Page 185 of 401 FirstFirst ... 85135175183184185186187195235285 ... LastLast
Results 1,841 to 1,850 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #1841
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    என் விருப்பம் (7)

    தமிழ்த்திரையிசையின் இருண்ட காலத்தில் (1971) வந்த ஒரு பாடல்..

    சுமதி என் சுந்தரி திரைக்காவியத்தைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது என்று சொல்லுமளவுக்கு எல்லா வயதினரையும் வசப்படுத்தும் இப்படத்தில், இந்தப்பாடல் காட்சியில்தான் நடிகர்திலகமும், இன்றைய 'மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா' வாக ஆகிப்போன அன்றைய எங்கள் கலைச்செல்வியும்தான் எவ்வளவு ஒன்றிப்போய் நடித்திருப்பார்கள்.

    மெல்லிசை மன்னரின் தனித்த இசையில் 1971-ம் ஆண்டு வந்த இந்தப்பாடல், 60-களின் எந்தவொரு பாடலுக்கும் குறைந்ததல்ல என்பதை முத்தாய்ப்பாக சொல்லி முடிக்கிறேன்.
    தமிழ்த்திரையிசையின் இருண்ட காலத்தில் 1971

    வாசு சார்
    மனசாட்சியை துறக்காமல் எழுதி உள்ளார் கார்த்திக் சார்

    கலைச்செல்வி தோசை கல்லை பேப்பர் கொண்டு தேய்த்து பின் தோசை சுடுவது (முறுகல் வடபழனி நெல்லை சைவ பிள்ளை முத்து லக்ஷ்மி பவன் ) அப்படி சுட்ட முறுகல் தோசையை நம்மவர் ஒரு விள்ளல் விள்ளி தேங்காய் சட்னி முக்கி வாயில் போடும் அழகு . பின் வேலைக்கு கிளம்புவது . உடன் கலைச்செல்வி வீடு பெருக்கி சுத்தம் செய்வது . அப்போது ஒரு வேஸ்ட் பேப்பர் மட்டும் மாட்டாமல் பெருக்குவது . பின் காய் நறுக்குவது (முருங்கை சாம்பார் ) . நம்மவர் மாலையில் வீடு திரும்பிய உடன் இரண்டு வடை கொடுப்பது கொடுத்த இரண்டு வடையில் ஒன்றை நம்மவர் கலைச்செல்விக்கு கொடுப்பது .அதை வெட்கத்துடன் வாங்கி கொண்டு கலைச்செல்வி கடிப்பது

    இருண்ட காலமாகவே இருந்து இருக்கலாம்

    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1842
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சிகப்பும், வெள்ளையும் சேர்ந்து கட்டம் போட்ட கைலி அணிந்து மெல்லிய வெள்ளை கலர் ஷர்ட்டில் தலைவர் ரங்கநாதர் போல் பள்ளி கொண்டு உறங்கிக் கொண்டிருக்க நாயகி ஜெயா மேடம் ஸ்டவ்வில் (பித்தளை மண்ணெண்ணெய் பம்ப் ஸ்டவ்) காப்பி போட்டு கலந்து கொண்டுவந்து தலைவரைத் தட்டி எழுப்ப, தலைவர் எழுந்து உட்கார்ந்து, கண்களைக் கசக்கிக் கொண்டு காப்பியை கொஞ்சம் கூச்சத்துடன் வாங்கிக் கொள்வார். காபி அருந்தியபடி ஜெயாவை ஓரக்கண்ணால் பார்வை வேறு.

    குளித்துவிட்டு வேறு கைலியில், அப்போது விற்பனையில் அதம் பறந்த புகழ் பெற்ற 'சுமதி என் சுந்தரி' (எல்லாத் துணிக்கடை வாசல் முன்னாலும் 'சுமதி என் சுந்தரி சட்டை கிடைக்கும்' என்ற போர்ட் வைத்திருப்பார்கள்) கட்டம் போட்ட ஷர்ட்டில் தோளில் துண்டுடன் வருவார். தோசை வார்க்கும் நாயகியை பார்த்தவாறு கடிகாரம் கையில் கட்டுவார் சிரித்தபடி. பின் வெளிர் சந்தனக் கலர் பேன்ட் ஷர்ட். சட்டையில் (மேல் பட்டனுக்கு பக்கத்தில் சைடில் இன்னொரு பட்டன் ஸ்டைலாக இருக்கும்) ஜெயா தரும் ஓவர் கோட்டை வாங்கிக் கொள்வார்.



    ஜெயா சாதம் வடித்து காய்கறியெல்லாம் நறுக்கி சமையலை முடித்தவுடன் வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் துணியால் துடைத்து வைத்து வீட்டைப் பெருக்குவார். நடிகர் திலகம் வேலை முடித்து வந்து படு ஸ்டைலாக நடந்து வந்து கோட்டினுள் இருக்கும் மல்லிகைப் பூவை மேடத்திடம் தருவார்.

    பின் கோட்டை கழற்றி வைக்கும் போது tuck in செய்திருப்பார். (ரொம்ப அழகாக இருக்கும்) ஜெயா வடை தந்தவுடன் அதை இதழ்களை விரிக்காமல் அழகாக ருசி பார்த்துவிட்டு (என்ன அழகாகச் சாப்பிடுவார்!) கண்களாலேயே அருமை என்பது போல பாவம் காட்டுவார். பின் இரவு வேளை. வேட்டி சட்டையில் இப்போது அமர்க்களம். அப்புறம்... அப்புறம்... அப்புறம்தான்.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #1843
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு சார்

    என்ன ஒற்றுமை நமக்குள் . இப்போது தான் கார்த்திக் சார் பதிவை பார்த்து விட்டு சு எ சு பற்றி எழுதி submit போட்டால் உங்கள் வரிகளில் காட்சி விரிகிறது . எண்ண பறவை சிறகடித்து சென்னையில் இருந்து நெய்வேலலிக்கு விண்ணில் பறக்குதுஅம்ம
    gkrishna

  5. #1844
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like





    Last edited by vasudevan31355; 4th September 2014 at 07:29 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Likes Russellmai liked this post
  7. #1845
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்,

    உண்மை! நீங்கள் 7.08 நான் 7.10 அவ்வளவுதான் வித்தியாசம். அருமையான 'தானே முளைத்த மரம்' பாடல் பார்த்தீர்களா?
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #1846
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post

    உண்மை! நீங்கள் 7.08 நான் 7.10 அவ்வளவுதான் வித்தியாசம். அருமையான 'தானே முளைத்த மரம்' பாடல் பார்த்தீர்களா?
    அதை எழுத வந்தவன் கார்த்திக் சார் இன் நம்மவர் பதிவு படித்து விட்டு திசை மாறிய பறவை ஆகி விட்டேன் .

    இதோ எந்தன் தெய்வம் நான் 1973 கால கட்டத்தில் சேலம் சங்ககிரி சிமெண்ட் தொழிற்சாலை மனமகிழ் மன்றம் சிறப்பு நிகழிச்சியில் பார்த்த படம் .அமுதம் pitcures சொந்தம் திரை படம் எடுத்த R வெங்கட்ராமன் தயாரிப்பு . எல்லோரும் அந்த படத்தில் அம்பிகை நேரில் வந்தாள் பாடலை சொல்லுவார்கள் . நம்ம சி கே கூட குறிப்பிட்டு இருந்தார் .
    நீங்கள் குறிப்பிட்ட பாடல் வித்யாசமான பாடல் .
    மேஜர்க்கு யோகம்



    உறவாடும் நெஞ்சத்தில் ஜெய் சங்கர் நினைவு இல்லையே
    gkrishna

  9. #1847
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    'இதோ எந்தன் தெய்வம்' படத்தில் இடம்பெற்ற பாடலை இன்றைய ஸ்பெஷலாக தேர்ந்தெடுத்து அருமையாக விளக்கி விட்டீர்கள். பாடல் ரிலிசானபோதே பார்த்த படம். மேஜர் தாடியுடன் கையில் குழந்தையுடன் வித்தியாசமான கெட்டப்பில் இருந்த போஸ்டர்தான் படம் பார்க்கத் தூண்டியது. கூடவே நம் தலைவரின் பாடல்தான் டைட்டில்.

    இப்படம் புன்னகையை அடுத்து அமுதம் பிக்சர்ஸார் தயாரிப்பு. இதனையடுத்து முத்துராமன், விஜயா, பிரமீளா நடித்த சொந்தம் படத்தை தயாரித்தனர். முதல் படம் கே.பி.இயக்கத்தில் வர, மற்ற இரண்டும் ஏ.சி.டி. இயக்கத்தில். இவற்றையடுத்து நமது 'அன்பே ஆருயிரே' தயாரித்தனர்.

    இதோ எந்தன் தெய்வம் அப்போதைக்கு வந்த படங்களின் சாயல் இருந்தது. மேஜருக்கு நல்ல பெயர் வாங்கித்தந்தது...

  10. #1848
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post

    உறவாடும் நெஞ்சத்தில் ஜெய் சங்கர் நினைவு இல்லையே
    அது ச்சும்மா விவரம் தெரியாத புள்ளைவ
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #1849
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பென்சில் ஆர்ட்டில் சுந்தரனும், சுந்தரியும். இது எப்படி இருக்கு?

    நடிகர் திலகமே தெய்வம்

  12. Likes kalnayak, Russellmai liked this post
  13. #1850
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்,

    முழுக்க முழுக்க உங்களுக்காக

    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •