ய விழைபவர்கள், இது ஆங்கிலம் இந்தி பேசும் மல்டிலிங்குய்ஸ்ட் திரைப்படம், இது அமெரிக்க இயக்குனர் ஜேம்ஸ் ஐவரி இயக்கிய படம், இது இந்தி்ய சினிமாவின் பெருமைக்குரிய ஒளிப்பதிவாளர் சுப்ரதா மித்ராவின் வண்ணப்பட ஒளிப்பதிவை கொண்டிருக்கும் படம், 1970 களின் பாலிவுட் திரைப்படங்கள் கொண்டிருந்த கதை அமைப்பு,க்ளிஷே,பாடல்கள்,ரொமான்ஸ்,க்ளாமர் இத்யாதி மற்றும் ஹாலிவுட் கொண்டிருந்த உயர்ந்த ,அதி ரசனையான போஷான,லக்சுரியான தொழில்நுட்பங்களும் தன்னுள் ஒருங்கே கொண்டிருக்கும் படம். படத்தின் அற்புதமான இசை சங்கர் ஜெய்கிஷன்.

    படத்தின் கதை மிகவும் எளிமையானது, பாலிவுட்டின் உச்ச மசாலா நடிகன் விக்ரம் [சஷிகபூர்], அழகிய மனைவி [அப்ர்ணா சென்] கணவனின் அன்புக்கும், கூடலுக்கு ஏங்குபவர், ஆனால் கணவனோ மாதம் 30 நாட்களுமே மசாலா திரைப்படங்களுக்கு கால்ஷீட் தந்து விட்டு,ஓய்வு ஒழிச்சலே இன்றி நடித்து வருகிறான், இது தவிர அட்வான்ஸ் வாங்கிப் போட்டுவிட்டு, கான்ட்ராக்ட் சைன் செய்து விட்டு, நிறைய கால்ஷீட் குளறுபடிகளும் செய்து வருகிறான், இதனால் விக்ரமின் மனைவியை வீட்டுக்கே வந்து மிரட்டும் ஒரு சினிமா ப்ரொட்யூசர் [உத்பல் தத்]அவளின் அழகில் மயங்கி அவளை அடையத் துடிக்கிறார், அதற்கு திட்டம் தீட்டுகிறார்.

    பாலிவுட் சினிமாவைப் பற்றி உள்ளது உள்ளபடி ஆராய வரும் இங்கிலாந்து பெண் எழுத்தாளர் லூசியா [ஜெனிஃபர் கெண்டெல்] மீது சஷிகபூருக்கு, கண்டதும் காதல் வருகிறது, லூசியாவுக்கும் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதெல்லாம் மீறி காதல் வருகிறது,நேரம் ,தருணம் கிடைக்கும் போது கூடிக் குலவுகின்றனர் , சக இயக்குனர் ஹரியும் [ஸியா மொஹீதின்] லூசியா மீது ஒருதலைக்காதல் கொள்கிறார், லூசியா அவரிடம் உண்மையான நட்பை மட்டும் பேணினாலும்,ஹரி அதை காதலாக கனிய வைக்க தீவிரமாக முய்ற்சிக்கிறார் , தகுதியில்லாதவரிடம் செலுத்தும் காதல் பற்றி படம் விரிவாக பேசுகிறது, பசித்தவனுக்கு உணவு இல்லை, புசித்து வயிறு நிரம்பியவனுக்கே எல்லாம் கிடைக்கிறது, பல சமயங்களில் உணவும் காதலும் ஒன்று தான் , ஏங்குபவனுக்கு அது கிடைக்காது, இறுதியாக இவர்களின் விபரீத உறவுகள் என்னவாகிறது? என்பதை படம் மிக அழகாக விளக்குகிறது.அப்போதைய பாலிவுட் சினிமாக்கள் கொண்டிருந்த ஒட்டுமொத்த க்ளிஷேக்களின் ஆவண ஆக்கம் தான் இப்படத்தின் கதை.

    படத்தில் வரும் டைப் ரைட்டர் மேலே கவர்ச்சிக் கன்னி ஹெலன் மற்றும் குழுவினர் ஆடும் பாடலுக்காக கலை இயக்குனர் பெரிய டைப் ரைட்டரையே செட்டாக போட்டிருந்தார். அப்பாடலை இங்கே பார்க்கலாம்

    http://www.youtube.com/embed/s6FNC6nT584

    காலம் சென்ற ஜெனிஃபர் கெண்டெல்-இவர் சஷிகபூரின் மனைவியுமாவார். அவரைவிட 6வயது மூத்தவர், இதே போலவே சத்யஜித் ரேவின் மனைவி பிஜோயா தாஸும் ரேவை விட 3 வயது மூத்தவரே, இதன் மூலம் சான்றோர்கள் வயதைப் பார்ப்பதில்லை, உண்மையான காதலை,அறிவை, புத்திசாலித்தனத்தைத் தான் மனைவியாக அமையப்போகும் பெண்ணிடம் எதிபார்க்கின்றனர் என்பது விளங்குகிறது

    இதன் பெயர் போடும் காட்சியைப் பாருங்கள் மும்பையின் நிஜமான நகர்ப்புறங்களை சிறிதும் பாசாங்கே இன்றி படம் பிடித்து,அதனுள்ளே நிழல் போன்ற சினிமா படத்தின் ஆயில் பெயிண்ட் கட்டவுட்டுகளை தொழிலாளர்கள் நகரில் நிறுவுவதற்கு சுமந்து செல்வதை அப்படியே படமாக்கியுள்ளார் , இந்த தீம் சத்யஜித் ரேவின் அன்க்ரெடிட் கம்போசிஷன் ஆக்கமாகும்,இதை டார்ஜிலிங் லிமிட்டட் என்னும் படத்திலும் உபயோகித்திருப்பார்கள், அவசியம் இந்த டைட்டில் ஸ்க்ரோலை பாருங்கள். பழைய படங்களில் எத்தனையோ புதுமைகள் புகுத்தப்பட்டு அவை குடத்தினுள் வைக்கப்பட்ட விளக்கு போல இருக்கின்றன, அவற்றை ஒரு சினிமா ஆர்வலர் தேடிப் படித்து வியந்து அதை அழகாக ட்ரியூட் செய்ய வேண்டும், அதை விடுத்து மலினமாக அதை காப்பி அடிக்கக் கூடாது,
    பாம்பே டாக்கி படத்தில் சத்யஜித் ரேவின் டைட்டில் தீம் கம்போசிஷன். ஓவியங்கள் திலக்.

    www.youtube.com/embed/3wMuYl_-ig8

    திரைப்பட மாணவர்கள் ,ஒரு ஸடைலிஷான மேக்கிங்கிற்காக பார்க்க வேண்டிய முக்கியமான படம் இது, 2013ஆம் ஆண்டு இதே பெயரில் ஒரு எஸ் மட்டும் சேர்த்து பாம்பே டாக்கீஸ் என்று நான்கு இந்திய உச்ச இயக்குனர்கள் சேர்ந்து இயக்கிய கலைப்படமும் வெளியானது. நல்ல முயற்சி தான் என்றாலும், அது 1970ஆம் ஆண்டு வெளியான பாம்பே டாக்கி என்னும் படத்தை மறக்கடிக்கும் படி, கூகுளில் தேடினால் 2013 ஆம் ஆண்டு வெளியான படத்தைப் பற்றி தான் செய்திகளை அதிகம் தருகிறது. இதனால் தான் க்ளாசிக்குகளின் பெயர்களை புதிய படங்களில் பயன்படுத்தக் கூடாது

    Thanks to Geethapriyan
    Last edited by gkrishna; 3rd September 2014 at 04:33 PM.
    gkrishna

  4. Likes Russellmai liked this post
  5. #1773
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பில் உருவான இன்னொரு திரைப்படம் "தீ" , எல்லோருக்கும் பிடித்த ஈஸ்வரி பாடிய இந்த பாடல் உங்களுக்கு



    இன்னொரு பாடல் வாணி ஜெயராம் பாடியது "இமைகள் " படத்தில் ... ஸ்ரீலங்கா சின்ன ராணி ....

    http://www.inbaminge.com/t/i/Imaigal/

  6. #1774
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by sss View Post
    இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பில் உருவான இன்னொரு திரைப்படம் "தீ" , எல்லோருக்கும் பிடித்த ஈஸ்வரி பாடிய இந்த பாடல் உங்களுக்கு

    இன்னொரு பாடல் வாணி ஜெயராம் பாடியது "இமைகள் " படத்தில் ... ஸ்ரீலங்கா சின்ன ராணி ....
    வணக்கம் sss சார்

    இந்தோ இலங்கை கூட்டு தயாரிப்பான தீவார் ஹிந்தி படத்தின் தழுவல் தீ படத்தை நினைவு ஊட்டியதற்கு நன்றி

    இமைகள் என்றாலே 'மாட புறாவோ இல்லை manjal நிலாவோ' பாடல் மட்டுமே நினைவிற்கு வரும் . ஆனால் வாணியின் அபூர்வ பாடல் . எல்லோரும் அறியாத பாடல் ஒன்றை பகிர்ந்து உள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி
    gkrishna

  7. #1775
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு சார்

    சர்வதிகாரி - படத்தில் இடம் பெற்ற பாடலின் முழு ஆய்வு பதிவு மிகவும் அருமை .61 ஆண்டுகள் முன்வெளியான ஒரு படத்தின் பாடலை இந்த அளவிற்கு ஆய்வு செய்து பதிவிட உங்கள் ஒருவரால்தான்முடியும் என்பது என் கருத்து . வாழ்த்துக்கள் .நீண்ட இடைவெளிக்கு பின் சர்வதிகாரி படம் பார்க்கதூண்டியுள்ளது .

  8. #1776
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    டியர் எஸ்வி சார்

    சர்வாதிகாரி பற்றிய ஆவணங்கள் இருந்தால் பதிவிடுமாறு அன்புடன் தோழமையுடன் தாழ்மையுடன் பாசத்துடன் கேட்டு கொள்கிறேன்
    gkrishna

  9. #1777
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    அந்தக் கால திரைப்பட விளம்பரங்களைக் காட்டி தலைக்கு மேல் ஜாங்கிரி சுற்ற வைத்து ஃப்ளாஷ் பேக்குக்கு கொண்டு போகும் எஸ்வீஜிக்கு நன்றி.

    திரைப்படத் துறை சம்பந்தமான புத்தகங்கள் பற்றிய ஒரு சுருக்கமான விரிவான அலசலை ஆரம்பித்த கிருஷ்ணாஜிக்கும் நன்றி.

    இதை அலசப் போகும் வினோத் ஜி, கார்த்திக் ஜி, வாசு ஜி, கோபால் ஜி, ராகவ் ஜி, சிக்கா ஜீ எல்லோருக்கும் நன்றி.

    அதில் கன்னட, மலையாள, தெலுங்கு, ஹிந்தி வாசனை தூவப்போகும் ராஜேஷுக்கும் நன்றி

  10. Thanks chinnakkannan, Richardsof thanked for this post
  11. #1778
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ஆனால் உற்சாக பாலாவின் அந்த தேன் மதுரக் குழைவுக் குரலுக்கு முத்து தூள் கிளப்பியிருக்க வேண்டாமோ! சரியான அசமந்தம். இப்பத்தான் 'துலாபாரம்' படத்தில் 'சிரிப்போ இல்லை நடிப்போ'வில் மனிதர் பிச்சி உதறியிருந்ததை வானாளாவ புகழ்ந்து எழுதியிருந்தேன். இங்கு மனிதர் முகத்தில் கரி பூசி விட்டாரே!
    உற்சாக அருவியோ மெல்ல ஓடும் நதியோ... பாலுவின் குரல் ஜாலம் புரியத்தான் செய்யும். நம்ம நவரசத் திலகம்தான் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்காரு..

    அதே படத்தில் இன்னொரு பாட்டு கேளுங்க..

    வாழ்க்கை என்றொரு பாடல்.. அதில் ஆளுக்கு ஆள் ஒரு ராகம்


  12. Likes Russellmai liked this post
  13. #1779
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    சில சினிமா சஞ்சிகைகள்
    gkrishna

  14. Likes Russellmai liked this post
  15. #1780
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    கங்கா யமுனா காவேரி படம் பற்றி சில காலத்துக்கு முன்னாலே ஒரு பேச்சு இங்கே அடிபட்டது இல்லையோ ?

    இப்போ அந்தப் படத்தில் இருந்து எஸ்.பி.பி. வாணி பாடிய "கல்யாணத்துக்கு வாங்க.. குடும்பத்தோட வாங்க"
    அப்படின்னு ஒரு பாட்டு சிக்கிச்சு. நண்பர்கள் இதையும் அலசலுக்கு எடுத்துக்குங்க...


  16. Likes Russellmai, sss liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •