Page 184 of 401 FirstFirst ... 84134174182183184185186194234284 ... LastLast
Results 1,831 to 1,840 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #1831
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    "ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்" இலங்கை வானொலியில் கலக்கிய பாடல், உறவாடும் நெஞ்சம் படத்திற்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடியது. இளையராஜா தன் ஆரம்பகாலத்தில் அவசரமாக படங்களை ஒப்புக்கொண்டு சூடு போட்டுக் கொண்ட அனுபவம் இந்தப் படத்தையும் சேர்த்து ஒரு பட்டியல் இருக்கு. ராஜாவின் அழகான மெட்டும், இசையும் இப்பாடலை இன்னொரு தனித்துவமான கீதமாகக் காட்டினாலும் படம் பிரபலமில்லாத வகையில் பாடலின் உழைப்பும் வீணாகி விட்டது. ஆனால் வருஷங்கள் பல கடந்தும் இன்றும் கேட்க இதமான ராகம் இது

    இதே படத்தில் இன்னும் ஓர் ஜாலியான பழைய பாடல். நம் மனதை குஜாலாக குதுகலப்படுத்தும் இதுபோல அழகான வரிகள் //பொல்லாத பருவம் துடிக்கின்ற வயசு, கொல்லாமல் என்னை அணைக்கின்ற புதுசு, எல்லாமே புதுசு இனிக்கின்ற மனசு, வாய்யா..அய்யோஓஓ.. பக்கத்துல வாய்யா..ம்ஹாஆஆ// மறுபடியும் இந்த மாதிரி பாடல்கள் எப்போது கேட்க போகிறோம் என்ற ஆவல் அதிகரிக்கிறது. எல்லோரும் பாடலை கேட்டு ஜாலியாக, சந்தோசமா இருங்க.

    பாலாவின் துள்ளல் குரலும் அதிலும் அந்த வாம்மா பக்கத்திலே வாம்மா என்று சொல்லும் போது ஒரு குழைவு வோவ் மார்வலஸ்

    படம்: உறவாடும் நெஞ்சம்
    இயக்குனர் தேவராஜ் மோகன்
    தயாரிப்பாளர் வி. கந்தசாமி
    ஸ்ரீ விஷ்ணுபிரியா கிரியேஷன்ஸ்
    நடிப்பு சிவகுமார், சந்திரகலா
    இசையமைப்பு இளையராஜா
    வெளியீடு நவம்பர் 27, 1976

    நெனச்செதெல்லாம் நடக்க போற நேரத்திலே வாடி
    என் காதல் ராணி நான் தானே தேடி
    நெனச்செதெல்லாம் நடக்க போற நேரத்திலே வாடி
    என் காதல் ராணி நான் தானே தேடி

    இது தானா மோகம் இது ஒரு நாளில் தீரும்
    என் காதல் ராஜா நான் தானே ரோஜா

    நெனச்செதெல்லாம் நடக்க போற நேரத்திலே வாய்யா
    என் காதல் ராஜா நான் தானே ரோஜா

    செந்தாழம் பூக்கள் சிரிக்கின்ற நேரம்
    செவ்வாயில் மீன்கள் வருகின்ற நேரம்
    தனியாக வந்தால் கதை நூறு சொல்வேன்
    வாம்மா
    ம்
    பக்கத்துல வாம்மா
    ம்ஹும்

    என் காதல் ராணி நான் தானே தேடி
    நெனச்செதெல்லாம் நடக்க போற நேரத்திலே வாடி
    என் காதல் ராணி நான் தானே தேடி

    இரவோடு நிலவு கதை பேசும் போது
    உறவாடும் நெஞ்சம் விளையாட வேண்டும்
    பொன்மேனி என்றும் பூவாட வேண்டும்

    வாய்யா
    ம்ஹாஆ
    பக்கத்துல வாய்யா
    ம்ஹஹஹஹா

    என் காதல் ராஜா நான் தானே ரோஜா
    நெனச்செதெல்லாம் நடக்க போற நேரத்திலே வாயா
    என் காதல் ராஜா நான் தானே ரோஜா

    பொல்லாத பருவம் துடிக்கின்ற வயசு

    சொல்லாமல் என்னை அணைக்கின்ற புதுசு

    எல்லாமே புதுசு இனிக்கின்ற மனசு

    வாய்யா

    அய்யோஓஓ

    பக்கத்துல வாய்யா

    ம்ஹாஆஆ

    என் காதல் ராஜா நான் தானே ரோஜா

    என் காதல் ராணி நான் தானே தேடி

    http://www.inbaminge.com/t/u/Uravadum%20Nenjam/

    இந்த பாடலுக்கு ஒளி காட்சி கிடைக்குமா ?

    gkrishna

  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1832
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மோகமுள் படத்தின் நாயகி அர்ச்சனா ஜோக்லேக்கர்.

    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes chinnakkannan liked this post
  6. #1833
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #1834
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்

    நீங்கள் குறிப்பிட வாணி என்ற நடிகை. இவர் ஷபானா என்ற பெயரில் பாலச்சந்தரின் 'ஒரு வீடு இரு வாசல்' படத்தில் நடித்திருந்தார் என்று நினைவு. பாலச்சந்தரின் 'ரயில் சிநேகிதம்' தொலைகாட்சி சீரியல்களிலும் பார்த்த நினைவு இருக்கிறது.

    நடிகர் திலகமே தெய்வம்

  8. Thanks gkrishna thanked for this post
    Likes gkrishna liked this post
  9. #1835
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    நடிகர் திலகமே தெய்வம்

  10. #1836
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அர்ச்சனா ஜோக்லேக்கர்.









    நடிகர் திலகமே தெய்வம்

  11. #1837
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சி.க. ஸ்பெஷல்

    நடிகர் திலகமே தெய்வம்

  12. Thanks chinnakkannan thanked for this post
  13. #1838
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    என் விருப்பம் (7)

    இந்தப்பாடல் படத்தில் இரண்டுமுறை இடம்பெறும். முதல்முறை படம் பார்க்கும் நம்மை ஏமாற்றுவதற்காக. இரண்டாம் முறை நம்மை மகிழ்விப்பதற்காக (இயக்குனர் சி.வி.ஆர். குரல்: 'ஏமாற்றுவதற்காக என்று ஏன் எடுத்துக்கொள்கிறீர்கள்?. கதாநாயகி ஒரு திரைப்பட நடிகை என்று அறிமுகப்படுத்துவதற்காக என்று எடுத்துக்கொள்ளுங்களேன்') . இருந்தாலும் இப்படியா?. எடுத்த எடுப்பிலேயே கதாநாயகியை திருமணம் ஆனவளாக, அதுவும் ஹீரோ அல்லாத வேறு ஒருவருடன் காட்டி கலங்கடிப்பது?. பாடிக்கொண்டே வருபவர் கால் சற்று இடறியதும் ஸாரி சொல்லும்போதே நாம் விழித்துக்கொள்கிறோம். பாடல் முடியும்போது காமிராவையும் பட யூனிட்டையும் காண்பித்து, டைரக்டர் 'கட்' சொன்னதும், நமக்கு புரிந்துவிடுகிறது ஓ. இவங்க சினிமா நடிகையா? இவ்வளவு நேரம் ஷூட்டிங்தான் நடந்ததா?. என்று நிம்மதி அடைகிறோம்.

    மீண்டும் அதே போன்றதொரு சிச்சுவேஷன். இப்போது கதாநாயகனுடன். ஆனால் போலியான நடிப்புக்காக அல்ல. நிஜமான காதலுடன் மனம் ஒன்றிப்போக மனம் பாடவேண்டும் என்று நாடுகிறது. நடிப்புக்காக தான் ஏற்கெனவே பாடிய அந்தப்பாடல் நினைவுக்கு வர மனம் நிறைந்த பூரிப்புடன் பாடுகிறாள்.

    அதே முன்னிசையுடன் பாடல் துவங்குகிறது. முதலில் சிதாரின் வருடல், அடுத்து வயலினைத்தொடர்ந்து புல்லாங்குழலின் சிறிய இடையீடு, மீண்டும் சிதாருடன் தொடர்ந்து வயலினில் உச்சத்தில் தூக்கி நிறுத்த, இசையரசியின் தேன்குரலில் பல்லவி ஆரம்பம்...

    ஆலயமாகும் மங்கை மனது - அதை
    அன்றாடம் கொண்டாடும்
    காலைப்பொழுதூ ஊ ஊ ஊ காலைப்பொழுது
    ஒரு ஆலயமாகும் மங்கை மனது

    காதலனுக்கு சமைத்துப்போட்டு அலுவலகம் செல்பவனை முகமலர்ச்சியோடு அனுப்பி வைக்கும்போது கிட்டத்தட்ட ஒரு மனைவி போலவே உரிமையெடுத்துச்செய்யும் அவள் உற்சாகம் என்ன அருமையாக நம்மையும் தொற்றிக்கொள்கிறது. வாழ்ந்தால் இப்படி ஒரு கணவனோடு வாழ வேண்டுமென்ற ஆசை அவளுக்கு. வாந்தால் இப்படியொரு மனைவியோடு வாழ வேண்டுமென்ற ஆவல் நமக்கு.

    சரணத்திலும் என்ன ஒரு நளினம்...

    மன்னன் இட்ட தாலி பொன்வேலி
    மானம் என்னும் வேலி தன் வேலி
    குலமகள் அவள் தோற்றம் குங்குமச்சிலையாக
    குலமகள் அவள் தோற்றம் குங்குமச்சிலையாக
    நாயகன் கைகளில் நாயகி ஆடிடும்

    ஒரு ஆலயமாகும் மங்கை மனது - அதை
    அன்றாடம் கொண்டாடும்
    காலைப்பொழுதூ ஊ ஊ ஊ காலைப்பொழுது
    நல் காலைப்பொழுது

    காலைப்பொழுது என்ற வரியை மூன்று முறை பாடும்போதும் மூன்று விதமான மாடுலேஷன்களுடன் பாடி அசத்தும் இசையரசி, அவரை அப்படி பாடவைத்த மெல்லிசை மன்னர்...

    வேலைமுடிந்து வீடு திரும்பிய காதலன், தன் ஜெர்க்கின்ஸ் உள்ளேயிருந்து எடுத்துக்கொடுக்கும் மல்லிகைப்பூவை வாங்கிக்கொண்டு போகும்போது நாயகியின் அந்த துள்ளல் நடையில்தான் என்னவொரு உற்சாகம். அதை ரசித்துக்கொண்டே சோபாவில் அமரும் காதலனிடம், தானே தயாரித்த வடைகளை தட்டில் வைத்து நீட்ட, தட்டை வாங்கிக்கொள்ளும் நாயகன் முதலில் ஒரு வடையை எடுத்து அவளுக்குக் கொடுக்க, தானேசெய்த வடையாயிருந்த போதிலும் அதை காதலன் கையிலிருந்து பெறும்போது பலமடங்கு உற்சாகமும் மலர்ச்சியுமாக வாங்கி சாப்பிடும்போது அவள் முகத்தில்தான் என்னவொரு காதல் ('பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய், நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய்') . அதுதானய்யா காதலின் சக்தி.

    கட்டில் தந்த பாட்டு பாராட்டு
    தொட்டில் தந்த பாட்டு தாலாட்டு

    என்ற வரிகளில்தான் அவள் முகத்தில் என்னவொரு வெட்கம்...

    தேவனின் சந்நிதி தேவியின் நிம்மதி

    ஒரு ஆலயமாகும் மங்கை மனது - அதை
    அன்றாடம் கொண்டாடும்
    காலைப்பொழுதூ ஊ ஊ ஊ காலைப்பொழுது
    நல் காலைப்பொழுது

    என்று முடிக்கும்போது, அதுவரை இருந்த உற்சாகமெல்லாம் இருவருக்கும் ஏக்கமாய் மாற, இன்னும் தங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்ற உண்மை உணர்த்த, தடுப்பின் அந்தப்பக்கம் படுக்கபோகும் அவளுக்கு நாயகன் போர்வையை எடுத்துத்தர, மேற்கொண்டு பல்லவியைப்பாடமுடியாமல் அவள் ஏக்கத்துடன் பார்க்க தன் இனிய இசையாலே பாடலை முடிக்கும் மெல்லிசை மன்னர்.

    சுமதி என் சுந்தரி திரைக்காவியத்தைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது என்று சொல்லுமளவுக்கு எல்லா வயதினரையும் வசப்படுத்தும் இப்படத்தில், இந்தப்பாடல் காட்சியில்தான் நடிகர்திலகமும், இன்றைய 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' வாக ஆகிப்போன அன்றைய எங்கள் கலைச்செல்வியும்தான் எவ்வளவு ஒன்றிப்போய் நடித்திருப்பார்கள்.

    மெல்லிசை மன்னரின் தனித்த இசையில் 1971-ம் ஆண்டு வந்த இந்தப்பாடல், 60-களின் எந்தவொரு பாடலுக்கும் குறைந்ததல்ல என்பதை முத்தாய்ப்பாக சொல்லி முடிக்கிறேன்.
    Last edited by mr_karthik; 4th September 2014 at 06:58 PM.

  14. Likes Russellmai, chinnakkannan liked this post
  15. #1839
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நெனச்செதெல்லாம் நடக்க போற நேரத்திலே வாடி
    என் காதல் ராணி நான் தானே தேனி

    இவளவுதான் கெடச்சுது

    நடிகர் திலகமே தெய்வம்

  16. Likes Russellmai liked this post
  17. #1840
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் கார்த்திக் சார்,

    ஆலயமாகும் மங்கை மனது - அதை
    அன்றாடம் கொண்டாடும்
    காலைப்பொழுது காலைப்பொழுது
    ஒரு ஆலயமாகும் மங்கை மனது

    அருமை.

    ஒவ்வொரு வரிக்கும் ரசமான விளக்கம். நீங்கள் ஏன் இந்தப் பாடலை எடுத்துள்ளீர்கள் என்பது சூசகமாகப் புரிகிறது.

    நீங்கள் என்னதான் பிரயத்தனம் எடுத்தாலும் நடப்பது நடந்து கொண்டுதான் இருக்கும்.

    முதல்முறை சுதர்சன் சினிமா நாயகனுடன் நாயகி சுமதி



    இரண்டாம் முறை நம் நாயகருடன் நாயகி சுந்தரி

    நடிகர் திலகமே தெய்வம்

  18. Thanks mr_karthik thanked for this post
    Likes Russellmai, chinnakkannan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •